தேனம்பாக்கத்தில் மகாபெரியவாகூட இருந்திருக்கேன். நிறையச் சொல்வார். அப்போதெல்லாம் ஒரு சிநேகிதராகத்தான் தெரிவார். ஒரு பெரிய மடத்துக்கு அதிபதின்னு தோணாது எனக்கு. ‘எனக்குப் பாடத் தெரியும். பாடட்டுமா?’ன்னு ஒருநாள் படுத்திருக்கும்போது கேட்டார். அவர் சங்கீதத்துல சிறந்த வேங்கடமஹி பரம்பரையில் வந்தவர் என்கிற விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது. அதனாலதான் சங்கீதத்தின் மேல் அவருக்கு அத்தனை ஆர்வம் இருந்திருக்கு.
ஒருமுறை, மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிச்சுக் கேட்கணும்னு விரும்பினார் மகாபெரியவா. இந்த விஷயம் மணி ஐயருக்குத் தெரிய வந்ததும், உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டார். அவருக்கு மகாபெரியவா மீது அபார பக்தி! அவரை ‘அபிநவ நந்தி’ன்னு சொல்வார் மகா பெரியவா.
மடத்துக்கு வந்த மணி ஐயரிடம், ‘தனி வாசி! கேட்கணும்போல இருக்கு’ என்றார் பெரியவா. மணி ஐயர் ‘தனி’ வாசிச்சார் (தனி என்பது ஒருவகை தாள லயம்). மகாபெரியவாளும் ரசித்துக் கேட்டார். பிறகு, மணி ஐயருக்கு ஆசீர்வாதம் பண்ணி, அவர் மனைவியை அழைத்து, உலகளந்த பெருமாள் கோயிலில் அருளும் ஆரணவல்லித் தாயாருக்குப் பொன்தாலி செய்து சாத்தச் சொன்னார் மகாபெரியவா. அதை உடனடியாக நிறைவேற்றினார் மணி ஐயர்.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.
தினமும் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள அனைவரையும் செய்யச் சொல்லுங்கள்.
ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.
நல்லவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலம், நாமும் நல்வழியில் நடக்க தூண்டுகோலாக அமையும்.
நெருப்பு தன்னோடு சேர்ந்ததை சாம்பலாக்குவது போல,ஆசையும் மனிதனை அழிக்கும் இயல்பு கொண்டது
No comments:
Post a Comment