Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, December 10, 2020

"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது."

 ("வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"-பண்டிட்டின் மகள்)


(அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால்தான் பெரியவாளுக்குப் பெருமை-பண்டிட்)

சொன்னவர்; ஸ்ரீமதி மைதிலி,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்குத் தினந்தோறும் ஸ்ரீருத்ர த்ரிசதீ வில்வார்ச்சனை நடைபெறும். வில்வதளங்கள், வாடிவதங்கியோ,ஓட்டை விழுந்ததாகவோ இருக்கக்கூடாது. மூன்று இலைகள் கொண்ட தளமாகவே இருக்கவேண்டும்.

பெரியவாள் செய்யும் பூஜைக்கான முன்னேற்பாடுகளில், தேவையான வில்வ தளங்களைத் திருத்திக் கொடுப்பது என்பது ஒரு முக்கியமான வேலை. அந்த வேலை ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பதால்,அதெற்கென்று ஒரு பணியாளரை ஒதுக்கி விடுவது வழக்கம். அந்தப் பணியைச் செய்யும் தனிப்பொறுப்பை ஏற்கும் பணியாளரையே 'வில்வம்' என்று சங்கேதப் பெயரால் அழைப்பதும் உண்டு.

என்ன காரணத்தினாலோ, வில்வத்தின் வரத்து குறைந்து கொண்டே வந்தது.காஞ்சிபுரத்திலுள்ள வில்வமரங்கள் எல்லாம் பசுமை இழந்து காணத் தொடங்கின. சிவன் கோவில்களில் வில்வ மரங்கள் இருந்தன என்றாலும், 'சிவன் சொத்து குலநாசம்' என்பதால், கோவில் மரங்களிலிருந்து வில்வக்கிளைகளை ஒடித்துக் கொண்டுவர முடியாது.

ஆனால், வில்வம் குறைந்தால்,பெரியவா கேட்பார்களே?.

ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைத்தபோது, "காஞ்சிபுரத்தில் எல்லார் வீட்டு வில்வமரங்களிலும் கிளைகள்தான் இருக்கு; இலைகள் இல்லை" என்று நாசூக்காகத் தெரிவித்தார், ஒரு தொண்டர்.

"ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்..."

தொண்டர்,'த்ஸொ' கொட்டினார்.'ஹிந்திபண்டிட் என்ன சர்வக்ஞரா? அவருக்கு ஹிந்தி தெரியும்;சம்ஸ்கிருதம், இங்கிலீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா!'

பெரியவாளுடைய ஆக்ஞை.எனவே,தவிர்க்க முடியாது.

"பண்டிட் ஸ்வாமி, காஞ்சிபுரத்தில் வீடுகளைத் தவிர வேறு எங்கே வில்வமரம் இருக்கா-ன்னு தெரியுமா? உங்களை கேட்கச் சொல்லி பெரியவா உத்திரவு.."

அப்பாவுக்கு நெஞ்சு சிலிர்த்தது.

பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது,நினைவுக்கு வந்தது.

ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு, ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார், அப்பா.

இடம் - முனிசிபல் பார்க் ! அங்கேதான் இடைஞ்சல் இல்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட இடம். அலங்கோலமாக வளர்ந்திருந்த குரோடன்ஸ் செடிகள். தண்ணீர் ஊற்றப் படாததால் வாடிக் கொண்டிருந்த செடிகொடிகள். ஆனால், இது என்ன, பச்சைப்பசேலென்று, புதர் அடர்த்தியாக...

- வில்வமரம் !

அட ! பூங்காவில் வில்வமரம்கூட வளர்க்கிறார்களா? பொருத்தமாக இல்லையே?

சரி. நமக்கென்ன?

இல்லை.ஆழப் பதிந்துவிட்டது.

"பண்டிட் ஸ்வாமி...வில்வமரம்.."

"இதோ, என்னோட வா, காட்டுகிறேன்..."

பூங்காவுக்கு அழைத்துக் கொண்டு போய் வில்வமரத்தைக் காட்டினார்,அப்பா.

பின்னர் பல நாள்களுக்கு அந்த மரத்தின் தளங்கள்தாம் சந்திரமௌளீஸ்வரரின் அர்ச்சனைக்குப் பயன்பட்டன.

...................................................................................................

இரண்டு நாள்களுக்குப் பிறகு நான் அப்பாவைக் கேட்டேன்;

"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது.

அப்பா சிரித்தார்,பெரியவாளுடைய பல லீலைகளில் இதுவும் ஒன்று."

"இதில் லீலை என்னப்பா இருக்கிறது? ஹிந்தி பண்டிட்டுக்கு நிறைய நண்பர்கள்; பல இடங்களுக்கும் போகிறார்; சிவபூஜை செய்கிறார். அதனால், வில்வமரம் ஓர் இடுக்கில்இருந்தால் கூட, அவர் நினைவில் வைத்துக்கொண்டு விடுவார் - என்ற அனுமானத்தில் பெரியவா சொல்லியிருக்கக்கூடும். இல்லையா?"

"இல்லை, மைதிலி, இது ஒரு அபூர்வ ஸித்தி.."

"அப்படியானால், முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாமே? உங்களைக் கேட்கச் சொல்வானேன்?..."

என் எதிர்வாதத்தை அப்பா ரசித்தார்.

"இதோ பார். மைதிலி, முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாள் அறிவுக்கு உட்பட்டதுதான்.அந்த அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால் தான் பெரியவாளுக்குப் பெருமை.

முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருக்கு...என்று சிஷ்யரிடம் சொல்லியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? சிஷ்யர், தண்டோரா போடாத குறையாக, எல்லோரிடமும் 'முனிசிபல் பார்க்கை எட்டிப் பார்க்காத பெரியவாளுக்கு அங்கே வில்வமரம் இருக்கு-ன்னு தெரிஞ்சிருக்கு.பெரியவா, ஸித்தபுருஷர் ! ' என்று முழங்கியிருப்பார்.

அதைத் தவிர்ப்பதற்காக, நான், ஒரு வியாஜம்; காரணம், அந்த உண்மை,என் மூலமாக வரட்டுமே? -என்று, எனக்குக் கௌரவம் கொடுத்துவிட்டு, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டு, சுவாமிகள் இந்த
சம்பவத்திலிருந்து தன்னை மறைத்துக் கொண்டுவிட்டார்கள்.

நான் நெஞ்சுருகிப் போனேன்; கண்களை துடைத்துக் கொண்டேன். இமயம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொள்கிற வயதில்லை, எனக்கு

Wednesday, December 9, 2020

"லங்கணம் பரம ஔஷதம்"

 "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில்

இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன
பெரியவாள்.


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா.

கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.
உடம்பில் அனல் பறந்தது.

டாக்டர் வந்து பார்த்தார். மாத்திரை கொடுத்து,
"உடனே பால் சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை
போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப்
பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா?
"இன்னிக்குப் பாலும் வேண்டாம்...மாத்திரையும்
வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள்

ஏஜெண்ட் மானேஜர் வந்து கெஞ்சினார்.
"ஜுரம் அடிக்கும்போது விரதம் - உபவாஸம் இல்லாவிட்டால்
தோஷமில்லை" என்று வாதிட்டுப் பார்த்தார்.இது ஔஷதம்
செய்தார்.
தானே? ஆகாரம் இல்லையே?" என்று அஸ்திரப் பிரயோகம்

பெரியவா அருகிலிருந்த சிஷ்யனிடம்,
"டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில்
இருக்கேன்!"என்று மெல்லிய குரலில் தட்டுத் தடுமாறிக்
கூறினார். மானேஜருக்குப் புரியவில்லை.
என்று கூறிப் புரியவைத்தார்கள் பெரியவாள்.
"லங்கணம் பரம ஔஷதம்னு சொல்லியிருக்கே!"

மறுநாள் பொழுது விடிகிற வேளை.பெரியவா வழக்கம்போல்
எழுந்து,பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டு
அனுஷ்டானங்கள்,பூஜைகளைச் செவ்வனே செய்தார்கள்.

காய்ச்சல் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது.

உடம்பு,பெரியவா சங்கற்பப்படி இயங்கியது என்பதை
நிரூபிக்க ஆயிரத்தெட்டு சான்றுகளைக் கூறலாம்.

Tuesday, December 8, 2020

"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?" ((சந்யாசியைத் தேடிய சம்சாரி)

 ("என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று பெரியவா சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.)

(எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு)

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி.அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள்.இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர்.

"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்"- என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.

தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

"உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது" என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ ஏதும் தென்படவில்லை.

"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது" என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.

யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.

வந்தவர் அவரிடம் கேட்டார்.

"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே...அவர் எங்கே போயிருக்கார்?"

"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.

"அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?" கேள்வி பிறந்தது.அவருக்கு

வந்தவரோ, 'இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.

வயதான பெரியவர் தொடர்ந்தார்.

"சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நினைக்கிறே..அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.

"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு..என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"

வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார்.

"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க..உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."

இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.

அவர் வயதான பெரியவரைப் பார்த்து,

"பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு.என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்..நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.. எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்...காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது.எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது.

ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக்கொஞ்சம் இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார்.

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.

"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி. வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்...மலைத்து நின்றார்.

அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது. இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப்பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.

"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை சட்டையை கழற்றும்படி சொன்னார் மகான். தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மகான்.

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.....

எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு

Monday, December 7, 2020

" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?"

 (மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல் பண்ணிய மகா பெரியவா)


நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்


கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா

நன்றி-சக்தி விகடன்-2006
  

முன்பொரு முறை மாலை வேளை. காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. 'இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்?'  என்பதை தெரிந்து கொள்ள தலையை சற்று சாய்த்து நோட்டம் விட்ட ஸ்வாமிகளின் பார்வையில் இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞன் தென்பட்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாதனக்கு பணிவிடை செய்யும் ராமு என்ற இளைஞனை அருகே அழைத்தார். ராமு அருகில் வந்து வாய் பொத்தி நின்றான்.


"ராமு...'கியூவிலே பதினஞ்சாவதுஆசாமியாகுள்ளமாகொஞ்சம்கறுப்பாநின்னுண்டு இருக்கானேஒருபையன்...அவன் சையுசுக்கு சரியா இருக்காப்லே ஒரு ட்டை பேண்டு துணி நீ வாங்கிண்டு வரணும். ஆபிசிலே  பணத்தை வாங்கிக்கோ. மடத்துக்கு பக்கத்திலே இருக்கிற முதலியார் ஜவுளிக் கடையிலே நல்ல துணியா பார்த்து வாங்கிண்டு வா !" என்று கட்டளை இட்டார் ஸ்வாமிகள். 


ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லைகுழம்பினான். 'ஏன்எதற்கு ?' என்று பெரியவாளைக் கேட்க முடியுமா ! மௌனமாக புறப்பட முயன்றான்.

"ராமு இங்கே வா ! இப்போ நூதனமா துணிக்கு பெயரெல்லாம் சொல்லறாளேநோக்கு தெரியுமோ ?" என்று பெரியவா கேட்டார்.


"தெரியும் பெரியவா..."

"எங்கே..அந்த பேரைச் சொல்லுபார்ப்போம் !"

"டெரிகாட்டன்னு பேரு பெரியவா..."

"ம்..அதான்...அந்தத் துணியிலேயே 'ஒசத்தியா' பார்த்து வாங்கிக்கோ. புரியறதா?" என்று சொன்னார் பெரியவா.

பதினைந்தே நிமிடங்களில் ஆச்சார்யாள்  சொன்னபடி ஷர்ட் பேண்ட் துணிகளோடு அவர் முன் வந்து நின்றான் ராமு. துணிகளை தூர இருந்தே பார்த்த ஸ்வாமிகளுக்கு மிகுந்த சந்தோஷம்!

"பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னா இருக்குடா " என்று ராமுவைப் பாராட்டிய மஹாஸ்வாமிகள்

, "நீ ஒரு காரியம் பண்ணு. ஒரு மூங்கில் தட்டு நெறைய பழங்களோடபூர்ண பலம் (மட்டை தேங்காய்) எல்லாம் எடுத்து வெச்சுண்டுஇந்த துணி மணிகளையும் அது மேலே வை. நா சொன்னேன்னு மடத்து மேனேஜர்கிட்டேசொல்லி ஆறாயரத்து எறநூத்தம்பது ரூபாய ஒரு கவர்லே போட்டு எடுத்துண்டு வரச் சொல்லு.அந்த ரூபா கவரையும்தட்டுல துணிமணிக்கு மேல வெச்சுடு. என்ன ண்ணனும்கறதை அப்புறம் சொல்லறேன்!" என்று சொல்லி விட்டு தனக்கு முன்னால் இருந்த பக்தரோடு பேச ஆரம்பித்து விட்டார். 

பெரியவா உத்தரவுப் படியே ஆறாயிரத்து எறநூத்தம்பது ரூபாய் ரொக்கம் ஒரு கவரில் போடப்பட்டு வந்து சேர்ந்தது. ஜாடையிலேயேஅதைத் தட்டின் மேல் வைத்து விட்டு போகுமாறு உத்தரவிட்டார் பெரியவா. 

இப்போதுஅந்த இருது வயது இளைஞன்ஸ்வாமிகளுக்கு முன் நின்றிருந்தான்
ஆச்சார்யாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவன் அப்படியே கிழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் ராமுவைத் திரும்பிப் பார்த்தார்.
அருகில் ஓடி வந்தான் ராமு. "ராமுஅந்த மூங்கில் தட்டை கைலே எடுத்துக்கோ!" என்றார். எடுத்துக் கொண்டான் ராமு. உடனே ஸ்வாமிகள்அந்தப் பையனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நா பூர்ண ஆசீர்வாதம் பண்றதா சொல்லிஅந்தத் தட்டை அவன் கைல குடு!" என்று இன்முகத்துடன் கட்டளை இட்டார்.
தட்டை இளைஞனிடம் ஒப்படைத்தான் ராமு. இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான். அக்கம் பக்கம் பார்த்தான். செய்வது அறியாது நின்றான். அவனுடைய தவிப்பைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், "ராமுஅவனை ஒண்ணும் குழம்ப வேண்டாம்னு  சொல்லு. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மடத்தோட அனுக்கிம் இதுனு சொல்லு. கவர்லே ரூபா இருக்கு. பத்திரமா வீட்டுல ஒப்படைக்கணும்னு சொல்லு" என்றார். 

ஒன்றும் புரியாமல் தலையை ஆடினான் இளைஞன். குழப்பம் தீராமல் தட்டை வாங்கிக் கொண்டு ஸ்வாமிகளை நமஸ்கரித்துக் கொண்டு நகர்ந்தான். 

பதினைந்து நிமிடம் கழிந்தது. எல்லோரும் தரிசித்துச் சென்று விட்டனர். தனது அறைக்குள் வந்து அமர்ந்தார் ஆச்சார்யாள். ராமுவை அருகில் கூப்பிட்டார்.

"ஏண்டா ராமுஅந்த பையனுக்கு அப்படி உபசாரம் பண்ணிஅதையெல்லாம் வெச்சுக் கொடுக்க சொன்னேனே...ஏன்எதுக்குனு நீ கேட்கவே இல்லேயே!" என்றார்.

ராமு தயங்கியபடியே"பெரியவாளைப் பார்த்து நான் எப்படி கேள்வி கேக்கறதுஒங்க கட்டளையை நிறைவேத்தத் தானே நான் இருக்கேன்" என்று பதில் சொன்னான். 

"சரி...நீ கேக்க வேண்டாம் ! நானே சொல்றேன்" என்று கூறி விட்டு பேச ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.

"ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி டந்த சம்பவம் இது. அப்போ நம்ப டத்துக்கு கொஞ்சம் சிரமமான காலம். அப்போ ஒரு மாச காலம்,

பரிவாரங்களோட வட தேச யாத்திரை போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணிப் பொறப்பட்டேன்.  நல்ல வேளை பார்த்து யாத்திரை கிளம்பினோம். மடத்து வாசலுக்கு வந்தேன்.மடத்துக்கு எதுதாப்லே ஒரு சின்ன மளிகைக் கடை உண்டு. அது ஒரு செட்டியாருக்கு சொந்தம். மடத்துக்கும் அங்கே தான் மளிகை சாமான்கள் பற்றுவரவு கணக்கு.  

மடத்து வாசல்லே என்னைப் பார்த்ததும் மளிகைக் கடை செட்டியார் வேகமா ஓடி வந்தார். தன் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார். நா யாத்திரை போறது தெரிஞ்சு நமஸ்காரம் பண்ணிட்டு போக வந்திருப்பார்னு நினைச்சேன். 

'என்ன செட்டியார்வாள்...சௌக்கியமா ளிகை வியாபாரம் எல்லாம் எப்படிப்போறது?'னு விசாரிச்சேன். 

அதுக்கு அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமாக, 'சுமாரப் போறது ஸ்வாமி. கஷ்டமாத் தான் இருக்கு. பெரியவா வட தேச யாத்திரை போறதாகவும்திரும்பி வர்றதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்னு சொன்னாங்கஎன்று மென்று விழுங்கினார்.

'ஆமாம் செட்டியார்வாள்..அஞ்சாறு மாசம் ஆகலாம்என்றேன்.

ஒடனே அவர் ரொம்ப யோசனை பண்ணிதயங்கித் தயங்கி, 'சாமிமடத்துக்கும் நம்ம மளிகைக் கடைலே தான் பற்று வரவுக் கணக்கு. சாமிக்கே தெரியும். நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவையிலே இருக்கு. எனக்கும் கஷ்டம். நாலு மாச கடை வாடகை பாக்கி. கஷ்டமா இருக்கிறதாலே தான் ஒங்க கிட்டே குறையை சொல்லிக்கிறேன்...நீங்க யாத்திரையை நல்ல படியா முடிச்சிட்டு வாங்க'னு சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணினார்.

'செட்டியார்வாள் ! யாத்திரை போயிட்டு வந்த ஒடனேயே ஒங்க மளிகை பாக்கியை பைசல் பண்ணச் சொல்றேன்'னு கிளம்பினேன்.

ஆறு மாச வட தேச யாத்திரை முடிஞ்சு திரும்பினேன்.
  
மடத்துக்கு எதிர்சாரியிலே பார்த்தேன்.செட்டியார்மளிகைக்கடை பூட்டி இருந்தது. அப்புறமா விஜாரித்துப் பார்த்ததுலே மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த செட்டியார் வெளியூருக்கு போயிருந்த போது தீடிர்னு  'கால கதிஅடைஞ்சுடதா சொன்னா. அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே !

அப்புறமாசெட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். எண்ணுத்தி எழுபதஞ்சே ரூபா. அந்த பாக்கியை இன்னிக்குத் தான் அசலும் வட்டியுமா அவரோட பேரன் கிட்டே தீர்த்து வெச்சேன் ! என்ன புரியறதா அந்த பையன் கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனேஅவன் வேற யாருமில்லை. மளிகை கடை செட்டியாரோட பிள்ளை வைத்துப் பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரன்கிட்டே சமர்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லே !"- மஹா ஸ்வாமிகள் சொல்லி முடித்தார்.

ராமுவுக்கு கேட்கக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது.

அப்போது வேறு ஒரு பையன்ஆச்சார்யாளின்உதவிக்காகஅங்குவரவேபெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டுஅறையை விட்டு வெளியே வந்தான் ராமு. வந்தவன், மடத்து வாசலை நோக்கி விரைந்தான்.

அங்கேஅந்த இருபது வயது இளைஞன் ஆச்சார்யாளால் அனு க்கிரகப்பட்ட  வஸ்துக்கள் நிரம்பிய மூங்கில் தட்டுடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் ராமுவுக்கு பரம சந்தோஷம். அவனை நெருங்கினான். விஷயத்தை சொல்லி விசாரித்தான்.

அதற்கு அந்த இளைஞன், "ஆமாங்க !ரொம்பவருசத்துக்குமுந்தி எங்கதாத்தா இங்கமடத்துக்கு எதுதாப்பிலேமளிகைக் கடை வெச்சிருந்ததா எங் பாட்டிஅப்பாவெல்லாம் சொல்லுவாங்க. என் தாத்தா திடீர்னு காலம் ஆனதும் நிறைய கடன் ஏற்பட்டதாலே கடையை மூடிட்டு கிருஷ்ணகிரிக்கு வந்துட்டாங்களாம். இப்போ அங்கே தான் எங்கப்பா மளிகைக் கடை வெச்சு நடத்திட்டு இருக்காரு. நான் தான் எங்க ஊர் தெரிஞ்சவங்களோட 'டூர்வந்தேன். வந்த இடத்துலே பெரியவங்க இதெல்லாம் எனக்கு ஏன் பண்ணினாங்கன்னு தெரியலே. ஒரே ஆச்சர்யமா இருக்கு !" என்று தெரிவித்தான்.

ராமுவுக்கு இதைக் கேட்டவுடன் கையும் ஓடவில்லைகாலும் ஓடவில்லை! பெரியவாளின் - அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்தபடியே மடத்துக்குள் சென்றான். அப்போது இரவு ஏழு மணி. தனி அறையில் ஏகாந்தமாக வீற்றுறிருந்தார் ஆச்சார்யாள்.

ராமுவைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்தார் ஸ்வாமிகள். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அழைத்த ஆச்சார்யாள், "நா சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லியான்னு நோக்கு சந்தேகம் வந்துடுத்து. மடத்து வாசலுக்கு போய்அந்த செட்டியார் பேரனையே நேரடியாகப் பார்த்துஊர்ஜிதப்படுத்திண்டு வந்துட்டியோல்லியோ !" என்று சொல்லி இடி இடி என்று சிரித்தார்.

உடனே ராமு, "பெரியவா...என்னை மன்னிக்கணும். ஒரு ஆர்வத்திலே அப்படிப் பண்ணிட்டேன். வேற ஒண்ணுமில்லை. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ"  என்று கதறி அழுதான் !

அந்த தெய்வம் சிரித்துக் கொண்டே கை தூக்கி ராமுவை ஆசீர்வதித்தது

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top