புதன் அன்று வெளியான குமுதம் 15-01-2014 தேதியிட்டது.
தட்டச்சு-வரகூரான்.
ஒருமுறை நான்,ஆடிட்டர் குருமூர்த்தி,அருண்ஷோரி
இன்னும் சிலரும் காஞ்சிக்கு மஹா ஸ்வாமிகளைப்
பார்க்கப் போயிருந்தோம்.ஸ்வாமிகள் நாங்கள் போனபோது
ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தார்.
அருண்ஷோரியின் மகனுக்கு உடலில் ஒரு பிரச்னை உண்டு.
அது அவருடைய மனதை வருத்தப்பட வைத்திருந்தது.
மஹா ஸ்வாமிகளை நாங்கள் பார்த்துவிட்டுத் திரும்பியதும்
என்னிடம் அருண்ஷோரி கேட்டார்.
"பையனோட பிரச்னை பற்றி ஸ்வாமிகள் கிட்டே கேட்கலாமா?"
"தாராளமாகக் கேட்கலாம்"
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போனதை அதற்குள்
கவனித்துவிட்ட ஸ்வாமிகள் எங்களை மறுபடியும் அழைத்தார்.
அருண்ஷோரியிடம் மெதுவாக விசாரித்தார். அவரும்
ஸ்வாமிகளிடம் மகனுடைய பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
கேட்டூவிட்டு,அருண்ஷோரியை தனக்குப் பக்கத்தில் உட்காரச்
சொன்னார்.ஸ்வாமிகள்.பிரசாதம் கொடுத்தார்.
"இந்தக் கோயிலில் உட்கார்ந்து தியானம் பண்ணிக்கலாமா?"
கேட்டார்.அருண்ஷோரி.
"இங்கே தியானம் பண்ண என்னுடைய அனுமதி உங்களுக்குத்
தேவ்வையில்லை.நீங்க என்னுடைய பக்கத்தில் உட்கார்ந்து
தியானம் பண்ணுங்க. நானும் உங்களோடு தியானம் பண்றேன்"
என்று ஸ்வாமிகள் சொல்லிவிட்டு அருண்ஷோரியுடன்
தியானம் பண்ணினார்.
நாங்கள் வெளியே நின்று கொண்டிருந்தோம்.
"இந்த மாதிரியான மனம் நிம்மதியா இருக்கிற அனுபவம்
இதுவரை எனக்குக் கிடைச்சதில்லை" என்று நெகிழ்வுடன்
என்னிடம் சொன்னார் அருண்ஷோரி.
மகா பெரியவருடன் சேர்ந்து தியானம் பண்ணுகிற மகத்தான
அனுபவம் எல்லோருக்கும் லேசில் கிடைக்காது.
அருண்ஷோரிக்கு வாய்த்தது.
ஏனென்றால் அவர் அவ்வளவு நல்ல மனிதர்.
No comments:
Post a Comment