பத்து வயஸ் பையன் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடம் ஏதோ கேட்கும் ஆசையில் நகர்ந்து போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் மனஸில் பொங்கும் கேள்வியின் துடிப்பு, முகத்தில் ப்ரதிபலித்தது.
பெரியவா அனுஷ்டானமெல்லாம் முடிந்து விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, "என்ன?" என்பது போல் ஜாடை செய்தார். குழந்தைக்கு பயம் கிடையாது என்பதை இதோ.. ப்ரூவ் பண்ணிவிட்டான்......
"பெரியவா....இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனிலதானே இருக்கும்?..."
சுற்றி இருந்த கார்யஸ்தர்கள், பக்தர்கள் எல்லாருக்கும் உள்ளே ஒரே உதறல்! எசகுபிசகா எதையாவது கேட்டுடறதுகள்....என்று தவித்தார்கள். பெரியவா குழந்தையின் முகத்தைப் பார்த்தார்....." அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா.....முன்னாடி மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே...ல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.....இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்...மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....
......இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"
ஒரு மஹா பெரிய கசப்பான உண்மையை படாரென்று போட்டு உடைத்தார்! குழந்தைக்கோ குதிரை, யானை, ஒட்டகம் விஷயத்துக்கு பெரியவா குடுத்த explanation பரம த்ருப்தி ! சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான். ஆனால் நாம்?
முன்பு ஒருமுறை ஒரு கார்யஸ்த்தரிடம் "ஏண்டா....கண்ணா! மடத்துக்கு ஏன் இவ்ளோவ் கூட்டம் வருது தெரியுமோ?" என்று கேட்டார்.
"பெரியவாளை தர்சனம் பண்ண......."
"ஆமா......பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா.....மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
Source: Shri Surya Narayan
No comments:
Post a Comment