Source: Shri. Varagooran Narayanan
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில்
பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர-
யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம்
என்பது சாஸ்திர வாக்கியம்.
ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை
நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை,
செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு,அதை ஒரு தோஷம்
என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.
பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு.
லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."
பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா
அங்கே வந்து பார்த்தார்கள். "கேட்டை,மூட்டை,செவ்வாய்க்கிழமை
என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம்,
செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?"
என்று கேட்டார்கள்.எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை,
பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல்
வந்துடுத்து"
தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா
இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து
தெரிந்துகொண்டார்கள்?"
No comments:
Post a Comment