எப்பொழுதும் தன்னையே நினைந்துருகி பக்தி செய்யும் அடியார்களின் மனக் கோயிலுள் வீற்றிருந்து அருள் செய்வது இறைவன் இயல்பு. பக்தர்களின் பக்தி பழுக்க பழுக்க பக்தர்களையே பகவான் தனக்கு சமமாக ஆக்கி தன் அருள் விளையாட்டை அந்த பக்தர்கள் மூலமாக நடத்துவதும் உண்டு. அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்த பக்தர்களைத்தான் உலகம் நாயன்மார்கள் என்றும் ஆழ்வார்கள் என்றும் பாகவதர்கள் என்றும் போற்றி வழிபடுகின்றது.
இந்த உயர்ந்த நிலையில் இடம் கொண்ட பரமபக்தர் ப்ரதோஷம் மாமா. தன்னிடம் வரும் அன்பர்களுக்கும் பெரியவாளின் அளவிலா மஹிமையை எடுத்து இயம்பி அவர்களையும் கருணை மலையின் அருள் வலையில் சிக்க வைப்பார். பெரியவாளே 'தந்தது உன் தன்னை கொண்டது என்னை' என்ற மணிவாசகர் வாக்கிற்கேற்ப. 'நீயே நான், நானே நீ' என்ற முடிவான அத்வைத நிலையை அருளியதால், ப்ரதோஷம் மாமா, தன்னை மறந்து சொல்லும் வார்த்தைகளை தன் வார்த்தையாகவே பெரியவாள் அருளி உள்ளார்.
No comments:
Post a Comment