நாமார்க்கும் குடியல்லோம்!
1931 -ம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் ஆங்கில அரசின் அடக்குமுறை அதிகமாய் இருந்த சமயம். காங்கிரஸ்காரர்களுக்கு ஆதரவு அளித்தால் “வந்தது, ஆபத்து !” என்று மக்களும் ஸ்தாபனங்களும் பயப்பட்ட சமயம் அது.
பெரியவர் வட ஆற்காடு ஆரணியில் முகாமிட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர் படையொன்று அவரைச் சந்திக்க அனுமதி கோரிற்று.
விஷயத்தைப் பெரியவரிடம் விண்ணப்பித்த ஸ்ரீமட நிர்வாகிகள், “சர்க்கார் கெடுபிடி மிகவும் அதிகம். பெரியவர் காங்கிரஸ்காரர்களுக்குப் பேட்டி கொடுப்பதால் மடத்துக்குப் பல தொல்லைகள் ஏற்படலாம்” என்று தெரிவித்துக் கொண்டனர்.
அவர்கள் கூறியதைப் பெரியவர் கூர்ந்து கேட்டுக் கொண்டார். “அத்தனை பேரையும் வரச் சொல்லுங்கள், மடத்திலேயே அவர்களுக்குப் போஜனமும் ஏற்பாடு பண்ணுங்கள்” என்று பரம சாந்தமாக ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்.
மடத்து நிர்வாகிகள், “என்ன ஆகப் போகிறதோ?” என்ற பயத்துடனேயே இட்ட பணியைச் செய்தனர்.
ஆபத்து ஏதும் வரவில்லை.
மானேஜர் இதை மகிழ்ச்சியுடன் பெரியவாளிடம் கூற, அவர், “நம்மைப் பார்க்கணும்னு ஒருத்தர் சொல்றச்சே, அவர் யாராயிருந்தாலும் அதனால் என்ன ஆகுமோ, ஏதாகுமோன்னு பயந்துண்டு கதவைச் சாத்திக்கறதுன்னா ‘ஜகத்குரு‘ ன்னு பட்டம் போட்டுண்டு இந்தப் பீடத்தில் ஒட்கார்ந்திருக்கிறதுக்கு லாயக்கே இல்லைன்னு அர்த்தம்” என்று ரத்தினச் சுருக்கமாக மறுமொழி தந்தார்.
No comments:
Post a Comment