2 – யோகி ராம் சுரத்குமாரும் பெரியவாளும் — பி. சுவாமிநாதன்அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?”உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் — அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார் உதவியாளர்.அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா” என்றார்.உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ரம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?’உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி.”என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக் கேட்டார்.”ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாக உதவியாளர்.”ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார். பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
2 – யோகி ராம் சுரத்குமாரும் பெரியவாளும் — பி. சுவாமிநாதன்
அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?”
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.
“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் — அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார் உதவியாளர்.
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.
உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா” என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?
மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ரம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?’
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி.”என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக் கேட்டார்.”ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாக உதவியாளர்.”ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார். பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”யோகி: “ஆம்….” பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.”யோகி: “ராம்…. ராம்…”பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.”யோகி: “ராம்…. ராம்…”பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.”யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.”பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”யோகி: “ஆம்….”
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.”
யோகி: “ராம்…. ராம்…”
பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”
மஹா பெரியவாளின் நகைச்சுவை உணர்ச்சி…
நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.
ஒருமுறை ஸ்வாமிகள் மஹாராஷ்ட்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள்.
ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து” யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?”என்று வினவினார்.
அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம். பக்திப்பாடல்கள் பாடுவோம், புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும். யானைக்கும் தீனி கிடைக்கும். இப்படி எங்கள் ஜீவனம் செல்லுகிறது என்றார்கள்.
அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்” இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன். ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மஹாஸ்வாமிகள்தனக்கு சமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்பட்டு.”
இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
நூலின் தலைப்பு : மஹா பெரியவா
நூலாசிரியர் : பி. சுவாமிநாதன்
Trisakthi Publications
56 / 21 , First Avenue , Sastri Nagar ,
Adyar , Chennai – 600 020 .தொலைபேசி : 044 – 4297 -0800
நூலாசிரியர் : பி. சுவாமிநாதன்
Trisakthi Publications
56 / 21 ,
Adyar , Chennai – 600 020 .தொலைபேசி : 044 – 4297 -0800
கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (12) – பட்டாபி
பட்டாபி சார், பெரியவா பற்றிய செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்குக் கொண்டு வந்து, அவற்றைச் சுவாரசியமான கதை போல விவரித்துச் சொல்லுவார். அதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் பாடங்களும் நிறையவே இருக்கும்…
திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.
வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.
சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!
காஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.
பெரியவாளோட சந்நிதானத்துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போறாது.
சரி, பெரியவா கிட்டே பேசுவா ரோ? ஊஹூம்.
சந்தேகம் ஏதாவது கேட்பாரோ? அதுவும் இல்லை.
”பெரியவர் எங்கிட்டே பேச ணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேன்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.
வெளியிடத்துக்கு வந்தார்னா சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.
ஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.
வழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிறவர் அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.
செங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப் பட்டுட்டார் சிவன். அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. பஸ்ஸூக் குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது!
மதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது சிவன் கண்ணுல பட்டுது. உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துது.
சிவனுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.
பஸ்ஸூக்குள்ள வந்து ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே!
அப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு! ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா? அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு!”ன்னு கேலியா சொன்னாங்க.
மஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. ‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.
அந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.
ராத்திரி வேளை. பஸ் கிளம்பிச்சு. புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிர்ல அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.
சிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ஆன் த ஸ்பாட் செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்!
‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார்? மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார்? அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்? பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கக்கொண்டுதானே, அவரோட உயிர் தப்பிச்சுது?
இதெல்லாம் எப்படி நடக்கிறது! யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஓன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.
ஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. யோசிக்க யோசிக்க, அந்த மகான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.
1983-ல், மகா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.
சிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர்தான் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.
”சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா. தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”னார் பெரியவா.
அதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு!
நன்றி – சக்தி விகடன்
பிரமித்த பிர்லா — ரா. வேங்கடசாமி
காஞ்சி மகான் சதாராவில் முகாமிட்டிருந்த சமயம். கோடீஸ்வரரும், தொழிலதிபருமான பிர்லா, அவரைத் தரிசிக்க வந்தார். பம்பாயில் பாரதிய வித்யா பவனைக் கட்டிக் காத்து வந்த பக்திமான் அவர்! அவர் வந்திருக்கிறார் என்பதால் மகான் தங்கியிருந்த இடத்தில் எந்த விதமான பரபரப்பும் ஏற்படவில்லை. சாதாரணமான பக்தர்களுக்கு எப்படித் தரிசனம் கிடைத்ததோ, அதைப் போலவே திரு.ஜி.டி.பிர்லாவும், ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மகானைத் தரிசித்தார்! எப்போதுமே பிர்லா எந்தக் கோயிலுக்கோ அல்லது புண்ணியத் க்ஷேத்திரங்களுக்கோ போனால் நிறைய நன்கொடை தருவது வழக்கம். வெளியே போகும்போது செக் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வார். மகான் ஏதாவது நன்கொடை கேட்பார் என்று அவர் நினைத்து விட்டார். அவர் அங்கிருந்து நகரும் வரை மகான் வாயைத் திறக்கவில்லை. பொறுக்க முடியாமல், பிர்லாவே கேட்டுவிட்டார்.
“நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?”
இதற்கு மகான் சொன்ன பதில் பிர்லாவை பிரமிக்க வைத்து விட்டது.
“நீ இப்ப செய்யற தொண்டையே விடாமல் செஞ்சுண்டிருந்தா போதும்… நீயும், உன் குடும்பமும் க்ஷேமமாக இருப்பீர்கள்” என்று முடித்து விட்டார்.
அத்துடன், பிர்லாவை சகல மரியாதைகளுடன் அனுப்பி வைக்கும்படி, மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார்.
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி
மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!
தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை ‘காஞ்சி மகானின் கருணை நிழலில்…‘ என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும் உங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
ஜெய ஜெய சங்கர!
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், சாதாரண நிலையிலிருந்த நான், இன்று மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்ததை விட உயர்ந்த நிலையிலும் இருப்பதற்கு ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளின் அனுக்கிரகம்தான் காரணம்.
நான் அப்போது சிம்சன் குரூப் கம்பெனிகளுள் ஒன்றான ஸ்ரீராமவிலாஸ் சர்வீஸ் லிமிடெட்டில் (எஸ்.ஆர்.வி.எஸ்.) பணிபுரிந்து கொண்டிருந்தேன். சாதாரண குமாஸ்தா வேலைதான். ஆனால், நான் வேலையில் சேர்ந்த ஒரு சில வருடங்களிலேயே கம்பெனியின் நிதி நிலை சரியாக இல்லாததால், ‘கம்பெனியை மூடிவிடப் போகிறார்கள்’ என்ற செய்தி கசிந்து கொண்டிருந்தது. அதனால் அங்கு பணிபுரிகிற அனைவருமே மிகுந்த வருத்தத்தில் இருந்தார்கள்.
அந்த நேரத்தில், எங்களுடன் பணிபுரிந்து வந்த ஸ்ரீராமன் என்பவருக்கு காஞ்சிபுரத்தில் திருமணம் நடக்க இருந்தது. அதனால், நானும் சில நண்பர்களும் காஞ்சிபுரம் சென்றோம்.
திருமணம் முடிந்தவுடன் ஒரு நண்பர் சொன்னார். ”வந்ததுதான் வந்தோம். காஞ்சி மகா பெரியவா தேனம்பாக்கத்துலதான் இருக்காராம். தரிசனம் பண்ணிட்டு வந்துடலாமே” என்றார்.
நாங்கள் அனைவரும் புறப்பட்டு தேனம்பாக்கத்தை அடைந்தோம். அப்போது அது மிகச் சிறிய கிராமம். ஸ்ரீமடத்தைத் தவிர வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. மடத்தின் ஊழியர் ஒருவர் எங்களைப் பார்த்து, ‘ஸ்வாமிகள் ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறார். இது அவர் வருகிற வழி… அப்படி ஓரமாக நில்லுங்கள்’ என்றார். நாங்கள் ஒதுங்கி நின்றோம்.
ஓரிரு நிமிடங்களில், மகா ஸ்வாமிகள் எங்கள் எதிரே வந்து நின்றபோது உடம்பே ஆடி விட்டது. அவரது பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல், நாங்கள் அனைவரும் ‘ஹரஹர மகாதேவா‘ என்று எங்களையும் அறியாமல் கோஷம் எழுப்பினோம். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்க, அவரது திருவடியில் விழுந்து, எழுந்து நின்றோம். எங்களால் பேச முடியவில்லை. உடல் நடுங்கியது.
வியப்பு மேலிட தலையை அசைத்தோம்.
”எதுக்கும் கவலைப்படாதீங்கோ… கம்பெனி நன்னா நடக்கும்… க்ஷேமமா இருப்பேள்…” என்று சொல்லிவிட்டு ஸ்வாமிகள் புறப்பட, நாங்கள் மீண்டும் அவர் காலடியில் விழுந்து எழுந்தோம்.
என்ன அதிசயம் இது? எந்த ஊரில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம் என்பது இவருக்கு எப்படித் தெரியும்? நாங்கள் வேலை பார்த்த கம்பெனி (எஸ்.ஆர்.வி.எஸ்.) நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த விஷயத்தை இவருக்கு யார் சொன்னது? இதனால் எங்களுக்கு இருந்த மன உளைச்சலை இவர் எப்படி அறிந்தார்..?
அனைத்தையும் தெரிந்து கொண்டு ”கவலைப்படாதீங்கோ… கம்பெனி நன்னா நடக்கும்… க்ஷேமமா இருப்பேள்…” என்கிற மகா பெரியவாளின் வார்த்தைகள், எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம்; வரப்பிரசாதம்.
அதன் பிறகு, நாங்கள் வேலை பார்த்த கம்பெனிக்கு மகா பெரியவாளின் ஆசீர்வாதத்தால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கம்பெனி நன்றாகவே செயல்பட்டது. இதன் பிறகு பதினோரு வருடங்கள் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து, வெளியே வந்தேன். மகா பெரியவாளின் ஆசீர்வாதத்தால் இன்றளவும் நலமாக இருக்கிறேன்.
- பா.சி. ராமச்சந்திரன், சென்னை-19
காயத்ரி மந்திரத்தின் சக்தி பற்றி மஹா பெரியவர்….
ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்:
“நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்“ என்றார்.
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மகானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மகானின் உத்தரவுக்கு மறுப்பேது ?
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மகானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:
“நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு“ என்று சொல்லியபின் காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.
Excellent collection. Would like to see more in this blog, with contributions from all 43 members that I see. Unfortunately I have not been blessed to dharshan this great soul, but yeah..he is my manaseega GURU. - Hara Hara Shankara...Jaya Jaya Shankara.. Krishnan.
ReplyDelete