1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வர்ஷங்கள் அல்பங்களான நம்மிடையே நடமாடி, இன்றும் ஆத்மார்த்தமாக நினைப்போர்க்கு அபயம் அளிக்கும் மஹா பெரியவா………
இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்று மாலை, உபன்யாஸம் பண்ணச் சொல்லி மடத்தில் உள்ள பெரியவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.
கும்பகோணமே நிரம்பி வழிந்தது! பெரியவா பேச ஆரம்பிக்கும் முன் கூட்டத்திலிருந்த ஒரு வயஸானவர் இந்த பால ஸ்வாமிகளை வியப்போடு பார்த்தார்.
“66 வது ஆச்சார்யாள் ரொம்ப அழகா உபன்யாஸம் பண்ணுவார்..அவரோட வாக்வன்மை எல்லாரையும் ஆகர்ஷிக்கும். ஆனா, இவரோ…… ரொம்ப சின்னக் கொழந்தையா இருக்காரே! என்னத்தை பேசப் போறார்?” என்று மனஸில் சந்தேகம் அலைபாய கூட்டத்தில் முன்னால் வந்து உட்கார்ந்தார்.
அன்று பெரியவாளுடைய முதன்முதல் உபன்யாஸம் “ஸ்யமந்தகமணி” திருட்டுப் போனது, கிருஷ்ணனுக்கு அபவாதம் வந்தது, அப்புறம் ஜாம்பவானோட சண்டை போட்டு ஜாம்பவதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு, ஸ்யமந்தகமணியை கொண்டுவந்து அபவாதம் நீங்கப் பெற்றது பற்றி ரொம்ப அழகாக பேசினார். அன்று அத்தனைபேரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். என்ன அருமையான, கோர்வையான உபன்யாஸம்!
அந்த வயஸானவர் ஓடி வந்து பெரியவா பாதத்தில் விழுந்தார்……..”மஹாப்ரபோ!” என்று அரற்றினார். அப்புறம் கூட்டத்தினரை நோக்கி பேசினார்.
” 66 வது பீடாதிபதியான கலவை பெரியவாளோட உபன்யாசத்தை நான் நெறைய தடவை கேக்கற பாக்யத்தை அடைஞ்சிருக்கேன்…..இந்த பதிமூணு வயஸ் கொழந்தை என்ன பேசப் போறார்?…ன்னு நெனெச்சேன்…..ஆனா, இந்த மொதல்உபன்யாசத்லேயே……. ‘தான், பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !’ ன்னு நித்ரூபிச்சுட்டார்! என்னோட தப்புக்கு நான் மனஸார மன்னிப்புகேட்டுக்கறேன் ஆனா, என்னால இப்போ அழுகையை கட்டுப் படுத்த முடியலை………ஏன்னா, எனக்கு இப்போவே எம்பதுக்கு மேல வயசாச்சு. இன்னும் இந்த ஆச்சார்யாளோட உபன்யாசங்களை எவ்வளவு நாள் கேக்கப் போறேன்?..ன்னு நெனைச்சா ரொம்ப தாபமா இருக்கு. அழுகையை அடக்க முடியலை ” என்று அழுதார் அந்த பெரியவர்.
பெரியவாளோட முதல் உபன்யாசத்துக்கு அவருடைய பரமகுருவின் மஹா பக்தர் மூலம் கிடைத்த பாராட்டு!
COURTESY: Shri. Jambunathan Iyer
Thanks to : K.THIAGARAJAN, KTR
No comments:
Post a Comment