(சமைத்த உணவாக இன்றிக் கச்சாத் தானியம், காய்கறி,எண்ணெய் முதலியன வழங்குவதற்கு உலுப்பை' என்று ஸ்ரீமடத்தில் பெயர் சொல்வார்கள்.)
தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
காசி
சென்று இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மஹாபெரியவாள் திரும்பும்போது
கியோஞ்சர் ஸம்ஸ்தானத்தில் மலைக்காட்டுப் பகுதிகளில் மூன்று நாள்கள் முகாமிட
நேர்ந்தது. அங்கு வசித்த பழங்குடி மக்களின் ஏழ்மையைக் கண்டு அருளாளரின்
உள்ளம் உருகிற்று.
"நாம இங்கே இருக்கிற மூணு நாளும் இவா வயித்துக்குப் போட்டுடணும்" என்று மானேஜரிடம் கூறினார்.
மானேஜர்
தயங்கித் தயங்கி,"அவா நூத்தைம்பது குடும்பத்துக்கு மேலே இருக்கா. இந்த
ஊர்லேயோ நம்ம மடத்துக்காராளுக்குச் சமையல் பண்றதுக்கே வசதி போறல்லே" என்று
இழுத்தார்.
"அப்போ உலுப்பையாக் குடுத்துடுங்கோ" என்று பெரியவாள் ஒரு படி இறங்கிக் கூறினார்.
மூன்று நாட்களும் அவ்விதமே ஏழையருக்குவழங்கப்பட்டது.
(சமைத்த உணவாக இன்றிக் கச்சாத் தானியம், காய்கறி,எண்ணெய் முதலியன வழங்குவதற்கு 'உலுப்பை' என்று ஸ்ரீமடத்தில் பெயர் சொல்வார்கள்.)
இதேபோல்
பல்லாண்டுகளுக்குப் பின் மஹா பெரியவாளின் இளையாத்தகுடி முகாமில்
அப்போதுதான் மூடப்பட்ட ஒரு சர்க்கஸ் கம்பெனியின் தொழிலாளர்கள் வந்து
முறையிட்டபோது அவர்களுக்கு மூன்று நாட்களுக்கான உலுப்பை வழங்க
உத்தரவிட்டார்
No comments:
Post a Comment