Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, October 31, 2013

தியாகம் பற்றி காஞ்சி மகா பெரியவா சொல்லும் கதை ...

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும்போது, ''நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம தியாக புத்தியில்...
'ந மம’ - 'எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.
மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால், இந்த அகங்கார மானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். தியாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்கியமாக, தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
'ஸோஷியல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டு, வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.
சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, பிராணனையே தியாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்கிய மான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும்.
வேத பூமியான இந்த பாரதபூமியின் விசேஷம் மனுஷ்யனுக்காக மட்டுமில்லாமல், மற்ற ஜீவராசிகளுக்கும், பூச்சி பொட்டுகளுக்கும்கூட க்ஷேமத்தைக் கோரி தியாகம் பண்ணச் சொல்வது. இதில், இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்கும்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், தியாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம்.
புறாவுக்காகத் தியாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம தியாகத்தை 'கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. 'கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்’ என்றால், சின்ன கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனசை ரொம்பவும் உருக்குவது.
வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி, ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும், அதன் ஜோடியான ஆண் புறாவும் வசித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது, நல்ல இருட்டாகிவிட்டது. ஒரே குளிர்! வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க, அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.
இதைப் பார்த்த மரத்தின் மேல் இருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்தினியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர்மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பட்சியிடம் திரண்டு வந்துவிட்டது.
''நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி. 'அதிதி தேவோ பவ’ - 'விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேதை ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்'' என்று நினைத்தது.
முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்டவேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து, அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் சரி, அவனுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.
'சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. 'சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லு கிறார்கள். 'சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை’ உள்ளதெல்லாம் 'சிகி’தான். சிகையை விரித்துக்கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது? 'முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி’.
இப்படிப்பட்ட சிகிமுகி கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது. வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி, அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காய்ந்தான்.
தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும், வேடனுடைய குரூர சுபாவம் கூட மாறி, மனசு இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டுவிட்டான்.
'விருந்தோம்பல் என்றால், முக்கியமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடந்தால், அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’ என்று பெண் புறா நினைத்தது. அவனுடைய ஆகாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆகாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே, கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம சந்தோஷத்தோடு அந்த அக்னியில் தானே விழுந்து பிராண தியாகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புசிக்கட்டும் என்ற உத்தம சிந்தை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பட்சியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது.
'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரந்தங்களில் எல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.'

Tuesday, October 29, 2013

Bhaskaran Shivaraman இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களுக்கு முன் நடந்தது.

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வர்ஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?
மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.
“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.
ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு! “எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.
“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.

இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களுக்கு முன் நடந்தது.

Sunday, October 27, 2013

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும். உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.

Friday, October 25, 2013

"பெரியவா சொன்ன தோப்புக்கரண கதை" Source: Smt. Vidya Raju

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது.
ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது.
ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.
"தோர்பி: கர்ணம்" என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

Wednesday, October 23, 2013

Varagooran Narayanan "விஸ்வநாதா, காமாக்ஷியைப் பாடி என்னை நீ இழுத்தூட்டியே" .....பரமாச்சாரியார்.

( 'வினாயகுனி'-இன்றும் தொடர்கிறது}
[தகவல்;தினமணி17-12-2012
எழுதியவர்;ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
இது நான் நேரே பார்த்து நெகிழ்ந்த சம்பவம். அப்போது
நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயக்கர் தெருவில்
[இப்போது ஜம்புலிங்கம் தெரு]
"உபநிஷத் ஆஸ்ரமம்" என்று ஒன்று இருந்தது.
பரமாச்சாரியார் பட்டணத்துக்கு வந்தால் அங்கே தங்குவார்.
வெளியே கீற்றுக் கொட்டகை போட்டிருப்பார்கள்.
கீற்றுத் தடுப்புக்குப் பின்னால்தான் பரமாச்சாரியார்
உட்கார்ந்திருப்பார். மத்தியான நேரத்தில், சுமார் இரண்டு
மணிக்கு மேல் பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம்
வந்து அங்கே பாடுவார்கள்.
பரமாச்சாரியார் தரிசனம் கிடைத்த மாதிரியும் இருக்கும்,
சங்கீதம் கேட்ட மாதிரியும் இருக்கும் என்பதால்
ரசிகர்கள் அந்த நேரத்தில் வந்து கூடுவார்கள்.நான்
போயிருந்த அன்று,மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடுகிறார்.
அந்தப்புறம் இருந்து பரமாச்சாரியார் கேட்டுக் கொன்டிருக்கிறார்.
'மத்ய்மாவதி' ராகத்தில் 'வினாயகுனி' பாடிக் கொண்டிருக்கிறார்
விஸ்வநாதய்யர், அதில் 'அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி' என்கிற
இடத்தில் நிரவல்,கல்பனா ஸ்வரம் பாடிக் கொண்டிருந்தபோது
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
மனமுருக மகாராஜபுரம் 'அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி' என்று
பாடிக் கொண்டிருந்தபோது, 'படால்' என்று கீற்றுத் தடுப்பை
தள்ளி விட்டபடி பரமாச்சாரியார் வெளியே வந்துவிட்டார்.
"விஸ்வநாதா, காமாக்ஷியைப் பாடி என்னை நீ இழுத்தூட்டியே.."
என்றபடி பரமாச்சாரியார் வெளியே வந்தபோது,கூடியிருந்த
அத்தனை பேர் விழிகளும் உணர்ச்சிப் பெருக்கால்
குளமாகிவிட்டன. எங்களுக்கே அப்படியென்றால்,
மகாராஜபுரம் விஸ்வநாதய்யருக்குக் கேட்கவா வேண்டும்.
சாஷ்டாங்கமாகப் பரமாச்சாரியாரின் பாதங்களில்
விழுந்துவிட்டார்!

"விஸ்வநாதா, காமாக்ஷியைப் பாடி என்னை நீ
இழுத்தூட்டியே" .....பரமாச்சாரியார்.

Monday, October 21, 2013

இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை
தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த
கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை
வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும்
மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான்
மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல
வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத
கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு
வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால்
கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து
விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல..
காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு
ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக்
கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து
போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால்
பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து
சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச்
சொன்னார்கள்.
தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே
அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே
இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று
ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா
நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக்
கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக
நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு.....
ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில்
இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி
நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே
கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான்.
அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை
எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து
கொண்டனர்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின்
மகான் உள்ளே போனார்.

Saturday, October 19, 2013

இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.
* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.
* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.
* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.
-காஞ்சிப்பெரியவர்

Thursday, October 17, 2013

Ramanathan Panchapakesan
பெரியவாளுடைய அத்யந்த பரம பக்தர் சுப்ரமண்ய ஐயர். சதா சர்வ காலமும் பெரியவாளுடைய கருணையை எண்ணி எண்ணி உருகுவார். ஒருமுறை அவருடைய பெண்ணும் மாப்பிள்ளையும் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தர்சிக்க கிளம்பினார்கள். ஐயருக்கோ தன் பகவானுக்காக ஏதாவது குடுத்தனுப்ப ஆசை! தினமும் வீட்டில் பிள்ளையாருக்கு நிவேதிக்க வைத்திருந்த அவல் பொரியை ஒரு பொட்டலமாக கட்டி அவர்களிடம் கொடுத்து பெரியவாளிடம் சமர்ப்பிக்குமாறு சொன்னார்.
பக்தனின் "பாவம்" எல்லாருக்கும் புரியுமா? கிளம்பும் அவசரத்தில் அஸ்ரத்தையாக அந்த பொட்டலத்தை அவர்கள் தரையில் வைக்க,அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகள் அதை தட்டிவிட,அத்தனை அவல் பொரியும் பூமியில் சிதறின. அவர்கள் அதையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள்! ஐயருக்கு இந்த விஷயம் அவர்கள் கிளம்பிப் போனதும்தான் தெரிய வந்தது. பாவம்!துடித்துப் போய்விட்டார்!
"அபச்சாரம்! அபச்சாரம்! பகவானே!.....மன்னிச்சுடுங்கோ!.....பூமில விழுந்ததை என் பகவானுக்கு அர்ப்பணிக்க எடுத்துண்டு போயிட்டாளே!எனக்கு தெரியாத போய்டுத்தே!......" என்று அழுது புலம்பினார்.
தேனம்பாக்கத்தில் அன்று ஏகக்கூட்டம்! புதுமாதிரியாக அன்று பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்தது ......
விநாயகர் சன்னதிக்கு முன்பாக!
பாரிஷதர்களுக்கு ஒரே குழப்பம்! எதற்காக இன்று பிள்ளையார் சந்நிதியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? தர்சனத்துக்கு வந்தவர்கள் தினுசு தினுசாக பழங்கள், பூக்கள் என்று கூடை கூடையாக பெரியவா முன் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர்.
ஐயரின் பொண்ணுக்கோ, அப்பா குடுத்த இந்த அவல் பொரி பொட்டலத்தை எப்படி பெரியவாளிடம் குடுப்பது? என்று சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு கோடியில் வேறு போய் நின்று கொண்டிருந்தனர். கிட்டே போவது சாத்யமாகப் படவில்லை.அப்போது பெரியவா மிக மிக அழகாக ஒரு விளையாட்டை அரங்கேற்றினார்.
" கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பற்றி பேச ஆரம்பித்துவிட்டு,
"இன்னிக்கி பிள்ளையாருக்கு ஏகப்பட்ட பழங்கள் வந்துடுத்து!......ஆனா,..இந்த......அவல் பொரிதான் காணோம்! யாராவுது அவல் பொரி கொண்டு வந்திருக்கேளா?......."
தெய்வத்தின் குரல் தேனாக பாய்ந்தது, ஏதோ ஒரு கோடியில் தர்மசங்கடத்தில் குழம்பிக் கொண்டிருந்த ஐயரின் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்! அவ்வளவுதான்!கூட்டத்தை கிழித்துக் கொண்டு, சாதாரண பேப்பரில் சுற்றி இருந்த அவல் பொரியை எடுத்துக்கொண்டு போய் பெரியவா முன்னால் சமர்ப்பித்தனர்.
சுப்ரமண்ய ஐயர், தன் அன்பை மட்டுமே தோய்த்து, பேப்பரில் சுற்றிக் கொடுத்திருந்த அவல் பொரியை தன் திருக்கரங்களால் தொட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டார்!-------------------------------------------
குசேலன்,அழுக்கு மேல் வஸ்த்ரத்தில் முடிந்து வைத்திருந்த அவலை க்ருஷ்ணன் கைகளால் அள்ளி அள்ளி உண்ட கருணையை பாகவதத்தில் பல முறை படித்து மகிழ்ந்திருப்போம்.....இங்கே பெரியவா நடத்திய அவல் பொரி நாடகம் மூலம் பகவானின் பக்த வாத்சல்யத்தையும் அனுபவிப்போம்!
அம்மாவுக்கு தன் வத்ஸ் ( குழந்தை) அழுக்கான கைகளால், தன் வாய்க்குள் இருந்து ஒழுகும் எச்சிலில் பிரட்டி, ஏதாவது தின்பண்டத்தை அம்மாவின் வாயில் போடும்போது, அவளுக்கு குழந்தையின் கை அழுக்கோ,எச்சிலோ எதுவுமே தெரியாது! அதன் அன்பு ஒன்று மட்டுமே தெரியும். சாதாரண லோகாயத அம்மாக்களே இப்படி அன்பில் மயங்கினார்கள் என்றால்,லோகமாதாவான பெரியவாளுடைய வாத்சல்யத்தை அளவிட முடியுமா?

Tuesday, October 15, 2013

வசதியுள்ளவர்களால் தான் பண உதவி செய்து புண்ணியம் பெற முடியும், நாம் என்ன செய்யலாம் ? என்ற மற்றவர்கள் எண்ணக் கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குப் கைங்கர்யம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும். வசதியே இல்லாதவர்களுக்கும இவ்விதத்தில் பிறருக்குச் சரீர சகாயம் செய்ய முடியும்.
ஒவ்வொருத்தரும் பிறருக்குக கூடத் தெரிய வேண்டாம் - எதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்கு போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கும் பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.
ஈஸ்வர அனுக்ரகம் வேண்டும், வேண்டும் என்றால் அது எப்படி வரும் ? பரோப்காரமான, ஜீவகாருண்யமான நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்தச் சுத்தமான சித்தத்தில் ஈஸ்வரனின் உருவத்தைப் பார்க்க முடியும்.
கலங்கிய ஜலத்தில் பிம்பம் தெரியாதது போல் நாம் மனசிக் கலக்கிக் கொண்டு ஈஸ்வர ஸ்வருபம் தெரியாதபடிச் செய்து கொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து மனசு தெளிவாகும்போது, ஈஸ்வராநுக்ரகத்தை நாம் கிரகித்துக் கொள்ள முடியும்.
- பரமாச்சார்யார் (கல்கி அருள்வாக்கு)

Sunday, October 13, 2013

மஹா பெரியவா சொன்னவை : =========================

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.
* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.

Friday, October 11, 2013

Karthi Nagaratnam விநாயகுனி கட்டுரையில் ஸ்ரீ ரா கணபதி...

(1935 இல் ஒரு வினாயக சதுர்த்தி நன்னாளில் பிறந்து(அவதரித்து) அந்த 'கணபதி' அந்த 'வியாசருக்கு' செய்த தொகுப்பாசிரியப் பணியை, இந்த 'கணபதி' நம் வியாசருக்கு செய்த பெரும்பணியை நெஞ்சில் நிறுத்தி, மனம் நிறைந்து...அவர் வரிகளிலேயே...அவருக்கு நமஸ்காரங்கள்...(வெல்லப் பிள்ளையார், அவரைக் கிள்ளி அவருக்கே நைவேத்தியம்)
குறிப்பு : "விநாயகுனி கீர்த்தனையை தவறாக பாடிய அப்பாவி பக்தர் ஒருவருக்கு "பெரிவா" எப்படி அருள் செய்தார் என்பதை பலரும் படித்து இருக்கலாம். அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் பதிவு செய்த கட்டுரையில் இருந்து சில நாட்கள் முன் FB இல் படித்த ஞாபகம். இன்று அருளாணை நம் 'எழுத்து' ஆனை(கணபதி)க்கு அருளிய அற்புதத்தை பார்ப்போம். அந்த 'விநாயகுனி' கட்டுரையிலேயே இது இடம் பெற்றிருந்தாலும் அந்த அற்புதம் பதிவு செய்ய படவில்லை. ஸ்ரீ அண்ணா அவர்கள் சொல்வது போல் 'இரத்தின சுருக்கமாக' தர முயற்சி செய்கிறேன். "
ஓவர் டு ஸ்ரீ ரா.க....
ஸ்ரீ சரணர் மிகவும் அதிகமாக ஏதோ சொன்னார்.
அது எனக்கு மகிழ்ச்சி தரமால் வேதனையே தந்தது. ஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் என் எழுத்தாள பெருமையையும் புகழ் கொடியையும் தான். எனக்கோ அது வேண்டி கிடக்க வில்லை. சுயமாக ஏதோ ஒரு சாமர்த்தியம், கற்றும் கேட்டும் அறிவது, இவற்றுக்கு மேலாக தெய்வ அனுக்ரகம் (அது அனுக்ரகமா சோதனையா என்று இன்றளவும் புரியவில்லை) ஆகியன இருந்தால் மஹாபட்ட எழுத்தாளனாக ஒருவர் ஆகி, மற்றவர் மகிழ - சத்விஷயமாக எழுதினால் மற்றவர்கள் படிக்கும் அளவேனும் மன உயர்வு பெறவும் செய்து விடலாம். ஆனால் எழுதும் அந்த நபருடைய மன உயர்வு? எத்தனை எத்தனையோ மகா மேதைகள் இருந்து இருக்கிறார்களே? ஆத்ம விஷயமாகவே எழுதியவர்களும் கூடத்தான், அவர்களின் எத்தனை பேர் தங்கள் மனத்தை மாசற்ற நிலைக்கு உயர்த்தி கொண்டு இருக்கீறார்கள்? மனமே போய்விடும் உயர்வில் உண்மை தத்துவத்தை உணர்ந்து இருக்கிறார்கள். எழுத்து சாகசத்தின் இழுப்புக்கும், எழுத்தை பார்த்து உலகம் தூக்கி வைப்பதில் அஹம் கீழே இழுக்கிற இழுப்புக்கும் ஈடு கொடுத்து முன்னேறுவது எத்தனை கொடூரமான 'ஹான்டிகாப் ரேஸ்' ஆக தோன்றுகிறது.
பின் ஏன் இவர் 'எழுத்தாளன், எழுத்தாளன்' என்று கூப்பிட்டது போதாமல், இப்போது அதில் ஜெயக்கொடி பற்றி வேறு சொல்லி வேதனை, சோதனை செய்கிறார். இப்படியே ஊருக்கு மட்டும் உயர்வான விஷயங்கள் சொல்லிக்கொண்டு, ஊராரால், உயர்வாக நினைக்கபடுவதுடன் முடிய வேண்டியது தானா இந்த அபலனின் கதை? அப்படிதான் தலையெழுத்தா? அந்த எழுத்தை இவர் வென்று ஆண்டு என் 'எழுத்தாளராகி' ஜெயக்கொடி நாட்ட போவது இல்லையா? இரண்டாண்டு முன் (1963) இவரிடம் வாய் விட்டே வேண்டிய அந்த வரத்தை அருள போவது இல்லையா?
என்னை அடக்கி கொள்ள முடியாமல், 'பெரியவா ஏன் இந்த எழுத்தாள பெருமைன்ற சிறுமையை சொல்லிண்டு இருக்கா? நான் வேண்டிண்டது பெரியவாளுக்கு ஞாபகம் இல்லியா?' என்றேன்.
அந்த பெரிய கண்கள் நிறைய அருளை தேக்கி ஆதரவாக பார்த்தார். அதுவே என்னை ஓரளவு ஆற்றி கொடுத்து காவாமல் விடமாட்டார் என்று உத்திரவாதம் கொடுத்தது.
அங்கே கூடியிருந்த எல்லோரையும் பார்த்து பொதுவாக சொன்னார். 'இவன் எழுத ஆரம்பிச்சே நாலஞ்சு வருஷம் (1957 முதல்) தான் ஆறது. பல பேர் என் அனுக்ரஹத்திலே தான் எழுதறான் ன்னு சொல்றா. ஆனா இவனானா எழுத ஆரம்பிச்சு ஒன்னு ரெண்டு வருஷத்திலேயே எழுதறது நிக்கறதுக்கு நான் அனுக்ரகம் பண்ணனும் ன்னு மன்னாட ஆரம்பிச்சுட்டான். '
என்னை நோக்கி கனிவுடன் சொன்னார். 'அது பாட்டு நடக்கட்டுமே. லோப உபகாரமா நடந்துண்டு போகட்டுமே. அதை ஏன் இடைஞ்சல் ன்னு நினைக்கணும்.? மத்தவாளுக்காக அது நடந்துண்டே தான் இருக்கணும்ன்னா நடந்துட்டு போகட்டும். அதோட 'நமக்கு என்ன நடக்கணுமோ அதலேயும் நாம குறி தப்பாம இருக்க அம்பாள் கிருபை பண்ணி அந்த வழியிலே மேலே மேலே நடத்தி தரணும்' ன்னு ப்ரார்த்திச்சுண்டு இரு. ஒனக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.' என்றார்.
கடைசியில் சொன்னாரே, இதை விட என்ன வேண்டும்?
என் குறிப்பு: எந்த நடமாடும் தெய்வத்தை ஸ்ரீ அண்ணா முதன் முதலில் வேண்டா வெறுப்பாக (அது தடுதாட்க்கொண்ட புராணமாய் வேறு ஒரு பதிவில் உள்ளது), தரிசித்து, பின், அந்த தெய்வத்தை நினைக்காமல், பேசாமல், பஜியாமல், எழுதாமால் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தாரோ, அந்த தெய்வமே, 'ஒனக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று சொன்னது, எத்தனை பேருக்கு கிடைக்கும், இந்த பாக்கியம்?
இதோடு சுமார் நூறு முறை இந்த பக்கங்களை திரும்ப திரும்ப படித்தும், ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் வர வைக்கும் அற்புதம் மேற்சொன்ன நிகழ்வு.
இது மட்டுமா? இன்னும் இருக்கிறது,
அப்படியும் நான் விடாமல் 'இருந்தாலும் மத்தவா என் எழுத்துக்காக கொண்டாடறது போறாம, பெரியவாளுமா எழுத்தாளன் எழுத்தாளன் ன்னு ஸ்ட்ரெஸ் பண்ணனுமா ன்னு இருக்கு. எனக்கு இந்த எழுத்தாள ஐடென்டிடி வேண்டி கிடக்கவில்லை' என்று சொல்லி விட்டேன்.
பெரியவா குறும்பாக சிரித்தார். 'ஒரு ஐடேண்டிடியும் இல்லாம, அப்படியே ஆத்மா ராமனா இருந்திண்டு இருக்கணுமோ?' என்றார்.
'அவ்வளவு பெரிசா ஆசைபடறதுக்கு என்ன யோக்யதை இருக்கு? ஆனா அப்படிக்கூட ஒரு அனுபவ லேசமாவது எப்போவாவது ஒரு சமயத்திலே வந்து தொடறதுக்கு பெரியவா அனுக்ரகம், ரமண பகவான் அனுக்ரகம் இருக்கறதாலே அந்த ஆசையும் இல்லாமே இல்லே, ஆனா இப்பவே, இனி எப்பவுமே ஏதாவது ஐடென்டிடி இருந்துதான் ஆகணும் ன்னா அது...." மேல பேச முடியவில்லை.
'சொல்லுப்பா. சொல்லு. கிட்டக்க வந்து சொல்லு' என்று பரிவு சமுத்திரமாகவே கூறியவாறு அருகிருந்தவர்களை தள்ளி இருக்குமாறு கைகளால் விசையாக ஆட்டினார் அருளாளர்.
ஆனால் அவர்கள் தள்ளி போகும் முன்பே, சற்று எட்டத்தில் இருந்தே, நான் திடீரென்று பிறந்த, (அவர் பிறப்பித்த) தெம்பு தெளிவுடன், சொன்னேன்.
'ஏதாவது ஐடென்டிடி இருக்கணும்னா, நான் அம்பாள் கொழந்தை...அசடோ, சமர்த்தோ, எதுவானாலும், சகலரும், சகலமும், வாச்தவமாவே அவ கொழந்தை தான் ஆனதானாலே அந்த உண்மையை சொந்த அனுபவமா தெரிஞ்சுண்டு இருக்கற கொழந்தையாவே இருந்திண்டு இருக்கணும் - ன்றதுதான் ஆசை"
அவள், அவள் என்றேனே ஆனாலும், இவரை நான் அவளுக்கு வேறாக நினைத்தது இல்லை. ஆயினும் கண்ணுக்கு எட்டாத அந்த மஹா பராசக்தியின் மகவு ஆவதற்கு வாய் விட்டு வரம் கேட்க முடிந்ததே தவிர, கண்ணெதிர் காணும் இந்த எளிமை அவதாரத்திடம் அவ்வுறவு கோர ஏனோ தயக்கமும் நடுக்கமும்!
ஸ்ரீ சரணர் திருக்கண் மூடி திறந்தார், அவளுடைய அருளின் முழுமையாக.
கணீரென்று சொன்னார், "இப்படி ஒரு claim , நீ பண்றதே அந்த அனுபவத்தை அவ ஒனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மூலையிலே தூண்டி விட்டு இருக்கறதாலே தான்! ஆரம்பிச்சு வெச்ச அவளே விருத்தியும் பண்ணி குடுப்பா, நீயும் வேண்டிக்கோ, நானும் வேண்டிக்கிறேன்' (மீண்டும் அந்த பெரும் கொடை!)
'இந்த பையன் விநாயகுனி பாடினான். பிள்ளையாருக்கு பண்றா போலவே தனக்கும் அவ ரக்ஷணை ஐ தியகையர்வாள் கேட்டுக்கரார்ந்னு அந்த பேர் வெச்சுண்டு இருக்கற நீயே அர்த்தம் சொன்னே. ஒனக்கும் அப்படியே நடக்கட்டும்' என்றது ஆழ்ந்த அன்பின் ஆரழகோடு சிந்தித்து ஆழ்ந்த அன்பின் ஆரழகுடன் பேசவே அவள் எடுத்திருந்த அவதாரம்.
குறிப்பு: அண்ணா ரா.கணபதி அவர்கள் ஒரு தேர்ந்த தேவி உபாசகர். சரியாக ஐம்பத்தொரு வருடங்கள் (1961 இல் இருந்து 2012 வரை), அந்த நடமாடும் சக்தியிடமே உபதேசம் பெற்று அவள் பொற் பாதங்கள் அடையும் வரை...ஐம்பத்தொரு சக்தி பீடங்கள் ஒன்றுக்கு ஒரு வருடம் என்று இருக்குமோ. தெரியவில்லை.
ஆனால், அந்த தெய்வ வாக்குப்படி, அந்த தெய்வத்தின் வாக்குகளை, அவர் தொகுத்து கிட்டத்தட்ட எண்ணாயிரம் பக்கங்களில், ஏழு தொகுதிகளை, 1976 தொடங்கி எழுத வைத்தது இந்த தெய்வத்தின் குரல் தானோ.
தவிர, எண்ணற்ற புத்தகங்கள், அந்த தெய்வத்தின் பேரிலும், மற்ற பல ஆன்மிக பேராசான்கள் பற்றியும் அவர் எழுதி ஆன்மிக உலகுக்கு, சாதகர்களுக்கு செய்த தொண்டு, என்ன கைம்மாறு செய்ய முடியும் நம்மால்?

Wednesday, October 9, 2013

Varalakshmi Sundararaman MUKKURUNI VINAYAGAR – DETAILS FROM MAHAPERIYAVA-

Inside the Temple of Madurai Meenakshi is the sanctum of Lord Ganesha bearing the name Mukkuruni Pillaiyar. Mukkuruni Ganesha is also found in Nagapattinam and Chidambaram.
Three ‘kurunni’ (a measure) of grains are used to make ‘modaka’ (a dish made of rice flour) for offering to this Ganesha. Hence, he is known as ‘Mukkuruni Pillaiyar’.
In Madurai, this Ganesha is found on the path that lay between Meenakshi Sannidhi and Chokkanãthar Sannidhi. In Chidambaram, he is found at the head of ‘Therkku veedhi’ (South Street). In Nagapattinam, Kanchi Mahaswami Sri Chandrasekarendra Saraswati Swamiji had a single, huge ‘modaka’ made out of the entire flour and offered it to Lord Ganesha. A sack full of rice was ground into flour and one huge ‘kozhukattai’ was prepared out of it!
Legends have it that everyone teased Ganesha for sitting idle with his pot belly. So, Ganesha decided to find some employment! Ganesha, taking the form of a young boy, approached a devotee of his who was working on the fields and offered to assist him. This man asked, “How much wage do you expect?”
Ganesha in the form of a young boy said, “Three (’moonru’) ‘kurunnai’ grains.” Thus, he earned the name ‘Mukkuruni Pillaiyar’!
At the end of the work he earned the grains and returned home happily. He went to his mother Parvati and offered the wage earned. Parvati said to her son, “Oh, my child! anything that the son might earn through arduous labour does not make the mother happy. It is only the father who feels pleased when the son earns. So, give the earnings to your Father!”
So, Ganesha went to his father Lord Siva and gave it to him. Lord Siva who behaves like a mad one (‘pithhan’) knows not what He does. He took the grains from Ganesha and emptied the whole sack on his own head!

Saturday, October 5, 2013

ரா.கணபதி அண்ணாவின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து….

சென்னை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீசரணர் முகாமிட்டிருக்கிறார். ஒரு சிறிய பெண் அவரிடம் ஸ்ரீராமநாமம் எழுதிய நோட்டுப் புத்தகத்தை ஸமர்ப்பித்து வெள்ளிக் காசு கேட்டது.
ஒரு லக்ஷம் நாமம் எழுதினால் பொற்காசும், அதில் எட்டில் ஒரு பங்கான 12,500 நாமம் எழுதினால் வெள்ளிக்காசும் ஸ்ரீசரணர் வழங்கி வந்த காலம் அது.
சிறுமி கேட்டவுடன் பெரியவாள் வெள்ளிக் காசு கொண்டுவரச் சொல்லி அதற்கு ஈந்தார்.
சிரித்துக் கொண்டு காசுடன் ஓடிய சிறுமி சிறிது நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக்கொண்டு திரும்பி வந்தது.
“ஏம்மா அழறே?” என்று பரிவுடன் கேட்டார் ஸ்ரீசரணர்.
“காசு எப்படியோ காணாமப் போயிடுத்து” என்று விக்கிற்று குழந்தை.
”அழாதேம்மா!” என்று கனிந்து சொன்ன பெரியவாள், “அது ஸரி, நீ எவ்வளவு நாமம் எழுதியிருந்தே?” என்று கேட்டார்.
“8,500” என்றது குழந்தை.
“12,500 எழுதினாதான் காசு தரதுன்னு ஒனக்குத் தெரியுமோன்னோ?”
“தெரியும், தெரிஞ்சேதான் பொய் பண்ணிட்டேன். தப்புதான். மன்னிச்சுடுங்கோ!”
சின்னஞ்சிறுமி தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டியதில் ஸ்ரீசரணரின் மனம் உருகிவிட்டது!
“பரவாயில்லேம்மா! இனிமே அப்படிப் பண்ணாட்டா ஸரிதான். இப்படி ஒக்காரு” என்று பிரியமாகச் சிறுமியை அருகே உட்கார்த்தி வைத்துக் கொண்டார்.
அருகே இருந்தவர்களைப் பார்த்து, “நீங்க எல்லாரும் இப்பவே ராம நாமா எழுதி ஸொச்சம் நாலாயிரத்தையும் ‘கம்ப்ளீட்’ பண்ணுங்கோ. இந்தக் கொழந்தையும் எழுதட்டும். நீங்கள்ளாமும் எழுதுங்கோ” என்றார்.
எல்லோருக்கும் காகிதம், எழுதுகலம் வழங்கப் பட்டது. அந்த ஒரு பாலகியின் தவற்றினாலேயே அன்று பல பேருக்கு திவ்ய நாமம் எழுதும் பாக்கியத்தைப் பெரியவா அருளினார். பலர் எழுதியதால் விரைவிலேயே நாலாயிரம் பூர்த்தியாயிற்று.
பாலகியை அழைத்தார் மாமுனி. “ஒனக்கு வெள்ளிக் காசு வேண்டாம். தங்கக் காசே தரேன்” என்று மஹா பெரிய போனஸாகப் பொற் கழங்சு ஒன்றை அந்தப் பிஞ்சின் குஞ்சுக் கரத்தில் போட்டார் குணகுஞ்சரர்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

Source: Shri.Varagooran Narayanan
நவராத்திரி கொண்டாட்டம் - மகாபெரியவர் சொல்றதை கேளுங்க!

(ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி)
நாளை ஆரம்பம். 05-10-2013.
இவ்வார தினமலர்.
காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ:
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரிகொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம்.
நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.
கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.
கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.
காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்

http://www.youtube.com/watch?v=ynAQBHJxNjg

Thursday, October 3, 2013

Source: Shri Lakshmi Narayanan சத்குரு தசகம்

ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது பதினைந்தாவது வயதில் (1983 ம் வருடம் மே மாதம் 29ம் தேதி) பட்டம் ஏற்றவுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு பெரியவா பற்றி எழுதிய தசகம்
பத்து ஸ்லோகம் அடங்கியது
1.ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே
வேதங்கள் ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து தர்மங்களையும்
அனுஷ்டித்துக்காட்டி ஈடுபடுபவரும்,உலகின் குருவாக விளங்குபவரும் பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம்
சுத்தமாவதற்கு வணங்குவேன்.
2.அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம்
ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன
குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
3.கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்தகங்கணம்
அனுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே
கர்மா பக்தி ஞானம் என்ற மூன்று வழிகளையும், (நடந்து காட்டி), மற்றவர்க்குப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும் அனுக்ரஹம் பண்ணுபவரும்(பார்வை,புன்முறுவல்,பேச்சுகளால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
4.பகவத்பாதபாதாப்ஜவிநிவேசிதசேதஸ
ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ ப்ரஸாதோ மயி ஜாயதாம்
ஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்த்ரசேகர குருவின் கருணை கடாட்சம் என்னிடம் உண்டாகட்டும்
5.சேத்ர தீர்த்தகதாபிக்ஞ ஸச்சிதானந்தவிக்ரஹ
சந்திரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
ஒவ்வொரு புனிதஸ்தலம்,தீர்த்தம் முதலியவற்றின் உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்தவடிவமானவரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்
6.போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம்
சேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்திரசேகரம்
வேதசாஸ்திரங்களை நன்கு வளரச்செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி ஆலோசிப்பவரும் ( பல திட்டங்களை உருவாக்கியவரும் ) பற்பல புண்ணிய சேத்திரங்களுக்கு பாத யாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில் சேத்ரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது ) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்
7.வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்
தகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும் வேதம் கற்றவர்களை வேதப்பொருளை அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதியை குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்
8.மணிவாசக கோதாதி பக்தி வாகம்ருதைர்ப்ருசம்
பாலானாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே
மாணிக்கவாசகர் ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுகளைப் பரப்புவதன் மூலம், குழந்தைகளுக்கு கடவுள் பக்தியை வளர்பவரான குருவை ஸேவிக்கிறேன்
9.லகூயதேசைர் நாஸ்திக்யபாவமர்த்தனகோவிதம்
சிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும்
எளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் ( பேச்சுகளால் ) உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும் புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும் சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்
10.விநயேந ப்ரார்த்தயேஸ்ஹம் வித்யாம் போதய மே குரோ
மார்கமன்யம் த ஜானேஸ்ஹம் பவந்தம் சரணம் கத
ஒ குருவே நான் எனக்குக் கல்வியை ( ஆத்ம ஞானத்தை ) போதிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன்
எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை
உம்மையே சரணம் அடைந்துள்ளேன்
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர

Tuesday, October 1, 2013

"சங்கீதப் பெரியவா" ( "விநாயக"ன்னு ஆரம்பிச்சுட்டு "காமாக்ஷி"ன்னு) (கட்டுரையாளர்;ரா.கணபதி}

ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில் 1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை, சிவலோகமாக்கினார்.அவ்வருஷ சிவராத்ரியை அங்கே நடத்தினார்.
பிற்பகல் நாலு மணி இருக்கலாம். பொக்கையும் போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில் இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையானவேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார். விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.சன்யாசிகள் மாலை அணியலாமா அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்துகொண்டு பார்த்தால் அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும். மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல் சிரசிலேயே வைத்து கொள்வது வழக்கம். சிரசில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக
சாஸ்திரம்.
பெரியவாளுக்கோ அந்த சாஸ்த்ரஅனுபவமே! அதனால் குரு அஞ்சலியாக அம்பாள் சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் "அலங்கல் அணிந்தருள்வது" அப்புறம் அது நழுவி கழுத்தில் விழும்போது அவளது பிரசாதமேயன்றி சுய அலங்காரமல்ல. அப்படி கழுத்தில் சரிந்ததை உடனே களைந்து விடுவதேஅவரது பொது வழக்கம்.
இன்று வழக்கத்திற்கு மாறாக மாலையும் கழுத்துமாகவே மனோஹர தரிசனம் அளித்தார்.
இளைஞரொருவர் அவரது
திருமுன்பாடிக்கொண்டிருந்தார். நான் செய்த பாக்கியம்பெரியவாளை தரிசித்தது மட்டுமல்ல; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவு பகுதிக்குவந்திருந்ததுதான்! அவர்சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்கியமே! அப்பேர்ப்பட்ட"தேவ கானம்" !
"கராஜுனி ஹ்ருதய சரோஜவாசினி முராரி சோதரி பராசக்தி ந்னு"என்று அவர் திருப்பியபோது, நல்ல வேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது!
முந்தைய பாத இறுதியில் வரும் "த்யா" என்பதோடு இணைத்து "த்யாகராஜுனி ஹ்ருதய சரோஜ" என்று பாட வேண்டியதைத்தான் அந்த புண்ணியவான் "கராஜுனி" என்று அமர்க்களமாக தாளம் தட்டி சிதைத்து பாடினார்.
பெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல. சத்தியமாகவே அனந்தம்தான்! அந்த பெருமைக்கு இரு கண்மணிகள்அல்லது இரு சுவாச கோசங்கள் போல பொறுமையும், எளிமையும். மற்ற விஷயங்களை பொறுத்து கொண்டாலும் பொறுத்து கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரசிகனால், ரசக்குறைவானதை பொறுத்து கொள்வது மாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்ரமமானது! அந்த ஸ்ரமசாத்தியத்தைதான் நம்பெரியவா அனாயாசமாக சாதித்திருக்கிறார்!
ஏனென்றால், இன்று 'பாட்டு பாடுதல்"
என்ற அந்த பாடு படுதலுக்கு ராகம் மட்டுமின்றி,சாஹித்யமும் ஆளாயிற்று. இசை கொலை பிளஸ் மொழி கொலை!
"வினாயகுநிவெல்லன்னு ப்ரோவவேனினு வினா வேல்புலேவரம்மா"
என்ற பல்லவியை எடுத்து, அதில் எத்தனை அக்ஷர பிழை, ஸ்வர பிழை செய்யலாமோ அவ்வளவும் செய்து, ஒரு வழியாக தலைகட்டினார்.பொறுமையின் அவதாரமான பெரியவா இனித்த முகமாகவே பாட்டை கேட்டு கொண்டிருந்தார்.
பாடி முடித்தவர் , "பாட்டு சரியா இருந்துதா?" என்று கேட்டார்.
"என்ன தைரியம்?" என்று ஆச்சரியப்பட்டேன். பெரியவா என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வமாக கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும்ஆச்சரியமாக இருந்தது.
"எனக்கு சரியா இருந்தது. ஒனக்கு வேண்டியது அதானே?" என்றார்.
"ஆமாம் பெரிவா, எனக்கு வேற ஒண்ணும் வேணாம்" என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார்.
அவரிடம் வேடிக்கையாக பேச ஆரம்பித்தார் பெரியவா.
"இது என்ன ராகம்?"
"மத்யமாவதி"
"மத்யமாவதியா? அபூர்வ ராகம்னே சிலதை சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வம பாடினே"
"பெரிவா அனுக்ரகம்"
பாட்டுக்காரரிடம் என் கோபமும்சிரிப்பும் போய் பரிவு உண்டாயிற்று.
நன்குபரிச்சயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல
அவர் பாடினார், என்பதையே அந்த பொல்லாத கிழவனார் குறும்பில் குத்தவதை புரிந்துகொள்ளாத அப்பாவியாக இருக்கிறாரே என்ற பரிவு.
இம்மாதிரி அப்பாவிகளிடம் பெரியவாளின் கருணை இரு மடங்காக பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார் என்றால்,அவர்கள் பெரும்கருணையில் பாதியளவே பெறுகின்ற "புத்திசாலி"களான நம்முடைய புத்திக்கும் வேடிக்கை வினோதம் காட்டத்தான்! குத்தல் நமக்குத்தான் தெரியுமே தவிர, குத்தப்படுபவர்களுக்கு தெரியாது. அதுதான் அவர்கள் அப்பாவிகளாச்சே! குழந்தையிடம் நாம்,அம்மா குத்து, திம்மா குத்து"விளையாடும்போது, பிறருக்குத்தான் மிகவும் பலமாக குத்துவது போல தெரியுமேயொழிய குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானேவிழும்! பரிஹசிப்பதாக நமக்கு காட்டும்போதே, "இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா"
எனத்தக்க நாயகர்.
"மத்யமாவதின்னா என்ன?" அப்பாவியை விடவும் அப்பாவி போல் கேட்டார்.
"ராகத்தின் பேரு" பாட்டுகாரரிடமிருந்து அப்பாவி பதில் வந்தது.
"அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டியே!
அதையேதான மறுபடியும் சொல்றே? மத்யமாவதின்ன என்னஅர்த்தம்?"
"மத்யமம்னா "நடு" இல்லியா? நடு பாகம் அவதியா இருந்த மத்யமாவதியா?" "பெரிவா எப்படி சொல்றேளோ அப்படி"
"புத்திசாலி"களான நாம், அந்த அப்பாவி போல அப்படி பெரியவா சொல்வதை வேதவாக்காக கொள்வோமா?
"எழுத்தாளன்"ன்னு என்னை கூப்பிட்டு,"மத்யமாவதிக்கு நான் குடுத்த
defenition கேட்டியோ?"
"பாட தெரியாதவா பாடினா........
மத்யமாவதி மத்யமத்துலே மட்டுமில்லாம
ஆரம்பம் - மத்யமம் அந்தம்
எல்லாமே அவதியாத்தான்இருக்கும்" என்றேன்.
சட்டென ஏதோ நினைத்து கொண்டார்ப்போல், பாட்டுக்காரரை பார்த்து, "நீ இந்த பாட்டு பாடினதுக்கு என்ன காரணம்?"
"அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி -ன்னு வரதுதான்"
"அதனால..." அடேயப்பா! அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு!!
"பெரிவாளுக்கு காமக்ஷிதான் எல்லாம்; பெரிவாளே காமக்ஷிதான்-கிறதால" ஆஹா!! அப்பாவி என்ன போடு போட்டு விட்டார்?
"புத்திசாலி"களால் இயலாத எத்தகைய சகஜ பாவத்துடன் சத்தியத்தை சொல்லி விட்டார்!
சற்றேனும் இது போல அந்த புத்திசாலிகள் சொன்னாலும், உடனே பேச்சை 'அபௌட்டர்ன்" திருப்பி விடும் பெரியவா, அன்று அதை தாமும் சகஜமாக ஏற்று கொண்டு "காமக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமக்ஷிதான் [இப்படி அவர் இயல்பாக கூற கேட்டபோது உள்ளங்கால் முதல்உச்சந்தலை வரை ஜிவ்வென்று சிலிர்த்ததுகாமாக்ஷி ங்ரியே!!!!நீ என்ன கண்டு பிடிச்சியோ? எதை வெச்சு கண்டுபிடிச்சே?"
"பெரிவா" அப்பாவி தேம்ப ஆரம்பித்தார்,"கண்டு பிடிக்கல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா! ரொம்ப பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா. எனக்கும் பெரிவாளை பாத்தா அப்பிடித்தான் தோணித்து" என்று தேம்பலுக்கிடையே குழறி முடித்தார். அப்பாவி! உன்பாக்யமே பாக்கியம்!!
பூலோகம் காணாத புஷ்ப்பமா பெரியவா உட்க்கார்ந்திருந்தார். தேம்பல் தேய்ந்தது. குறும்பு குத்தலில் மீண்டும் இறங்கினார் குருநாதர். "சரி......அனுபல்லவிலே "காமாக்ஷி"ன்னுனா இருக்கு? ஒரு வேளை பாட்டு பிள்ளையார் பேர்ல இருக்குமோ என்னமோ! நீ பாட்டுக்கு காமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே?"
"என்ன தப்பா இருந்தாலும் பெரிவா மன்னிச்சுக்கணும்" என்று அழ இருந்த பாட்டுக்காரரை, "அழாதேப்பா! அழாதேப்பா! என்று சந்தனமாகஆற்றி கொடுத்தார். "தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா! "விநாயக"ன்னு ஆரம்பிச்சுட்டு "காமாக்ஷி"ன்னு போறதேன்னு கேட்டேன்.அவ்வளவுதான். போகட்டும், பாட்டு என்ன பாஷை?" குறும்பு குத்தல்தான்! "தெலுங்கு" என்றார் பாட்டுக்காரர். "அப்படியா!" என்ற பெரியவா ஒரு "திம்திமா" குத்தே விட்டார்! அபூர்வ ராகம்பாடினாப்ல, அபூர்வ பாஷையும் பாடரயோன்னுனா ஆச்சர்ரியப்பட்டேன்!"
"பெரிவா அனுக்ரகம்!" திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில்.பாட்டுக்காரர் குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன்,
பின்னர் பரிவு கொண்டவன், இப்போது அழுதுவிடுவேன் போலாயிற்று! "பாக்யசாலி !" உன் அப்பாவித்தனம் எனக்கு வாய்க்குமா?"
"புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் போகட்டும் [குறும்பு குத்தல்] பெரியவா பேசறா, கேட்டுண்டயிருப்போம்னு ஒக்காந்திருக்கியே...... பஸ்போய்ட போறதுப்பா! என்ன டைம்?" என்று பறந்தார். பாட்டுக்காரரை பற்றி சொன்னார். வலக்கை, இடக்கை தெரியாத ஆயர்களிடம் கீதையை தனக்குள் அடக்கி கொண்டிருந்த ஞானச்சாரியனுக்கு இருந்த அதே பரிவு.
பாட்டுக்காரருக்கு வேலூர் தாண்டி ஏதோ கிராமமாம். "ஸ்வல்ல்ப்ப பூஸ்திதி. அதுதான் ஜீவனோபாயம். படிப்பு பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்துண்டிருக்கான் [படிப்பு ஏறாததை இத்தனை அழகாக ஏற்றம் கொடுத்து சொல்ல அந்த எளிமை தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை பேருக்கும் குறும்பு குத்தல்]
விதந்து தாயாரும் ஒரே பிள்ளையான இவனுமா இருந்துண்டிருக்கா.
கல்யாணத்தை பத்தி யோஜனை போகலையாம். அவா பாட்டுக்கு ஒரு கஞ்சியை, கூழை குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா இருந்திண்டுருக்கா.
பாட்டுன்னா இவனுக்கு கொழந்தை நாள்லேர்ந்து ஒரு ஆசையாம். சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார்ஆத்திலயாவது,ஹோட்டல்லயாவது ரேடியோ, ரெகார்ட் வெச்சா ஓடி ஓடி போய் கேக்கறதாம். தனக்கு இருக்கற க்ராஹ்ய சக்தியிலே எவ்வளவு பிடிச்சுக்கமுடியறதோ பிடிச்சுக்கறதாம். லட்சியமும், மனோபாவமும்தான் முக்யமே தவிர, கார்யத்ல என்னசாதிக்க முடியுங்கறதா முக்கியம்! அப்படி,அங்க இங்க ஓடி தன்னாலமுடிஞ்ச மட்டும் பாட்டு கத்துண்டு இருக்கான். என்ன பத்தி கேள்விபட்டதிலேந்து...[பாட்டுக்காரரை பார்த்து]எப்போப்பா கேள்விப்பட்டே?"
"கனகாபிஷேகம் நடந்துதே அப்போ"
"அதாவது, ஏழெட்டு வருஷமா, அம்பாள், கிம்பாள்"ன்னு என்னை பத்தி யாரோ சொல்லிகேட்டதுலேர்ந்து என்கிட்டே ஒரே பக்தி வந்துடுத்தாம்.எனக்கு பாடி காட்டணும் காட்டணும்..ன்னு ஆசையாம். "அதெல்லாம் நம்மை அல்லௌ பண்ணுவாளான்னும் பயமாம். அதோட, காஞ்சிவரம் வந்துட்டு போறதுன்னா ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குகூட வசதி இல்லாத ஸ்ரமமாம்"....
பாட்டுக்காரரின் தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, "அழாதேப்பா! பணம் காசு வரும் போகும். நீ அதுக்காக பறக்காம இருக்கியே, இந்த மனசு யாருக்கும் வல்லே; வரது துர்லபம். ஐநூறு ஆயிரம் சம்பாதிக்கற இளம் பசங்ககூட [சொன்னது 40வருஷங்கள் முன்னால்] அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல, பசங்களை சொல்வானேன்? ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சு ரிடையர் ஆனவாகூட extension க்காக இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்கிற எண்ணம் வரதே இல்லே...ஏதோ வர மாதிரிக்ஷணம் வந்தாலும் ஓடி போய்டறது. ஒனக்கு அது தன்னால வந்திருக்கு. அது போகவும் படாது. என்னை பாக்கறதுக்காக கூட பணம் காசுவந்தா தேவலையேன்னு நெனைக்காதே. நா... ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோ......."
யாருக்கு கிடைக்கும் அந்த சர்வகால சஹவாச வாக்குறுதி!
பாக்கிய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார். "என்னை பத்தி கேட்டதுலேர்ந்துபாக்கணும், பாடணும்னு தவிக்கஆரம்பிச்சுட்டான்........ஏழெட்டு வருஷமா எனக்காக தவிச்சிருக்கான். தபஸ் இருக்காப்ப்லேயே........இப்பத்தான் வாழ்நாள்ல மொதல் தரமாsavings ன்னு ஒரு பத்து பதினஞ்சு கையிலே சேந்துதாம்.....அது அப்படியே பெரியவாளுக்குன்னு [பெரியவா அடக்கிகொண்ட போதிலும் அவரதுஉள்ளுருக்கம் அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது] பஸ் சார்ஜ் போக, மீதிக்கு எனக்கு புஷ்பம், பழம், இதோ மாலைபோட்டுண்டிருக்கேனே, இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான் [ஓஹோ! மாமுனிவர் கழற்றாமல் அணிந்திருந்த மாலையின் ரகசியம்இதுதான?] திரும்பி போறதுக்கு சரியா என்ன பஸ் சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வச்சுண்டிருக்கான்"
அடாடா! அப்பாவி! உன் பக்தி மட்டுமில்லை, அபரிக்ரஹமும், த்யாகமும்கூட எங்களுக்கு கனவிலும் வராது!
அந்த பாகியசாலிக்கு ஏதேனும் பணிபுரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்ப்பட்டதால், "ராத்திரி பூஜை பாத்துட்டு போறமாதிரிதான்வந்திருக்கேன். அதனால, அவரை எங்க வண்டியிலே கிராமத்துக்கு கொண்டு விட்டுட்டு வ
வரச் சொல்லவா?உடனே பெரியவா பளிச்சென்று சொன்னார் "அந்த சவுகர்யத்துக்கேல்லாம் அவனை காட்டி கொடுக்காதே! [காட்டிகொடுக்காதே....என்ன அர்த்தபுஷ்ட்டியான பதப்ரயோகம்!]
"பாத்தியா.......பெரிய எழுத்தாளர் ஒன்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கார்? அதுக்காக அவர் எழுதறது, எதையாவது படிச்சுட்டு திண்டாடாதே!அவர் பணம், காசு கொடுத்தா தொடாதே! கார் சவாரி பண்ணி வெக்கறேன்னாலும் ஒத்துக்காதே !"
பையன் சொன்னார் "நான் படிக்க மாட்டேன் பெரிவா! எனக்கு அதெல்லாம் புரியாது; காசும் யார்கிட்டேயும் வாங்கறதில்லே, பெரிவா; கார் சவாரிக்கேல்லாம் ஆசைப்படலை பெரிவா! பெரிவா ஆசிர்வாதந்தான் வேணும்"
"வேண்டியமட்டும் தரேன் " என்று வாரிவிட்ட வள்ளல் பாகியசாலியிடம் "ஒனக்கு நாழியாச்சு.....சட்னு போய் சந்திர மௌலீஸ்வரருக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, பிரசாதம் தரேன்"
"சந்திர மௌலீஸ்வரர்னா எந்த சுவாமி? எங்கே கோவில் இருக்கு?" என்று பெரியவாளையே கேட்டார், தன அறியாமையாலேயே கண்களை மல்க செய்த பாக்கியசாலி.
"சந்திர மௌலீஸ்வரர்தான் இந்த மடத்துக்கு சுவாமி. அதோ அங்கேதான் நாங்க அவரை வெச்சுண்டு தங்கி இருக்கோம். போய் நமஸ்காரம்பண்ணிட்டு ஓடி வா"
"மடத்து சுவாமி காமாக்ஷி அம்மன் இல்லியா?"
"அவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர் உலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சிபுரத்ல பொது கோவில்லஇருக்கா........அவளேதான் இந்த மடத்தை பாத்துக்கறதுக்காக, இந்த மடத்து சாமியார்கள் மட்டும் பூஜை பண்ணறதுக்காக - ஆனா மடத்துக்காக மட்டும் இல்லாம, லோகம் பூராவுக்குமாக பூஜை பண்றதுக்காக - சந்திர மௌலீஸ்வரர்ன்னு அவளோட ஆத்துக்காரர்
[ எளியவர்க்கேற்ற எளியபத பிரயோகம்] அவரை ஸ்படிகலிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர் பக்கத்திலே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே [ஸ்ரீசக்ரம், மேரு என்றெல்லாம் சொல்லி அவரை திண்டாட வைக்காத அருமை பாருங்கள்] இருக்கா. கவசமும் அலங்காரமும், புஷ்ப்பமுமாபோட்டிருக்கரதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்ன்னு எல்லாம் ஒண்ணும் ஸ்பஷ்ட்டமா தெரியாது. அதுக்காக தேடிண்டு இருக்காதே! "இங்கேசுவாமி இருக்கார் ன்னு " நெனச்சுண்டு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு ஓடி வா"அவர் போனதும் என்னிடம் "நீ அவனை கார்ல அனுப்பி வெச்சு கார், மோர் ன்னு போய் கிராமத்தல எறங்கரான்னு வெச்சுக்கோ, அப்பா ஒருமெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு அதெல்லாம்? அவனுக்கு வசதி வேண்டாம், சவுகர்யம் வேண்டாம்,
status,தோரணை ஒண்ணும் வேண்டாம். அறிவு, வித்வத்கூட வேண்டாம். ஆமாம், வேண்டாந்தான்! சொல்றேன் கேளு"
"சமீப காலமா வேலூர்லேர்ந்து ஒரு பாட்டு வாத்யார் என்கிட்டே வந்துண்டு இருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர்; அதைவிட [குறும்பானசிரிப்புடன்] பொறுமைசாலின்னும் தெரியறது.........நான் சொன்னேன்னா.....இவனுக்கு ப்ரீயாவே கத்துக்கொடுப்பார். அப்படி பண்ண அவருக்குஅபிப்ராயமில்லேன்னு தெரிஞ்சாலும், நான் யார் தலையிலாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறதுக்கு ஈஸியா ஏற்பாடுபண்ணிடலாம்.......ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டி கொடுக்க நெனைக்கலே .....சரியா பாடறதுங்கர சாமர்த்தியம் கூடஅவனுக்கு வேண்டாம். அவன் பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். இப்ப பாடறபடியே பாடிண்டு போகட்டும். தற்கால புத்திசாலி உலகத்திலேயும் தப்பி தவறி, இந்த மாதிரி அசடா இருக்கறவா, நித்திய அசடாவே இருக்கட்டும். அவாளை கெடுக்க வேண்டாம்னே எனக்கு இருக்கு"
சந்திர மௌலீஸ்வரர் யாரென்று தெரியாமலே, நடமாடும் சந்திர மௌலீஸ்வரியால் இன்றைய புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாக போற்றப்பட்ட பாக்கியசாலி, அவர் சொன்னபடியே நமஸ்கரித்து விட்டு வந்தார்.
"நமஸ்காரம் பண்ணிக்கோ நாழியாச்சு!"
பிரிய மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்கியசாலி நமஸ்கரித்தார்...........நீ பாடினியே,அந்தவிநாயகனை ரக்ஷிக்கராப்ல ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிசுண்டு இருக்கட்டும்" என்று ஆசிர்வதிக்கவே ஏற்ப்பட்டதிருக்கரத்தை தூக்கினார்.

"சங்கீதப் பெரியவா"
( "விநாயக"ன்னு ஆரம்பிச்சுட்டு "காமாக்ஷி"ன்னு)
(கட்டுரையாளர்;ரா.கணபதி}

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top