(எங்கோ தொலைதூரத்தில் இருந்த எர்ணாகுளத்தில் நடந்த சம்பவம், தேனம்பாக்கத்தில் இருந்த மகானுக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்தது என்றால்,சிவாஸ்தானத்தை மகானின் நேத்ரஸ்தானம் என்று சொல்வது சரிதானே?!)
கட்டுரையாளர்-நிவேதிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி 10-05-2016 தேதியிட்ட சக்தி விகடன்
(சிவாஸ்தானமாகிய இந்தத் திருத்தலம்தான் (தேனம்பாக்கம்) சிவாம்சமாக அவதரித்த காஞ்சி மகானின் நேத்ர ஸ்தானம் என்றும் சொல்லலாம். இங்கிருந்தபடியே அனைத்தும் அறிந்து, நம்மைநல்வழிக்கு ஆற்றுப்படுத்தினார் காஞ்சி மகான், எங்கோ தொலை தூரத்தில் நடக்கும் சம்பவத்தையும் இங்கிருந்தபடியே அறியும் காஞ்சி மகானின் ஞான திருஷ்டியை விளக்கும் வகையில் ஒரு சம்பவம்)
1970-களின் தொடக்கத்தில்,புதுப் பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பெற்ற ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கேரள விஜயம் செய்தார்.எர்ணாகுளத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசத்தின்போது,பக்தர்கள் அவரை ஒரு குட்டி யானையின் மேல் அமரச் செய்து, ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார்கள்.அப்போது திடீரென்று மின்சாரம் தடைப்படவே, எங்கும் இருள் சூழ்ந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்பில் குட்டி யானை மிரளவே, பக்தர்களும் பதறினர். ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் பத்திரமாக யானையின் மேல் இருந்து இறங்கிவிட்டார்.சில நிமிடங்களில் மின்சாரம் வர, இயல்பு நிலை திரும்பியது.
அதேநேரம்,காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி மூலம் எர்ணாகுளத்தில் இருந்த பக்தர் டி.வி.சுவாமிநாதனைத் தொடர்பு கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏ,நாகராஜ ஐயர், "என்ன, ஊர்வலத்தில் ஏதேனும்குழப்பம் உண்டாயிற்றா?" என்று விசாரித்தார்.
நடந்ததை விவரித்த டி.வி.சுவாமிநாதன்,
"அதிருக்கட்டும், சம்பவம் நடந்து சில நிமிடங்கள் கூட ஆகவில்லை.அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" என்று வியப்புடன் கேட்டார். அதற்கு,..... சிவாஸ்தானத்தில் மகா பெரியவா எங்களிடம்,
,
"நான் நாற்பது வருஷத்துக்கு முன்னாடி மலையாள தேசத்துக்கு யாத்திரை போனப்ப இருந்ததைவிட புது சுவாமிக்கு ஏக வரவேற்பு...." என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, திடீரென்று,, ....... "ஒரே இருட்டாயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே" என்று சொன்னார் "உடனே எர்ணாகுளத்துக்குப் போன் போட்டு என்ன நடந்ததுன்னு விசாரின்னார்" என்றார் நாகராஜ ஐயர்.
எங்கோ தொலைதூரத்தில் இருந்த எர்ணாகுளத்தில் நடந்த சம்பவம் தேனம்பாக்கத்தில் இருந்த மகானுக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்ததுஎன்றால்,சிவாஸ்தானத்தை மகானின் நேத்ரஸ்தானம் என்று சொல்வது சரிதானே?!
No comments:
Post a Comment