Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, December 31, 2016

"வைத்யோ நாரயண ஹரி"

(நாராயண வைத்தியர்-பெரியவா)

(ஒரு சிறு பதிவு)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-27

தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

"தகப்பனாருக்கு மிகவும் வயதாகி விட்டது.
உடல் நிலையும் சரியாக இல்லை. ரொம்பவும்
மோசமாகி விட்டது. பிழைத்து விடுவார் என்று
சொல்வதற்கு இடமில்லை. ஆஸ்பத்திரியில்
சேர்க்கணும்.பெரியவாள் அனுக்ரஹம் பண்ணணும்"

பெரியவாள் கண்களை மூடிக் கொண்டு சிறிது
நேரம் மௌனமாக இருந்தார்.

பெரியவாள் சொன்னார்;

"தினமும் சிவபூஜை செய்து,சாளக்ராம பூஜை செய்து,
அபிஷேக தீர்த்தத்தில் ஓர் உத்தரணி அவருக்குக் கொடு.
கங்கா தீர்த்தம் அடிக்கடி கொடு. அவர் காதில் விழும்படி
'ராம' நாமாவை உச்சரித்துக் கொண்டிரு. அது போதும்.
எப்படியானாலும் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டாம்."

"வைத்யோ நாரயண ஹரி" - பகவானிடம் உன்
தகப்பனாரை ஒப்படைத்து விடு. போகும் ஜீவனுக்கு
அதுவே சிறந்தது.

பையனுக்குப் புரிந்து விட்டது.

பெரியவாள் சூசகமாகச் சொன்னதை உணர்ந்து கொண்டு,
உத்தரவுப்படியே செய்தான்.

பின்னர் நாலைந்து நாள்கள் கழித்து, அவனது தந்தை
அநாயஸமாகப் போய்ச்சேர்ந்தார் என்ற செய்தி வந்தது.

Thursday, December 29, 2016

"அல்சரையும் காணோம்;வலியையும் காணோம்"

(வேறு ஒரு சங்கரமடம் பக்தரின் வயிற்று வலியைதன் வயிற்றின் மேல் உருட்டின சாத்துக்குடியால்வலி தீர்த்த சம்பவம்- பெரியவா கருணையால்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-26
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள்,
ஒரு பேருந்தில் ஸ்தல யாத்திரை செய்யப்
புறப்பட்டார்கள். கன்னியாகுமரி,திருச்செந்தூர்,
மதுரை,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் போய்
விட்டு காஞ்சிபுரம் வந்தார்கள்.

காமாட்சி கோயிலில் அபிஷேக நேரம் ஒரு மணி
நேரம்போல் காத்திருக்கவேண்டும் என்று தெரிய
வந்தது.

"நடை திறப்பதற்குள் சங்கராச்சார்யாரைத் தரிசித்து
விட்டு வரலாமே?" என்று எல்லோரும் புறப்பட்டார்கள்.

- ஒரு தம்பதியைத் தவிர.

அவர்கள் வேறு ஒரு சங்கரமடம்(பீடாதிபதி) பக்தர்கள்.
அதனால் ஸ்ரீ காஞ்சிப் பெரியவாளைத் தரிசனம் செய்யப்
பிரியப்படவில்லை.ஆகவே காமாட்சி கோயிலிலேயே
தங்கிவிட்டார்கள்.ஆனால்,வெகு நேரமாகியும் ஸ்ரீமடத்துக்கு
சென்றவர்கள் திரும்பி வராததால், வேறு வழியின்றி
அவர்களைத் தேடிக்கொண்டு ஸ்ரீமடத்துக்கே வந்து
விட்டார்கள்.

அவர்கள் வந்த நேரத்தில், ஸ்ரீ பெரியவாள் பூஜை முடிந்து,
தீபாராதனை செய்து கொண்டிருந்தார்கள். உத்தராங்க
உபசாரங்கள் முடிந்து,பூஜையை நிறைவு செய்து,
ஸ்ரீ பெரியவாள் கீழே இறங்கி வந்து தீர்த்தப் பிரஸாதம்
கொடுக்கத் தொடங்கினார்கள்.

கடைசியாக அந்த திருவனந்தபுரம் அன்பர் முறை வந்தது.
அவருடைய பெயரைக் கூறி,அவருடைய தகப்பனார்
கோத்திரம், அவர்கள் வீட்டின் அமைப்பு,தோட்டம் உட்பட
சகல விஷயங்களையும் பெரியவாளே கூறினார்கள்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
ஒரு சாத்துக்குடியைத் தன் வயிற்றின் மேல் உருட்டிக்
கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.

திருவனந்தபுரத்துக்காரருடன் சுமார் ஒரு மணி நேரம்
பேசி விட்டு, பிரஸாதமாக அந்த சாத்துக்குடியைக்
கொடுத்தார்கள். வந்தவருக்கு, வயிற்றுப்புண்
(பெப்டிக் அல்சர்) மருத்துவர் ஆலோசனைப்படி அவர்
இருபது நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது
சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்ததால் ஒரு மணி
நேரம் எதுவும் சாப்பிடவில்லை.

பிரஸாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்ததும்
அவசரம் அவசரமாக சாத்துக்குடியை உரித்துச்
சாப்பிட்டார்.

அதன்பிறகு, அல்சரையும் காணோம்;வலியையும்
காணோம்.பின்னர் ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தர் ஆனார்
திருவனந்தபுரத்துக்காரர்.

Tuesday, December 27, 2016

Marikozhundu miracle - Periyavaa

Devotees throng the place wherever Sri Maha Periyava camps. There were many frequenters who visited Maha Periyava and he also knew them. One day there was an old lady who regularly visited the Mutt to have darshan of Maha Periyava. When her turn came she paid her obeisance to our Sri Maha Periyava. Maha Periyava blessed that old lady and placed some fruits in a tray and asked her to take those fruits as prasadam. Along with fruits there was a small bit of marikozhundu (small aromatic herb known also known as artemisia pallens or dhavanam) in the tray. The old lady saw it and threw out the small bit of marikozhundu and took only the fruits with her. Paramacharya after seeing this told her, “Why have you thrown that marikozhundu? It will be useful to you. Please take it with you”. The old lady wondered for a minute as to why the Acharya was asking her to take it. However she instantly took that marikozhundu and kept it safely with her without questioning it. After having darshan she left the Mutt and reached the bus stand where she caught a bus to her place. Immediately after boarding the bus she felt tired and fell asleep unconsciously.
The lady who was sitting next to this lady was a mischievous lady and she stole her purse which was kept inside her bag. When the conductor came and asked her to buy the ticket, she woke up only to find her purse missing and in the hands of the lady sitting next to her. The old lady started shouting that the purse belonged to her and that the other lady had stolen it. The other lady told the conductor that it was her purse and even mentioned the exact amount of money in the purse.
Now the conductor was confused as to whom the purse belonged. Suddenly there was a flash in the face of old lady and told the conductor that there was one more stuff inside the purse and if the purse belonged to lady, asked her to inform what the stuff was. Now the lady who stolen her purse was shocked to hear this statement and could not utter anything. The old lady then told the conductor that there was a small piece of “marikozhundu” inside her purse and asked the conductor to check this. When the conductor opened he noticed the small piece of marikozhundu inside the purse. Then the lady who stolen the purse accepted her mistake. Upon the request of the old lady, the other lady was pardoned.
The old lady now thanked Sri Maha Periyava for asking her not to miss the small piece of marikozhundu!
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
Hara Hara Shankara
Jaya Jaya Shankara

Sunday, December 25, 2016

"அறிவுரை பையனுக்கா? தகப்பனாருக்கா?

(நீங்க துஷ்ட சஹவாசம் வைத்துக்கொண்டால்தான்
பையன் முரடாக இருப்பான்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-25

தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

"குழந்தை ரொம்ப முரடாக இருக்கான்,யார் என்ன 
சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான்..அவன் 
திருந்தும்படி பெரியவாள் அனுக்ரஹம் பண்ணணும்"

பெரியவாள் குழந்தைக்கு அறிவுரை ஏதும் கூறவில்லை.

தகப்பனாரைப் பார்த்து சொன்னார்கள்;

"நீங்கள் தர்மப் பிரகாரம் நடக்கணும்.உங்களுக்கு
ஆசார - அனுஷ்டானம், தெய்வ-பக்தி,குரு பக்தி,
சத்சங்கம் போன்றவை இருக்கணும்.

நீங்க துஷ்ட சஹவாசம் வைத்துக்கொண்டால்தான்
பையன் முரடாக இருப்பான்.அடிக்கடி வீட்டுக்கு
நல்ல மனுஷ்யாள் வரணும்.கோயில் - குளம்,
பஜனை - பாட்டு என்று பையனையும் கூடவே
அழைச்சிண்டு போகணும்.

வேரில் தண்ணிர் ஊற்றினால், அந்தத் தண்ணீர்
இலைக்கும் கிடைக்கும். நல்ல சகவாஸத்துலே
சேர்த்து வையுங்க..தானாகவே பையன் திருந்திடுவான்.."

தகப்பனார் நன்றியுடன் நமஸ்காரம் செய்து விட்டுப்
போனார்.

Friday, December 23, 2016

GOD - Guindy route - periyavaa

பெரியவா சரணம்
ஒரு முறை திருவான்மியூரில் பெரியவா திருமுன்னர் காலில் செருப்பு, சூட் கோட்டுடன் மரியாதை இல்லாமல் குறுக்கே நின்றான்.
அவன் ஸ்வாமிகளிடம் நெஞ்சை நிமிர்த்தி, "ஏன் கல்லில் பால் ஊத்தற? அதையே செய் என்று எல்லாருக்கும் ஏன் சொல்ற!" என்று சுடுசொல் சொன்னான்.
அருகில் இருந்த எல்லாரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். ஸ்வாமிகள் கையசைப்பில் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.
பெரியவா மிகவும் அன்புடன் அவனை நெருங்கினார். அந்த இளைஞனிடம், "எங்கே போறே? என்று கேட்டார். " கிண்டிக்கு " என்றான் அவன்.
ஸ்வாமிகள், " இப்படிப் போனா கிண்டி போலாமா? "என்று கேட்டார். " அது தான் கைகாட்டி, பெயர்ப் பலகை எல்லாம் இருக்கே! " என்றான். " இது எவ்வளவு நாளாக இருக்கு? " என்றார் பெரியவா.
" ரொம்ப நாளா இங்கே தான் இருக்கே! தெரியாதா? "
" நீ பிறக்கும் முன்னேயே இந்தக் கைகாட்டி இருந்ததா? "
" ஆமாம் எங்கப்பா, தாத்தா காலத்திலே ன்னு பெரியவங்க சொன்னாங்க! "
" அப்பவே கிண்டி, இந்த ரோடு எல்லாம் இருந்ததா?
"ஆமாம் "
" இந்தக் கைகாட்டி யைப் பார்த்து இது காட்டும் திசையிலே போனா, கிண்டி வந்திடுமா? "
" அது வராது, நாம கிண்டிக்குப் போகலாம் "
" நீ இதப் பார்த்துட்டுத் தான் முதன் முதல்லே கிண்டி போனாயா? ". ... .. ஸ்வாமிகள்.
" ஆமாம் "
" அப்போ உன் கண்ணுக்கு கிண்டி தெரிஞ்சுதா? "
" அதெப்படித் தெரியும்? கிண்டி இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு ன்னு போர்டுல எழுதி இருக்கே! உன்னால அஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறதைப் பார்க்க முடியுமா? "என்றான் இளைஞன்.
" அப்படீன்னா, உன் கண்ணுக்குத் தெரியாத கிண்டியை இந்த போர்டைப் பார்த்துத் தெரிந்து கொண்டாயா? "
" ஆமாம் "
" இந்தப் போர்டைப் பார்த்து அது காட்டும் திசையிலே நேரா, எங்கும் வளையாம நடந்தா போயிடலாமா? "
" முடியாது இந்த ரோட்டிலே நாமாக வளைஞ்சு வளைஞ்சு போகணும்! "
" இந்த போர்டை இங்கே யார் வச்சாங்க? "
" எனக்குத் தெரியாது, முன்னாலே இருந்தவங்க இது தான் கிண்டிக்குப் போகிற வழி ன்னு தெரிஞ்சு கொண்டு இதை வைச்சிருப்பாங்க "
" அப்படீன்னா என்னிக்கோ யாரோ வெச்ச கைகாட்டியை நாமாகப் பார்த்துத் தெரிஞ்சுண்டு , நாமே வழியைக் சரியாகப் பார்த்துப் பார்த்து வளைஞ்சு வளைஞ்சு போனால் கிண்டிக்குப் போகலாம் அப்படித் தானே? "
இளைஞனுக்கு வேகம் குறையத் தொடங்கியது!!
" நானும் அப்படித்தான் பெரியவங்க சொன்னதைக் கேட்டுக் கடவுளைக் காண்பதற்கு அவங்க போட்ட பாதையிலே செல்கிறேன்! வழியில் இருக்கிற தடங்கல்களை நானாக யோசனை செய்து, தாண்டியும், விலகியும் போய்க் கொண்டிருக்கிறேன்! " என்றார். இளைஞன் திகைத்தான்.
" கிண்டிக்குப் போய் மீண்டும் வந்து இது தான் வழி ன்னு காட்டினவங்களை நீ சந்தேகப் பட்டால், உன்னால் கிண்டிக்குப் போக முடியுமா? அது போலத் தான் நம் ஆண்டவனைக் கண்டவர்கள் காட்டின வேதம், உபநிஷதம் பூஜை முறை எல்லா வற்றிலும் சந்தேகமே கொள்ளாமல் முழுமையான நம்பிக்கையுடன் அவர்கள் காட்டிய வழியில் போகிறேன் " என்றார்.
அந்த இளைஞன் சற்று விலகிப் போய் தன் செருப்புகளைக் கழற்றி எறிந்து விட்டு, ஓடோடி, வந்து ஸ்வாமிகளின் திருவடிகளில் சாலையில் வீழ்ந்து, கண்ணீர் விட்டான்......
நடமாடும் தெய்வம்,!

Wednesday, December 21, 2016

"ஆருத்ரா தரிசனம்"

(ஆருத்ரா தரிசனத்தன்று பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம்.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-24 &
சி.வெங்கடேஸ்வரன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

(மார்கழி மாதம் வரும் 16-12-2016 ஆரம்பம்
அதையொட்டி இரண்டு பதிவுகள்).

மார்கழி மாதம்.ஆருத்ரா தரிசனம்.
ஸ்ரீ புதுப் பெரியவாள் பூஜை செய்வார்கள்.

"அடுத்த காலப் பூஜையாவது ஸ்ரீ பெரியவாள்
செய்வது சிலாக்கியம் என்று ஸ்ரீ மடம் மானேஜர்
பெரியவாளிடம் வந்து, " இன்று ஆருத்ரா.பெரியவாள்
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யணும்" என்று
பிரார்த்திப்பது போல் நினைவுபடுத்தினார்.

பெரியவாள்,; "இன்னிக்கு ஆருத்ரா தரிசனம்னு பெயர்.
இன்னிக்குப் பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம். அதனாலே புதுப் பெரியவா
பூஜை செய்யட்டும். நான் தரிசனம் பண்ணிக்கிறேன்.."
என்றார்கள்.

பெரியவாள் வாக்கில் சரஸ்வதி தேவி நித்யவாஸம்
பண்ணிக் கொண்டிருந்தாள்.பட்டென்று சாதுர்யமான
பதில். 'பின் எப்படித்தான் வரும்?

.......................................................................................................................

"தை பிறந்தது மேளமும் கொட்டியது"
.
"நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,''

ஜனவரி 12,2016,.தினமலர்


காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.

அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், "என்ன விஷயம்?'' என்று பெரியவர் கேட்டார்.

"பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,'' என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், "உன் பெயர் என்ன?'' என்றார்.

"ராதா' என்றாள் அவள்.

பெரியவர் அவளிடம், "உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?'' என்றார்.

"ஆம்' என்றாள் அவள்.

"சரி...அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,'' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர்.

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.

"எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,'' என்றனர்.

திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.

திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.

ராதாவிடம், "உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"கண்ணன்'' என்ற ராதாவிடம், "உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' என்றார்.

"ஆம்...என்றாள் ராதா ஆச்சரியமாய்.

"மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?' என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், "நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,'' என்றார்.

இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!

சி.வெங்கடேஸ்வரன்

Monday, December 19, 2016

"சத்தியம் ஜெயிக்கும்" - பெரியவாள்

(ஆமாம், பெரியவாள் வாக்கு பலித்தது. குற்றவாளிக்
கூண்டிலிருந்த அவர், 'சத்தியத்தை'ச் சொன்னார்.
அது ஜெயித்தது.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-23
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

பிரபலமான ஒரு ஹோட்டல்காரருக்குக் கௌரவக்
குறைவு வந்து விட்டது. ஓர் அடிதடி வழக்கில் அவரைக்
கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
அவர் குடும்பம் பெரியவாளிடம் பக்தி உடையது.

முதலாளியின் சம்சாரம், பெரியவாளிடம் வந்து,
"ஜாமின்கூடக் கொடுக்கமாட்டேன் என்கிறார்களே?"
என்று சொல்லி அழுதார்.

பெரியவாள் வக்கீலிடம் சொன்னது;
"பெரிய கொள்ளை....கொலை கேஸில் கூட ஜாமீன்
கொடுக்கிறார்கள். என்னுடைய கட்சிக்காரர் மீது
சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் அவ்வளவு கடுமையானது
அன்று.அதனால் ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று
நீதி மன்றத்தில் முறையிடு."

அவ்வாறே முறையிட ஜாமீனில் வெளியே வந்ததும்,
நேரே பெரியவாளிடம் வந்தார் அவர்.

"நான் குற்றத்தை ஒப்புக் கொள்ளப் போகிறேன்.
பெரியவாள்தான் காப்பாத்தணும்.."என்று
 பிரார்த்தித்துக் கொண்டார்.

"சத்தியம் ஜெயிக்கும்" என்றார் பெரியவாள்.

நீதி மன்ற விசாரணையின்போது தன் குற்றத்தை
ஒப்புக் கொண்டார் ஹோட்டல்காரர். பத்து நாள்கள்
கழித்துத் தீர்ப்புக் கூறினார் நீதிபதி.

"இவ்வளவு பெரிய மனிதர், பகிரங்கமாகக் கோர்ட்டில்
தன் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இது
மிகப் பெரிய விஷயம்..அவர் குற்றவாளி அல்லர் 
என்று வழக்கிலிருந்து அவரை விடுவிக்கிறேன்"-நீதிபதி.

ஆமாம், பெரியவாள் வாக்கு பலித்தது. குற்றவாளிக்
கூண்டிலிருந்த அவர், 'சத்தியத்தை'ச் சொன்னார்.
அது ஜெயித்தது.

Saturday, December 17, 2016

"மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்" கார்த்திகை தீபம் அன்று

(மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.)
வரும் டிஸம்பர் 13-12-2016 கார்த்திகை தீபம்

.
(நன்றி : தினமலர்-டிசம்பர் 2014


காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.

திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.
மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.

அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார்.

பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.

அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.
கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.

எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.

Thursday, December 15, 2016

"நீங்க செய்த தவறுகளை மன்னிச்சுட்டேன்"-பெரியவா

(பெரியவா என்ன சொன்னாலும் அதிலேஒரு தர்ம சூக்ஷ்மம் இருக்கும் நமக்குத்தான்
புரியமாட்டேங்கிறது!")


கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-22
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.


வசார - அனுஷ்டானம், குரு பக்தியில் சிறந்து
விளங்கும் ஒரு வாத்திம கிராமத்தில், நான்கு நாள்
முகாம் செய்துவிட்டு,அடுத்த முகாம் அரசவனங்காடு
என்ற கிராமத்துக்குப் புறப்பட்டார்கள் பெரியவா.

பெரியவாளை வழியனுப்ப, கிராமத்தார் கொஞ்சம்
தொலைவு நடந்து வந்தார்கள்.உத்தரவு பெற்றுத்
திரும்பிவிட வேண்டிய கட்டம்.

பெரியவாள்,....."நீங்க செய்த தவறுகளை
மன்னிச்சுட்டேன்" என்று சொல்லி, கையைத் தூக்கி
ஆசீர்வதித்து விடை கொடுத்தார்கள்.கிராமத்தாருக்கு
'திக்'கென்றிருந்தது.

"தவறுகளை மன்னிச்சுட்டேன்!"
பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்தோமே?
பெரியவாளுக்கோ, பரிவாரங்களுக்கோ எந்த
அசௌகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று
இராப்பகலாய் உழைத்தோமே!"

அன்றிரவு முழுவதும் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

'தப்பு - தவறு என்று எங்கே வந்தது?எப்படி வந்தது?
பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தோமே?
கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்ததே? 
பந்தி பந்தியாகச் சாப்பாடு-வாய்க்கு வாய் உபசரணை'

"ஏண்டா சீனு,தப்பு எங்கேடா நடந்திருக்கும்?"

"அதான் மாமா எனக்கும் புரியலை;
பெரியவாள் ரொம்ப சந்தோஷமாதானே இருந்தா!"

"மனசு தவிக்கிறதுடா..."

எல்லாருக்கும்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது. பத்துப் பதினைந்து
முக்கியஸ்தர்கள் புறப்பட்டு அரசவனங்காடு சென்று
பெரியவாள் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்
முகங்களில் தவிப்புடன் அடக்கமாக நின்றார்கள்.

பெரியவாளுக்கு சிரிப்பு வந்தது.

"என்ன தப்பு நடந்ததுன்னு கேட்டு, மன்னிப்புக்
கேட்க வந்தேளாக்கும்."-பெரியவா

தாக்குதலைத் தாங்கிக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

"ஒரு தப்பும் நடக்கல்லே...."-பெரியவா

"அப்படியானால் விடை கொடுக்கும்போது
ஏன் அந்த பிரம்மாஸ்திரம்?"

பெரியவா சொன்னார்கள்;

"ஒரு சந்நியாசி ஊரை விட்டுப் போகும்போது,
அவரிடம் - 'நாங்க முடிஞ்சவரை சேவை செய்தோம்.
ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் மன்னிக்கணும்
என்று சொல்வது கிராம சம்பிரதாயம். நேற்றைக்கு
நீங்க அதைச் சொல்லலே! அதை ஞாபகப்படுத்தினேன்.
அவ்வளவுதான். ராஜோபசாரம் பண்ணினேள்.
க்ஷேமமாக இருக்கணும்."

வெளியே வந்தார்கள்.
எல்லார் முகத்திலும் அசாதாரணமான திருப்தி.
"ராத்திரி முழுக்க எப்படித் தவிச்சுப் போயிட்டோம்.."

"ஆனா...பெரியவா என்ன சொன்னாலும் அதிலே
ஒரு தர்ம சூக்ஷ்மம் இருக்கும் நமக்குத்தான்
புரியமாட்டேங்கிறது!"

Tuesday, December 13, 2016

"பேய் அத்தி (பேத்தி) இலை" (இது தங்கத் தாம்பாளமாக்கும்"-பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-21 &செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

(இரண்டு நிகழ்ச்சிகள் இப்பதிவில்)

ஒரு முதிய மாது, பேய் அத்தி (பேத்தி) 
இலைகளைத் தையல் இலை போல் தைத்து 
நாள்தோறும் பெரியவாளுக்கு சமர்ப்பணம் செய்வார்.

" இது என்னமோ பேத்தி இலைன்னு தூக்கிப்
போட்டுடாதே.இது தங்கத் தாம்பாளமாக்கும்"
என்று பெரியவா தொண்டர்களிடம் கூறினார்கள்.

சொன்னபடியே அந்த இலையில்தான் பிக்ஷை
செய்தார்கள்.

நிஜமான ஸ்வர்ண பாத்திரத்தில் அமுது உண்ட
பேரானந்தம் பெரியவாளுக்கு.

கோடீசுவரர்களுக்குக் கிடைக்காத பேறு,
எழுத்தறியாத ஓர் ஏழைப் பாட்டிக்குக் கிடைத்தது.

..................................................................................................

"பேத்தி இலை சம்பந்தமாக இன்னும் ஒரு நிகழ்ச்சி"

சொன்னவர்-செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி அம்மாள்
ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.

பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.

“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.

பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!

அன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?

Sunday, December 11, 2016

Stealing during deepavali- Periyavaa

தீபாவளித் திருட்டு!
தீபாவளிக்கு நாலைந்து நாட்கள் முன்னாடியே, பெரியவாளிடம். நிறைய வஸ்த்ரங்கள் வேஷ்டி, புடவை என்று பலபேர் கொண்டு வந்து ஸமர்ப்பிப்பார்கள். அதில் நல்ல விலை உயர்ந்த வஸ்த்ரங்கள் நிறையவே இருக்கும். அனேகமாக எல்லாவற்றையுமே பெரியவா தன் அமுதக் கைகளால் தொட்டு ஆஶிர்வாதம் பண்ணி கையோடு பட்டுவாடா பண்ணச் சொல்லிவிடுவார்.
ஒருமுறை ஶிவாஸ்தானத்தில் தீபாவளிக்கு மூன்று தினங்களுக்கு முன்னால், இதுமாதிரி புது வஸ்த்ரங்கள் வழக்கம்போல் வைக்கப்பட்டிருந்தது. மத்யானம் பிக்ஷைக்குப் பின், பெரியவா சற்று ஓய்வெடுக்க தன் அறைக்குள் சென்று விட்டார்.
புது வஸ்த்ரங்களை அங்கேயே வைத்துவிட்டு மற்ற பாரிஷதர்களும் ஸாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கச் சென்று விட்டனர்.
அந்த ‘ஸௌகர்யமான‘ தருணத்தை யாரோ ஒருவன் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, எல்லா விலையுயர்ந்த வஸ்த்ரங்களையும் ‘சுருட்டி‘ கொண்டு போய்விட்டான் !
அவன் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போகும்போது, அங்கு யாருமே இல்லை!
இதில் வேடிக்கை என்னவென்றால், பெரியவாளுடைய ரூம் கதவுகளின் நடுவில் ‘gap‘ இருக்கும். அந்த gap வழியாக, உள்ளேயிருந்து கொண்டு, வெளியே நடப்பதை பார்க்க முடியும்!
“ஆஹா! யாருமே பார்க்கவில்லை!” என்று ஸந்தோஷப்பட்டுக் கொண்டு, வஸ்த்ரங்களை ஒரே ‘சுருட்டாக சுருட்டிய’ அந்த ஶிகாமணியை, தன் ரூமின் கதவிடுக்கு வழியாக பெரியவா பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! ஆனால், அதைப் பற்றி மூச்சு விடவில்லை !
[நமக்குள் ஆத்மஸ்வரூபமாக இருந்துகொண்டு, நம் மனஸின் அத்தனை வக்ரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தும், நம்மைத் தலைகீழாக புரட்டிப்போட்டு, நம் அஹங்காரத்தை த்வம்ஸம் பண்ணும் ஸமயம் வரும்வரை, எதுவும் செய்யாமல் ஸும்மா.. ஸாக்ஷி மாத்ரமாக பார்த்துக் கொண்டிருப்பதுபோல்!!!]
ஸாயங்காலம், ஸ்நானம் முடிந்து வந்த பாரிஷதர்கள், வஸ்த்ரங்கள் வைத்திருந்த இடம் ‘ஸப்ஜாடாக காலி’யாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்கள்!
“எங்கடா! துணியெல்லாம் இங்கதானே இருந்தது! காலேல இருந்ததே! இப்போ காணோமே!……”
“நீதான பொறுப்பை எடுத்துண்ட?…. எங்க போச்சு?…”
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டனர்.
துணிகள் போனது போனதுதான்!
பெரியவா மூச்சுக் காட்டவில்லை!
தீபாவளிக்கு முந்தின நாள்!
பெரியவா தன் பாரிஷதரான ஶ்ரீ ராமக்ருஷ்ணனை கூப்பிட்டார்.
“நா….கேக்கறதுக்கு பதில் சொல்லேன்….. தீபாவளி அன்னிக்கி என்னென்ன பண்ணறது வழக்கம்?”
“போது விடியறதுக்குள்ள எண்ணெய் தேச்சுப்பா… புது வஸ்த்ரம் கட்டிப்பா……. பட்டாஸ் வெடிப்பா… ஸ்வீட், பக்ஷணம் ஸாப்பிடுவா… பெரியவா ஏன் இப்டி கேக்கறேள்னு…..”
“அப்போ... தீபாவளின்னா, புது வஸ்த்ரம் மட்டும் போறாது. இல்லியா? எண்ணெய், பட்டாஸு, ஸ்வீட், பக்ஷணம் எல்லாந்தான் வேணும்ங்கற!………”
“ஆமா…….பெரியவா……”
“ஸெரி. அப்போ நீ என்ன பண்ணறேன்னா…… தனியா கொஞ்சம் பக்ஷணம் பண்ணு. அப்புறம் கொஞ்சம் எண்ணெய், கொஞ்சம் பட்டாஸு வாங்கிக்கோ…... ”
“ஸரி”
“ராத்ரி எல்லா…ரும் தூங்கினப்புறம், தேனம்பாக்கத்துல இருக்கானே, ஒன் ஶிஷ்யன் ‘ குண்டு‘ ! அவனோட ஆத்துத் திண்ணைல எல்லாத்தையும் வெச்சுட்டு வா…..”
சுரீரென்றது ராமக்ருஷ்ணனுக்கு!
“என்னது? அந்த குண்டுப்பயல்தான் எல்லா வஸ்த்ரங்களையும் சுருட்டிண்டு போனவனா? பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது? ஏன் யார்கிட்டயும் சொல்லலே?”
விடைகாணமுடியாத கேள்விகளோடு, பெரியவா சொன்னபடி பக்ஷணங்கள், எண்ணெய், பட்டாஸு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், “குண்டு“வின் வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு வந்தார். அந்தப் பையன்தான் ராமக்ருஷ்ணனுக்கு உதவியாக இருப்பவன்.
“என்னோட மாட்டை அந்த குண்டுதான் மேய்க்கறான்னுதான், பெரியவா “ஒன் ஶிஷ்யன்” ன்னு சொன்னாரா? ச்சே! இப்டி பண்ணிட்டானே!..என்ன ஒரு திருட்டு புத்தி ! அதுவும் எந்த மாதிரி எடத்ல!”
ராமக்ருஷ்ணனுக்கோ… மனஸ் முழுக்க குண்டுப்பயலின் திருட்டுத்தனத்தை நினைத்து நினைத்து ஒரே கோபம்! ‘பெரியவா ஸன்னிதில இருந்தும் திருட்டு புத்தியோட இருந்துட்டானே!’ என்ற ஆதங்கம்! என்ன செய்வது?
ஸாக்ஷாத் மஹா மஹா பெரியவாளிடம் இருந்தும், அவருடைய தர்ஶனத்தை, ஸ்மரணத்தை அனுதினமும் பெற்றுக் கொண்டிருந்தாலும், பொய்-புரட்டு, கோப-தாபங்கள், பழி-பகை போன்ற துர்குணங்கள் சிலருக்குப் போகவில்லையென்றால், அவர்களுடைய ‘ப்ராரப்தம்’ ரொம்ப strong-காக இருக்கிறது, இன்னும் strong-காக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம்.
விடி காலையில் தூங்கி எழுந்து, தீபாவளி கொண்டாட, வாஸலுக்கு வந்ததும், தன் வீட்டு வாஸலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய், ஸ்வீட், பக்ஷணம், பட்டாஸு இத்யாதிகளை ‘குண்டு‘ பார்த்தோ இல்லியோ, சவுக்கடி விழுந்ததுபோல் இருந்தது!
அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாய் ஶிவாஸ்தானத்துக்கு வந்து, கருணாமூர்த்தியின் பாதங்களில் விழுந்தான்.
“தப்பு பண்ணிட்டேன்! பெரியவா… என்னை மன்னிச்சிடுங்கோ!…”
“ஏந்திரு! வேணுங்கறதை கேட்டியானா இங்க இருக்கறவா ஒனக்கு குடுக்க மாட்டாளா? தீபாவளிக்கி எல்லாருந்தானே புதுஸு கட்டிக்கணும்? சின்னதோ, பெருஸோ…. அடுத்தவாளோட பொருளையோ, ஒழைப்பையோ திருடறது, அத, ஒனக்குன்னு வெச்சுக்கறது…. எல்லாமே மஹாபாபம் இல்லியா? இனிமே இப்டி பண்ணாதே!”
அவனுக்கு நல்லபடி எடுத்துச் சொல்லி, ஆஶிர்வாதம் பன்ணினார் பெரியவா.
உண்மைதான். தீபாவளியன்று நமக்குள் இருக்கும் பொய்மை, கோபம், பொறாமை, ஆசை போன்ற கெட்ட குணங்கள் என்னும் நரகாஸுரனை அந்த பரமாத்மாவின் பாதஸ்மரணம் மட்டுமே பொசுக்க வல்லது.
நாமும் இனி எப்போதுமே தீபாவளி திருநாளைப் போல, ஜகத்குருவின் ஒளிமிகு உருவத்தை நம்முள் ஏற்றுவோம். “சந்த்ரஶேகரம்” எனும் தீபம் ஏற்றப்பட்டுதான் இருக்கிறது. நாமோ துர்குணங்கள் என்னும் படு கெட்டியான படுதாவை போட்டு "தீபத்தின் ஜ்யோதிஸ்ஸை பார்க்க மாட்டோம்!" என்று அடமாக உட்கார்ந்திருக்கிறோம். கொஞ்சம் முயற்சி செய்தால் கூட போறும்.... திரை லேஸாக விலகிய அடுத்த க்ஷணமே…. தீயகுணங்கள் என்னும் நரகாஸுர இருட்டு, தானே ஓடிவிடும். எவ்வளவுக்கெவ்வளவு படுதா நீங்குகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஜோதிப்ரகாஶம்!

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top