சிவாஜியைப் பார்க்க ஆசைப்பட்ட காஞ்சிப் பெரியவர் — வி.என்.சிதம்பரம்
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை எதேச்சையா பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு “எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்கதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்…” என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது “அந்த போஸ்டர்ல இருக்கறது நீங்க இல்லை… சினிமா நடிகர் சிவாஜி ‘திருவருட் செல்வர்‘ படத்துல சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க போஸ்டராக பார்த்து இருக்கேள்…” என்று சொல்ல… திகைத்துப்போன பெரியவாள், ‘நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ…’ என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை தரிசிக்க எத்தனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு பேசிட்டு வந்தார், சிவாஜி.
– வி.என்.சிதம்பரம் (நன்றி விகடன்)
கடந்த 40-ஆண்டுகளுக்கு மேலாக செவாலியேயின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.என்.சிதம்பரம். “வாய்யா சீனா தானா…” என்று வாஞ்சையுடன் அழைத்து தன்னுடைய பெட்ரூம்வரை வரக்கூடிய உரிமையை சிதம்பரத்துக்கு வழங்கி இருந்தார் சிவாஜி. நடிகர் திலகம் மரணத்தை தழுவும் முன்பு மாலையில் அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சிவாஜியிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார், சிதம்பரம்.
No comments:
Post a Comment