அஸ்வமேதம்
அஸ்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ? அஸ்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்துபோன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்
ராம நாம மகிமை — மஹா பெரியவா
“நடமாடும் கடவுள்” மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமா“ என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்” என்றருளினார்.
இப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் ! இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.
பரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “ம” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி” ராகத்திலமைந்த “எவரனி“ என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு ம ஜீவமு” என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.
–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு)
How true it is!!
ReplyDeleteRecently a procession of 1008 Crores "rama Nama" visited our Pondicherry from Chennai.
The mandapam where these nama books were placed was so scintilating and we could hear the nama ringing and filling the whole mandapam.
Infact even when I write this, I could still hear it within me. Such is the influence of Rama Nama.
Dear Shri Srinivasan,
ReplyDeleteNamaskaram and you said it after feeling the vibration!!! This is what our Maha Periavaa emphasized. What an advice from our Maha Guru!!
Regards,
Subbu