நானே நாராயணன்!
என் பெண் ஜனா ஒரு ‘ஐஸ்வர்ய கோலம்‘ தயாரித்திருந்தாள். கண்ணாடித் துண்டுகளை ஒட்டி கலர் செய்து நடுவில் மகாலக்ஷ்மி வைத்து கண்ணாடி போட்ட கோலப் படம் அது. அதைப் பெரியவாளிடம் சமர்பித்தோம். அதை எடுத்துப் பார்த்து ரசித்து விட்டு ” இது மகாலக்ஷ்மி, மகாலக்ஷ்மியை நான் எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் ? மார்பில் தான் இருக்கணும் ” என்று சொல்லி அந்தப் படத்தை தன் மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து எல்லோருக்கும் அனுக்ரஹம் செய்தார். “நாராயணன் அம்சமும் நானே !” என்று பெரியவா உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டோம்.
திருச்சியை சேர்ந்த சுபலட்சுமி அம்மாள் சொன்னாள்: ” பெரியவா ! இன்று சோமவார அமாவசை, அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்” என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னாளாம்.
~~~~~
பட்டென்று பதில் வந்தது: ” அதனாலென்ன ? என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு. அதுவே போதும்!“ பெரியவா நாராயணன் மட்டுமில்லை; அசுவத்த நாராயணனும் கூட!
–ராதா ராமமூர்த்தி, புதுக்கோட்டை.
No comments:
Post a Comment