Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, December 31, 2013

 
Source: Shri Hariharan
கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய இரண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள். பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம். ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவிடம் ஒரு கம்பிளியை குடுத்து "இதக் கொண்டு போய் பட்டுப் பாட்டிட்ட குடு" என்றார்.அன்று நள்ளிரவு, சற்று முன்புதான் கண்ணயர்ந்த பெரியவா, பாலு அண்ணாவை எழுப்பி, "பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?" என்றார்.தூக்கிவாரிப் போட்டது! ஆஹா! மறந்தே போய்விட்டோமே! " இல்லே பெரியவா......மறந்தே போயிட்டேன்""சரி.இப்போவே போயி அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவள்ட்ட குடுத்துட்டு வா"இந்த நடுராத்ரியிலா? குளிரான குளிர்! எங்கே போய் பாட்டியை தேடுவது? "காலம்பற குடுத்துடறேனே"தெய்வக் குழந்தை அடம் பிடித்தது. "இல்லே.....இப்பவே குடுத்தாகணும். ராத்ரிலதானே குளிர் ஜாஸ்தி?" அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஸ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்து கம்பிளியை சேர்த்தார் பாலு அண்ணா. பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது. அதே பாலு அண்ணா ஒருநாள் சம்போட்டி என்ற ஊரில் உள்ள கோவிலின் திறந்த வெளியில் மார்கழி மாசக் குளிரில் சுருண்டு படுத்து, எப்படியோ உறங்கிப் போனார். மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு சால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். சக பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. நாலு நாள் கழித்து, பெரியவா "ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?" என்று கேட்டார்."தெரியலே பெரியவா.....வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு. நான் தூங்கிண்டிருந்தேன்" தன் ஊகத்தை சொன்னார் பெரியவா ஜாடை பாஷையில் "அப்படி இல்லை" என்று காட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்! முகத்தில் திருட்டு சிரிப்பு!"நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..."தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.


Sunday, December 29, 2013

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார்.
'எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்'.
பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர்.
'ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது' என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.
பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.
பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் 'பெரியவா சரியான முடிவு சொல்லலையே?' என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.
பெரியவா சொன்ன பதில்....
1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.
2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.
3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும்.
- இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது.
அந்த சீடர், பக்தரிடம் போய், 'உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது' என்று பக்குவமாக சொன்னார்.
பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார்.
'பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்'.
பெரியவாள் மனம் உருகி போய்விட்டது. 'க்ஷேமமா இரு'.
அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?
ஸ்வாமியே சரணம்.
நன்றி - கச்சிமூதூர் கருணாமூர்த்தி, ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள்.

Source: Shri Kathi Nagaratnam

Friday, December 27, 2013

தீர்ந்தது தலைவலி

 

திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.
விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார். மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.
‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது.
ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.
‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’ என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.
‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசாகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார்.
இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.
‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.
‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.
ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.
சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.
ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும் இவர்கள் யாவரும் சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்.
எமர்ஜென்ஸி காலத்தில் இவர் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்த பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க, அந்த செகரட்ரி அறையில் அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றும், அதை மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.
‘மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்’ என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது, தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை கீழ்ப்படியாததில் அதிகாரிக்குக் கோபம்.
மிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்தநாளே வந்தாக வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.
‘சரி… நீங்க போகலாம்… ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் நாளைக்கு இது சம்பந்தமான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போற விபரங்களுக்கும் தாருமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’.
இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி விவகாரம் செய்கிறார் என்பது சுந்தர்ராஜனுக்குப் புரிந்தது.
தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
அன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம்வராமல், ஸ்ரீபெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.
அதிகாலையில் ஓர் அதிசயம்.
இர்வின் ரோடில் ‘கணேஷ் மந்திர்’ என்ற கோயிலின் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்றார்.
‘ஸ்ரீபெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன். அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே இன்னிக்கு விடியற்கலையிலேயே கட்டாயம் சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினா’ என்றார்!
இவருக்கு இன்ப அதிர்ச்சி. இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீபெரியவா கருணையை எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது. அன்று மதியம் பதினொரு மணியளவில் நிலைமை தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் சுந்தர்ராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவை யாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில் கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.
செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்து கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.
ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல. ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்திற்கு முன் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.
ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது இவர் தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல் ரிபோர்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி ஐநா சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக் காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.
ஸ்ரீபெரியவாளிடம் மஹாசிவராத்திரி அன்று தரிசித்துத் தான் அயல்நாடு செல்ல நேர்ந்ததால், வயதான பெற்றோர்களை விட்டுவிட்டு செல்லும் நிலைமை ஏற்படுமென்றும், அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.
அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து சேர்ந்தபோது ஐநா சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து தந்தி மூலம் உத்தரவு வந்தது. பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் ஐநா சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.
அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.
அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்கிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதமமந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதமமந்திரியான டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.
இதில் அதிசயம் என்ன? அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் மஹாசிவராத்திரியன்று சுந்தர்ராஜன் உலகெலாம் உரைந்து ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.
பக்தருக்கு மெய் சிலிர்த்தது.
1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணி கொடுக்கப்பட்டது. யுகோஸ்லாவியாவில் ஒரு அகிலநாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.
அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில் இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.
ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.
பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது அவர், “நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான்காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்” என்பதாக நம்பிக்கையில்லாமல் கூறினார். சுந்தர்ராஜனுக்கும் அதுதான் யதார்த்தமான உண்மை என்று தோன்றியது.
இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவதென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.
அதிகாலை ஒரு அதிசயக் கனவு.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இவர் முன் தோன்றுகிறார். தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான ஸ்ரீபெரியவா தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.
இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க இவர் உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். ஸ்ரீபெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால் எப்படியும் நம்நாடுதான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்த அகாலத்தினும் இவர் சொல்வதை அவமதிக்காமல் கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால் அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி அமோக வெற்றியடைந்தார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மை இப்படியெல்லாம் அதிசயங்கள் காட்டக் காத்திருக்க, அந்த மஹானைச் சரணமடைந்து வாழ்வில் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு, ஆரோக்யமாக ஆனந்தமான சர்வமங்களத்துடன் சௌபாக்யத்துடன் நாம் வாழ்வோமாக!
பரிபூர்ண யோகநிலையிலும், பரிசுத்த தவமேன்மையிலும் பிரம்மரிஷி சுகமுனிவரின் உயர்வோடு சாக்க்ஷாத் பரமேஸ்வரரே திருஅவதாரம் கொண்டு நம்மிடையே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! — with
Kunchithapatham Kashyap.

Source: Shri Mannargudi Sitaraman Srinivasan

Wednesday, December 25, 2013

மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள். ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக, ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார். அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில் ஜன்னல் வழியாக கொடுப்போம். பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக் கொண்டு உட்காருவார்கள்.சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள். ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச் செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம் செய்துகொண்டும் இருந்தார்கள். அன்று பஞ்சாங்கம் படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம் முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே, தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம் மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள். ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே” என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள். இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி, அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார். அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம் கொட்டிவிட்டது. பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால், தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து, மறுபடியும் ஜாடையாக கேட்க, இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார். குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக் காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார். பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார். இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள். ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக, ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார். அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில் ஜன்னல் வழியாக கொடுப்போம். பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக் கொண்டு உட்காருவார்கள்.சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள். ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச் செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம் செய்துகொண்டும் இருந்தார்கள். அன்று பஞ்சாங்கம் படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம் முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே, தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம் மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள். ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே” என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள். இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி, அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார். அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம் கொட்டிவிட்டது. பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால், தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து, மறுபடியும் ஜாடையாக கேட்க, இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார். குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக் காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார். பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார். இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

Source: Shri Hariharan

Monday, December 23, 2013

MAHANS TALKING EVEN THROUGH THEIR 'MOUNA'

Once Periyava asked a sishya to go to Thiru annamalai and bring Yogi Ram Sarat Kumar (Visiri Swamigal) to kanchi. When the sishya went and told Him, He started immediately (He had a habit. If a devotee came from kanchi, He would prostrate before him, saying'you had darshan of Periyava. You are a blessed soul'). When they arrived in Kanchi, He was immediately taken to Periyava's presence. They sat looking at each other for a long while. Meanwhile, the audience was growing anxious as they wanted to listen to the conversation between two Mahans. But, no word was spoken. Suddenly, Periyava gave permission for the Yogi to leave. Everyone around was
stunned and confused. Why did Periyava ask Yogi to come here if He was not going to talk to Him at all? Well, the sishya who had to take the yogi back could not control his curiosity. the Yogi said they had talked. Talked? what? and how? Then Yogi said ' the reason Periyava asked me to come here was, He wanted me to shift my abode to govindapuram, near Kumbakonam, where there is the athistannam of Nama Bothendra Swamigal and since I always do Rama Nama Japa He thought that would be the ideal place for me as Nama sangeerthan goes on there continuously. But, this beggar(that is how He used to call Himself) said ThiruVannamalai is enough for Him and Periyava replied 'well, if thats the You feel, be it so'. I replied 'yes' and the conversation ended and so He asked me to leave. Thats what transpired between us. The sishya was awestruck that Mahans can talk even through their 'mouna'.

Saturday, December 21, 2013

தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...

உயிர் உருக்கும் சம்பவம் இது...
எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்...
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.
ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன்.
தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.
ஐயன் சென்று விடுவார்.
திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.
'சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி... எடுத்துப்பிங்களா சாமி?'.
ஐயன் கருணையோடு நோக்கி... சொல்வார் பாரிஷதரிடம் ,'இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ'.
அங்கே நிற்காது கருணை வெள்ளம்.
சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.
கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...
அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.
'ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?'.
வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே?
எப்படி கேட்க முடியும்?
மாமா சொன்னார்களாம், 'அதெல்லாம் ஒன்னும் இல்லே'.
சும்மா விடுமா நம் தெய்வம்? 'இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?'.
இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு...
ஏன்? பெரியவா?'.
'இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?'
'இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்'.
'சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?'.
விடமாட்டாரே... 'இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்' என்றார் மாமா முன்யோசிதமாய்.
'அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்'.
வேறு எதுவும் சொல்லவேண்டுமா?
இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...

Source: Shri Karthi Nagaratnam

Thursday, December 19, 2013

இந்த சம்பவம் சுமார் எழுபது வருஷங்களுக்கு முன் நடந்தது.
பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும்
போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது
மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?
மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.
“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி
கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன்
வாங்கினார்”.
ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்!
அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!
“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை
சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில்
புன்னகை.
“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை
திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம்
எப் படி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால,
வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?
அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க
உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்”
ஆசீர்வாதம் பண்ணினார்

Tuesday, December 17, 2013

ஒரு முறை சௌகந்திகம் என்னும் தேவலோக மலரைப் பறிப்பதற்காக பீமன் சென்றபோது வழியில் அனுமார் வயதான குரங்கின் வடிவத்தில் தன்னுடைய வாலை நீட்டிப் படுத்திருந்தார். அவர் அனுமார் என்று அறியாத பீமன் அந்த குரங்கின் வாலை அப்புறப்படுத்த நினைத்தபோது அது முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமார் தன்னுடைய வாலில் உள்ள பஞ்ச பூத சக்திகளை ஸ்தம்பனம் செய்து வைத்ததே ஆகும்.
அதே போல காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி.
காஞ்சி மாமுனி சங்கராச்சாரியார் அவர்கள் நூறு வயதை அடைந்தபோது அவருடைய நடமாட்டம் குறைந்து போனதால் குளித்தல் போன்ற நித்திய அனுஷ்டானுங்களுக்காக அவரை மற்றவர்கள் சுமந்து சென்று வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறை அவரை மற்றோர் இடத்திற்கு மாற்றும்போது அவரை சாஷ்டாங்கமாக வணங்கி அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே அவர் திருமேனியைத் தூக்குவது வழக்கம். ஒரு முறை ஏதோ அசிரத்தை காரணமாக அவரிடம் அனுமதி கேளாமல் அவர் திருமேனியைத் தூக்க முயற்சித்தபோது அது இயலவில்லை. வழக்கமான இருவருக்கும் பதிலாக நான்கு பேர் சேர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போகவே, சிறிது நேர யோசனைக்குப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து அவரிடம் விழுந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். கண் சாடையால் அவர்களை மன்னித்து தன் திருமேனியைத் தொட அனுமதி வழங்கினார். அதன் பின்னர் அவரை வேறு இடத்திற்கு மாற்ற முடிந்தது.
... ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள்

Sunday, December 15, 2013

" மஹிஷ சதகம் "

'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.
ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.
அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.
அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.
குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.
அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.
''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.
இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.
இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.
ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.
அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.
'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.
ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

Source: Smt. Geeta Sami

Friday, December 13, 2013

இது பெரியவாளின் இன்னொரு பக்தையை பற்றியது .

கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.
அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.
சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .
நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்
அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்
அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .
ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர்.
"மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் .
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா.
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .

Source: Shri Well-bred Kannan

Wednesday, December 11, 2013

Sri Chandrasekharendra Sarawati of Kanchi Kamakoti Mutt was camping in Kalahasti. When Narasimhan came there, many activities were going there like Puja, Veda Parayanam etc. In the midst of his heavy engagements, Narasimhan had come to meet His Holiness, pay obeisance to him and return to Calcutta by the train leaving at 6.30 PM for which reservation was already made. When he enquired whether he can meet Swamigal, he was told that that Swamigal was taking rest. Though he was in a hurry, he decided to wait.
Sri Narasimhan was a great industrialist in Calcutta and also a great devotee of Paramacharya of Kanchi. I was an ordinary employee in his office at that time. Narasimhan moved very closely with Kanchi Acharya and was implementing many projects visualized by Acharya. At the command of Acharya, he established a Veda Patasala at Calcutta which still functions successfully, imparting knowledge on Vedasand Upanishads. Whenever he came to South, he made it a practice to visit Paramacharya and this time also he decided to make a hurried trip to Kalahasti where Acharya was camping, pay obeisance and then return.
When Acharya came out of his room, he cast a glance over all assembled devotees. Narasimhan had sent a word through someone that he wanted to Acharya but Acharya was engaged in his own duties very calmly, quietly and peacefully. Time was trickling and it appeared there was no immediate prospect of meeting Acharya. Narasimhan was worried that if he missed the train, he would be forced to stay in Ashram premises for the night and think of alternative modes of reaching Calcutta. At last, when the needle of the clock reached 6, Swamigal called Narasimhan to him and said: "I observed that you were very tense from the beginning. Probably, you are returning today evening itself. Do not worry. Go to the station now and you would be able to board your train. Here is the Prasad." Narasimhan bowed before Swamigal, received the Prasad and left. When he reached the station, it was 9.30 PM, three hours after the scheduled departure time of the train.
Surprisingly, Narasimhan found that his train for Calcutta was slowly grinding to a halt in the station. The train was late by three hours. It is a baffling question how Swamigal knew it. We seek to know things from our sense instruments but great saints like Acharya know things through their spiritual vision.
— with Madhusudhan Rao.

Sri Chandrasekharendra Sarawati of Kanchi Kamakoti Mutt was camping in Kalahasti.  When Narasimhan came there, many activities were going there like Puja, Veda Parayanam etc.  In the midst of his heavy engagements, Narasimhan had come to meet His Holiness, pay obeisance to him and return to Calcutta by the train leaving at 6.30 PM for which reservation was already made.   When he enquired whether he can meet Swamigal, he was told that that Swamigal was taking rest.  Though he was in a hurry, he decided to wait.<br />Sri Narasimhan was a great industrialist in Calcutta and also a great devotee of Paramacharya of Kanchi.  I was an ordinary employee in his office at that time.  Narasimhan moved very closely with Kanchi Acharya and was implementing many projects visualized by Acharya.  At the command of Acharya, he established a Veda Patasala at Calcutta which still functions successfully, imparting knowledge on Vedasand Upanishads.   Whenever he came to South, he made it a practice to visit Paramacharya and this time also he decided to make a hurried trip to Kalahasti where Acharya was camping, pay obeisance and then return.<br />When Acharya came out of his room, he cast a glance over all assembled devotees.  Narasimhan had sent a word through someone that he wanted to Acharya but Acharya was engaged in his own duties very calmly, quietly and peacefully.   Time was trickling and it appeared there was no immediate prospect of meeting Acharya.  Narasimhan was worried that if he missed the train, he would be forced to stay in Ashram premises for the night and think of alternative modes of reaching Calcutta.  At last, when the needle of the clock reached 6, Swamigal called Narasimhan to him and said:  "I observed that you were very tense from the beginning.  Probably, you are returning today evening itself.  Do not worry.  Go to the station now and you would be able to board your train.  Here is the Prasad."  Narasimhan bowed before Swamigal, received the Prasad and left.  When he reached the station, it was 9.30 PM, three hours after the scheduled departure time of the train.<br />Surprisingly, Narasimhan found that his train for Calcutta was slowly grinding to a halt in the station.  The train was late by three hours.   It is a baffling question how Swamigal knew  it.  We seek to know things from our sense instruments but great saints like Acharya know things through their spiritual vision.

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்

 

பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார்.
எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….
“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.
“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார்.
இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.
“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..”
ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….
“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்.. எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார்.
அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா… பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா….. [சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
……. திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
“…… அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது.
நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா… எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா….. இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்…… பெரியவா.
நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா.
ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்….. ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான்.
அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!
“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”
“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள்.
அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”………. அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு.
“ம்ம்ம்ம்.. இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார்.
பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!
“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா. அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.
“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்….. இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு!
மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீ தான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”
அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
அந்தக் க்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார்.
பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.
taken from vai .gopalakrishnan /g ramprasad dubai

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்<br />-------------------------------------------------------------------<br /><br /><br /><br />பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். <br /> <br /><br /> <br />எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….<br /> <br /><br /> <br />“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.<br /> <br /><br /> <br />“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார்.<br /><br />இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.<br /><br />“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.<br /><br />“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” <br /><br />ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….<br /><br />“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்.. எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். <br /><br />அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா… பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா….. [சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]<br /><br />……. திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.<br /><br />“…… அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. <br /><br />நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா… எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா….. இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்…… பெரியவா.<br /><br />நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. <br /><br />ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்….. ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். <br /><br />அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!<br /><br />“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”<br /><br />“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.<br /><br />நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். <br /><br />அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”………. அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?<br /><br />அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். <br /><br />கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. <br /><br />“ம்ம்ம்ம்.. இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். <br /><br />பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!<br /><br />“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா. அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.<br /><br /><br />“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்….. இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! <br /><br />மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீ தான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”<br /><br />அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.<br /><br />அந்தக் க்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். <br /><br />பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.<br />taken  from   vai .gopalakrishnan  /g ramprasad   dubai

Source: Shri Mannargudi Sitaraman Srinivasan

Monday, December 9, 2013

" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (பெரியவா விளக்கம்)

கட்டுரை;இந்திரா சௌந்தரராஜன்
(தகவல் உதவி;தீபம் இதழ் & பால ஹனுமான்)
இது ஒரு மறு பதிவு}
பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,
சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.
குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.
சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”
ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.
உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”
ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”
அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”
ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”
அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”
என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”
நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”
அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”
காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”
அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”
நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.
சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!
சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”
அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”
அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.
சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?
ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”
- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.
ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.
எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”<br />(பெரியவா விளக்கம்)<br /><br /><br /><br />கட்டுரை;இந்திரா சௌந்தரராஜன்<br />(தகவல் உதவி;தீபம் இதழ் &  பால ஹனுமான்)<br />இது ஒரு மறு பதிவு}<br /><br />பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,<br /><br />சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.<br /><br />பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.<br /><br />குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.<br /><br />சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”<br /><br />ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.<br /><br />உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”<br /><br />ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”<br /><br />அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”<br /><br />ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”<br /><br />அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”<br /><br />என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”<br /><br />நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”<br /><br />அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”<br /><br />காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”<br /><br />அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”<br /><br />நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.<br /><br />அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.<br /><br />சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!<br /><br />சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”<br /><br />அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”<br /><br />அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.<br /><br />சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?<br /><br />ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.<br /><br />நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.<br /><br />பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.<br /><br />அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.<br /><br />இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”<br /><br />- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!<br /><br />அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?<br /><br />ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.<br /><br />இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”<br /><br />- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.<br /><br />நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.<br /><br />இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.<br /><br />ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.<br /><br />எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?<br /><br />ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.<br /><br />(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Saturday, December 7, 2013

திருப்பாவை – திருவெம்பாவை (மகா பெரியவா)

மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே !
சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை.
இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !
இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ?
தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது.
அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.
1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.
‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’
உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.
ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது.
‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’
இரண்டு நிமிஷ நடை.
‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..
‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’
பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !
அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !
திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.
பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.
மார்கழி மாதம் வந்தது.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.
‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?
‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.
அப்புறம் கேட்பானேன் !
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் !
ஓரிரு ஆண்டுகள் சென்றன.
ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.
‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’
இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !
urtesy: PANCHANATHAN SURESH )

Photo: திருப்பாவை – திருவெம்பாவை (மகா பெரியவா)<br /><br />மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே !<br />சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை.<br />இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !<br />இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ?<br />தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது.<br />அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.<br />1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.<br />மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.<br />‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’<br />உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.<br />ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது.<br />‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’<br />இரண்டு நிமிஷ நடை.<br />‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..<br />‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’<br />பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !<br />அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..<br />‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’<br />அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !<br />திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.<br />பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.<br />பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.<br />மார்கழி மாதம் வந்தது.<br />பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.<br />‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?<br />‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.<br />அப்புறம் கேட்பானேன் !<br />தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் !<br />ஓரிரு ஆண்டுகள் சென்றன.<br />ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.<br />‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’<br />இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !<br />(Courtesy: PANCHANATHAN SURESH )

Thursday, December 5, 2013

பெரியவரின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமான எம்.எஸ்.

கட்டுரையாளர்;ரா.வீழிநாதன்.
நன்றி;பால ஹனுமான்.
“சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும். அதை அடையவே முடியாது.
சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும். இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.
அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்! இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!”
காஞ்சி மஹா பெரியவர் கூறிய அழகான உவமை இது.
இந்த விளக்கத்துக்கு வாழும் உதாரணமாக இருந்தவர் எம்.எஸ். ஈசுவர அனுக்ரஹத்தினால் அவருக்கு மிக இனிய குரல் வளம் வாய்த்தது. அந்தக் குரல் வளத்தை, சங்கீதம் என்கிற தேவதைக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம். வாழ்நாள் முழுதும் இந்த இலட்சியத்தை நோக்கி அவர் சென்றார். அதை அடையவும் செய்தார்.
மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு. அது தப்பு.
ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது. நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம். அவ்விதம்பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.
ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு. பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார். ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம். உங்களைத் தரிசித்ததே போதும். அதற்கு மேலான வரம் எது ?” என்றான்.
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம். என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு. ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்” என்றார். அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்” என்றான்.
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில்அப்படித்தான். மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:). ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:). அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘ பாடலை இயற்றித் தந்தார்.
அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இதற்கு என்ன அர்த்தம்…? ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’ என்று அர்த்தம்.
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா ! இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ?
மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:
“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.
இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார்.
செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார்.
இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்‘ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.
எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.
“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்” என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).
சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.
‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.
“வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”
போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியேமஹாபெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.
பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது,
“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.
அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள் வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது. (அந்தக் காணிக்கையைப்பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.)
எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார்.குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.
அவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக்கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”

பெரியவரின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமான எம்.எஸ்.<br /><br />கட்டுரையாளர்;ரா.வீழிநாதன்.<br />நன்றி;பால ஹனுமான்.<br /><br />“சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும்.  அதை அடையவே முடியாது.<br /><br />சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும்.  இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.<br /><br />அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்!  இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!”<br /><br />காஞ்சி மஹா பெரியவர் கூறிய அழகான உவமை இது.<br /><br />இந்த விளக்கத்துக்கு வாழும் உதாரணமாக இருந்தவர் எம்.எஸ்.  ஈசுவர அனுக்ரஹத்தினால் அவருக்கு மிக இனிய குரல் வளம் வாய்த்தது.  அந்தக் குரல் வளத்தை, சங்கீதம் என்கிற தேவதைக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம்.  வாழ்நாள் முழுதும் இந்த இலட்சியத்தை நோக்கி அவர் சென்றார்.  அதை அடையவும் செய்தார்.<br /><br />மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு.  அது தப்பு.<br /><br /><br />ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது.  நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.  அவ்விதம்பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.<br /><br />ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு.  பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார்.  ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம்.  உங்களைத் தரிசித்ததே போதும்.  அதற்கு மேலான வரம் எது ?”  என்றான்.<br /><br />ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம்.  என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு.  ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்”  என்றார்.  அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்”  என்றான்.<br /><br />எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில்அப்படித்தான்.  மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:).  ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:).  அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘  பாடலை இயற்றித் தந்தார்.<br /><br />அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?<br /><br />தாம்யத தந்த தயத்வம் ஜனதா;<br />ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.<br /><br />இதற்கு என்ன அர்த்தம்…?   ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்;  பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’  என்று அர்த்தம்.<br /><br />இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா !  இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ? <br /><br />மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:<br /><br />“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.<br /><br /><br />இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார்.<br /><br /><br />செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார்.<br /><br />இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்‘ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.<br /><br />எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.<br /><br />“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்”  என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).<br /><br />சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.<br /><br />‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.<br /><br />“வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”<br /><br />போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியேமஹாபெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.<br /><br />பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது,<br /><br />“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.<br /><br />அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள்  வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது. (அந்தக் காணிக்கையைப்பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.)<br /><br />எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார்.குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.<br /><br />அவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக்கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”

Source: shri Varagooran Narayanan

Tuesday, December 3, 2013

(மகா பெரியவரின் ஞாபக சக்தியும்,நகைச்சுவையும்.)

Source: Shri Varagooran Narayanan

"ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
(மகா பெரியவரின் ஞாபக சக்தியும்,நகைச்சுவையும்.)
ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.
“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”
“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”
“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”
“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”
“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”
“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”
“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”
“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”
“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”
“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”
“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”
“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”
“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”
பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..
“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.

Sunday, December 1, 2013

"சந்திரசேகரா ஈசா"

(ஒரு பழைய தினமலர்)
காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.
ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.

"சந்திரசேகரா ஈசா"<br /><br />(ஒரு பழைய தினமலர்)<br /><br />காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.<br /><br />ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். <br /><br />இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.<br /><br />மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.

Source: Shri Hariharan

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! By Sriram Senkottai

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!
கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...
----------------------------------------
அவ்வப்போதைய மனக்குழப்பத்துக்கு மருந்தாக பகவத்கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில் கிடைக்கின்றன. ஆனாலும் சிலசமயம் குழப்புகின்றன. கர்மயோகப்படி, செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். "ஜனக மகாராஜர்', கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில் "ஞானமே' உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். "கருமத்தைக் காட்டிலும் ஞானமே மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய ஏவுகின்றாய்?'' என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே! இப்படி, செயல்புரியக் கட்டளையிடும் கர்மயோகமும், செயலற்ற தன்மையான தியானமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?
* கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்பநிலையில் கர்மானுஷ்டானம்; அதனால் சித்தசுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம் இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில், லோக «க்ஷமத்திற்காக கர்மா & உள்ளே அடங்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான்.
நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற
நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள், வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாட்சாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை பக்தி, முடிவில் ஞானம்.
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!<br />By Sriram Senkottai<br />(இன்றைய தினமணி)<br /><br />பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!<br />கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...<br /><br />----------------------------------------<br /><br />அவ்வப்போதைய மனக்குழப்பத்துக்கு மருந்தாக பகவத்கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில் கிடைக்கின்றன. ஆனாலும் சிலசமயம் குழப்புகின்றன. கர்மயோகப்படி, செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். "ஜனக மகாராஜர்', கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில் "ஞானமே' உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். "கருமத்தைக் காட்டிலும் ஞானமே மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய ஏவுகின்றாய்?'' என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே! இப்படி, செயல்புரியக் கட்டளையிடும் கர்மயோகமும், செயலற்ற தன்மையான தியானமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?<br /><br /> <br /><br />* கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்பநிலையில் கர்மானுஷ்டானம்; அதனால் சித்தசுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம் இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில், லோக «க்ஷமத்திற்காக கர்மா & உள்ளே அடங்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான்.<br /><br />நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும்  என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற<br /><br />நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள்,  வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாட்சாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை பக்தி, முடிவில் ஞானம்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top