(நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம்
(உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவர்
தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!)
தீபாவளி வார போஸ்ட் (Source: Sri Varagooran Narayanan)
2012-தினமலர்
குழந்தைகள் என்றால் காஞ்சி மகாப்பெரியவருக்கு உயிர். தீபாவளி வந்துவிட்டால், மகாப்பெரியவரும் ஒரு குழந்தையாக மாறி விடுவார் என்ற சேதி உங்களுக்கு புதுசாக இருக்கும்.ஆம்..மகாப்பெரியவர் தீபாவளி அன்று என்ன செய்வார் என்பதைக் கேளுங்கள்.
அன்று அதிகாலை எழுந்து ஆத்மபூஜை முடித்து, கங்கா ஸ்நானம் செய்வார். கதர் ஆடை அணிவார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆசி வழங்குவார். எல்லாருக்கும் "கண்ணன் கதைகள்' சொல்வார். கோதுமை இனிப்பு வகைகளை உண்பார்.குழந்தைகளுக்கு கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு ஆகியவற்றைக் கொடுப்பார். அவற்றை வெடிக்கச் சொல்லி, குழந்தைகள் சிரித்து மகிழும் போது, தானும் அவர்களுடன் சிரித்து மகிழ்வார்.
அது மட்டுமல்ல! அவர்களோடு சேர்ந்து, தானும் மத்தாப்புகளை கொளுத்தி மகிழ்வார். பின்பு அவர்களுக்கு நீதிக்கதைகளைச் சொல்லுவார். அன்று முழுக்க பெரியவரின் பணி இது தான்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தீபாவளி லேகியம் இரண்டு அல்லது மூன்று உருண்டைகள் சாப்பிடுவார்.
நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம் (உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம்
. ஆனால், அவர் தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!
சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை
No comments:
Post a Comment