ஆறறிவின் பக்தியை மிஞ்சிய ஐந்தறிவின் பக்தி…
பரமாச்சார்யார் செல்லும் இடங்களுக்கெல்லாம் 1927 -ஆம் ஆண்டு முதல் ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. அது நல்லறிவு படைத்த ஜீவன். அசுத்தங்களைத் தொடுவது இல்லை. பரமாச்சார்யார் முகாம் செய்யும் இடங்களில் எல்லாம் தங்கி, இரவில் மடத்தின் கால்நடைகளையும் சாமான்களையும் பாதுகாக்கும். மடத்திலிருந்து போடப்படும் அன்னத்தைத் தவிர, வேற்று மனிதர் அளிக்கும் எதையும் அது உட்கொள்ளாது.
ஆனால் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் மாலையில், ‘நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா ?” என்று விசாரிப்பார்.
ஸ்வாமிகள் பல்லக்கில் அமர்ந்து ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகும்போது, அந்த நாய் பல்லக்கின் கீழேயே போய்க் கொண்டிருக்கும். நடுவில் ஏதாவது ஒரு ஊரில் பக்தர்களுக்கு சேவை அளிப்பதற்காக பல்லக்கு நிறுத்தப்பட்டால், அது வெகு தூரத்தில் போய் நின்று விடும்.
சில சமயம், சாலையில் நடந்து செல்லும் யானையின் நான்கு கால்களின் நடுவே அது சென்று கொண்டே இருக்கும். மடத்தின் காவல்காரர்கள் சற்று அயர்ந்திருந்தால் அது மடத்தில் காவல் காக்கும். மடத்தில் வழக்கமாக அன்னமிடுகிறவர் ஒரு நாள் அன்னமிட மறந்து விட்டால், அது அன்று பட்டினி கிடக்கும்.
ஒரு சமயம் ஸ்வாமிகளை விட்டுப் பிரிய நேர்ந்த அந்த நாய், மீண்டும் ஸ்வாமிகளின் முகாமுக்கு எப்படியோ வழி கண்டுபிடித்து ஓடி வந்து விட்டது.
அன்று முதல் அது உயிர் வாழ்ந்தவரை ஸ்வாமிகளைத் தரிசிக்காமல் உணவு உட்கொண்டதே இல்லை.
No comments:
Post a Comment