மாத்ரு தேவோ பவ….
மனுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கும் நம்மாலானதை நாம் செய்ய வேண்டும்.
பித்ருக்களான தாய் – தந்தையருக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ‘ என்று வேத மாத சொல்கிறாள். நம் எல்லோருக்கும் வேதத்தின் சாரமான விஷயங்களை இலகுவாகப் பிழிந்து கொடுத்த ஔவை மூதாட்டியும் இதே விஷயத்தை, ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்கிறார்.
தாய் – தந்தையரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் – தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு, நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிராத்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.
– மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பில் இருந்து….
No comments:
Post a Comment