ஜய ஜய சங்கர....
இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தில் நடந்த
ஒன்றாகும். எங்கள் பூர்விகம் பூங்குளம்
என்ற திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும்
கிராமமாகும். என் தாத்தா அங்குள்ள சிவன்
கோவிலில் மிக்கஈடுபாடு கொண்டவர்
மட்டுமல்லாமல் நித்யானுஷ்டானகளையும்
பூஜையையும் வெகு சிரத்தையாகச் செய்து
வந்தவர். அவர் நீதிக்கும் நேர்மைக்கும் மிக
முக்யத்வம் கொடுத்து வந்தவர். எல்லா ப்ரச்நைக்கும்
அவரே தீர்ப்பு சொல்வார் என்பது அக்காலத்தில்
மிக ப்ரஸித்தம். பெரியவாளிடம் அசாத்ய பக்தி
கொண்டவர். ஆத்தில் ஸாலக்ராம் பூஜைகளைச்
செய்துவந்ததும் அல்லாமல் க்ருஷ்ணாஷ்டமி அன்று இரவு முழுதும் பூஜை ஒவ்வொரு கால்த்துக்கும் ஓர் நேவேத்யம் செய்து சிரத்தையுடன் செய்வார் என என் அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். தன் அந்திம காலத்தில்
நித்யானுஷ்டானங்களைச் செய்யமுடியாதபோதும்,
தன் பிள்ளைகளை செய்யச் சொல்லி கையில் தீர்த்தம்
வழங்கச் சொல்லி அதன் பலனைப் பெற்றவர்.
ஒருனாள் விடியற்காலை ப்ரம்ம முஹூர்த்தத்தில்
என் அப்பாவின் அத்திம்பேர் வாசல் திண்ணையில்
படுத்திருந்தார். யாரோ வாசலில் நிழல் தட்டவே
பார்த்ததில் பெரியவா மேனாவிலிருந்து இறங்கி
வருவதைப் பார்த்து உள்ளேய்ருந்த எல்லாருக்கும்
குரல் கொடுத்து ''பெரியவா வந்திருக்கா, வாசலில்
வந்து பூர்ணகும்பம் கொடுத்து அழை யுங்கோடா''
என்று கூறவும் அதன்படி அவர்கள் அழைக்க உள்ளே
நுழைந்த பெரியவா நேரே என் தாத்தா படித்திருந்த
இடம் சென்று ''ராமச்சந்த்ரா உனக்கு இனி நியம நிஷ்டை
எதுவும் தேவை இல்லை, உனக்கு மறு ஜன்மா கிடையாது,
நீ உன் இஷ்ட தெய்வ நாமாவையை ஜபித்தால் போதும்,
வேறு பூஜை எதுவும் வேண்டாம்'' என்று சொல்லி உடனே
புறப்பட்டு விட்டார் என என் மூதாதையர் கூறுவர்.
இதில் என்ன அதிசயம் என்றால் அன்று காவேரியில்
பயங்கர வெள்ளம்! அதில் அதைக் கடந்து மேனாவில்
அவர் எப்படி வந்தார், திரும்பிப் போனார் என்பது
இது வரை கேள்விக்குறி!! அவரன்றி ஓர் அணுவும் அசையாதல்லவா!!!
இதில் இன்நும் ஓர் விசேஷம் என்ன்வென்றால் எங்கள் குல தெய்வம் வடுவூர் கோதண்டராமர். ஆகையால் ராம நாமாவை ஜபிக்கும்படி என் தாத்தவைப் பணித்திருக்கிறார்.
ஹர ஹர சங்கர
Source: Smt. Saraswathi Thyagarajan
No comments:
Post a Comment