திருப்பாவையில் தாமோதரன் சிறப்பு — ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்
திருப்பாவை – 5
ஸ்ரீ ராகம் , ஆதிதாளம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
பொருள்: அளவிட முடியாத மாபெரும் மாய சக்தி நிறைந்த விஷ்ணு பூமியில் உள்ள உயிரினங்கள் மேன்மையடைய, தன்னையே அர்ப்பணித்து, வட மதுரை (மதுரா) யமுனா நதிக் கரையில் த்வாரகை பூமியில் யாதவ குலத்தை மேம்படுத்த, வசுதேவர் — தேவகியின் கர்ப்பத்தில் பிறந்த மாயக் கண்ணன், யசோதையின் கர்ப்பத்தை பிரகாசிக்க (இவள் வயிற்றில் பிறந்த குழந்தை காளியை மாற்றம் செய்ததற்கு நன்றியாக) நந்தகோபன் வீட்டில் வளர்ந்த குழந்தை கண்ணன் செய்த பால லீலைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மற்ற வீட்டுப் பெண்கள் அளித்த புகார்களை பல தரம் கேட்டு, கேட்டு, யசோதையின் மனம் கோபம் கொண்டு, வீட்டின் தூண்களிலும், உரலிலும் கண்ணனை அடிக்கடி இடுப்பைச் சுற்றி கயிற்றால் கட்டியபோது அடி வயிற்றில் (தாமம் – கயிறு, உதரம் – வயிறு) ஏற்பட்ட தழும்புடைய தாமோதரனை, மனம், வாக்கு, (காயம் – உடம்பு) சரீரம் இந்த மூன்றையும் சேர்த்து வழிபட வேண்டும்.
– ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்
காயம்: (உடம்பு) அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் தூய நல்ல மலர்களை பெருமாள் திருப்பாதத்தில் தூவி (தொழ) இரு கரம் சேர்த்து வணங்க வேண்டும்.
வாக்கு: பெருமாளின் திவ்ய கல்யாண குணங்களை வாய் விட்டு முழுமையான சொற்களால் பாடி வழிபட வேண்டும்.
மனம்: பெருமாளின் பெருமைகளை (புகழை) சிந்தித்து, சிந்தித்து தியானிக்க வேண்டும்.
வாக்கு: பெருமாளின் திவ்ய கல்யாண குணங்களை வாய் விட்டு முழுமையான சொற்களால் பாடி வழிபட வேண்டும்.
மனம்: பெருமாளின் பெருமைகளை (புகழை) சிந்தித்து, சிந்தித்து தியானிக்க வேண்டும்.
பாசுர பலன்கள்:
அறியாமல் நாம் முன் ஜன்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இனி வரும் காலங்களில் செய்யும் கர்மாவினால் அடையப் போகும் துன்பங்களும் (தீயில் இட்ட பஞ்சு எரிந்து சாம்பலாகி விடுவது போல) தாமோதரனை, மனம், வாக்கு, காயத்தால் நியமத்துடன் வழிபடும் பக்தர்களை, நெருங்காமல் விலகிப் போய் விடும் என்பது உண்மையானதும், உறுதியானதுமாகும்.

No comments:
Post a Comment