Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, December 31, 2012

இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம்

பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.
ஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல… என்னுள் எழும்பியிராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு காரணம், கல்கி வார இதழ் என்றுதான் கூற வேண்டும்.
ஆம்… அதில்தான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மகா பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ பிரசுரமாகி வருகிறது. அவர் பேசியதில் இருந்து அரைப்பக்கம், கால் பக்கம் என்று ஒரு ஓரமாய் பிரசுரித்து வந்த விஷயம் கண்ணில் பட்டது. அப்பா தவறாமல் கல்கிக்கு சந்தா கட்டிவிடுவார். கடைகளுக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தபாலில் வந்துவிடும். அப்பா சொல்லாத பதிலினை, பெரியவர் மூலம் கல்கி சொல்லியது. நானும் கல்கி வந்தவுடன் முதலில் அதையே வாசிக்கலானேன். ஒரு வாரமா? இரு வாரமா?
பல வருடங்கள் – அதாவது, 1970ல் இருந்து 1994 வரை… தெய்வத்தின் குரலால் நான் மெல்ல மெல்லத் தெளிந்தேன். ஆசாரமான வைணவ குடும்பத்தில் பிறந்துவிட்டபோதிலும், அந்த மகானிடமே மனது போப்போ நின்றது. அவரது லாங்வேஜ் எனப்படும் பாஷை மிகமிகப் பிடித்துப்போனதும் ஒரு காரணம்.
அவர் எதைப் பேசி முடித்தாலும் முடிவில் ‘நாராயணா நாராயணா!’ என்றே முடிப்பதால், அவரை வைணவத்துக்கு அன்னியமாகவோ எதிராகவோ கருதவே முடியவில்லை.
இத்தனை தூரம் மனத்தில் நிரம்பி விட்டவரை, நேரில் தரிசிக்கும் வாய்ப்பு தான் ஒருமுறைகூட வாக்கவில்லை; தரிசிக்கும் எண்ணமும் பெரியதாக தோன்றவில்லை; லௌகீகமான வாழ்க்கைப் போக்கும் ஒரு காரணம். காலம் இப்படியே போய்விடுமா என்ன?
1993ஆம் வருடம் மார்கழி மாதம் என்பதாக ஞாபகம். குளிர வேண்டிய அந்த மாதத்தில், பெரும் புயலும் மழையும் ஏற்பட்டு ஊரே மழைக்காடாக இருந்த வேளையில், எனக்கும் டைஃபாடு காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த காய்ச்சலை மீறிக்கொண்டு, காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை தரிசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. ஏன்? எதனால்? என்றெல்லாம் தெரியாது. என் அம்மா மற்றும் மனைவியிடம் கூறவும் அவர்கள் வெறித்தனர். ‘இந்த உடம்போட காஞ்சிபுரத்துக்கா…?’ என்றும் கேட்டு முறைத்தனர். ‘உங்களுக்கு என்ன ஆச்சு… இப்பபோ பெரியவரை பார்க்கணும்னா என்ன அர்த்தம்?‘’ என்று கேட்டாள் மனைவி.
என்னமோ தெரியலை… தரிசிக்கணும்னு தோண்றது” என்றேன்.
உடம்பு குணமாகட்டும். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் மனைவி!
ஆனால், நான் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
நீங்கள் யாரும் வர வேண்டாம். நான் போகிறேன்” என்று வைராக்யமாய் புறப்பட நான் முயலவும், வேறு வழியில்லாமல் என் அம்மா, மனைவி, மகள் என்று நாங்கள் நான்குபேர் புறப்படத் தயார் ஆனோம்.
எனக்கு ராஜப்பா என்று ஒரு நண்பர். தற்செயலாக என்னைப் பார்க்க வந்தவர், ‘நானும் என் மனைவி உமாவும் கூட வருகிறோம்” என்றார். நான்குபேர் ஆறு பேராகிவிட்டோம். வெளியிலோ மழை நிற்கவில்லை. அதனால் என்ன என்பது போல, நான் மேற்கொண்ட குரு தரிசன யாத்திரைக்குள் நம்பமாட்டாத அதிசயங்களும் அரங்கேறத் தொடங்கின.
என் வீட்டுக்கு நூறு மீட்டர் தொலைவில் இருந்தது டவுன்பஸ் நிறுத்தம். பஸ் டிரைவர் தப்பித்தவறிகூட நிறுத்தத்தைத் தவிர, வேறு எங்கும் நிறுத்தமாட்டார். அப்படிப்பட்டவர், நான் வாசலுக்கு வந்த நொடி பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக் கொண்டார்.
திருவள்ளுவர் பஸ் நிலைய வாசலில் இறங்கி, செங்கல்பட்டு செல்லும் பஸ்ஸை பிடிக்கும் எண்ணத்தோடு நடந்தபோது, ஒரு திருவள்ளுவர் பேருந்து எதிரில் வந்தது. அதில் செங்கல்பட்டு செல்லவும் இடம் இருந்தது. ஒரு ஆச்சரியம்போல, ஆறுபேர் ரிசர்வ் செய்துவிட்டு என்ன காரணத்தாலோ வந்திருக்கவில்லை. அந்த இடம் அப்படியே எங்களுக்கு கிடைத்தது.
செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து காஞ்சிபுரம் செல்ல விழைந்தபோது, காஞ்சிமடத்து வேன் வந்திருந்து, ஆச்சரியமளித்தது. மடத்தில் உள்ள நீலகண்டயர், நான் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு சம்மந்தி. எனவே, வெண்ணீர் குளியல் – மருந்து கஷாயம் என்று அவர் பார்த்துக் கொண்டார். அதன்பின் சற்றே ஜுர உடம்போடு பெரியவரைத் தரிசிக்கப் புறப்பட்டேன்.
முதன்முதலாக தரிசிக்கப் போகிறோம். வெறும் கையோடா போவது என்று வெளியே பூக்காரியிடம் பூ கேட்டேன். ஒரு மல்லிகைப் பூ பந்தையே தந்துவிட்டாள்.
என் மனைவி, அம்மா, ராஜப்பா, அவர் மனைவி எல்லாம் குளித்து தயாரானபடி இருக்க, நான் மட்டும் தனியே பெரியவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி, மல்லிகை பந்துடன் சென்றேன்.
சுவரில் சற்று சாந்தபடி, கால்களை நீட்டி அவர் அமர்ந்திருக்க, அருகில் ஒருவர் என்றால் ஒருவர் இல்லை. முன்னால் ஒரு மூங்கில் தடுப்பு. அதை பிடித்தபடி நின்ற நான், பூவை என்ன செய்வது என்று தெரியாமல், அதை விரித்து, நீண்டு கிடக்கும் அவர் கால்களின் மேல் சாத்திவிட்டு நிமிர்ந்தேன். அடுத்த நொடி அந்தக் கால்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து நின்றன.
யாருமே இல்லை. நானும் பெரியவரும் மட்டும்தான்…!
பேச விருப்பமாக இருந்தது. ஆனால், அவர் அமர்ந்திருந்த விதம், தோற்றம் தயக்கமளித்தது. மனத்துக்குள் பலவிதமான எண்ணங்களோடு அப்படியே நின்றுவிட்டேன். ஒரு அரை மணி நேரம் நின்றிருப்பேன். பின், என் மனைவி, மகள் மற்றும் ராஜப்பாவும் உமாவும் வந்திட தரிசனம் முடித்தோம்.
அப்படியே காமாட்சி அம்மன், வரதராஜர் என்று ஒரு ரவுண்டு. மாலை வரவும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டோம். காலை வந்த அதே வேன் செங்கல்பட்டில் எங்களை கொண்டுவிட்டது. முதல் நாள் வந்த அதே பஸ், அதே டிரைவர் – கண்டக்டர் செங்கல்பட்டில்! அடுத்த ஆச்சரியம்போல மதுரையிலும் முதல் நாள் ஏறிய அதே டவுன்பஸ், அதே டிரைவர்-கண்டக்டர். வீட்டு வாசலில் என்றால், வீட்டு வாசலில் இறக்கிவிட்டனர்.
எனக்கு உடல் நலமில்லை என்பதும், நான் குரு தரிசனம் மேற்கொள்ளப் போகிறேன் என்பதும் இவர்களுக்கெல்லாம் எப்படித் தெரியும்?
என் அம்மா, மனைவி, ராஜப்பா, உமா எல்லோருமே மிக ஆச்சர்யப்பட்டார்கள். ‘இது முழுக்க முழுக்க பெரியவரின் க்ருபை’ என்றனர். க்ருபையின் உச்சம் என்ன தெரியுமா?
காலடியில் நின்றிருந்த நிலையில், சொந்தமாக ஒரு வீடில்லாத வேதனையை நான் பிரதிபலித்திருந்தேன். ராஜப்பா தனக்கொரு பிள்ளையில்லாத குறையை பிரதிபலித்திருந்தார்.
அதன்பின் நான் புதுவீடு கட்டி குடியேறினேன். கிரகப் பிரவேசத்தில் ராஜப்பா எனக்கு உதவியாக சாப்பாடு பரிமாறும்போது தகவல் வருகிறது – உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக… ஒரே நாளில் இருவருக்கும் வரம்!
இதை தற்செயல் என்று கூறமுடியுமா?
மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த காய்ச்சலில் விழுந்தடித்துச் சென்று நான் தரிசித்துவிட்டு வந்த 30ஆம் நாள், மகா பெரியவர் முக்தியடைந்துவிட்டார். ‘குணமடைந்த பிறகு செல்வோம்’ என்று கருதியிருந்தால், பெரியவர் தரிசனமே கிடைத்திருக்காது!
இதை என்னவென்று சொல்வது?
மனத்துக்குள் குருவாய் கருதி உருகிக் கொண்டிருந்த எனக்கு கல்கி வழியாக விடை தந்தவர் – திருவடி தீட்சை தரவும் விரும்பி, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்தி பயணிக்க வைத்து அழைத்து அனுக்கிரகம் செய்திருக்கிறார் என்பதையன்றி வேறு எதைச் சொல்ல?

Saturday, December 29, 2012

மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.
ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும& #3021; பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!
ஒருநாள்… ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், ‘கோவிந்த… கோவிந்த’ எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, ‘இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது?’ என்று கேட்டாராம்.
”பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை… அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், ‘கோவிந்த, கோவிந்த’ன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான& #3021; மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் துரம்!’ என்று ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார& #3021;கள்.
மகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ‘ஈஸ்வரனைத் தரிசிக்க ‘கோவிந்த’ கோஷமா?!’ என்று வியந்து சிலா கித்தவர், ‘நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே’ என்று தனது ஆசையைக் கூறினாராம். ‘ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே!’ என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.
நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.
மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசித்த மகா பெரியவர், ”ஒரு நாள், ஒரேயரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்!’ என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.
அந்த வருடம்… வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ… அந்த அன்பரே தனியருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!”

Thursday, December 27, 2012

பத்மாவதி பரிணயம்

[இது போன வருடம் நவம்பரில் தட்டச்சு செய்யப்பட்டது
புதிய மெம்பர்களுக்காக ரீ-போஸ்ட்-வரகூரான் நாராயணன்.]

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,
இரண்டு ஆண் குழந்தைகள்.

இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.

கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..
மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த
வளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.
"அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.
பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.
கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து
அனுப்பி விட்டார்கள்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே'
என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.
பெரியவாள்.

வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..


"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ
பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..
என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன்,
உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"
"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"
பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"
"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
-----------------------------------------------------------------------------------------------------
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி
அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை,
ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்;
பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்
பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம்
மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு.
வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.
பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்
பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றக்கு என்ன,இப்படி?
அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து
சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.
பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.
பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,
ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி
ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா
அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."
பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று.
"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு.
"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.
ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன்
சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...."
உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.
ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்
தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம்
செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம்
உற்சவம் செய்' என்கிறார்களா?
"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!
இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,
கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து
விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.
'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்
பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.
"சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."
"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு
கூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து
பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்
கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?"
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.
"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என்
இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான
சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி...
பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.
"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...
அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்..."
தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.
இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்
காதருகில் மீண்டும் ஒலித்தன.
'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி'
என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.
தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.
மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு
வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி.

Thursday, December 6, 2012

The Jagathguru Speaks ......

We spend so much on our youngsters-but what do we spend on their religious instruction? A father spends thousands on his son's Upanayana. But if he were to spend one tenth of the sum towards achieving what constitutes the very purpose of the Upanayana ceremony -making the child a good brahmachaarin - faith in our religion would be kept alive. To repeat, far better would it be to spend money on achieving the goal of upanayana than on the upanayana ceremony itself. The child must be given religious instruction by a private tutor and taught the duties of the brahmachaarin. Why should teachers conversant with such matters be denied an income? If religion is taught in childhood itself, people will be free from doubts as they grow up and the teacher too will be benefited. Today the situation is so lamentable that most of us do not know even the name of the text that forms the foundation and authority of our religion.

The fact that our people are not taught religion at an early age is one reason why there are so many differences among them. One man is a theist and another an atheist. One performs religious rites without devotion while another is devoted but does not perform any rites. The differences and disputes are many. As for the doubts harboured by people about our religion there is no end. If our religion were taught in childhood itself there would be unanimity of views and freedom from doubts. We know it for a fact that there are not so many doubting people among followers of other religions as there are among ours: the reason is that, unlike us, they are better informed about the concepts of their respective religions.

Tuesday, December 4, 2012

பெரியவா சொன்ன நிஜக்கதை.....
=========================
ஒரு ஊர்ல ஒரு பொம்மனாட்டிக்கு நல்ல பாம்பு ஒண்ணு குழந்தையாப் பொறந்தது! மொதல்ல எல்லாரும் ரொம்ப பயந்தா....அப்புறம், அதை குடும்பத்ல ஒரு கொழந்தையாட்டமா நெனச்சு, "நாகராஜன்"ன்னு பேர் வெச்சு ரொம்ப ஆசையா வளர்த்தா. அதுவும் ஒரு கொழந்தை மாதிரி ஆத்ல வளைய வந்துது...."நாகராஜா!.."ன் ;னு கூப்ட்டா, திரும்பிப் பாப்பான்..... "வா"ன்னு கூப்ட்டா வருவான். மடியில படுத்துப்பான்.
அவனுக்கு பால் குடிக்கறதுக்காக கூடத்துல ஒரு சின்ன பள்ளம் பண்ணி வெச்சிரு

ந்தா! அதுல பாலை நன்னா ஆற வெச்சு அந்த குழிக்குள்ள விட்டுட்டா....நாகராஜன் வந்து குடிப்பான். டெய்லி காலம்பற பத்தரை மணிக்கு அவனுக்கு பால் விடறது பழக்கம். இப்டீ இருக்கறச்சே, ஒருநாள் அவனோட அம்மாவுக்கு பக்கத்து கிராமத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. அவளுக்கு தன்னோட பாம்புக் கொழந்தையையும் கையோட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, எல்லாரும் ஒண்ணு.... கேலி பண்ணுவா ரெண்டாவது, பயப்படுவா..ன்னு தோணினதால, ஆத்துல ஒரு குருட்டுப் பாட்டிகிட்ட நாகராஜனைப் பாத்துக்கச் சொல்லிட்டு, எல்லாருமா கல்யாணத்துக்குப் போயிட்டா....
அந்த பாட்டியோ கண் செரியாத் தெரியாததால, வேலையெல்லாம் மெள்ளமா முடிச்சுட்டு, இவனுக்கு பால் காய்ச்சி எடுத்துண்டு வரப்போ, மணி ஒண்ணாயிடுத்து! பாவம், கொழந்தை பட்டினியால வாடினான். வழக்கமா பத்தரைக்கு பால் ரெடியா இருக்கும்னு வந்து குழில தேடினா, குழி காலி! பசியோட அந்த குழிக்குள்ளேயே சுருண்டு படுத்துண்டுட்டான். ஒருமணிக்கு இந்த பாட்டி பாலைக் காய்ச்சி கொதிக்க கொதிக்க கொண்டு வந்து குழியில விட்டா......அவ்ளவ்தான்! கொழந்தை வெந்து செத்து போய்ட்டான்! பாலுக்காக காத்துண்டு இருந்தவனுக்கு அந்த பாலே எமனா முடிஞ்சுது!
அன்னிக்கு ராத்ரி, கல்யாண வீட்ல தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட சொப்பனத்துல அவளோட அருமைப்பிள்ளை வந்து, "அம்மா! பாட்டி கொதிக்கற பாலை எம்மேல ஊத்திட்டா....நான் செத்துப் போயிட்டேன்! என்னை தாழம்பூக் காட்டுல பொதைச்சுடு! நான் தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்துவேன்.." ன்னு சொன்னதும், அம்மாக்காரிக்கு குலையே நடுங்கிடுத்து! பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது! ஒடனே ராத்ரின்னு பாக்காம, தன்னோட ஆத்துக்கு வந்து, கருகி
வெந்து போயிருந்த தன் பிள்ளையை பாத்து கதறினா...."ஐயோ! பாட்டி ! என்ன கார்யம் பண்ணிட்டே? கொழந்தையை பாத்துக்கச் சொன்னா.....இப்டி பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே! .."ன்னு அலறினா. பாட்டியும் பாவம் தன்னால கொழந்தை போய்டுத்தே..ன்னு குமுறி குமுறி அழுதா.....அருமையா பொறந்து, வளர்ந்த கொழந்தையை பக்கத்து தாழம்பூ காட்டுல பொதைச்சா!
அதுலேர்ந்து அந்த குடும்பத்தை சேந்தவா யாரும் தாழம்பூவே வெச்சுக்க மாட்டா...நான் சின்ன வயஸா இருக்கறச்சே, இந்த பாம்புக்குழந்தை பொறந்த குடும்பத்தை எனக்கு தெரியுங்கறதால, "ஏன் அவாள்ளாம் தாழம்பூ வெச்சுக்கறதில்லே?"ன்னு ஆத்துல அம்மாகிட்ட கேட்டப்போ, இந்தக்கதையை சொன்னா..." என்று முடித்தார்.
இன்றும் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பர்வதமலையை அடுத்த கடலாடி கிராமத்தில் இருக்கிறார்கள். அக்குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு நாகேஸ்வரன் என்று பெயர் வைப்பது வழக்கமானது! அக்குடும்பத்தில் வந்த நாகேஸ்வர ஐயர் சில தாமிரபட்டயங்களைக் காட்டினார். அது அவருடைய முன்னோர்களுக்கு அச்சுததேவராயர் வழங்கிய ஸாஸனம். மன்னர் அவர்களுக்கு ஐந்து கிராமங்களை தானம் செய்திருக்கிறார். ஆனால் ராஜப்ரதிக்ரஹ தோஷத்திற்காக அவர்கள் அதிலிருந்து 108 பிராம்மணர்களுக்கு தானம் பண்ணியிருக்கிறார்கள்.அந்த ஸாஸனத்தில் நாகராஜன், நாகேஸ்வரன் என்ற பெயர்கள் நிறைய காணப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக,கடலாடியில் உள்ள அக்குடும்பத்தின் தலைவர் திரு நாகேஸ்வர ஐயர் நம் பெரியவாளுடைய பூர்வாச்ரம மூத்த சஹோதரர் திரு கணபதி சாஸ்த்ரிகளின் மாப்பிள்ளை! அவர் மனைவி திருமதி த்ருபுரசுந்தரி சொன்னார்..."காமகோடி பெரியவா 1907 ல பட்டத்துக்கு வந்தப்போதான் நான் பொறந்தேன்...அதான், என்னோட தாத்தா [பெரியவாளுடைய அப்பா] எனக்கு த்ருபுரசுந்தரின்னனு பேர் வெச்சா..."
---------------------------------------------------------------------------------------------------
ரொம்ப ஆச்சர்யமான விஷயம்! சர்வபூத தயை என்பதை இதைப்படித்த பின்னாவது புரிந்துகொள்ள முயலுவோம். "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்று சொல்லுவதை, நாம் நமக்கு யாராவது சஹாயம் பண்ணினால் இப்படி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளுவோம். உண்மையில், இந்த சம்பவத்தில் பாம்புக்குட்டி ஒரு மனித வயிற்றில் பிறந்ததால், அது இறந்த விதத்தை படிக்கும்போது மனஸ் பாடுபடுகிறது. அதுவே சாதாரண பாம்பாக இருந்தால், கண்டதுமே அதை த்வம்சம் பண்ணிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்போம்! மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் சரியான அர்த்தம்....எல்லா உயிர்களிடமும் தன் உயிர் போல அன்பு காட்டுவதே!
பெரியவா அப்படி நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்
.

Tuesday, November 27, 2012

maha periyava-"How would you prepare the kuzhambu (sAmbAr)?"

 

DiyArs crowd (throng of devotees) around PeriyavAL. Men on one side and women on the other.

On that day PeriyavAL talked about 'easy' things and was drowning the devotees in the flood of humour and laughter.

Suddenly he turned towards the men's side and asked, "Who among you knows cooking?"

The men, including those who had not even peeped into their kitchen, said in a single voice, "Yes, I know it!"

"How would you prepare the kuzhambu (sAmbAr)?" was the next question.

The man who was first in the queue started saying: "Dissolving tamarind in water, then adding red chili powder and salt to it; the mixture should be boiled well and then served."

The man standing next said, "The mustard and red chillis should be first seasoned in some oil, then after the tamarind-salt-chili powder mixture is boiled, boiled dhal should be added to it, and after the whole thing boils once, the coriander and curry leaves should be added..."

Another man said, "The tamarind and red chilis both should be ground with water in the ammi (grinding stone) and then salt, boiled dhal and a pinch of asafoetida added to the mixture which must be boiled well..."

Thus some of the men narrated many wonderful ways of the recipe. Then PeriyavAL's turn came up.

"All of you are great jnAnis! Those who have forgotten their ahamkAram (ego). For my part, I am still trying (to accomplish) it."

What does PeriyavAL say?

"The reason for people to get confused is the thought of tAn (me). All of you people have no thought of that tAn! Only the tamarind-salt-chili-asafoetida stay in your memory. The thought of tAn never came up. Isn't this the state of jnAnis?" (PeriyavAL was alluding that they forgot to mention about the vegetable added to the kuzhambu which has the name tAn--sd).

The ADiyArs stood as rock statues at the foothills of the Kailash mountain.

Monday, November 26, 2012

maha periyava-"How do you prepare the neem flower pachchaDi (salad)?"

 

A divine opportunity of having darshan of PeriyavAL on the day of Tamil New Year came up.

We had gone there from Pudukottai, and submitted him the (tiny) flowers of the neem tree along with some tamarind and jaggery.

"How do you prepare the neem flower pachchaDi (salad)?" asked PeriyavAL.

We spoke about it in a clumsy way.

PeriyavAL said: "These three products are not enough. You must add honey and ghee. If you do it in pakvam (proper way), the pachchaDi will be tasty. The salad prepared in this way must be distributed to others; and they would become enchanted towards you!

"First, naivedyam (nivedanam--offer) to AmbaaL; and she would be enhanted! Then, to the ahattukkArar (householder, husband); and he would nod his head to whatever his wife says! Then, it must be given to the household servants, and they would do their work without murmur!"
Then he ordered to the ukkirANam (kitchen) for preparation of some neem flower salad, bringing it over and distributing to us.

"Know what is this for?"

A woman replied: "So that all of us would conduct ourselves in accordance with PeriyavAL's Aj~jA/AGYA/Aj~nA (precepts)..."

"That is right... (but then) this is Tripurasundari prasAdam. You all should remain always as the bhaktais (women devotees) of AmbaaL."

What was in our palms did not seem to be a spoon of neem flower salad, rather as the sea of amRutam (divine nectar).

Sunday, November 25, 2012

PeriyavA's Stories-"arisi vAngalaiyO?"

 

Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam

Thanks to kanchi periyava forum

A tuRavi (ascetic) who was going on pAdayAtrA (tour on foot) to Rameswaram stayed in the village common maTham, acceding to the request of the people of the village.

He would visit every house in the village daily in the morning and ask, "arisi vAngalaiyO?" (did not buy the rice?—literally).

The village people enjoyed this new custom in the beginning. But then later on they started feeling irritated by the ascetic daily asking them this question.

One man took courage and asked the ascetic: "Swami, aren't we sending you your bikShA (alms) every day each taking his turn among ourselves? Then why ask 'arisi vAngalaiyO?' If we don't have the rice how can we give you the bhikShA?"

The ascetic was calm for a while, without feeling angry. Then he said: "It is only my mistake not to have told you people in a way you would understand it. I did not ask "arisi vAngalaiyO?" Only to remind you of the name of the God, I asked "ari sivA engalaiyO?" (did not say Hari, Siva today?) In this age of Kali, only the name of the God is the simplest way towards liberation. I was prompting you only towards that way (by my question)..."

The villagers' respect towards the ascetic multiplied several times on hearing this explanation from him. Everyone came forward competing among themselves to be of service to him. The relationship between them was becoming closer. After four days, however, the ascetic left the village to continue his yAtrA.

Saturday, November 24, 2012

மகாபெரியவா-கருணாமூர்த்தி

 

மதனபள்ளியில் பெரியவா முகாம். அன்னக்கொடி கட்டிவிட்டார்கள். அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம். முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.

தகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் "வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம், வா போகலாம்" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாது, போகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.

அன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டது. பெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்று. திடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் "டேய், ரொம்ப பசிக்கிறதுடா! என்ன இருக்கு?” என்று கேட்டார். மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை. இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள்? அதற்குள் எங்கிருந்து பசி வந்தது? அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே! எவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்!
“என்னடா பதிலே காணோம். ரொம்பவே பசிக்கறதே!” என்றார் பெரியவர்.

மேனேஜர் தலையை தொங்கப்போட்டுக்கொ்ண்டார்.
“ஓஹோ, ஒண்ணுமே இல்லையா? ம்ம்ம் என்ன செய்யலாம்???”
அப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள். கையில் பழங்கள், ஏதோ பொட்டலங்களுடன். நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர். பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார். கற்கண்டு இருந்தது. ஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார். அது சுக்கு நூறானது. அதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார். ஏப்பம் விட்டார்! வந்தவரை பார்த்து "அப்பாடா! சரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய். க்ஷேமமா இரு! ” என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம்! வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்; அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகு்ம் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது!
அதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்தது. இதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும்! வயிறார சாப்பிடலாம்! ஒன்றும் அறியாத எளிய மக்கள்! ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை!
திடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வு! நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையே! வயிறு ரொம்பிப்போச்சே! இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளாமா?” கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான். அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்!

Monday, November 5, 2012

பல வர்ஷங்களுக்கு முன்னால், ஒருமுறை நல்ல பனிக்காலம். பெரியவாளின் உதடுகள் ஒரே வெடிப்பாக வெடித்திருந்தது. பேசக்கூட முடியாமல் வேதனை இருந்தாலும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல வருபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அம்மாதிரி உதடு வெடிக்கும்போது, அடிக்கடி வெண்ணை தடவிக் கொண்டே இருந்தால்,வெடிப்பு சரியாகிவிடும். ஆனால், பெரியவா கடைகளில் விற்கும் வெண்ணையை தடவிக் கொள்ள மாட்டார். என்ன பண்ணுவது?
ஒரு பாட்டி ரொம்ப அக்கறையோடு ஐந்து சேர் பசும்பால் வாங்கி, காய்ச்சி, உறைக்குத்தி தயிராக்கி அதை கடைந்து வெண்ணை எடுத்து, கொண்டுவந்து பெரியவாளிடம் குடுத்தாள்.
“பெரியவா…….ஒதடு ரொம்ப பாளம் பாளமா வெடிச்சிருக்கு. ரொம்ப மடியா வெண்ணை
கடைஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன்…பெரியவா ஒதட்டுல தடவிக்கணும்”..என்று வினயத்தோடு ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டாள்.
பெரியவாளுக்கு வெண்ணையை கண்டதுமே தான் த்வாபர யுகத்தில் அடித்த கூத்து ஞாபகம் வந்துவிடுமாதலால், ரொம்ப சந்தோஷப்பட்டார். பெரியவா மட்டும் சந்தோஷப்படவில்லை…….இன்னொரு ஜோடிக் கண்களும் அந்த வெண்ணையை காதலோடு பார்த்தன!
அப்போது தர்சனத்துக்கு வந்திருந்த ஒரு சின்னக் குழந்தை ஓடிவந்து பெரியவாளிடம் வெண்ணைக்காக குஞ்சுக்கையை நீட்டியது! சாக்ஷாத் பால கோபாலனே கேட்டது போல் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. கேட்காமலேயே மோக்ஷபர்யந்தம் [தன்னையே] குடுத்துவிடும் அந்த மஹா மஹா மாதா அப்படியே அத்தனை வெண்ணையையும் தூக்கி அந்த குழந்தையிடம் குடுத்துவிட்டார்!
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பாரிஷதர்களுக்கு கொஞ்சம் முகம் சுருங்கியது! “ரொம்ப சரி…கொழந்தை கேட்டா, ஏதோ ஒரு எலுமிச்சங்காய் சைஸில் உருட்டிக் குடுத்தா போறாதா என்ன? அப்டியே டப்பாவோடயா தூக்கி குடுக்கணும்?.. இப்போ ஒதட்டுல தடவிக்க ஏது வெண்ணை?..”
அவர்கள் உள்ளத்துக்குள் ஓடிய எண்ணங்களுக்கு பதில் வந்தது……..
“ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? கொழந்தை சாப்ட்டாலே என்னோட ஓதட்டு புண் செரியாப் போய்டும்…” சிரித்தார்.
அன்று சாயங்காலமே, பெரியவாளுடைய உதட்டில் எல்லா பாளம் பாளமான வெடிப்பும் சுத்தமாக போய்விட்டிருந்தது! வெண்ணை கேட்ட பாலகோபாலன் அதை சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது!
சரீரம் எதுவானால் என்ன? உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றுதானே?

Thursday, November 1, 2012

அருள் செய்வதிலும் நாடகம்

 

ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய்
விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை
கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
பேச்சின் இடையில் "பெற்றம்" என்றால் என்ன? என்று பெரியவா
கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் "கால் நடைகள்"
என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட" பெற்றம்
மேய்த்துண்ணும் குலம்" என்று வந்திருக்கிறதே என்று
தான் சொன்னதை நிறுவினார்.
இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார்.
பெரியவா. ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர். அவர் அது சரி எந்த இடத்தில்
எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை
நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும்
சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக
எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்-
அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச்
செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி
விடுகிறாள்.சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே!
பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு
சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார்.
நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து
கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே
மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக்
காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல்
ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.
அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து
"சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு"
என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு
சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த
மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி,
இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத்
தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர்
தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார்.
திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும்
பார்வை இழந்தன.
சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும்
சமம்தான்!" தண்டித்தாலும் நீயே கதி!" என்று சிவனைப் போற்றி
சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.
இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,
"இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்" என்று
முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக்
கூடியவர் பெரியவா. "ஆலந்தான் உகந்துண்டானை" என்ற அந்த
தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும்
பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச்
செய்தார்.
ஏதோ, "பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல்
பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி
பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி
வழிகாட்டிய அனுக்கிரகம் இது.
சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி
மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற
ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில்
இருந்து டைப் செய்யப்பட்டது]

Source: Shri Varagooran Narayanan.

Tuesday, October 30, 2012

ஈச்சங்குடியில் வேதபாடசாலை — காஞ்சி மகானின் விருப்பம்

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம்.
காவிரி வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை உண்டு. நடமாடும் தெய்வம் என அனைவராலும் போற்றப்படுகிற காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் மகாலட்சுமி அம்மாள் பிறந்த புண்ணிய பூமி இது!
மகா பெரியவா ஒருமுறை ஆந்திர மாநிலம் நகரியில் முகாமிட்டிருந்தபோது, ‘தாயார் சிவபதம் அடைந்துவிட்டார்’ எனும் தகவல் பெரியவாளுக்கு வந்தது என்பார்கள். வருடங்கள் பல கடந்த வேளையில், காஞ்சி மகானுக்குச் சட்டென்று உதித்தது அந்த எண்ணம்… ‘ஈச்சங்குடியில் தாம் பிறந்த இல்லத்தில், வேதபாடசாலை அமைக்கவேண்டும். அங்கே சதா சர்வ காலமும் வேதங்கள் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்!’ - இதை ஒரு எண்ணமாக, விருப்பமாக பெரியவா சொல்ல… அன்பர்களின் முயற்சியால், உடனே அந்த
வீடு வாங்கப்பட்டது.
அடுத்து, பெரியவாளின் அனுக்கிரகத்தால் திருப்பணிக் கமிட்டி ஒன்றும் உருவானது.
இதோ… இப்போது அந்த வீட்டைச் சீரமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வருகிற 26.10.12 அன்று ஈச்சங்குடி கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது, வேதபாட சாலை துவக்கவிழா. மகா பெரியவாளின் விக்கிரகம் மற்றும் அவரின் பாதுகைகளும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் வேதபாடசாலையை திறந்து வைத்து, காஞ்சி மகானின் வேத கோஷ விருப்பத்தை ஈடேற்றித் தரவுள்ளனர். வேதம் மட்டுமல்ல ஜோதிடம், தர்மசாஸ்திரம் மற்றும் பள்ளிக் கல்வியும் இங்கே கற்றுத் தரப்படும். விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
ஈச்சங்குடி வேதபாடசாலை துவக்க விழாவுக்கு வந்து, வேத கோஷத்தை காதாரக் கேளுங்கள். காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்.
– நன்றி: "சக்தி விகடன்"

Sunday, October 28, 2012

சேகரம் என்றொரு சாகரம்

 

ஞானமின்றி செய்தாலும் அம்பாள் ஏற்கிறாள் என்பது விசித்திரமாக படலாம். இங்கு ஞானம் என்று சொல்வது மூல நூலின் சொற்பொருளை அறிந்திருப்பதையே குறிக்கும் எனலாம். வேறொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் கூறியது இங்கு மிகவும் பொருந்தும்.
'வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரிந்து சொன்னாலே பூரண பலன் உண்டு என்கிறார்கள். எனக்கென்னவோ அர்த்தம் தெரியாமல் சொன்னால் கூட அதே பலன், ஒருகால் அதிக பலன் கூட உண்டு என்றே தோன்றுகிறது. பக்தி சிரத்தை, நம்பிக்கை தான் முக்கியம். 'ரிஷிகள் கொடுத்த மந்திரம் இது, இதை சொன்னாலே போதும், பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார்' என்ற நம்பிக்கை இருந்து விட்டால் போதும். அர்த்தமே தெரியாமல் சொன்னால் கூட பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார்.
கலெக்டரிடம் ஒரு எழுத படிக்க தெரியாத விவசாயிக்கு மனு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவனுக்காக யாரோ படித்தவர்கள் எழுதி தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நல்லதை தான் செய்திருப்பார்கள் என்று பூரணமாக நம்பி விவசாயி அதை துரையிடம் கொடுக்கிறான். இவனுடைய எளிமையையும், விநயத்தையும் பார்த்த கலெக்டருக்கு இவனிடம் ரொம்பவும் பரிவு உண்டாகி காரியத்தை முடித்து தந்து விடுகிறார். தாங்களாகவே மனு எழுதி வந்து 'தாட்பூட்' என்று பேசுகிறவர்களை விட இந்த எழுத படிக்க தெரியாத விவசாயிக்கே துரை, அதிக சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்' என்பார் ஸ்ரீ பெரியவர்கள்.
ஒரு சாகரமே இதன் உட்பொருளாக உள்ளது.
நன்றி: அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், நவராத்திரி நாயகி.

Friday, October 26, 2012

 

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் - II ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).
அப்படி ஒருவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. என் தோற்றத்திலிருந்தே என்னுடைய தெரியாமையை புரிந்து கொண்ட ஸ்ரீ சரணர், 'ஒட்டிக்கு ரெட்டியா விசிறி, அதோட கொட்டாங்கச்சியும் வெச்சுண்டு திருவண்ணாமலையிலே' என்று பலமாகவே 'க்ளூ' கொடுத்தார்.
'ஸுரத்குமார்' என்றேன்.
ஒப்புதலை தலையாட்டலால் தெரிவித்த ஸ்ரீ சரணர், 'அங்கே உனக்கொன்றும் 'டச்' இல்லையாக்கும்' என்றார்.
என் ரக்ஷிப்புக்கென்றே ஏற்பட்டவர்கள் என நான் நம்புபவர்களை தவிர மற்ற பெரியார்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்பது அவர் அறியாததில்லை.
நான் இந்த அருணாச்சல யோகியாரிடம் 'டச்' வைத்து கொள்ளாவிடினும் அவர் என்னை இருமுறை 'டச்' செய்திருக்கிறார். என்னுடைய இரண்டு கட்டுரைகளை படித்து திருப்தி பெற்ற இரண்டு சமயங்களில் தமது இரண்டு சென்னை அடியார்களை என் வீட்டிற்கு அனுப்பி வைத்து தம்முடைய மகிழ்ச்சியையும், 'தந்தை' என்று தாம் கூறும் இறைவனின் ஆசியையும் தெரிவித்திருக்கிறார்.
நான் அவரிடம் தொடர்பு கொள்ளாத போதிலும் உயர் ஸ்தானத்திலுள்ள அவர் மெனக்கிட்டு என் முகவரி கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்து வர ஆள் அனுப்பிய உத்தம பண்பு அந்த இருமுறையும் என் இதயத்தை 'டச்' செய்தது. ஆயினும் என் வழக்கபடியே அதற்காக நான் அவரிடம் தொடர்பை வலுப்படுத்தி கொள்ளவில்லை.
இதை ஒருவாறு பெரியவாளிடம் கூறினேன்.
அதற்கு அவர், 'ஒரு தரம் பாராட்டி சொல்லியனுப்பினார். அப்படியும் நீ அங்கே போகலை. ஆனாலும், ரெண்டாந்தரமும் சொல்லி அனுப்பினாராக்கும்!' என்றார். தம்மை மற்றவர் கௌரவிக்க வேண்டும் என்பதை கருதாமல் தாம் மற்றவரிடம் நல்லதாக ஒன்று கண்டால் அதை பாராட்ட வேண்டும் என்று மட்டுமே கருதிய அருணாச்சல யோகியின் உத்தம பாங்கில் பெரியவாளுக்கு இருந்த ரசிப்பு அவரது குரலில் ததும்பியது.
தொடரும்….

Thursday, October 25, 2012

ரவாதோசையும் மகா பெரியவாளும்

 
ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும்.பொள்ளாச்சி ஜெயம் என்ற அம்மா அவரிடம் வந்தார்.உடனே பெரியவா மடத்தில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்த ராமமூர்த்தி

என்பவரைக் கூப்பிட்டு,"எனக்கு ரவாதோசை வேண்டும் போல் இருக்கு; செய்து தர்றயா?"என்றார். எல்லோரும் காரியங்களை முடித்துக் கொண்டு படுக்கப் போகும் நேரம்.

பொதுவாக பிட்சை பண்ணுவதற்கு கெஞ்சினாலும் மசியாத பெரியவா,விபரீதமாக இப்படி ஓர் ஆசையை வெளியிடுகிறாரே! என்ன செய்வது?" என்று யோசித்துக் கொண்டே சமையலறையில்
ரவா இருக்கிறதா! என்று நோட்டம் விடுகிறார். துளியும் இல்லை.

பெரியவாளைப் பார்க்க வந்த அம்மாவுக்கு நிலைமை தெரிந்ததும்"கவலைப்படாதீர்கள்; நான் போய் ஏதாவது கடை திறந்திருந்தால்
ரவை வாங்கி வருகிறேன்!" என்று கிளம்பினார். எல்லா கடையும் மூடியிருந்தது.ஒரே ஒரு கடை மட்டும் மூடப் போகிற தருணம்.ஓடிப் போய் ரவையும் வாங்கி வந்துவிட்டார்.

பெரியவா பிரியப்பட்டுக் கேட்டால் செய்துதராமல் இருக்க முடியுமா? ரவாதோசை தயாரானது. பெரியவாளிடம் கொண்டு வைத்தார்கள்.அதில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.  "நன்னாயிருக்கு...ரொம்ப திருப்தியாச்சு.
போய்ப் படுத்துக்கோ..." என்றார், ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொள்ளவா இந்தக் கூத்து!"
என்று எதுவும் புரியாமல் படுத்துக் கொண்டனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து ஆறு வைதீகர்கள் வந்து இறங்கினார்கள். மற்றவர்கள் பெரியவாளிடம் போய் வைதீகர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார்கள்.

பெரியவா சிரித்தபடியே "அவாள்ளாம் வருவான்னு
தெரிஞ்சதால்தான் ரவா தோசையே வாக்கச் சொன்னேன்!" என்றார்."அப்படியானால் ஏன் எனக்கு வேணும் என்று கேட்டீர்கள்?

அவர்களுக்கு என்றால் பண்ணிப்போடமாட்டோமா?'
என்று ராமமூர்த்தி நினைத்திருப்பார் போலும்.
அதை உணர்ந்தவர் போல் பெரியவா,"வேளை கெட்ட வேளையில் ஆகாரம் செய்து தரச் சொன்னால் சிரமமாகத்தான் இருக்கும்.
எனக்குன்னு கேட்டா ஆசையா செய்வீர்களில்லையா"
என்று சொன்னாராம்.


[எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான்
நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது.]

Tuesday, October 16, 2012

நானே நாராயணன்!

என் பெண் ஜனா ஒரு ‘ஐஸ்வர்ய கோலம்‘ தயாரித்திருந்தாள். கண்ணாடித் துண்டுகளை ஒட்டி கலர் செய்து நடுவில் மகாலக்ஷ்மி வைத்து கண்ணாடி போட்ட கோலப் படம் அது. அதைப் பெரியவாளிடம் சமர்பித்தோம். அதை எடுத்துப் பார்த்து ரசித்து விட்டு ” இது மகாலக்ஷ்மி, மகாலக்ஷ்மியை நான் எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் ? மார்பில் தான் இருக்கணும் ” என்று சொல்லி அந்தப் படத்தை தன் மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து எல்லோருக்கும் அனுக்ரஹம் செய்தார். “நாராயணன் அம்சமும் நானே !” என்று பெரியவா உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டோம்.

திருச்சியை சேர்ந்த சுபலட்சுமி அம்மாள் சொன்னாள்: ” பெரியவா ! இன்று சோமவார அமாவசை, அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்” என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னாளாம்.

~~~~~

பட்டென்று பதில் வந்தது: ” அதனாலென்ன ? என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு. அதுவே போதும்!“ பெரியவா நாராயணன் மட்டுமில்லை; அசுவத்த நாராயணனும் கூட!

–ராதா ராமமூர்த்தி, புதுக்கோட்டை.

Monday, September 24, 2012

Source: Shri. Varagooran Narayanan
அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.
மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.
"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்" என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை. "செய்யேன்..."
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். "உன்னோட....பையன்தானே?" இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?" "நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,பந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், "பாரு....ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து, பூணூல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு.." கண்ணன் சொன்னார்: "அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருன்ந்தோம்!"
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு சொன்னார்கள்"
"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.
அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்." பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.

Saturday, September 22, 2012

Source: Shri Varagooran Narayanan

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது.
முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
"எந்திரு..சீதே...ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை.." என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !
"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"ராமா!.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ!"
"உத்தரவு பெரியவா......" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.
பிறகு, "ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.
பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! "கணேசன்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Thursday, September 20, 2012

Vedic Language!

 

When I went to the Mutt to have His darshan for the first time there were four foreigners there, an Israeli, an Italian, a German and a Britisher. They had come to do their PhD in Philology on the topic of 'the most ancient languages in the Occidental and the Oriental world'. They were studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and Sanskrit and Tamil in the Oriental part.
He went inside to do His Anushtanas; they had wanted to a photo of Him but His kaingaryams refused.They were heartbroken that they could not take a picture. All the four of them were standing near a tree since morning. They asked His Sevakas when He will be done with the poojas but get an unconvincing reply.
I told the foreigners that we Indians are used to the way of life at the Mutt, but how come you all have been standing for the past 6 hours? One of them looks at his watch and exclaims, 'oh my God, has it been 6 hours? He is a Man of Certainty and is Beyond Time!'
Periyavaa came in after 10 minutes and we all went and prostrated to Him. Looking at the man (who had the camera hanging on his neck) who had wanted to take the photos, He gestures with His hands that he can take the pictures now. He posed for three photos and stops him before the fourth and enquires as to why they have come.
They tell him their purpose.
He asks, "So, did you arrive at a conclusion as to which is the most ancient language?"
The Israeli replied, "Hebrew is the most ancient in the Occident; but in the Oriental, people say that both Sanskrit and Tamil are the oldest, we are confused and that is why we are here for Your opinion".
He said, "There is another language which is the most ancient than all these, it is the Vedic Language. It is the Source of even Sanskrit and Hebrew."
"There is a verse about Rebirth in Hebrew, can you recite it completely?", asked Him to the Israeli by giving the man the first two words.
The Israeli recited it for 3 to 4 minutes. Swamigal looked around and asked some boys, have you studied Rig Veda, can you recite this particular verse?"
Those boys recited it for 5 minutes.
He asked me, "can you ask them if they understood what these boys recited now?"
The four men remain quiet.
Swamigal turns to the boys and says smilingly, "you all will definitely not understand what this man had recited in Hebrew!"
He turns to me and says, "tell that Israeli that what he had chanted before is the same as what these boys chanted!"
I told him, "Swamiji says that what is you had chanted is 'verbatically' same as the what the boys had chanted".
Swamigal corrects me, "What? Do not use the word 'verbatically', tell him that both the chants are 'alphabetically' the SAME!!!"
He said He will prove it and asked if we have a paper and a pen.
"In Vedas it is mentioned that the world has been classified into 32 portions/regions. And in each of the 32 geographic regions, Vedas say how the Veda Aksharas have changed/pronounced in those places!"
He asks each of them which region they come from and then explains to them how a particular Veda Aksharam is changed in their individual places! He asks the boys to recite verse from Rig Veda again and tells the men how each Aksharam in Rig Veda in that verse will sound in their Regions!
The Sarveshwaran tells me, "I will now say this verse with some difficulty as it has been a long time since I had Abhyasam, ask that Israeli if he understands my recital!"
To the boys He says, "I will now say it in a slightly different form based on how each Aksharam will sound in Hebrew. Please do not think it is wrong; there is this injunction in the Vedas that it can be recited this way also."
And The Sarveshwaran starts to say it, slowly. Wonder of Wonders, the Israeli starts to recite it Together with Him!!!
(Sarveshwaraa, I am unable to type now due to a flood of emotions...)
We were all Stunned!
"I told you earlier, the same verse in Rig Veda is present ditto in Hebrew, but the Aksharas have changed slightly. (like we say Yamuna but in the North it is Jamuna , Va in the south is Ba in West Bengal , Paa in Tamil is Haa in Kannada etc) Therefore, the most ancient language in the world is the Vedic language!"
Swamigal asked the four men to prepare a table and fill it with how the Rig Veda Aksharams sounded in their language. This was completed in 15 minutes.
The Israeli was shocked and exclaimed, "this is something unimaginable!"
He asks him, "what do you think now, do you now agree that everything has sprung from Vedas?"
The look on the Israeli was not convincing.
He says, "what, is he thinking that why, could not have Vedas originated from Hebrew?"
The man says, "yes, it could have been the reverse also, the Vedas could have come from Hebrew".
Periyavaa replies, "you have only the lock, whereas we have both the key and the lock! It is even mentioned in the Vedas as to which Maharishi from here in India went to your region and spread/taught Vedas in Israel !"
The man seemed to be convinced in the end.
Resource:<< Thiruvannamalai Shri Gowrishankar >>

Tuesday, September 18, 2012

 
1983 இல் காஞ்சி ஸ்ரீ மடத்தின் மூன்று சுவாமிகளும் ஒன்று சேர்ந்து கர்நூலில் மாபெரும் விழாவாக வியாச பூஜை நடத்தியது நினைவிருக்கலாம். அச்சமயம் சேர, அப்பகுதிகளில் ஸ்ரீ பெரியவாள் பாதயாத்திரை செய்து கொண்டிருக்க அவர் சென்ற வழியே ஸ்ரீ மடத்தின் யானை ஒரு லாரியில் அகஸ்மாத்தாக செல்ல நேரிட்டது.
இம்மெலிந்த சிறு மேனியரை கண்டதுதான் தாமதம். மாபெரும் யானைக்கு இருப்பு கொள்ளவேயில்லை.
ஒரே பிளிறலாக பிளிற தொடங்கிவிட்டது. டிரைவர் லாரியை நிறுத்தினார். யானை அதிலிருந்தவாறே ஸ்ரீ சரணரிடம் தும்பிக்கையை நீட்டியது.
துதிக்கையில் அவர் பேரன்புடன் பழங்கள் ஊட்டி, அருளுடன் தட்டி கொடுக்க யானை சாந்தமாயிற்று. லாரியிலேயே மண்டியிட்டு துதிக்கையை தூக்கி தனது பக்தி துதியாக கர்ஜித்தது.

பெரியவாள் டிரைவரிடம் ஜாக்கிரதையாக அதை ஓட்டி செல்ல பணித்தார். லாரி கிளம்பியது.
பார்வை மறையும் வரை யதீந்த்ரர், கஜேந்திரன் இருவரும் சாந்த அன்பில் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் பார்வையை புதைத்து இருந்தனர்.

Sunday, September 16, 2012

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.
அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம்.
பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடுன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.
"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.
"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.
அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.
"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.
"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?" என்றார் பெரியவா
"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!""அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்.
"அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா"
"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு" கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.
"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.
பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.
"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்.

Friday, September 14, 2012

சிவனடியார்களின் சந்தோஷம்

 

சிவனடியார் குழு ஒன்று, பல சிவத்தலங்களுக்கு சென்றுவிட்டு காஞ்சிபுரம் வந்தது. காஞ்சிபுரத்தில் பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, நிறைவாக, ஸ்ரீ மடம் வந்தார்கள், அடியார்கள்.
பெரியவா முன்னிலையில் 'தோடுடைய செவியன், பொன்னார் மேனியனே' போன்ற சில தேவார பதிகங்களை பாடினார்கள். பெரியவா 'காஞ்சிபுரத்தில் என்ன என்ன கோவில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள்.
'ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர், கச்சபேஸ்வரர், மணிகண்டேஸ்வரர், வழக்கு அறுத்த ஈஸ்வரர், திக்காளிமேடு, ஒணக்காந்தேஸ்வரர் கோவில்களுக்கு போனோம்' என்று பெருமை தொனிக்க சொன்னார்கள்.
'இன்னும் முக்தீஸ்வரர், இறவா ஸ்தாநேஸ்வரர், பிறவா ஸ்தாநேஸ்வரர், ஸ்மசான ஈஸ்வரர், காயா ஆரோகநேஸ்வரர் கோவில்களெல்லாம் பாக்கி இருக்கோ? அங்கேயும் போகணும்...' என்றார் பெரியவா.
சிவனடியார்களுக்கு பரம சந்தோஷம்.
பழமையான இவ்வளவு சிவன் கோவில்களை பற்றி பெரியவா தங்களிடம் தெரிவித்ததை வெகுவாக கொண்டாடினார்கள்.
நன்றி: கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்

Wednesday, September 12, 2012

சட்டம் என்ன சொல்கிறது?

 

தேனம்பாக்கம் பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்யும் விசுவநாத சிவாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பூஜை முறை உண்டு. தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த பெரியவா ஒரு நாள், ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்துக்கு சென்றார்கள். அன்றைக்கு விஸ்வநாத சிவாச்சாரியார் முறை.
சிவாச்சாரியாருக்கு கொள்ளை சந்தோஷம். தான் பூஜை முறையில் இருக்கும்போது பெரியவா தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலான வருகை. முன்கூட்டி சொல்லி விட்டு வரவில்லை.
ஏகம்பன் அருளால் பெரியவாளுக்கு தரிசனம் பண்ணி வைக்கும் மகத்தான பேறு கிடைத்திருக்கிறது. உள்ளம் நெகிழ்ந்தார், சிவாசாரியார்.
"பெரியவா உள்ளே வந்து தரிசனம் பண்ணிக்கலாம்." "அது கர்ப்ப க்ருஹம். ஆகம சாஸ்திரப்படி சிவாச்சாரியார்கள் தான் கர்பக்ருஹத்துக்குள் போகலாம்... சில கோவில்களில் கர்பக்ருஹத்துக்குள் போவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கு. ரொம்ப காலமாக. இந்த கோவிலில் அந்த உரிமை இல்லை. இங்கிருந்தே ஆனந்தமாக தரிசனம் கிடைக்கிறது. "
பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.

Thursday, August 9, 2012

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.
அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, 'கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.
அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லி யிருக்கிறார். இவளும், 'பரவாயில்லை... எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறார்கள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.
இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கு வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.
உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டக் கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!
ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை... இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.
அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!’ என்றார்'' எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.
''பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால், அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).
பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும், ஒரு நல்ல காரியம், சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலை, அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர், ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!
அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, 'இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்’ என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா, அந்த பக்தரைக் கூப்பிட்டு, 'இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!' என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.
மகா பெரியவாளுக்கோ, தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல், தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து, பக்தரை மகிழ்வித்த நிம்மதி.
ஆமாம்... மகா பெரியவா எதைச் செய்தாலும், அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

Tuesday, August 7, 2012

இவருக்கா ஞாபகமறதி?

காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளுக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர் அன்பர் திரு. சுந்தர ராமமூர்த்தி அவர்கள். ஓவியம் வரைவதைப் பொழுது போக்காகக் கொண்ட அவர்தம் அனுபவத்தை ஒரு நிகழ்ச்சி மூலம் இங்கு கூறுகிறார்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், லூதியானா ஷால் விற்கும் கம்பெனி ஒன்றிலிருந்து எனக்கு ஒரு BOX CAMERA பரிசாகக் கிடைத்தது. முதன்முதலாகப் பெரியவாளையும், புதுப்பெரியவாளையும் போட்டோ பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிலிம் போட்டுக் கொண்டு ஸம்ஸ்கிருதக் கல்லுரிக்குப் போய் விட்டேன். புதுப் பெரியவாளை (ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்) போட்டோ பிடிப்பது எளிதாக இருந்தது.
அனால், பெரியவாளிடம் போன போது, “நீ தான் சைத்ரீகனாயிற்றே; என்னை சித்திரமாக வரை, பிறகு போட்டோ பிடிப்பது பற்றிப் பார்க்கலாம்” என்று கூறி விட்டார். அந்த நிலையில் பெரிதும் ஏமாற்றமாகவே இருந்தது. உற்சாகம் இருக்கவில்லை.
பல ஆண்டுகள் கழிந்தன. எனக்கும் திருமணமாகி விட்டது. ஒருநாள் பழைய சமாச்சாரங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, இதைப் பற்றி பேச்சு எழுந்தவுடன், என் மனைவி, “பெரியவாள் சொல்லியும் நீங்கள் எப்படி அவர் சித்திரத்தைப் போடாது இவ்வளவு நாள் இருந்தீர்கள்” என்று கூறி உடனே ஒரு படத்தையும் போட வைத்தாள். கலைஞனுக்கு முதல் படம்தான் கஷ்டமே தவிர பிறகு உற்சாகம் வந்துவிடும்.
அன்று ஆரம்பித்து இன்று வரை பல ஓவியங்களை அடியேனால் பெரியவாளின் அநுக்ரஹத்தால் போட முடிந்தது. ஒவ்வொரு வருஷமும் போட்ட படங்களையெல்லாம் பெரியவாளிடம் கொடுத்து ஆசிகளைப் பெற முடிந்தது. அனால் போட்டோ பிடிக்க மட்டும் இன்று வரை பெரியவாளின் உத்தரவு கிடைக்கவில்லை.
சென்ற வருஷம் பெரியவாளின் படங்களைக் கொடுக்க காஞ்சிபுரம் போனபோது ஸ்வாமிகளிடம், “இதையெல்லாம் போட்டு வைத்திருக்கிறேனே தவிர இவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. பல பேர் கண்காட்சியாக, காமகோடியின் பெயர் விளங்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறார்கள். பெரியவாள் உத்தரவு எப்படியோ அப்படியே செய்கிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன்.
“செய்யலாமே” என்ற பெரியவாள் பிறகு அதைப் பற்றியே பிரஸ்தாபிக்காமல் வந்திருந்த பக்தர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அம்மாள், “பெரியவாள் நீங்கள் கேட்டதை மறந்து போய்விட்டார் போலிருக்கு, மறுபடி கேளுங்கள்” என்றார். அது ஸ்வாமிகள் காதிலும் விழுந்திருக்க வேண்டும்.
ஏனெனில் எங்கயோ பின்னால் நின்று கொண்டிருந்த வதந்து (கைம்பெண்) ஆகிவிட்ட ஒரு வயதான அம்மாளைக் கூப்பிட்டு, “நீ வற்றிலைச் சுழியிலே இன்னார் பெண் தானே, ஐந்து வயதாக இருந்தபோது, உன் அப்பாவுடன் வந்திருக்கிறாய். உங்கள் ஊரில் எல்லோரும் சிருங்கேரியைச் சேர்ந்தவர்கள். உங்கள் அப்பா மட்டும் இந்த மடத்துக்கு விசுவாசமாக இருந்தார். உன் பிள்ளை எப்படி இருக்கிறான்? ” என்று விசாரித்தார்.
அந்த அம்மாள் தன் ஐந்தாவது பிராயத்துக்குப் பிறகு மடத்துக்கு அன்றுதான் வந்திருக்கிறார். நெஞ்சுருகிப் போய்விட்டார். “என்னை இந்தக் கோலத்திலும் அடையாளம் கண்டு விசாரிக்கிறாரே! இவருக்கா ஞாபகமறதி வரும் ?” என வியந்தார்.
கடைசியில் அன்று மாலை பெரியவாள் நான் கொண்டு போயிருந்த சித்திரங்களை எல்லாம், காலடி தீர்த்தி ஸ்தம்பத்தில் நிரந்தரக் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது, அவர் இந்த சிறியவனையும் எவ்வளவு தன் கருணையால் உயர்த்தினார் என்பதையும், இந்த விஷயத்துக்கு எவ்வளவு தீர்க்கமாக நாளெல்லாம் ஆலோசித்திருக்கிறார் என்பதையும் காட்டியது.
“எதை நினைத்து நாம் ஆசைப் படுகிறோமோ, அதன் சுபாவம் நமக்கும் வந்து சேருகிறது. கடவுளை நினைத்து நாம் தியானம் செய்யும் போது , அந்தப் பரம்பொருளின் பெருமை மிகுந்த குணங்கள் நம்மையும் ஆட்கொள்ளுகின்றன. இதையே நாம் பக்தி என்று சொல்லுகிறோம்”

 

Sunday, August 5, 2012

லோக ஷேமம்

ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப் போனால் இந்தப் பரம்பரையை மறுபடி உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.
‘லோக ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக் களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னதத் தத்வங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர் களுக்கு எப்படி நாட்டம் வந்தது? அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான், இதென்ன, இப்படி ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்கும் படியான புஸ்தகம்!" என்று அவர்களுக்கு ஓர் ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்துகொண்டார்கள். லோகத் துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்பிராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்பிராயத்துக்கு வரலாம். எல்லாருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இதன் தத்துவங்களால் எந்த மதஸ்தரும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, August 3, 2012

வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்


எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அயர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்கள்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று, மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார்கள். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என் றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினா?’ என்றார்கள்.
‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.
‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.
சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார்கள். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்கள்.
எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன்.
சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”
- கே. ராஜாராம், முன்னாள் அமைச்சர்
–நன்றி கல்கி

 

Thursday, August 2, 2012

புறம்’ என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலாஸஃபிகலாக, வேதாந்தமாகப் போகிற போது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீன மாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக் கொண்டு, புழுத்துப் போன தைத் தின்று கொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும். ஆஹாரம் இப்படியிப் படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்த மான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் ‘புற’த் திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது.
இந்த வெளி விஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடி போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும்.
என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜ மான வேதாந்திகளாக ஆக வேண்டுமா னால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர - குடும்ப - ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்து இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படிப் பண்ணிக் கொண்டு போனால்தான் முடியும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Tuesday, July 31, 2012

Significance of Sundara Kanda

MAHA PERIYAVA on SUNDARA KANDAM of RAMAYANAM !!!

In Sundara Kanda Hanuman paves the way for reunion of the divine couple Rama and Sita. Similarly if we worship Hanuman by reciting the Sundara Kanda he helps a devotee by taking him near the Lord. Kanchi Mahaperiyava used to tell that Lord Hanuman or Anjaneya is an embodiment of all auspicious qualities which are very rare to find. He excelled in Intellect, Valor, Courage, Wisdom, Fearlessness and Bhakti. It is very rare to find such great strength in one person. Hanuman is also a very learned one and is referred as Nava Vyakarna Panditha. He is very very humble to Lord Rama and at the same time showed his prowess to demon Ravana by setting ablaze the entire Lanka. When Rama returned to Ayodhya along with Sita there was the coronation ceremony and while parting, Rama gave gifts to all attendees. When it was Hanuman’s turn Rama told him that He cannot give him anything better than Himself and thus gave himself to Hanuman and hugged him. Hanuman also said he is interested in receiving nothing but kainkaryam, i.e. doing service to Him. Even when Rama had departed from this mortal world to his heavenly abode Hanuman refused to accompany Him since he cannot hear Ramayana in Vaikunta and decided to stay back in this world to hear Ramayana. He told Rama that wherever and whenever Ramayana is recited (Yatra Yatra raghu natha keerthanam, tatra tatra krida masta kanchalim, pashpavari pari poorna lochanam) he will be there to listen and dance in ecstacy with tears flowing. Hence a devotee can feel the presence of Hanuman if he recites Ramayana even in his house.

 

Monday, July 30, 2012

இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன - தொடர்ச்சி

 

ஒரு சமயம் வயது முதிர்ந்த எங்கள் பாட்டியுடன் ஆச்சார்யாளை தரிசிக்க சென்றேன். பாட்டி நான் அவளுடன் சில நாள் காஞ்சிபுரத்திலேயே தங்கி, பெரியவாளை தரிசித்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொன்னாள். நான் அதற்கு சம்மதிக்காமல் ஆசிரமம் போக வேண்டும் என்றேன்.

இந்த விவரத்தை ஆசார்யாளிடம் சொல்லி என்னை அங்கு தங்கும்படி சுவாமிகள் சொல்லவேண்டும் என்று பாட்டி கேட்டுக்கொண்டாள். பாட்டி சொன்ன வார்த்தைகளை கேட்ட மகான் புன்முறுவலுடன் 'இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன' என்று என்னை பார்த்தவாறே அன்புடன் கூறினார்.

அந்த வார்த்தைகளை கேட்டதும் என் மனம் பூரித்தது. இதை காட்டிலும் வேறு என்ன வேண்டும்? அந்த தெய்வ வாக்கே எனக்கு பெரிய அருளாசி அல்லவா? கண்ணீர் மல்க, நின்று அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சரி சரி என்று தலை அசைத்தபடியே உத்தரவு கொடுத்தார்.
அந்த அருட்கண்கள், தரிசிப்பவர்களின் மனத்தில் மின்சாரம் போல் பாய்ந்து சிலிர்க்க வைத்து விடுகின்றன. ஆன்மீக வழியில் மனதை உள்முகம் ஆக்குவதற்கு அந்த பார்வை ஒன்றே போதும். எத்தனை நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அலுக்காத ஆராவமுதம் போன்றவர் சுவாமிகள்.

முற்றும்.

Saturday, July 28, 2012

இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன?

நான் ஆசிரமத்திற்கு வந்து ஸ்திரமாக தங்கியபோது எனக்கு வயது இருபத்தி நான்கு. அதற்கு முன்பும் அவ்வப்போது நான் வந்து பகவானை தரிசித்து சில நாட்கள் தங்குவதுண்டு. அதற்கு அவர்கள் யாரும் மறுப்பு கூறியதில்லை. ஆசிரமத்தில் தங்கி, தியான வழியில் ஈடுபட்டு நான் இங்கேயே இருக்க தீர்மானித்தது தான், அவர்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது.
வருத்தம் இருந்ததே தவிர, யாரும் என்னை தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம், என் தந்தை எனக்கு அளித்த சலுகை தான். நான் தனித்து இருந்து ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டதில் என் தாயாருக்கு விருப்பம் இல்லை. அதிலும் இளமை பருவத்தில் இருந்தே என்னை தனியாக விட்டு வைக்க மனம் இடம் கொடுக்காமல் சங்கட பட்டார்கள்.
காஞ்சி பரமாச்சாரியாரிடம் நெருங்கிய தொடர்பு உடைய அவர்கள் என்னை பற்றிய இந்த விவரத்தை எல்லாம் கட்டாயம் சுவாமிகளிடம் சொல்லி இருக்க கூடும். அதனுடன் என்னை குடும்ப வாழ்க்கையில் ஈடுபட செய்யும் படி சுவாமிகளிடம் பிரார்த்தனையும் செய்து இருக்கலாம்.
நான் பலமுறை ஆசார்ய சுவாமிகளை தரிசிக்க சென்றிருக்கிறேன். ஆனால் அவர் ஒரு போதும் எனது வாழ்க்கை முறையை பற்றி நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, ஒரு நாளும் குறைவாக கூறியதே இல்லை. 'உலகியலுக்கு மாறாக, ஏன் ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டாய்?' என்று கேட்டதே கிடையாது.
நான் எப்போது சென்றாலும் பரிவுடன் விசாரித்து, புன்முறுவலுடன், கையமர்த்தி, ஆசீர்வதிப்பார். நான் அதையே ஒப்புதலாக ஏற்று மகிழ்வேன். என்னுடைய சகோதரன் மனைவி அவரை தரிசிக்க செல்லும்போது 'ஆசிரம கனகா எப்படி இருக்கிறாள்?' என்று குசலம் விசாரிப்பாராம். அதை மன்னி என்னிடம் சொல்லி பெருமை படுவாள்.
தொடரும் ……
நன்றி : நினைவில் நிறைந்தவை, டி. ஆர். கனகம்மாள்

Friday, July 27, 2012

கருணை தெய்வம் காஞ்சி மகான்

 

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்'' எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!

Thursday, July 19, 2012

கேட்டை-மூட்டை-செவ்வாய்

 

Source: Shri. Varagooran Narayanan

ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில்
பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர-
யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம்
என்பது சாஸ்திர வாக்கியம்.

ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை
நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை,
செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு,அதை ஒரு தோஷம்
என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.

பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு.
லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."
பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா
அங்கே வந்து பார்த்தார்கள். "கேட்டை,மூட்டை,செவ்வாய்க்கிழமை
என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம்,
செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?"
என்று கேட்டார்கள்.எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
பெரியவாளே சொன்னார்கள்.

"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை,
பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல்
வந்துடுத்து"
தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா
இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து
தெரிந்துகொண்டார்கள்?"

Wednesday, July 18, 2012

ஒரு சங்கீத விவாதம். ரா.கணபதி எழுதியது.

 

Contributed by Shri. Varagooran Narayanan

ஒரு தேர்ந்த கர்நாடக ஸங்கீத ரஸிகர்:  முன்னேயெல்லாம்
கச்சேரில தவறாம மஹான்களோட பாடல் ஏதாவது
ராகமாலிகை விருத்தமாகப் பாடுவா, அதுல கேதாரகௌளைதான்
அநேகமாக மொதலாவதா இருக்கும்.  மனஸை ஒரு தூக்குத்
தூக்கற வசியம் அந்த ராகத்துக்கு விசேஷமாயிருந்தது.
இப்ப அதெல்லாம் போயிடுத்து. தேஷ் மாதிரி திராபையான
வடக்கத்தி ராகங்களுக்குத்தான் மவுஸாயிருக்கு.

ஸ்ரீசரணர்.[பெரியவா] : நீ இப்டி சொல்றே! ஆனா, "தேஷும்
கேதாரகௌளையும் ஒரே 'ஸ்கேல்'தான். [ஒரே ஆரோஹண
-அவரோஹணம் உடையவைதான்]: ஒரே ஒரு வித்யாஸம்
ஆரோஹணத்துல நிஷாதம் மட்டும் வித்யாஸப்படறது'ன்னு
கேள்விப்பட்டாப்பல இருக்கே.

ரஸிகர்; [லேசாக முனகிப் பார்த்துகிட்டு,ஆச்சர்ய உணர்ச்சியுடன்]
ஆமாம். பெரியவா சொன்னாப்பலதான்!. ஆனா ஹிந்துஸ்தானிப்
பாடகாள் ஸ்வரங்களைப் பிடிச்சு நிறுத்திப் பாடறதுக்கும்
நம்மவா போன தலைமுறை வரை பண்ணிண்டிருந்ததுக்கும்
இருந்த வித்யாஸத்தாலே ஒண்ணு லைட்டாகவும்
இன்னொண்ணு புஷ்டியாகவும் இருந்திருக்கு.

ஸ்ரீசரணர்: [அவரையும் விஞ்சிய ரஸிகராக,ஆயினும்
அடக்கத்துடன்]
லைட்,புஷ்டி- அந்த 'டிஸ்டிங்ஷன்'லாம் எனக்குத் தெரியாது.
ரெண்டுல ஒவ்வொண்ணுலயும் ஒரு தினுஸு அழகு
இருக்கறதாத்தான் என் லெவல்ல தோண்றது.
நாம 'ஸிந்து பைரவி'ன்னு சொல்ற அவா பைரவி கூட
முழுக்கவே நம்ம தோடி ஆரோஹண-அவரோஹணம்தான்.
கமக மயமா எழைச்சு எழைச்சு நாம தோடி பாடறதுல
ஒரு கம்பீரமான அழகு இருக்குன்னா, அவா ஸிந்துபைரவின்னு
ஸ்வரங்களைப் பிடிச்சு வின்யாஸப்படுத்தறதுலேயும்
மனஸைத் தொடற ஏதோ ஒண்ணு இருக்கறதாத்தான்
என் மாதிரியானவாளுக்குத் தோணறது.

தீக்ஷிதாவாள், ஐயர்வாள் மாதிரியான நம்ம பெரியவாள்ளாமும்
ஹிந்துஸ்தானி ராகங்களை 'அடாப்ட்'பண்ணிண்டிருக்காளே!
ஒரே ஸ்கேல், ஆனாலும் ஸவரங்களைக் கையாளற
விதத்தினாலேயே ரொம்ப வித்யாஸமாயிருக்குன்னா
ஆச்சர்யமாத்தான் இருக்கு. ஆனாலும் வடக்கத்தி-
தெற்கத்தி ஸங்கீதங்களில் இது ஸஹஜமாவே 'ப்ரூவ்'ஆறது.

ரஸிகர்: கர்நாடக ஸங்கீதத்துலேயே கூட அப்படி உண்டு.
தோடியையேதான் மத்திமம் பண்ணி நிஷாதாந்தமா பாடினா
அது புன்னாகவராளி ஆயிடறது! ரெண்டும் ரொம்ப
வித்யாஸமான வெவ்வேறே ராகம் மாதிரிதானே தோணறது?

ஸ்ரீசரணர்: [வியப்புடன்]: அப்படியா? தோடி-புன்னாகவராளி
ஒரே ஸ்வரங்களா? நான் 'நோட் பண்ணினதில்லையே!
கொஞ்சம் பாடிக் காட்டறியா? ஆலாபனையும் பண்ணு,
க்ருதிகளும் பாடு. "கமலாம்பிகே" தோடியும்,
"கனகசைல" புன்னாகவராளியும் பாடு.

ரஸிகர் நன்றாகப் பாடவும் கூடியவர். ஸ்ரீசரணர் கூறிய
விசேஷம், வெகு சிறப்பாகப் பாடினார். அதில் சின்னச் சின்ன
நுட்பங்களையும் ஸ்ரீசரணர் அனுபவித்து ரஸித்ததுண்டே.

..

Thursday, July 5, 2012

வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency ' கொட்டகையில் இரவு கடுங்குளிராக இருக்கும் என்று எண்ணினார். பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை, அந்த பிஞ்சு வித்யார்த்திகளுக்கே வழங்க செய்தார். அதுகளுக்கு கொள்ளை சந்தோஷம். பாதாள கங்கை சென்றார்.
திடீரென்று அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடிந்தவுடன் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்தார். பெரியவா அவரை சம்மானிக்க சால்வை கொண்டுவர சொன்னார். மானேஜருக்கோ அந்த குறுகிய நேரத்திற்குள் முகாமுக்கு சால்வை எதுவும் கொண்டு வரவில்லை. சட்டென்று அன்று பாடசாலை பசங்களுக்கு புது சால்வை கொடுத்தது நினைவு வந்தது. எனவே, பெரியவாளிடம் எதுவும் பிரஸ்தாபிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு பையனிடமிருந்து சால்வையை திரும்ப பெற்றுவந்து, கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார்.
இரவு ஏமாற்றத்துடனேயே கையை காலை முடக்கி கொண்டு, அந்த பையன் தூங்கிபோனான். காலையில் எழுந்திருக்கும்போது,அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆற அணைதிருப்பதால் அதிசயித்தான். அவன் இழந்ததைவிட உயர் ரகமான சால்வை அவன் மீது போர்த்தபட்டிருந்ததே அந்த சுகத்துக்கு காரணம்.
"போர்வை வந்துதாடா?" மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது.
கூர்ந்த திருஷ்டி கொண்ட பெரியவா, கனபாடிகளுக்கு கொடுத்த சால்வை, பாடசாலை சிறுவனுடையது என்று கண்டுபிடித்து விட்டார். அதற்குபின் மாலை அனுஷ்டானம், இரவு பூஜை, எல்லாம் முடிந்ததும், மனேஜரை கூப்பிட்டு விசாரித்தார். அவர் செய்தது தனக்கு திருப்தி இல்லை என்றும், தன் சகாக்களுக்கு கிடைத்தது தனக்கு தங்கவில்லையே என்று எப்படி அந்த குழந்தை வருந்தும் என்று விளக்கினார். விட்டால், எங்கே தன்னுடைய சால்வையையே கொடுத்துவிடுவாரோ என்று மனேஜருக்கு கவலை வந்துவிட்டது. எனவே தாம் முந்திக்கொண்டு "எனக்கு போர்த்திகொள்ள நல்ல கம்பிளி போர்வை இருக்கு. அதையே பையனுக்கு கொடுத்துடறேன்" என்றார்.
"தூங்கிண்டு இருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விஸ்ராந்தி பண்ணிக்கோ"
"நைஸ்" இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்கு கிடைத்து.

 

Tuesday, July 3, 2012

நடமாடும் தெய்வம் நடப்பது ஏன் ?

 
சிவந்த சிவப்பழத் திருமேனி; பூசிய வெண்ணீறு; இளம் சிவப்பேறிய காவித் துணி, பாரிஜாத பூச்செண்டு போன்ற பாதாரவிந்தங்கள். கல்லிலும், முள்ளிலும், வெயிலிலும், மழையிலும் உலக க்ஷேமத்திர் காகவும், கலாச்சாரத்தின் தொன்மையைக் காக்கவும், வேத தர்மம் தழைக்கவும் நடமாட வந்ததோ ?
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார். பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள், “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்குள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!

 

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top