சித்தம் நிலைத்து நிற்க கலை தேவை
ஆசார்யரின் வாக்குகளுக்குள் எளிமையானத பஜகோவிந்தம், ஸௌந்தர்ய லஹரி உயர்ந்தது. கம்பீரமானது “சௌந்தர்ய லஹரி“ என்பதற்கு அழகுப் பிரவாகம் என்று பொருள். ஆசார்யரின் மற்றோரு நூல் “சிவானந்த லஹரி“. இரண்டிலும் 100 ச்ஸோகங்கள் இருக்கின்றன. சிவானந்த லஹரி பரமேசுவரனையும், சௌந்தர்ய லஹரி அம்பிகையையும் குறித்துத் தியானம் செய்ய ஏற்பட்டவை.
கலைகளுக்குள் சிறந்தவை சிற்பக் கலை. அதனுடைய சிறப்பை இன்றும் நாம் பார்க்கிறோம். பல அழகிய சிற்பங்கள் தஞ்சாவூர், மாமல்லபுரம் பொன்ற் இடங்களில் பிரசித்தி பெற்றிருக்கின்றன. தாயுமானபவர் கோயிலில்கூட, கல்லிலெயே அழகிய சங்கிலியைச் சிற்பி சிருஷ்டித்திருக்கின்றான். உலகில் எவ்வளவோ உயர்ந்த உலோகங்களாலும், உறுதியான பொருள்களாலும் பலவிதமான சிருஷ்டிகள் பழங்காலத்தில் செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் நான் காணும்படி இருப்பது தாயுமானவர் கோயிலிலுள்ள கல்லால் சேய்த சங்கிலிதான். இப்படி பல அரிய கலைகள் இருக்கின்றன.
கவிதையும் ஒரு கலைதான். கவிதை என்னும் இனிய பழத்தைப் பக்தி என்னும் தேனில் ஊறப்போட்டால், எவ்வளவு இனிமையாக இருக்குமோ அவ்வளவு இனிமை வாய்ந்தது ஸொளந்த்ர்ய லஹரி. சரீர்த்தில் தியானம் செய்வதற்கு ஆறு சக்கரங்கள் இருக்கின்றன. உடலின் மூலாதாரதிலிருந்து உச்சந்த்லையில் முனை வ்ரையில் ஒரு முக்கியமான நாடி இருக்கிறது. அதில், பலவிதங்களில் கீழிருந்து மேலே ஆறு இடங்களில் ஆறு சக்கரங்களாகச் சக்ரவாரியாகப் பரமேசுவரனைத் தியானம் பண்ண வெண்டும். முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் பரமேசுவரனை நடனனாகத் தியானம் பண்ண வேண்டும். மூலாதாரத்தில், பரமேசுவரன் நடனமூர்த்தியாக விளங்கினான். அதனால்தான் அவனுக்குக் கூத்தன், நடனக்காரன், என்றும், ஆடவல்லான் என்றும் பெயர். நடனத்தில் இரண்டு வகை உண்டு: ஒன்று தாண்டவம் ம்ற்றொன்று லாஸ்யம். தாண்டவன் ஆண்கள் ஆடக்கூடியது.
கம்பீரமானது லாஸ்யம் - பெண்கள் ஆடக்கூடியது. அதில், பாவங்கள் அதிகம். அதில், தாயின் அன்பு மிளிரும். ஆனால், தாண்டவதில், உலகத்தை அடக்கும் கம்பீரியம் உண்டு. அதனால்தான் பரமேசுவரன் நடன மூர்த்தியாக உலகை அடக்கி ஆளாகிறான்.. ம்னிதர்களின் சித்தம் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். குணம் வாய்ந்தத சித்தம் அலையாமல் ஓரிடத்தில் நிலைத்து நிற்கக் கலை அவசியம். கலை வேடிக்கைக்காக இராமல், ஈசுவரனிடத்தில் நிலைக்க உதவுகிறவை சிற்பங்கள். நம் முன்னோர்கள் அவ்வளவு கலைகளையும் ஈசுவரனுக்கு அர்ப்பண்ம் செய்திருக்கிறார்கள். சங்கீதமும் ஓர் அரிய கலை. கலை அமிர்தத்தில் தோய்ந்த மாம்பழம். அதை ஆண்டவனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆகவேதான் கோயில்களில் நடனம் முதலிய கலைகள் ஏற்பட்டிருந்தன. அவை இப்போது போய் விட்டன. எல்லாக் கலைகளையும் ஈசுவரனுக்கு அர்ப்பணம் ப்ண்ண வேண்டும். உலக மக்களின் மனத்தின் போக்கை அறிந்து அதையே பாவமாகக் கொண்டு நடனம் செய்கிறார்.
பகவான் நாம் செய்துள்ள பாவங்களுக்கு நமக்கு அன்னமே கிடைக்கக்கூடாது; அவ்வளவு பாவம் செய்கிறொம். அப்படிபட்ட நமக்கு அருள் புரிய நடனம் செய்கிறான். ஈசுவரன் நம்மைத் குழந்தையாகப் பாவித்து நமக்குத் தாயும் தந்தையுமாக ஆகி, சகலப் பிராணிகளுக்கும் நவரசங்களையும் கொடுத்து, நடன ஸ்வரூபமாக விளங்கும் ஈசுவரனை மூலாதாரத்தில் தியானம் செய்ய வேண்டும் என்று ஆசார்யர் ஸௌந்தர்ய லஹரியின் முதல் சுலோகத்தில் கூறுகிறார். அவருடைய வாக்கைப் பின்பற்றி, சகல சௌபாக்கியங்களையும் பெற அம்பாள் உங்களுக்கு அருள் வேண்டுகிறென்.
[ஸ்ரீ மஹாஸ்வாமிகள்]
No comments:
Post a Comment