கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.
தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத்
தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள்
வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம்.
"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"
என்று பெரியவாள் கேட்டார்கள்.
நாங்கள், அசட்டுப் பிசட்டென்று என்னென்வோ சொன்னோம்.
பெரியவாள் சொன்னார்கள்.
"இந்த மூன்று சாமான் மட்டும் போதாது. தேன், நெய்
சேர்க்கணும்.பக்குவமாகச் செய்தால், பச்சடி சுவையாக
இருக்கும். இப்படிச் செய்யப்பட்ட பச்சடியை,மற்றவர்களுக்குக்
கொடுக்கணும்,.அவர்கள் வசியமாகி விடுவார்கள்!
"முதல்லே, அம்பாளுக்கு நைவேத்யம். அம்பாள் வசியமாகி
விடுவாள்! அடுத்து, அகத்துக்காரருக்கு, பின்னர் மனைவி
என்ன சொன்னாலும், "சரி.....சரி..." என்று தலையாட்டுவார்!
அப்புறம், வீட்டில் வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கணும்.
முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்!"
பிறகு, உக்கிராணத்தில் சொல்லி,வேப்பம்பூ பச்சடி செய்துகொண்டு
வரச் செய்து,எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.
"இது எதற்குத் தெரியுமா?"
ஒருத்தி சொன்னாள்; நாங்களெல்லோரும் பெரியவா
ஆக்ஞைப்படி நடக்கணும்-என்பதற்காக...."
"அது சரி...இது,திரிபுரசுந்தரி பிரஸாதம். நீங்க எல்லாரும்
அம்பாளின் பக்தைகளா எப்போதும் இருக்கணும்...."
எங்கள் கையில் இருந்தது,ஒரு ஸ்பூன் வேப்பம்பூ
பச்சடியாகப் படவில்லை;அமுதக் கடலாகவே தோன்றியது.
No comments:
Post a Comment