Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, January 29, 2011


Please listen to this beautiful song on Kanchi Nagar and Maha Periavaa, dedicated to all the devoteesPlease mute the MP3 player first before you click the play button.

Friday, January 28, 2011

ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை!

clip_image001

வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமை உள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ச்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Wednesday, January 26, 2011

An ardent devotee of Kanchi Paramacharya

clip_image001

Vidwan Neyveli Santhanagopalan follows a strict regimen during the music season.

He wakes up before 6 a.m, practises pranayama, jala neti and does steam inhalation with tulsi leaves and turmeric. Barring a rigorous round of African voice culture, he gives adequate rest to his voice.

This season, the acclaimed vocalist has a mobile phone that only his family and accompanists have access to!

clip_image002

An ardent devotee of the Paramacharya of Kanchi, the musician has named his home ‘Periyava Pichai’.

http://www.thehindu.com/arts/music/article952686.ece

Friday, January 21, 2011

காஞ்சிப் பெரியவர் தரிசன அனுபவம் — உன்னிகிருஷ்ணன்

clip_image001

காஞ்சிப் பெரியவரிடம் ஆசி வாங்கச் சென்றபோது அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக மூடிய அறைக்குள் இருப்பதாகவும் யாருக்கும் தரிசனம் தரவில்லை என்றும் அறிந்தோம்.

clip_image002

காமாட்சி அம்மனைக் குறித்து நான் ஒரு பாடலை மனமுருகிப் பாடினேன்.  பாடலை முடிப்பதற்குள்ளாகவே வெளியே வந்து தரிசனம் தந்தார் பரமாச்சாரியார்.  இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வரும் போதெல்லாம் என் உடல் புல்லரிக்கும்.

clip_image003

நன்றி – தென்றல் மாத இதழ் (ஆகஸ்ட், 2002 )
http://www.tamilonline.com/thendral/

Wednesday, January 19, 2011

அன்பே உருவாய் வந்தாய்!

எவருக்கு தெய்வத்தின் மீது சஞ்சலமில்லாத பக்தி வாய்க்கிறதோ அதே அளவுக்கு குருவின் மீதும் பக்தி வாய்க்கிறதோ, அந்த மகான்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், தத்துவார்த்தங்கள் தாமாகவே விளங்குகின்றன.

- ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

clip_image001

நன்றி – கல்கி

Sunday, January 16, 2011

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி

clip_image001

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

clip_image002

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.

ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

நன்றி – கல்கி

Thursday, January 13, 2011

திருப்பணி — மஹா பெரியவாளின் அருள்வாக்கு

clip_image001

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

ஈச்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக் கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி இலேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணா மூர்த்தியான ஈசனிடம் பிடிப்பு ஏற்படுத்தித் தருகிற திருப்பணிதான்.

பணி என்றால் ஸர்வீஸ். ஸ்கூல் வைப்பது, ஆஸ்பத்திரி கட்டுவது, ஜல வஸதி பண்ணித் தருவது எல்லாம் ஸர்வீஸ்தான். நாம் ஸோஷல் ஸர்வீஸ் – ஸமூஹப் பணி – என்றாலே இதுகளைத்தான் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பணியெல்லாம் இறை பணியில் கொண்டு சேர்த்தால்தான் நிறைவுள்ளதாகும் என்று நமக்குப் புரிய வைக்கிறதற்காகத்தான் ஈச்வர ஸம்பந்தமான பணிக்கே ‘திரு’ என்று அடைமொழி கொடுத்து ‘திருப்பணி’ என்று பேர் வைத்திருக்கிறார்கள். ‘திருப்பணி’ என்கிற வார்த்தை எல்லா ஸர்வீஸுக்கும் உச்சி அதுதான் என்று அர்த்தம் கொடுக்கிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

நன்றி: கல்கி

Monday, January 10, 2011

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (16)

clip_image001

”மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.

ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும் பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!

ஒருநாள்… ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், ‘கோவிந்த… கோவிந்த’ எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, ‘இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது?’ என்று கேட்டாராம்.

”பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை… அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், ‘கோவிந்த, கோவிந்த’ன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான் மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் தூரம்!’ என்று  ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

clip_image002மகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ‘ஈஸ்வரனைத் தரிசிக்க ‘கோவிந்த’ கோஷமா?!’ என்று வியந்து சிலாகித்தவர், ‘நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே’ என்று தனது ஆசையைக் கூறினாராம். ‘ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே!’ என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.

நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.

மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசித்த மகா பெரியவர், ”ஒரு நாள், ஒரேயொரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்!’ என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.

அந்த வருடம்… வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ… அந்த அன்பரே தனியொருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!”

- பரவசத்துடன் இந்தச் சம்பவத்தை விவரித்த அகிலா கார்த்திகேயன், இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொன்னார்…

”முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், முழு வரியையும் பாக்கி இல்லாமல் செலுத்திய தன் குடி மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினார்.

மந்திரியை அழைத்து, ‘பணத்தைத் தண்ணீ ரில் கொட்டு’ என்று ஆணையிட்டார். அந்த மதியூக மந்திரி என்ன செய்தார் தெரியுமா? தகுந்த பணியாட்களைக் கொண்டு, அங்கே இரண்டு அணைகள் கட்டினாராம். இதனால்,  ஊர் செழித்தது!

மகா பெரியவா நெருஞ்சிப்பேட்டையில் தங்கியிருந்த காலத்தில், அணைகளின் நடுவே கற்களையே அடித்துச் செல்வதுபோல் பெரும் சத்தத்துடன் தண்ணீர் பாய்ந்ததாம். அங்கே ஒரு பெருமாள் விக்கிரகமும் இருப்பதைக் கண்ட  பெரியவர், அணையையும் விக்கிரகத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ‘இதுபத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’ என்று ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டிருக்கிறார்.

”ஒரு ராஜா, இங்கே வேங்கடபெருமாளுக்கு ஆறு ஏக்கர் பூமியைக் கொடுத்ததைக் கதை கதையாகக் கேட்டிருக்கோம். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்!” என்று அவர்கள் கூற, ‘அடியிலே பொக்கிஷம்!’ என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொன்னாராம் பெரியவா. அப்போது, ஊர் மக்களுக்கு பெரியவா ஏன் அப்ப டிச் சொன்னார் என்பது விளங்கவில்லை!

clip_image003பல வருடங்கள் கழித்து, மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரில் மின்சாரம் எடுக்க ஏற்பாடு ஆனது. இன்ஜினீயர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய போது, பெருமாள் விக்கிரகத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று. வெகு ஜாக்கிரதையாக பெருமாள் விக்கிரகத்தை அகற்றி, 25 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி, அஸ்திவாரப் பணியைத் துவங்கியபோதுதான்… ‘அடியிலே பொக்கிஷம்’ என்று மகா பெரியவாள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது ஊர்க்காரர்களுக்கு!

முதலில், அனுமன் விக்கிரகம் கிடைக்க, அடுத் தடுத்து ஸ்ரீராமன், சீதாதேவி விக்கிரகங்களும்  கிடைத்தனவாம். சிலிர்த்துப்போன சுந்தர ரெட்டியாரும் இன்னும் சில ஊர்ப் பெரியவர்களும், அந்த விக்கிரகங்களை ஒரு டெம்போவில் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார்கள். மகா பெரியவரைத் தரிசித்து, விஷயத்தைச் சொல்லி அந்த  விக்கிரகங்களை வைத்துக் கோயில் கட்ட ஆசி வேண்டினர். மகாபெரியவாளும், ”உடனே செய்யுங்கள். சீக்கிரமே நடக்கும்!” என்று அருளாசி வழங்கினார்.

அனைவரும் கிளம்பும்போது, பெரியவர் அவர்களை அழைப் பதாகக் கூப்பிட, மீண்டும் அவர் கள் உள்ளே வந்தனர். ”நான் ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க மலை ஏறினப்போ, வழிகாட்டியா வந்த பெருமாள் கவுண்டர் நன்னா இருக்காரா?’ என்று கேட்டார் பெரியவர். ஒரு பாமர வழிகாட்டியை, 70 வருடங்கள் கழித்தும் பெயர் முதற்கொண்டு நினைவு வைத்திருந்து, அன்போடு நலம் விசாரிப்பதை எண் ணிச் சிலிர்த்தனர் அவர்கள்.

”கவுண்டர் நன்றாக இருக்கிறார். 95 வயது ஆகிறது” என்று அன்பர்கள் பதில் அளிக்க, பெரியவர் தன் முன் இருந்த தாம்பாளத்தில் இருந்த புது வஸ்திரங்களை அவர்களிடம் காட்டி, ‘இந்த வஸ்திரங்களைக் கொண்டுபோய்ப் பெருமாள் கவுண்டரிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கோ. நான் அவரை ரொம்பவும் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ!’ என அன்புடன் கூறினார். பெருமாள் கவுண்டர் எத்தனை பாக்கியம் செய்திருக்கிறார் என்று உருகிப் போனார்கள் நெருஞ்சிப் பேட்டை அன்பர்கள்.

எங்கோ, எப்போதோ தனக்கு வழிகாட்டியதை மறக்காமல், அந்த அன்பரை நினைவு வைத்திருந்து, தன் மரியாதையையும் அன்பையும் காட்டினாரே… பெரியவாளின் கருணையே கருணை!’

நன்றி – சக்தி விகடன்

Thursday, January 6, 2011

சதாவதானமும் சாத்தியமே!

clip_image001

சதாவதானம் என்பது மிகவும் அற்புதமான, அரிய கலை.

சதாவதானி எனப்படுபவர் ஒரே சமயத்தில்,  கவிதை, கணிதம், ஜோதிடம், வேதாந்தம், புராணம், இசை போன்ற பல துறைகளைப் பற்றி, மற்றவர்கள் கேட்கும் நூறு கேள்விகளை மனதில் வாங்கிக் கொள்வார்.  பிறகு விடைகளை,  வரிசையாக,  ஒன்றுகூட விடாமல்,  தவறு இல்லாமல் சரியாகச் சொல்லுவார்.

ஒரு முறை வயது முதிர்ந்த ஸ்ரீவைஷ்ணவ சதாவதானி ஒருவர் மடத்துக்கு வந்திருந்தார்.  அவரிடம் வித்வான்கள் பல கேள்விகளைக் கேட்டனர்.

கேள்விகள் கேட்கப்படும்போதே, பரமாச்சார்யார் அருகில் இருந்த ஒருவரிடம்,  தான் கூறும் விடைகளைத் தனியே குறித்துக் கொள்ளுமாறு கூறினார்.

பின்னர், அந்த முதியவர் விடைகளைச் சொன்னபோது,  அந்த விடைகளும்,  பரமாச்சார்யார் சொல்லிக் குறித்து வைத்திருந்த விடைகளும் ஒன்றாகவே இருந்தன.

ஸ்வாமிகள் அருளின் வடிவம் மட்டுமல்லாமல், அறிவின் வடிவமும் கூட என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.

Monday, January 3, 2011

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (14) – பட்டாபி

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

”அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

ராம ராம‘ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்‘னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்‘னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்.

சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், ஜனவரி  8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!

பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது…

clip_image003

”தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…

”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”

எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.

clip_image005

ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, ‘டோட்டல் பாடி ஸ்கேனர்’ கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.

ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.

யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.

”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!’‘னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.

நன்றி – சக்தி விகடன்

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top