ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும்.பொள்ளாச்சி ஜெயம் என்ற அம்மா அவரிடம் வந்தார்.உடனே பெரியவா மடத்தில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்த ராமமூர்த்தி
என்பவரைக் கூப்பிட்டு,"எனக்கு ரவாதோசை வேண்டும் போல் இருக்கு; செய்து தர்றயா?"என்றார். எல்லோரும் காரியங்களை முடித்துக் கொண்டு படுக்கப் போகும் நேரம்.
பொதுவாக பிட்சை பண்ணுவதற்கு கெஞ்சினாலும் மசியாத பெரியவா,விபரீதமாக இப்படி ஓர் ஆசையை வெளியிடுகிறாரே! என்ன செய்வது?" என்று யோசித்துக் கொண்டே சமையலறையில்
ரவா இருக்கிறதா! என்று நோட்டம் விடுகிறார். துளியும் இல்லை.
பெரியவாளைப் பார்க்க வந்த அம்மாவுக்கு நிலைமை தெரிந்ததும்"கவலைப்படாதீர்கள்; நான் போய் ஏதாவது கடை திறந்திருந்தால்
ரவை வாங்கி வருகிறேன்!" என்று கிளம்பினார். எல்லா கடையும் மூடியிருந்தது.ஒரே ஒரு கடை மட்டும் மூடப் போகிற தருணம்.ஓடிப் போய் ரவையும் வாங்கி வந்துவிட்டார்.
பெரியவா பிரியப்பட்டுக் கேட்டால் செய்துதராமல் இருக்க முடியுமா? ரவாதோசை தயாரானது. பெரியவாளிடம் கொண்டு வைத்தார்கள்.அதில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். "நன்னாயிருக்கு...ரொம்ப திருப்தியாச்சு.
போய்ப் படுத்துக்கோ..." என்றார், ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொள்ளவா இந்தக் கூத்து!"
என்று எதுவும் புரியாமல் படுத்துக் கொண்டனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து ஆறு வைதீகர்கள் வந்து இறங்கினார்கள். மற்றவர்கள் பெரியவாளிடம் போய் வைதீகர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார்கள்.
பெரியவா சிரித்தபடியே "அவாள்ளாம் வருவான்னு
தெரிஞ்சதால்தான் ரவா தோசையே வாக்கச் சொன்னேன்!" என்றார்."அப்படியானால் ஏன் எனக்கு வேணும் என்று கேட்டீர்கள்?
அவர்களுக்கு என்றால் பண்ணிப்போடமாட்டோமா?'
என்று ராமமூர்த்தி நினைத்திருப்பார் போலும்.
அதை உணர்ந்தவர் போல் பெரியவா,"வேளை கெட்ட வேளையில் ஆகாரம் செய்து தரச் சொன்னால் சிரமமாகத்தான் இருக்கும்.
எனக்குன்னு கேட்டா ஆசையா செய்வீர்களில்லையா"
என்று சொன்னாராம்.
[எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான்
நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது.]
No comments:
Post a Comment