( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற
அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும்,அனுகிரஹமும்)
.
[பெரியவாளை ரா.கணபதி ஸ்ரீசரணர் என்றே விளிப்பார்]
[பெரியவாளை ரா.கணபதி ஸ்ரீசரணர் என்றே விளிப்பார்]
ரா.கணபதி எழுதியது
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(மெம்பர்களுக்காக அப்பாடல்)
51. உருவாய் அருவாய்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
..............................
அடியார் : வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க.
பாராயணத்துக்குப் பெரியவங்க ஏதாவது ஸோஸ்தரம் [ஸ்தோத்திரம்} சொல்லணுங்க.
ஸ்ரீசரணர்: நீதான் முருக பக்தனாச்சே, தினமும் '[கந்தர்] அனுபூதி' சொல்றவனாச்சே! அதுக்கு மேலே புதுசா என்ன பாராயணம் பண்ணணும்கிறே?
அடியார்:
[சற்று நேரம் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு} அது ஞான
நூலான்னாங்க இருக்கு? நமக்கோ அன்னாட அல்லாட்டத்துல வருமானம்னா
தேவையாயிருக்கு!
ஸ்ரீசரணர்: [கணமும் யோசியாமல், குமிண் சிரிப்புடன்] ஸரி, அதுல கடைசி வரி என்ன?
அடியார்: "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"
ஸ்ரீசரணர்:
"வருவாய்"னாலும் வருமானம்தானே? 'வருவாய் அருள்வாய்'னே வரதே! அதுவும்
முடிஞ்சு முடிவா ஸ்தோத்ரத்தின் ஈற்றடியிலே வரதே! அதையே சொல்லிண்டிரு,
போறும்.
வார்த்தைகளில் புகுந்து விளையாடும் அவரது வித்தகத்துக்கும் ஒரு சான்று
No comments:
Post a Comment