(கர்ப்பிணிப் பெண்ணின் தலைசுத்தல் போக்கிய சம்பவம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)
(இரண்டு நாள் முன்பு)
மதுரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலகட்டம் அது. பள்ளிக்கூடம் ஒண்ணுலதான் பெரியவா தங்க ஏற்பாடாகியிருந்தது. அப்போ இளைய பெரியவாளான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கூட இருந்ததாக ஞாபகம்.அந்த சமயத்துல வழக்கம்போல ஏராளமான பக்தர்கள் கனிவர்க்கம், புஷ்பம்,கல்கண்டு இப்படி விதவிதமான காணிக்கைகளை எடுத்துண்டு வந்து பெரியவாகிட்டே சமர்ப்பிச்சு ஆசிர்வாதம் வாங்கிண்டிருந்தா.
அந்த சமயத்துல யாரோ ஒரு பக்தர் எடுத்துண்டு வந்த காணிக்கையில இருந்த வெத்தலைகள் எப்படியோ பறந்து கீழே விழுந்து கிடந்தது. அதுக்கப்புறம் சில பக்தர்கள் ஆசிவாங்கிக்க வந்தாலும் யாரும் அந்த வெத்தலைகளை எடுக்கலை.அதே சமயம் அது மங்களகரமான பொருள்
என்பதால் அதை மிதிக்காம கொஞ்சம் நகர்ந்து வந்துண்டு இருந்தா.
இதையெல்லாம் கொஞ்ச நேரம் பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, தன் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்பிட்டார்.
"அதோ அங்கே கொஞ்சம் வெத்தலை கிடக்கு பார். அதை எடுத்துண்டுபோய் அலம்பிக் கொண்டுவந்து பத்தரமா வை!" அப்படின்னு உத்தரவிட்டார்.
சன்யாச தர்மப்படி தாம்பூலம் தரிக்கறது கூடாது. அப்படி இருக்கறச்சே, மகாபெரியவா எதுக்காக வெத்தலையை எடுத்துவைக்கச் சொல்றார்னு பலருக்கும் குழப்பம்.
கொஞ்ச நேரம் ஆச்சு. ஆசார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்துல கர்ப்பிணி ஒருத்தியும் இருந்தா. வரிசையா வந்த கூட்டம் நகர்ந்து,நகர்ந்து அந்த கர்ப்பிணி மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்கான முறை வந்த சமயத்துல திடீர்னு அவளுக்கு தலைசுத்தல் வந்துடுத்து.
நிற்கவே தடுமாற ஆரம்பிச்ச அவளை, கூடவந்தவா மெதுவா தாங்கிப் பிடிச்சுண்டா. அந்த நிலையில மகாபெரியவாளையும் முழுமையா தரிசனம் செய்ய முடியாத நிலை அவாளுக்கு ஏற்பட்டுது.
என்ன செய்யறதுன்னு புரியாம அவா எல்லாரும் திகைச்சு நின்ன சமயத்துல மகாபெரியவா, தன்னோட அணுக்க் தொண்டரை மறுபடியும் கூப்பிட்டார்.
"அந்த அலம்பி வைச்ச வெத்தலைகளை எடுத்து அவாகிட்டே குடு. அதை அந்த கர்ப்பஸ்த்ரீக்கு தரச்சொல்லு!" உத்தரவிட்டார் மகாபெரியவா.
வெற்றிலைகளை வாங்கி மெதுவா மென்னு தின்ன ஆரம்பிச்ச அந்தக் கர்ப்பிணி பெண்ணுக்கு தலைசுத்தல் சட்டுன்னு நின்னுது. எப்படி இந்த அதிசயம் நடந்தது!. வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது.
அதுக்கப்புறம் சந்தோஷமா மனம் நிறைஞ்ச பக்தியோட, மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா அந்த கர்ப்பிணி ஆசிர்வாதமா.ஒரு மாதுளம்பழமும்,குங்குமப் பிரசாதமும் குடுத்தார் மகாபெரியவா.
சாதரண வெற்றிலையா இருந்தாலும்கூட அது சமயத்துல சஞ்சீவியா உபயோகப்படும்கறதையும், எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாதுங்கற உணர்த்தற மாதிரி மகாபெரியவா நடத்தின இந்த அனுபவப் பாடத்தை புரிஞ்சுண்டதுக்கு அடையாளமா ஜெயஜெய சங்கர
ஹர ஹர சங்கர'ன்னு கோஷமெழுப்பினா அங்கே இருந்த எல்லாரும்.

No comments:
Post a Comment