“ஆத்ம சுத்தம்”
இந்தக் காலத்தில் சிலபேரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் – பண விஷயத்தில் ரொம்பவும் நியாயமாயிருப்பவர், கணக்குகளில் ரொம்பவும் கறார் என்று. ஆனாலும் இப்படிப்பட்டவர்களுடைய
ஆல்-ரௌண்ட் காரக்டரை [ எல்லா அம்சங்களிலும் அவர்களுடைய நடவடிக்கைகளை] ப் பார்த்தால்
அவற்றில் சிலதில் திருப்தி இல்லாமலும் பலபேருடையது இருக்கிறது. ஒன்று இருந்தால், ஒன்று இல்லாமலிருக்கிறது. படிப்பு, வயசு, காரியத்திறமை எல்லாம் சேர்ந்து நடத்தையிலும் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்த்தால், எங்கேயாவது இடறுகிறது. நாமும், “பரவாயில்லை, அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாட்டா பாதகமில்லை” என்று இவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்புவிக்கிறோம். ஆனால், “ஹ்யூமன் நேச்சர்” [ மனுஷ்ய இயற்கை] போகிற போக்கில்,
இப்படிக் கலந்தாங்கட்டிகளாக இருக்கிறவர்களுக்கு ஒரு பதவி, ஸ்தானம், என்று கிடைத்த பிறகு,
ஐந்துக்கு இரண்டு என்பது ஒன்று, அரை, கால், ஸைஃப்ர் என்று சரிந்துகொண்டே போகிறது. இதனால்தான்,
அர்த்த சுத்தத்தை மட்டும் சொல்லாமல, ஆனாலும் அதுதான் பொது நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான
விஷயமாதலால், அதைப் பிரித்து முதலிடம் கொடுத்துச் சொல்லி, அதோடுகூட “ஆத்ம சுத்தம்” என்பதாக,
ஒருவனுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரும் பழுதில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமென்று விதியில்
சேர்த்திருக்கிறார்கள்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்.
No comments:
Post a Comment