Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, April 14, 2016

Sri Kamakshidasan Sreenivasan Mama on Mahaperiyava -----

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.


சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத் துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…

‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.


Courtesy: Shri Venkatakailasam

"பெரியவாளின் புத்தாண்டு செய்தி"

மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.
வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம்.
கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்." -

Coutesy: Shri Varagooran Narayanan

Tuesday, April 12, 2016

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர். "பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்." பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?" "ஆமா........." "எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?" "உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்." அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார்.
அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்." "செஞ்சுடறேன் செஞ்சுடறேன்." பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்! "சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............." "இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்? ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது. "ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி! என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள். பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.
இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும்,வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், சர்வ சாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.


Coutesy: Shri Venkatakailasam

Saturday, April 2, 2016

மஹா பெரியவர் - நிகழ்வு

திருவண்ணாமலையில் வசிக்கும் ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு தகவல் சுரங்கம்.குறிப்பாக மஹா பெரியவர் என்று பேச்சு வந்துவிட்டால் போதும்பலரும் அறியாத தகவல்கள் வந்து கொட்டும்நேற்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது ....

மஹா பாரதத்தில் துரியோதனன்காட்டில் இருக்கும் பாண்டவர்களை பரிவாரத்துடன் போய் பார்த்து விருந்து உண்டு அனுகிரஹிக்க வேண்டும் என்று துர்வாசரை கேட்டுக்கொண்ட கதை ஒன்று உண்டுஅனேகமாக நாம் அனைவரும் அறிந்து இருப்போம்திடீரென்று இந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் ஸ்ரீ கௌரிசங்கர்கதை முடிந்தபின் தொடர்ந்தார்....

மதனபள்ளியில் பெரியவா முகாம்அன்னக்கொடி கட்டிவிட்டார்கள்.அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம்முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.

தகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் "வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம்வா போகலாம்" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாதுபோகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.
அன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டதுபெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்றுதிடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் "டேய்ரொம்ப பசிக்கிறதுடாஎன்ன இருக்கு?” என்று கேட்டார்மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை.இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள்அதற்குள் எங்கிருந்து பசி வந்ததுஅத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதேஎவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்!
என்னடா பதிலே காணோம்ரொம்பவே பசிக்கறதே!” என்றார் பெரியவர்.
மேனேஜர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டார்.
ஓஹோஒண்ணுமே இல்லையாம்ம்ம் என்ன செய்யலாம்???”

அப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள்கையில் பழங்கள்ஏதோ பொட்டலங்களுடன்நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர்பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார்கற்கண்டு இருந்ததுஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார்அது சுக்கு நூறானதுஅதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார்ஏப்பம் விட்டார்வந்தவரை பார்த்து "அப்பாடாசரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய்க்ஷேமமா இரு! ” என்று ஆசீர்வதித்தார்வந்தவருக்கு பரம சந்தோஷம்வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகும் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது!
அதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்ததுஇதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும்வயிறார சாப்பிடலாம்ஒன்றும் அறியாத எளிய மக்கள்ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை!
திடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வுநடையின் வேகம் குறைந்து போய்விட்டதுஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையேவயிறு ரொம்பிப்போச்சேஇன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாமா?” கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான்.அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்!

Friday, April 1, 2016

ஜகத் குரு!

திருவண்ணாமலை பெரியவரை அண்மையில் சந்தித்தேன்வழக்கம் போல மஹா பெரிவா கதை சொல்லுங்கன்னு கேட்டேன்அவர் சொன்ன கதை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்ததுஇதன் கருவை தெய்வத்தின் குரலில் படித்து இருக்கிறேன்ஆனால் அதன் பின் இவ்வளவு கதை இருப்பது தெரியாது!
==
மஹா பெரியவாளின் யாத்திரை காசி நகரை நெருங்கியதுகாசி ராஜா மதன் மோஹன் மாளவியா. ஆதித்ய நராயண சிங்.  அவர் பெரியவாளை பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்.சிலருக்கு இது பிடிக்கவில்லைஅவர்கள் ராஜாவிடம் சென்று காஞ்சி மடம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் காஞ்சி மடாதிபதிகள் ஜகத் குரு என்று அழைத்துக்கொள்வது சரியில்லை என்றும் "போட்டுக் கொடுத்தார்கள்.” இதை கேட்ட ராஜாவுக்கு மனசு சஞ்சலப்பட்டு விட்டது.வரவேற்புக்கு எல்லாம் ஏற்பாடு ஆகிவிட்டதேஎன்ன செய்வதுயோசித்து யோசித்து குழம்பிகடைசியில் பூர்ண கும்பம் சொடுப்பதை தவிர்த்துவிட நினைத்தார்.
காசி ஹிந்து சர்வ கலாசாலையின் சம்ஸ்க்ருத துறை பேராசிரியரை அழைத்து நாளை நீங்கள் சென்று பூர்ண கும்பம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்அவர் அதிர்ச்சியுடன் "ஏன்என்ன ஆயிற்றுஉங்களுக்கு உடல் நிலை சரியில்லையாதீட்டு ஏதும் வந்துவிட்டதா?” என்றூ வினவினார்ராஜா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.
பேராசிரியருக்கு ராஜாவின் மனசை யாரோ கலைத்து இருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது.
"பூர்ண கும்பத்தை நான் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன்அது நான் செய்தா பாக்கியம்ஆனால் காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும்அவர் எப்பேர்பட்ட மஹான்சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம்அவருக்கு பூர்ண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியாயாரோ அவரைப்பற்றி தவறாக சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதாகண்ணால் காண்பதும் பொய்காதால் கேட்பதும் பொய்தீர விசாரித்து அறிவதே மெய் என்று உங்களுக்குத் தெரியாதாகுறைந்தது சம்ஸ்க்ருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா?” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.
திக்குமுக்காடிப்போன ராஜா "சரி சரி நானே நாளை பூர்ண கும்பம் கொடுக்கிறேன்நீங்கள் பக்கத்தில் இருங்கள்!” என்று ஒத்துக்கொண்டார்.

ஊர் எல்லைஏராளமான ஜனங்கள் பெரியவாளை எதிர்கொண்டழைக்க கூடி இருக்கிறார்கள்ராஜாவும் ஆஜர்.
பெரியவாளும் வந்து சேர்ந்தார்சூரியன் போல் பிரகாசித்துக்கொண்டு நிற்கும் பெரியவாளை கண்ட ராஜாவின் பூர்ண கும்பத்தை ஏந்திய கைகள் நடுங்குகின்றனகீழே போட்டுவிடுவார் போல் இருந்ததுபேராசிரியர் அதை தானே வாங்கி வேத மந்திரம் கோஷித்து பெரியவாளிடம் நீட்டுகிறார்.அவரும் அதை ஏற்கிறார்.
பின் பேராசிரியரைப் பார்த்து "ராஜாவுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு போலிருக்கேதாராளமாக கேட்கச்சொல்லுஎன்கிறார்.
ராஜா சம்ஸ்க்ருதத்திலேயே கேட்கிறார். “ஜகத் குரு என்பவர் யார்யாருக்கு அந்த பட்டம் பொருந்தும்?”
பெரியவா சிரித்துக்கொண்டே "இந்த கேள்விக்கு பதில் கிடைக்க சாயந்திரம் வரை பொறுக்க முடியுமாநான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்பு கூட்டம் என்றும்என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே!”
ராஜாவும் ஒப்புக்கொண்டார்.
மாலை சதஸ் கூடியது.
காசி நகர சார்பாக வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டதுபெரியவா ஏற்புரை நிகழ்த்தலானார்.
"இன்றைக்கு ஒருவர் என்னைப்பார்த்து கேட்டார்ஜகத் குருன்னா யாரு?அந்த பட்டம் யாருக்குப்பொருந்தும்?”
கேள்வியை கேட்ட பின் ஒரு முறை நிதானமாக கூட்டத்தினர் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார்.
"நான் பார்க்கிற வரையில் என்னைத்தவிர அந்த பட்டத்துக்கு பொருந்தமானவரா யாரையும் பார்க்கலை!”
கூட்டம் கப்சிப் என்றாகிவிட்டதுஒரே அதிர்ச்சிஒரு சன்யாஸி!தன்னைத்தானே இப்படி புகழ்ந்து கொள்வதாபலருக்கு ச்சீ என்றாகிவிட்டது.
பெரியவா தொடர்ந்தார்.

"யார் ஜகத் குரு?

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: |
என்று தக்ஷிணாமூர்த்தியை ஜகத் குருவாக சொல்லியிருக்கு.

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
என்று க்ருஷ்ணனை ஜகத் குருவாக சொல்லி இருக்கு.

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் 
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் 
என்று ஆச்சார்யாளையும் சொல்லி இருக்கு.
வேறு யாரையும் இப்படி சொன்னதாக தெரியவில்லை.
ஜகத் குரு என்பதை இரண்டு விதமா அர்த்தம் பண்ணலாம்ஜகதாம் குரு என்றால் ஜகத்துக்கே குரு என்பதாக முன்னே மூன்று பேரை சொன்னேன்.
யாருக்கு 'ஜகத் ஏவ குருஎன்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம்யாருக்கு இந்த உலகமே குருவா இருக்கோ அவர் ஜகத்குரு என்றும் அர்த்தம் பண்ணலாம்அப்படிப்பார்த்தா சின்ன வயசில் இந்த மடத்துக்கு வந்ததில் இருந்து லோகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கேன்.இன்னமும் பாடம் கற்றுக்கொள்கிறேன்அதனால்தான் வேறு யாரையும் விட எனக்கே அதுக்கு அதிக அருகதை இருக்குன்னு சொன்னேன்"
ராஜா இதை கேட்டதும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார்சபையில்'ஓபனாக' "நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியை கேட்டவன்.இப்போது புரிந்து போயிற்றுநீங்களே ஜகத் குருஜகத் ஏவ குரு இல்லை,ஜகதாம் குரு!” என்று உணர்ச்சி பொங்க கூறினார்சபையோர் ஆரவாரித்தனர்!
-- 
இந்த கதையின் இன்னும் ஆதென்டிக் வெர்சன் வேறு இருக்கிறது. சக்கையை விட்டு சாரத்தை மட்டும் கிரஹிக்க ப்ரார்த்திக்கிறேன். 
==== 
"ஆமாம்அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?”என்று கேட்க அடுத்த கதை வந்தது!......


Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top