அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக
வந்திருந்த பெரிய மனிதரைக் கண்டதும் பெரியவாளுக்கு
அசாத்திய கோபம் வந்து விட்டது.
அருகிலிருந்த தொண்டர்களிடம்.
"இன்னிக்கு இவர் பிக்ஷையா?" என்று கேட்டார்கள்.
"ஆமாம்..."
"பெற்ற தாயார் - தகப்பனாரை நல்லபடியா சம்ரட்சிக்க
முடியாதவாளெல்லாம் எதற்காக பிக்ஷாவந்தனம் செய்யணும்?
வட்டிக்கு மேல் வட்டி வாங்கி ஏழைகளைக் கொடுமைப்
படுத்துபவர் பிக்ஷை வேண்டாம்..." என்று சத்தமாகக்
கூறிவிட்டுப் பெரியவாள் உள்ளே போய்விட்டார்கள்.
சுற்றமும் நட்பும் புடைசூழ வந்திருந்த செல்வந்தருக்கு
அவமானமாகப் போய்விட்டது. நெஞ்சு வெறும் சூன்யமாகி
விட்டது. மெல்ல நடந்து அந்த இடத்திலிருந்து வெளியே வந்து,
வேறோர் இடத்தில் தரையில் உட்கார்ந்துவிட்டார்.
பெரியவா கோபம் விநாடிப் போது தான்.
மானேஜரிடம் சொல்லி, அந்த பிக்ஷாவந்தனக்காரரை
குடும்பத்தோடு வரச் செய்து, வந்தனம் செய்யச் சொல்லி
ஏற்றுக் கொண்டார்கள்.
பூஜை பிக்ஷை எல்லாம் முடிந்த பிறகு அந்த
அன்பருக்குப் பிரசாதம் கொடுக்க வேண்டிய நேரம்.
அவர் வந்து தத்தளிக்கும் மனத்துடன் உட்கார்ந்தார்.
பெரியவா அவரிடம் கிருஹஸ்த தர்மத்தை விளக்கமாக
உபதேசித்தார்கள்;
"குழந்தைகள்,பசுமாடுகள், வேலைக்காரர்கள்,ஏழைகள்,
வறுமையிலுள்ள உறவினர்கள் எல்லோரையும்
பிரியத்துடன் காப்பாற்றுவதுதான் முக்கியமான கடமை."
பணக்காரர் ஆனந்த பாஷ்பத்துடன் கேட்டுக்கொண்டு
மனத்தில் பதிய வைத்துக் கொண்டார்.
பெரியவா அவருக்கு ஒரு சால்வை போர்த்தி
பிரசாதம் அனுக்ரகித்தார்கள்.
No comments:
Post a Comment