(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள்
நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பனிக்காலம். பெரியவாளின் உதடுகளில் வெடிப்பு.
அதனால் வேதனை.பேசுவதற்குக்கூட அசௌகரியமாக
இருந்தது. அடிக்கடி வெண்ணெயை உதடுகளில் தடவிக்
கொண்டால் வெடிப்புகளில் வறட்சி நீங்கி, நெய்ப்புத்
தன்மை உண்டாகும். ஆனால், கடையில் விற்கும்
வெண்ணெயைப் பெரியவாள் உபயோகப்படுத்த
மாட்டார்களே!
மாட்டார்களே!
ஒரு பாட்டி, மிக அக்கறையாக ஐந்து சேர் பசும்பால்
வாங்கிக் காய்ச்சி,உறை குத்தி, தயிராக்கிக் கடைந்து,
வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தார்.
"ரொம்ப மடியாய்ப் பண்ணியிருக்கேன். உதட்டில்
தடவிக்கணும். உள்ளேயும் சாப்பிடலாம்"-பாட்டி.
வெண்ணெய் என்ற பெயரைக் கேட்டாலே,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நினைவு வந்து விடும்
பெரியவாளுக்கு.அதனால் பாட்டி கொடுத்த
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நினைவு வந்து விடும்
பெரியவாளுக்கு.அதனால் பாட்டி கொடுத்த
வெண்ணெயைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது ஒரு குழந்தை வெண்ணெய் கேட்டுக் கையை
நீட்டியது.பாலகிருஷ்ணனே வந்து கேட்பதாகப்
பெரியவாளுக்குத் தோன்றியதோ என்னவோ,
அத்தனை வெண்ணெயையும் குழந்தையிடம் கொடுத்து
அப்போது ஒரு குழந்தை வெண்ணெய் கேட்டுக் கையை
நீட்டியது.பாலகிருஷ்ணனே வந்து கேட்பதாகப்
பெரியவாளுக்குத் தோன்றியதோ என்னவோ,
அத்தனை வெண்ணெயையும் குழந்தையிடம் கொடுத்து
ஆனந்தப்பட்டார்கள்.
தொண்டர்களுக்கு முகம் சுருங்கியது.
"கேட்ட குழந்தைக்கு ஓர் எலுமிச்சங்காய் பரிமாணம்
வெண்ணெய் கொடுத்தால் போதாதா? எல்லாவற்றையும்
கொடுத்தாயிற்றே? அப்புறம் உதட்டில் தடவிக் கொள்ள
ஏது வெண்ணெய்?"-தொண்டர்கள் தங்களுக்குள்
"ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? குழந்தை வெண்ணெய்
ஏது வெண்ணெய்?"-தொண்டர்கள் தங்களுக்குள்
"ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? குழந்தை வெண்ணெய்
சாப்பிட்டாலே என் உதட்டுப் புண் சரியாயிடும்.."பெரியவா
அன்று சாயங்காலமே பெரியவாள் உதட்டில் புண் இல்லை.
காலையில் பார்த்த கிருஷ்ணக் குழந்தை வெண்ணெயைச்
சாப்பிட்டு விட்டது போலும், 'சரீரங்கள் பலப்பல ஆத்மா
ஒன்றுதான்' என்பது அத்துவிதம் (அத்வைதம்)
குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய்
நீங்கிற்று என்பது என்ன விதம்?
பரமேசுவரனே அறிவார்.
நீங்கிற்று என்பது என்ன விதம்?
பரமேசுவரனே அறிவார்.
No comments:
Post a Comment