தர்மம் பற்றி மகா பெரியவாள்.
.
குருவானவர் இகம்-பரம் என்னும் இரண்டு
வித வாழ்க்கைக்கும் வழிகாட்டக் கூடியவர். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பதுபோல இந்த உலக வாழ்க்கையில் அதுவும் வேண்டுமல்லவா? அது போலவே மேல் உலகம் செல்வதற்கு வேண்டிய அருள் பெறுவதற்கும் அவரே துணையாகிறார். ஒரு நாளில் பெரும்பாலும் பொன்னுக்கும், பொருளுக்கும் என்று உழைத்தாலும் சிறிது நேரமாவது அருள் செயல்களுக்காக ஒதுக்க வேண்டாமா? அதுதான் நமது வாழ்க்கையைப் பயனுடையதாக அர்த்தமுள்ளதாக ஆக்கும் என்பதை மறக்கக்கூடாது.அர்த்தம்
என்பதே அதுதான். பொன்,பொருள் எல்லாவற்றையும் 'அர்த்தம்' என்று குறிப்பிட்டாலும், மற்றவர்களுக்காக பயன்படுத்தப்படும்போதுதான் அந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் பொருந்தும்.
இல்லை என்றால் அனர்த்தம்தான்.

"நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் செல்வத்தை, மேல் உலகிலும் செல்லும்படியான கரன்சியாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பெரியவா சொல்லுவார். அதுதான் தர்மம் என்னும் கரன்ஸி.இதை வேறெவரும்
திருட முடியாது.வெள்ளத்தில் போகாது. வெந்தழலில் வேகாது, கொள்ளத்தான் குறையாது. அப்படி மாற்றத் தெரிந்தவர், சொல்லத் தெரிந்தவர் குருநாதர் ஒருவரே.அவருடைய திருஷ்டி பட்டாலே நமக்கு மனப்பக்குவம் வந்துவிடும். இதனால்தான் அருணகிரி,ஔவையார்
முதலிய எல்லோருமே தங்கள் இஷ்ட தெய்வங்களை குருவாய்,வருவாய் என்று வேண்டிக் கொள்கின்றனர்

No comments:
Post a Comment