(
" மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். " -
ஆலத்தூர் சகோதரர்கள்)
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-ஸங்கீத சங்கரர் காஞ்சி மகான்.
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-ஸங்கீத சங்கரர் காஞ்சி மகான்.
ஆலத்தூர்
சகோதரர்கள் மஹா பெரியவாவிடம் பக்தி கொண்ட வித்வான்கள். அவர்கள் எப்போது
ஸ்ரீ மடத்தில் வந்து பெரியவாவிடத்தில் பாடினாலும் பெரியவா தூங்கி விடுவார்
என்ற குறை மட்டும் அவர்களுக்கு உண்டு.
இதை ஒரு முறை மகானிடமே தெரிவித்து விட்டனர். "அவ்வளவு தானே! இன்று இரவு பூஜை முடித்துக் கொண்டு வந்தவுடன், விடிய விடிய உங்கள் கச்சேரி தான். நீ எப்போ தூங்கு என்று சொல்கிறாயோ அப்போது தான் தூக்கம்."
சகோதரர்கள் இதைக் கேட்டு மயங்கி விழாத குறை தான். வித்வான்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பூஜை முடிந்து மகானும் வந்தார். "சரி! கச்சேரி ஆரம்பமாகட்டும்." என்றார்.
'வாதாபி கணபதிம் ' பாதி பாடல் நடந்து கொண்டிருக்கும் போது ' மேனா'வை எடுத்து வரும் படி உத்தரவு. முனிவர் ஏறி அதில் அமர்ந்தார். பாடல் முடிந்து வித்வான்கள் கேதார கௌளை ராகம் பாடினர். கந்தவர்வ கானமாக இருந்தது பாடல்.
ஆனால் ராகம் தொடங்கிய சில நொடிகளிலேயே முனிவர் மேனாவிலேயே படுத்து, கதவையும் மூடிக் கொண்டு விட்டார். மேனாவைச் சுற்றி படுதாவை இறுக்கமாகப் போர்த்தவும் ஆணையிட்டார்.
எப்படி இருக்கும் சகோதரர்களுக்கு? கற்பனைக் கோட்டை தூள் தூளானது. அதற்கு மேல் வித்வான்களுக்கு உத்வேகம் இல்லை. சகோதரர்களில் ஸ்ரீனிவாச ஐயர், "பெரியவா இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். எங்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்" என்று புலம்பினார். எடுத்த ராகத்தை சகோதரர்கள் அவசர அவசரமாக முடித்து விட்டு மீதிப் பாட்டையும் பேருக்குப் பாடிவிட்டு முடித்து விட்டனர். விடைபெற்றுக் கொள்ள காத்திருந்தனர்.
கதவு திறந்தால் அல்லவா விடைபெற முடியும். எப்போது 'விழித்துக் கொள்வார்?'
வித்வான்களுக்கு விடிய விடிய சிவராத்திரி தானா? என்ன சோதனை இது என்று அமர்ந்திருந்த போது உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. படுதா விலகி கதவு திறந்தது.
"நான் தூங்கி விட்டேன் என்று கேதார கௌளயை அவசர அவசரமாக முடித்து விட்டாயா? நிரவல், சுவரம் ஒண்ணும் வேண்டாம் என்று வைத்து விட்டாயாக்கும்? " என்றவுடன் வித்வான்கள் அழுதே விட்டனர்.
" தப்பு , தப்பு மன்னிக்க வேண்டும். "
" சீனு நீ ரொம்ப நல்லவன் தான்டா. ஆனா உனக்கு அஞ்ஞானம். நான் நேரா கண்ணைத் திறந்து கொண்டு கேட்டாத் தான் கேட்டதா உனக்கு நினைப்பு " என்றதும் இருவரும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தனர்.
" மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். "
" சரி, சரி எங்கே விட்டாயோ அங்கிருந்தே கேதாரகௌளயை ஆரம்பி " என்றார். சகோதரர்களும் ராகம், நிரவல், சுவரம் எல்லாவற்றையும் பாட, மஹா பெரியவா முழுவதும் கேட்டு மகிழ்ந்து வித்வான்களை இன்பக் கடலில் ஆழ்த்தி, வாழ்த்தி அனுப்பினார்.
நாதப் பிரம்மம் நம் பெரியவா

No comments:
Post a Comment