(சின்னஞ் சிறு குருவிக் குஞ்சுக்குள்ளேயும் விசுவரூபமான பரமாத்மா இருக்கத்தானே செய்கிறான்!). (பெரியவா ரூபத்தில்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-125
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு மாந்தோப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள், பெரியவாள்.
மாமரத்தில்,குருவி போன்ற சில வகை பட்சிகள் கூடு கட்டிக்கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.அதனால், பறவைகள் வெளியே பறந்து செல்வதும், திரும்ப வருவதும்,விசித்திரமான ஒலிகள்
எழுப்புவதுமாக, அந்த இடமே,கோலாகலமாக இருந்தது.
அந்த நேரத்தில், ஒரு குரங்கு வேகமாக வந்து,பெரியவாள் அருகிலிருந்த தட்டிலிருந்து ஒரு சீப்புவாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டது. சிஷ்யர்கள் அதைத் துரத்த முயன்றபோது, 'துரத்தாதே' என்று
பெரியவாள் சொல்லி விட்டார்கள்.
குரங்கு கொஞ்ச நேரம் அவ்விடத்திலேயே சுற்றி அலைந்து பின்,மாமரத்தை நோக்கித் தாவிற்று.
பெரியவாளுக்குக் கவலை வந்து விட்டது போலும்.மாமரத்தில் குரங்கு ஏறினால், பட்சிகளின் கூடுகளையெல்லாம் பிய்த்துப் போட்டு விடுமே? குஞ்சுப் பறவைகள் வீடு இல்லாமல் கஷ்டப்படுமே?
அப்போது ஏதோ விழாக்காலமாதலால், அங்கே சீனவெடி (பட்டாசு) இருந்தது. பெரியவாள் பட்டாசுவெடிக்கச் சொன்னார்கள். 'டமால்,டுமீல்' என்றசத்தம் கேட்டவுடன், குரங்கு மரத்திலிருந்து குதித்து ஒரே ஒட்டமாக வெகுதூரம் போய்விட்டது.
'காக்கை குருவி எங்கள் ஜாதி'
சின்னஞ் சிறு குருவிக் குஞ்சுக்குள்ளேயும் விசுவரூபமான பரமாத்மா இருக்கத்தானே செய்கிறான். (பெரியவா ரூபத்தில
No comments:
Post a Comment