சாந்தம்
சந்தோஷமாக இருப்பதாகச் சொல்வது மனசின் அனுபவங்களை வைத்துத்தான். ஆனால், சந்தோஷானுபவம் பெறுகிற இந்த மனசுதான் நாமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? எதெதையோ தெரிந்து கொள்வதிலும் எதெதையோ ஆராய்ச்சி பண்ணி உண்மைகளை கண்டுபிடிப்பதிலும்தான் மனித ஜீவனின் பெருமையே இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறோம். அணுவிலிருந்து Galaxy வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் உண்மைகளைத் தினந்தினம் தெரிந்துக்க் கொண்டு கர்வப்படுகிறோம். இப்படித் தெரிந்துக்கொள்கிற நாம் வாஸ்தவத்தில் யார் என்று ஆராய்ச்சி பண்ணித் தெரிந்துக்கொள்ள வேண்டாமா? தன்னுடய சத்யமான ஸ்திதியையே தெரிந்து கொள்ளாமல் மற்றவற்றைத் தெரிந்துக் கொண்டு, ” சய்ன்ஸ்ஸால் சத்யங்களைத் தெரிந்துகொள்கிறோமாக்கும்!” என்று மார்தட்டிக் கொள்வது பரிகாசத்துக்கு இடமானதல்லவா? சத்ய சத்யமானதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அறிகின்ற அறிவை அறிய வேண்டும் என்றால் ஆத்ம சாஸ்திரத்தைப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஆத்ம சாஸ்திரங்களை இப்போதே தீவிரமாகப் பழகிக்கொள்ளாத பெரும்மாலாருங்கூட, மெய்யான மனசுக்காகவே சதாவும் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடாது! அப்படியிருந்தால் நாம் ஏமாளி என்று ஆகிவிடும். அதனால்தான், எப்படிப்ப்ட்டவராயிருந்தாலும், தினம் ஒரு அஞ்சு நிமிஷம் அல்லது பத்து நிமிஷமாவது , ” நம்முடைய காரியம், எண்ணம், லோகம் முதலான சகலமும் பொய்யாகப் போய்விடும்.ஒரு பெரிய சாந்த பதம் ஆத்மா ஆத்மா என்று இருக்கிறது” என்பதாக ந்னைவூட்டிக் கொண்டு, அந்த அஞ்சு பத்து நிமிஷம் சாந்தமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்
No comments:
Post a Comment