(பெரியவாளின் அன்பு வெள்ளத்துக்கு அணை
போடவே முடியாது.)
போடவே முடியாது.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-19
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
(ஒரு சிறு பதிவு)
யாத்திரை போகிற வழியில் ஒரு கிராமத்துக்குப்
பக்கத்தில் தொம்பன் கூத்தாடிக் குடும்பம் வித்தை
காட்டிக் கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் மேல்
ஏறித் தலை கீழாகத் தொங்கினான் ஒருவன்.
பிறகு இன்னொரு கம்பத்துக்குத் தாவினான்.
பக்கத்தில் தொம்பன் கூத்தாடிக் குடும்பம் வித்தை
காட்டிக் கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் மேல்
ஏறித் தலை கீழாகத் தொங்கினான் ஒருவன்.
பிறகு இன்னொரு கம்பத்துக்குத் தாவினான்.
ஜனங்கள் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
ஆரவாரம் செய்தார்கள். ஊர்ப் பெரியமனிதர்
அவர்களுக்கு அரிசி முதலிய பண்டங்களையும்
வேட்டி,பணமும் கொடுத்தார்.
அவர்களுக்கு அரிசி முதலிய பண்டங்களையும்
வேட்டி,பணமும் கொடுத்தார்.
பெரியவாள்,ஸ்ரீமடம் மானேஜரிடம் சொன்னார்கள்;
"நானும் சங்கராச்சார்யார் வேஷம் போட்ட
தொம்பங்கூத்தாடிதான்.நானும் வித்தை காட்டுகிறேன்.
"நானும் சங்கராச்சார்யார் வேஷம் போட்ட
தொம்பங்கூத்தாடிதான்.நானும் வித்தை காட்டுகிறேன்.
மாடு, யானை,ஒட்டகம்,பல்லக்கு,பூஜை எல்லாம்
வைத்துக் கொண்டு...."
மானேஜர் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.
"அவனுக்கு அரிசி,புளி,பணம் கொடுங்கோ..."
பெரியவாளின் அன்பு வெள்ளத்துக்கு அணை
போடவே முடியாது.
போடவே முடியாது.
No comments:
Post a Comment