Welcome to My Blog.....
JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!
I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot.
Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa.
JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!
PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN
Wednesday, December 7, 2011
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
"கோவிலுக்கு செலவழிக்கற காசை, நாலு ஏழை குழந்தைகளுக்கு குடுத்தாலும் புண்ணியம்!!"
இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது, "பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய
அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"
எத்தனை சத்யமான உபதேசம்! இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment