(தன் ஆசாரம் கெடாமல் பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றிய சம்பவம்)
நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-திருவாரூர் திவாகரன்.
04-04-2018 தேதியிட்ட இதழ்(28-03-2018 வெளியானது).
ஏராளமான மகாபெரியவாளை தினம் தினம் தரிசித்தார்கள். கனிவர்க்கம்,புஷ்பங்கள், மடத்துக்குத் தேவையான பொருட்கள் இப்படி ஒவ்வொருத்தரும் அவர்களால் இயன்றதை காணிக்கையாய் செலுத்தினார்கள்.
அந்த பக்தர் கூட்டத்துல திருச்சியில இருந்த காலேஜ் ஒன்றின் தலைவரும் இருந்தார். அவரோட முறை வந்த சமயத்துல நிறைய பழங்களையும்,,புஷ்பங்களையும் மகாபெரியவா திருவடியில காணிக்கையாக செலுத்தினார்.தங்களோட கல்லூரியில் மகாபெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்
மோனகுருவான மகாபெரியவா அவருக்கு பதில் ஏதும் சொல்லவில்லை., அவரும் தினமும் வந்து தொடர்ந்து அதே கோரிக்கையை ,விண்ணப்பித்தவாறே இருந்தார்.
கருணா மூர்த்தியான மகாபெரியவாளோட கனிவு ஒருநாள் அவருக்குக் கிடைச்சுது. அன்றைய தினம் அவருக்கு கல்கண்டும், குங்குமமும் பிரசாதமாக குடுத்த ஆசார்யார், "நாளைக்கு கார்த்தால உன் காலேஜுக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு கன்றுக்குட்டியோட காத்திருங்கோ!" அப்படின்னு சொன்னார்.
அந்த பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. "அப்படியே செய்யறேன்!"னு சொல்லிவிட்டு சந்தோஷமா புறப்பட்டார்.
மறுநாள் சொன்ன மாதிரியே அந்த காலேஜுக்கு எழுந்தருளினார் மகாபெரியவா அங்கே பசுமாடு,கன்னுக்குட்டி,பூரண கும்பம் எல்லாவற்றோடும் தயாராக இருந்தார் அந்த பக்தர் . மகான் பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரிச்சு,காலேஜ் வாசலுக்குப் போய் நின்னார்.
அந்த பக்தரிடம் "என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ, அங்கெல்லாம் இந்தப் பசுமாடு,கன்னுக்குட்டியை பிடிச்சுண்டு நீ
முன்னால போ. நான் பின்னாலேயே வரேன்!" என்றார்.
அப்படியே அந்த பக்தரும்,அவர் மனைவியும் பசுவையும்,கன்றையும் முன்னால அழைத்துச் செல்ல, மகாபெரியவா பின்னாலயே தன் திருவடியைப் பதிச்சு நடந்தார். எல்லா இடமும் சென்று வந்ததும், காலேஜில் இருந்து வெளியே வந்து," என்ன உனக்கு திருப்தியாச்சா?" என்று மகான் கேட்க,அந்த ஆனந்தத்தைத் தெரிவிக்க வார்த்தைகள் வராமல்,கண்கள் கடலாக,மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் அந்த பக்தர்.
ஸ்ரீமடத்தின் ஜாகைக்குத் திரும்பிய மஹான், மாலை அடியார்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,காலையில் காலேஜுக்கு போன பேச்சும் வர, அங்கே இருந்த தொண்டர் ஒருவர், "பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனேள்?" என்று கேட்டார்.
சிரித்த மகான், "அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ் ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால்
அந்த காலேஜோ ஸ்த்ரீகள் படிக்கிற காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா, மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால்தான் யோஜனை செய்தேன். அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக்கூடாது. அதுக்கு ஒரே வழி. எந்தத் தீட்டாக இருந்தாலும்,அந்த இடத்துல கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருக்கு.அதனால,பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்!"
மகான் சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை. இபடியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து,நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். அன்பையும்,அறத்தையும் அழகாக இணைக்கும் வழிகாட்டி,குரு, ஆசார்யா என்ற பெருமை, காஞ்சி மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா பக்தி யாத்திரைகள் மேற்கொள்ளும் சமயத்தில் வழியில் பல இடங்களில் தங்குவார்.
அந்த மாதிரியான சமயங்களில் பக்தர்கள் பலரும் தங்கள் இருப்பிடத்துக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள கோயிலுக்கு எழுந்தருளும்படி ஆசார்யாகிட்டே வேண்டிக் கொள்வார்கள்.
பெரும்பாலும் பக்தர்கள் அழைக்கற இடம் கோயிலாக இருந்தால், மகாபெரியவா மறுக்காம ஏற்றுக்கொண்டு அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துட்டு,பக்கத்துலயே ஏதாவது ஒரு இடத்துல சிறிது நேரமோ அல்லது ஒரு நாளோ தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். சில சமயங்கள்ல

அந்த இடத்துல ஏதாவது உபதேசம் பொதுவான அறிவுரையாக பண்ணுவதும் உண்டு.
அந்தவகையில மகாபெரியவா ஒரு சமயம் தமிழகம் முழுக்க திவ்யயாத்திரை மேற்கொண்டு இருந்தார்.அப்போ வழியில திருச்சிராப்பள்ளியில சில நாட்கள் தங்கலாம்னு தீர்மானிச்சார் மகாபெரியவா.
அந்தவகையில மகாபெரியவா ஒரு சமயம் தமிழகம் முழுக்க திவ்யயாத்திரை மேற்கொண்டு இருந்தார்.அப்போ வழியில திருச்சிராப்பள்ளியில சில நாட்கள் தங்கலாம்னு தீர்மானிச்சார் மகாபெரியவா.
ஏராளமான மகாபெரியவாளை தினம் தினம் தரிசித்தார்கள். கனிவர்க்கம்,புஷ்பங்கள், மடத்துக்குத் தேவையான பொருட்கள் இப்படி ஒவ்வொருத்தரும் அவர்களால் இயன்றதை காணிக்கையாய் செலுத்தினார்கள்.
அந்த பக்தர் கூட்டத்துல திருச்சியில இருந்த காலேஜ் ஒன்றின் தலைவரும் இருந்தார். அவரோட முறை வந்த சமயத்துல நிறைய பழங்களையும்,,புஷ்பங்களையும் மகாபெரியவா திருவடியில காணிக்கையாக செலுத்தினார்.தங்களோட கல்லூரியில் மகாபெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்
மோனகுருவான மகாபெரியவா அவருக்கு பதில் ஏதும் சொல்லவில்லை., அவரும் தினமும் வந்து தொடர்ந்து அதே கோரிக்கையை ,விண்ணப்பித்தவாறே இருந்தார்.
கருணா மூர்த்தியான மகாபெரியவாளோட கனிவு ஒருநாள் அவருக்குக் கிடைச்சுது. அன்றைய தினம் அவருக்கு கல்கண்டும், குங்குமமும் பிரசாதமாக குடுத்த ஆசார்யார், "நாளைக்கு கார்த்தால உன் காலேஜுக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு கன்றுக்குட்டியோட காத்திருங்கோ!" அப்படின்னு சொன்னார்.
அந்த பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. "அப்படியே செய்யறேன்!"னு சொல்லிவிட்டு சந்தோஷமா புறப்பட்டார்.
மறுநாள் சொன்ன மாதிரியே அந்த காலேஜுக்கு எழுந்தருளினார் மகாபெரியவா அங்கே பசுமாடு,கன்னுக்குட்டி,பூரண கும்பம் எல்லாவற்றோடும் தயாராக இருந்தார் அந்த பக்தர் . மகான் பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரிச்சு,காலேஜ் வாசலுக்குப் போய் நின்னார்.
அந்த பக்தரிடம் "என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ, அங்கெல்லாம் இந்தப் பசுமாடு,கன்னுக்குட்டியை பிடிச்சுண்டு நீ
முன்னால போ. நான் பின்னாலேயே வரேன்!" என்றார்.
அப்படியே அந்த பக்தரும்,அவர் மனைவியும் பசுவையும்,கன்றையும் முன்னால அழைத்துச் செல்ல, மகாபெரியவா பின்னாலயே தன் திருவடியைப் பதிச்சு நடந்தார். எல்லா இடமும் சென்று வந்ததும், காலேஜில் இருந்து வெளியே வந்து," என்ன உனக்கு திருப்தியாச்சா?" என்று மகான் கேட்க,அந்த ஆனந்தத்தைத் தெரிவிக்க வார்த்தைகள் வராமல்,கண்கள் கடலாக,மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் அந்த பக்தர்.
ஸ்ரீமடத்தின் ஜாகைக்குத் திரும்பிய மஹான், மாலை அடியார்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,காலையில் காலேஜுக்கு போன பேச்சும் வர, அங்கே இருந்த தொண்டர் ஒருவர், "பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனேள்?" என்று கேட்டார்.
சிரித்த மகான், "அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ் ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால்
அந்த காலேஜோ ஸ்த்ரீகள் படிக்கிற காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா, மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால்தான் யோஜனை செய்தேன். அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக்கூடாது. அதுக்கு ஒரே வழி. எந்தத் தீட்டாக இருந்தாலும்,அந்த இடத்துல கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருக்கு.அதனால,பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்!"
மகான் சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை. இபடியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து,நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். அன்பையும்,அறத்தையும் அழகாக இணைக்கும் வழிகாட்டி,குரு, ஆசார்யா என்ற பெருமை, காஞ்சி மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?
No comments:
Post a Comment