எதையும் பரிஷை பண்ணிப்பார்த்தே ஏற்கவேண்டியதை ஏற்று, தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும். முதலிலேயே முடிவுகட்டி மனசை குறுக்கிக் கொள்வது மூடனின் காரியம். நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தான் வாழ்க்கையின் குறிக்கோள் (Motto) இருக்க வேண்டும். கடன் என்றால் வேண்டாவெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை (Duty). அதை அன்போடு, ஆர்வத்தோடு, ஹிருதய பூர்வமாகச் செய்யவேண்டும்.
நெருப்பை வாயால் ஊதப்படாது. புருஷன் தீபத்தை அணைக்கக் கூடாது. பொம்மனாட்டி பூசணிக்காயை உடைக்கக் கூடாது. நகத்தைக் கிள்ளப்படாது. எச்சில் பண்ணப்படாது. சூதாடக் கூடாது. மதுபானம் கூடாது. மத்தியான வேளையில் பால் சாப்பிடக் கூடாது. ராத்திரியில் தயிர் கூடாது. மோருக்கு தோஷமில்லை. அதிதிக்குப் போடாமல் சாப்பிடக் கூடாது. பல் தேய்க்காமல் (Bed Coffee) குடிப்பது அநாசாரத்துக்கு அநாசாராம். கால் அலம்பித் துடைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்ள வேண்டும். கிளப்புக்கும், பீச்சுக்கும் போகும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, நித்திய கர்மானுஷ்டாங்களைச் செய்து வர வேண்டும்.
அவரவர், அவரவருக்குரிய கர்மாக்களைச் செய்துதான் ஆகவேண்டும். அப்படி செய்தால் தான் அவனுக்குத் "தான்" என்கிற அபிமானமும் குறைந்து போகும். எப்போது பார்த்தாலும் "உர்" என்று இருந்து கொண்டு, வாழ்க்கையில் தனக்கு எல்லாம் கஷ்டம் என்று புலம்பிக் கொண்டு, நொந்து கொண்டு இல்லாமல், எதிலும் கடுமையாகச் செய்யாமல், நிம்மதியோடு லேசாகச் செய்யவேண்டும்.
இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப்பட்டுக் கொண்டு செய்வதைவிடப் பல மடங்கு வேலை செய்து விடலாம்.
Source: Shri. Halasya Sundaram Iyer
No comments:
Post a Comment