அளவிலா தவமலையாகிய ஸ்ரீ மஹா பெரியவாள் நினைத்தால் நடக்காத காரியம் பதினான்கு உலகிலும் இல்லை. இப்படிப்பட்ட அநுக்ரஹம் யாருக்கு கிடைக்கும் என்றால் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க பெரியவாளிடம் பக்தி செய்தால் கிடைக்கும். அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் பாலகிருஷ்ணன். அவரது தந்தை காலம் சென்ற கந்தஸ்வாமி அய்யர், பெரியவாளுக்கு ஆத்மார்த்தமாய் பல கைங்கர்யங்கள் செய்தவர். மல்லேஸ்வரம் சங்கரமடம் கட்டியது. பொதுக்கிணறு எடுத்தது முதலிய பணிகளில் ஈடுபட்டவர். கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்று சொல்லியிருக்கிறது. அதாவது கங்கா ஜலத்தில் குளிப்பதும், துங்கா ஜலத்தை குடிப்பதும் விசேஷம். பெரியவாளுக்கு தவறாமல் துங்கா ஜலம் சமர்ப்பித்த பக்தர் அவர்.
AG's Office ல் பாலகிருஷ்ணனுக்கு உத்தியோகம் கிடைத்தது. பதவி உயர்வு பெற்று மேலே முன்னேற வேண்டுமானால் அந்த துறைக்கான தேர்வு எழுதி பாஸ் செய்தால் தான் சாத்தியம். இந்த பரீட்சையை பாலகிருஷ்ணன் ஐந்து முறை எழுதியும் பாஸாகவில்லை. இதில் சிக்கல் என்னவென்றால் ஐந்து முறைக்கு மேல் எழுத முடியாது. இந்த இக்கட்டான சமயத்தில் அவரது தந்தை கந்தஸ்வாமி அய்யர் பெரியவாளிடம் வேண்டி முறையிட பெரியவாளும் ஆசிர்வதித்து அக்ஷதை ப்ரசாதம் கொடுத்த உடன் என்ன அதிசயம் நடந்தது என்றால் புதியதாக ஒரு அரசு ஆணை தில்லியில் இருந்து வந்தது. ஐந்தாவது முறை தவறியவர்கள் 50% மார்க் வாங்கியிருந்தால் இன்னும் ஒரு முறை எழுத விண்ணப்பிக்கலாம் என்பது தான் அது. ஆனால் இதிலும் பாலகிருஷ்ணனுக்கு என்ன சிக்கல் வந்தது என்றால் அவர் 47% மார்க்கே வாங்கி இருந்தார். ஆனால் பெரியவாள் அருள் வேலை செய்யாது போகுமா? இவரது மேலதிகாரி ஒருவர் சிபாரிசு செய்து இவரையும் தேர்வு எழுத விண்ணப்பிக்க வைத்தார். இதற்குள் பரீட்சைக்கு நாள் மிக நெருங்கியதால் பாலகிருஷ்ணனால் சரியாக படித்து தயார் செய்ய இயலவில்லை. இவ்வளவு செய்த பெரியவா இங்கு மட்டும் விடுவாரா! பரீட்சை இரண்டு மாதம் தள்ளி போடப்பட்டு அரசு ஆணை வந்தது. பிறகு கேட்க வேண்டுமா? இரண்டு மாதத்தில் நன்கு தயார் செய்து பரீட்சை எழுதி பாஸ் செய்து படிப்படியாக ப்ரனோஷன்கள் பெற்று பிறகு உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்றும் பெரியவாளின் எல்லையில்லாக் கருணையை நினைந்து உருகி தொண்டு செய்து வருகிறார்.
Source: Shri.Halasya Sundaram Iyer
No comments:
Post a Comment