கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. “என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வேண்டினாள்! “இந்த வேண்டு கோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்ந்தது. “நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ எனும் மனப்பான்மையை வள்ர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் “தாத்பர்யம்“ என்று அருளியுள்ளார் ஸ்ரீ மகா ஸ்வாமிகள்.
நடமாடும் தெய்வம் தீபாவளிக்கு மூன்று குளியல்: * தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவெண்டும். இதற்கு “கங்கா ஸ்நானம்“ என்று பெயர். * வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். ஆப்பொது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, “துலா ஸ்நானம்” என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வரவேண்டும். * வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்“ அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள்.
ஸ்ரீ மகா ஸ்வாமிகள்
தீபாவளிப் பண்டிகையை ” பகவத் கீதையின் தம்பி“ என்பார் ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமைபெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.
[ காஞ்சிப் பெரியவர்]
No comments:
Post a Comment