Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, October 11, 2013

Karthi Nagaratnam விநாயகுனி கட்டுரையில் ஸ்ரீ ரா கணபதி...

(1935 இல் ஒரு வினாயக சதுர்த்தி நன்னாளில் பிறந்து(அவதரித்து) அந்த 'கணபதி' அந்த 'வியாசருக்கு' செய்த தொகுப்பாசிரியப் பணியை, இந்த 'கணபதி' நம் வியாசருக்கு செய்த பெரும்பணியை நெஞ்சில் நிறுத்தி, மனம் நிறைந்து...அவர் வரிகளிலேயே...அவருக்கு நமஸ்காரங்கள்...(வெல்லப் பிள்ளையார், அவரைக் கிள்ளி அவருக்கே நைவேத்தியம்)
குறிப்பு : "விநாயகுனி கீர்த்தனையை தவறாக பாடிய அப்பாவி பக்தர் ஒருவருக்கு "பெரிவா" எப்படி அருள் செய்தார் என்பதை பலரும் படித்து இருக்கலாம். அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் பதிவு செய்த கட்டுரையில் இருந்து சில நாட்கள் முன் FB இல் படித்த ஞாபகம். இன்று அருளாணை நம் 'எழுத்து' ஆனை(கணபதி)க்கு அருளிய அற்புதத்தை பார்ப்போம். அந்த 'விநாயகுனி' கட்டுரையிலேயே இது இடம் பெற்றிருந்தாலும் அந்த அற்புதம் பதிவு செய்ய படவில்லை. ஸ்ரீ அண்ணா அவர்கள் சொல்வது போல் 'இரத்தின சுருக்கமாக' தர முயற்சி செய்கிறேன். "
ஓவர் டு ஸ்ரீ ரா.க....
ஸ்ரீ சரணர் மிகவும் அதிகமாக ஏதோ சொன்னார்.
அது எனக்கு மகிழ்ச்சி தரமால் வேதனையே தந்தது. ஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் என் எழுத்தாள பெருமையையும் புகழ் கொடியையும் தான். எனக்கோ அது வேண்டி கிடக்க வில்லை. சுயமாக ஏதோ ஒரு சாமர்த்தியம், கற்றும் கேட்டும் அறிவது, இவற்றுக்கு மேலாக தெய்வ அனுக்ரகம் (அது அனுக்ரகமா சோதனையா என்று இன்றளவும் புரியவில்லை) ஆகியன இருந்தால் மஹாபட்ட எழுத்தாளனாக ஒருவர் ஆகி, மற்றவர் மகிழ - சத்விஷயமாக எழுதினால் மற்றவர்கள் படிக்கும் அளவேனும் மன உயர்வு பெறவும் செய்து விடலாம். ஆனால் எழுதும் அந்த நபருடைய மன உயர்வு? எத்தனை எத்தனையோ மகா மேதைகள் இருந்து இருக்கிறார்களே? ஆத்ம விஷயமாகவே எழுதியவர்களும் கூடத்தான், அவர்களின் எத்தனை பேர் தங்கள் மனத்தை மாசற்ற நிலைக்கு உயர்த்தி கொண்டு இருக்கீறார்கள்? மனமே போய்விடும் உயர்வில் உண்மை தத்துவத்தை உணர்ந்து இருக்கிறார்கள். எழுத்து சாகசத்தின் இழுப்புக்கும், எழுத்தை பார்த்து உலகம் தூக்கி வைப்பதில் அஹம் கீழே இழுக்கிற இழுப்புக்கும் ஈடு கொடுத்து முன்னேறுவது எத்தனை கொடூரமான 'ஹான்டிகாப் ரேஸ்' ஆக தோன்றுகிறது.
பின் ஏன் இவர் 'எழுத்தாளன், எழுத்தாளன்' என்று கூப்பிட்டது போதாமல், இப்போது அதில் ஜெயக்கொடி பற்றி வேறு சொல்லி வேதனை, சோதனை செய்கிறார். இப்படியே ஊருக்கு மட்டும் உயர்வான விஷயங்கள் சொல்லிக்கொண்டு, ஊராரால், உயர்வாக நினைக்கபடுவதுடன் முடிய வேண்டியது தானா இந்த அபலனின் கதை? அப்படிதான் தலையெழுத்தா? அந்த எழுத்தை இவர் வென்று ஆண்டு என் 'எழுத்தாளராகி' ஜெயக்கொடி நாட்ட போவது இல்லையா? இரண்டாண்டு முன் (1963) இவரிடம் வாய் விட்டே வேண்டிய அந்த வரத்தை அருள போவது இல்லையா?
என்னை அடக்கி கொள்ள முடியாமல், 'பெரியவா ஏன் இந்த எழுத்தாள பெருமைன்ற சிறுமையை சொல்லிண்டு இருக்கா? நான் வேண்டிண்டது பெரியவாளுக்கு ஞாபகம் இல்லியா?' என்றேன்.
அந்த பெரிய கண்கள் நிறைய அருளை தேக்கி ஆதரவாக பார்த்தார். அதுவே என்னை ஓரளவு ஆற்றி கொடுத்து காவாமல் விடமாட்டார் என்று உத்திரவாதம் கொடுத்தது.
அங்கே கூடியிருந்த எல்லோரையும் பார்த்து பொதுவாக சொன்னார். 'இவன் எழுத ஆரம்பிச்சே நாலஞ்சு வருஷம் (1957 முதல்) தான் ஆறது. பல பேர் என் அனுக்ரஹத்திலே தான் எழுதறான் ன்னு சொல்றா. ஆனா இவனானா எழுத ஆரம்பிச்சு ஒன்னு ரெண்டு வருஷத்திலேயே எழுதறது நிக்கறதுக்கு நான் அனுக்ரகம் பண்ணனும் ன்னு மன்னாட ஆரம்பிச்சுட்டான். '
என்னை நோக்கி கனிவுடன் சொன்னார். 'அது பாட்டு நடக்கட்டுமே. லோப உபகாரமா நடந்துண்டு போகட்டுமே. அதை ஏன் இடைஞ்சல் ன்னு நினைக்கணும்.? மத்தவாளுக்காக அது நடந்துண்டே தான் இருக்கணும்ன்னா நடந்துட்டு போகட்டும். அதோட 'நமக்கு என்ன நடக்கணுமோ அதலேயும் நாம குறி தப்பாம இருக்க அம்பாள் கிருபை பண்ணி அந்த வழியிலே மேலே மேலே நடத்தி தரணும்' ன்னு ப்ரார்த்திச்சுண்டு இரு. ஒனக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.' என்றார்.
கடைசியில் சொன்னாரே, இதை விட என்ன வேண்டும்?
என் குறிப்பு: எந்த நடமாடும் தெய்வத்தை ஸ்ரீ அண்ணா முதன் முதலில் வேண்டா வெறுப்பாக (அது தடுதாட்க்கொண்ட புராணமாய் வேறு ஒரு பதிவில் உள்ளது), தரிசித்து, பின், அந்த தெய்வத்தை நினைக்காமல், பேசாமல், பஜியாமல், எழுதாமால் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தாரோ, அந்த தெய்வமே, 'ஒனக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று சொன்னது, எத்தனை பேருக்கு கிடைக்கும், இந்த பாக்கியம்?
இதோடு சுமார் நூறு முறை இந்த பக்கங்களை திரும்ப திரும்ப படித்தும், ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் வர வைக்கும் அற்புதம் மேற்சொன்ன நிகழ்வு.
இது மட்டுமா? இன்னும் இருக்கிறது,
அப்படியும் நான் விடாமல் 'இருந்தாலும் மத்தவா என் எழுத்துக்காக கொண்டாடறது போறாம, பெரியவாளுமா எழுத்தாளன் எழுத்தாளன் ன்னு ஸ்ட்ரெஸ் பண்ணனுமா ன்னு இருக்கு. எனக்கு இந்த எழுத்தாள ஐடென்டிடி வேண்டி கிடக்கவில்லை' என்று சொல்லி விட்டேன்.
பெரியவா குறும்பாக சிரித்தார். 'ஒரு ஐடேண்டிடியும் இல்லாம, அப்படியே ஆத்மா ராமனா இருந்திண்டு இருக்கணுமோ?' என்றார்.
'அவ்வளவு பெரிசா ஆசைபடறதுக்கு என்ன யோக்யதை இருக்கு? ஆனா அப்படிக்கூட ஒரு அனுபவ லேசமாவது எப்போவாவது ஒரு சமயத்திலே வந்து தொடறதுக்கு பெரியவா அனுக்ரகம், ரமண பகவான் அனுக்ரகம் இருக்கறதாலே அந்த ஆசையும் இல்லாமே இல்லே, ஆனா இப்பவே, இனி எப்பவுமே ஏதாவது ஐடென்டிடி இருந்துதான் ஆகணும் ன்னா அது...." மேல பேச முடியவில்லை.
'சொல்லுப்பா. சொல்லு. கிட்டக்க வந்து சொல்லு' என்று பரிவு சமுத்திரமாகவே கூறியவாறு அருகிருந்தவர்களை தள்ளி இருக்குமாறு கைகளால் விசையாக ஆட்டினார் அருளாளர்.
ஆனால் அவர்கள் தள்ளி போகும் முன்பே, சற்று எட்டத்தில் இருந்தே, நான் திடீரென்று பிறந்த, (அவர் பிறப்பித்த) தெம்பு தெளிவுடன், சொன்னேன்.
'ஏதாவது ஐடென்டிடி இருக்கணும்னா, நான் அம்பாள் கொழந்தை...அசடோ, சமர்த்தோ, எதுவானாலும், சகலரும், சகலமும், வாச்தவமாவே அவ கொழந்தை தான் ஆனதானாலே அந்த உண்மையை சொந்த அனுபவமா தெரிஞ்சுண்டு இருக்கற கொழந்தையாவே இருந்திண்டு இருக்கணும் - ன்றதுதான் ஆசை"
அவள், அவள் என்றேனே ஆனாலும், இவரை நான் அவளுக்கு வேறாக நினைத்தது இல்லை. ஆயினும் கண்ணுக்கு எட்டாத அந்த மஹா பராசக்தியின் மகவு ஆவதற்கு வாய் விட்டு வரம் கேட்க முடிந்ததே தவிர, கண்ணெதிர் காணும் இந்த எளிமை அவதாரத்திடம் அவ்வுறவு கோர ஏனோ தயக்கமும் நடுக்கமும்!
ஸ்ரீ சரணர் திருக்கண் மூடி திறந்தார், அவளுடைய அருளின் முழுமையாக.
கணீரென்று சொன்னார், "இப்படி ஒரு claim , நீ பண்றதே அந்த அனுபவத்தை அவ ஒனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மூலையிலே தூண்டி விட்டு இருக்கறதாலே தான்! ஆரம்பிச்சு வெச்ச அவளே விருத்தியும் பண்ணி குடுப்பா, நீயும் வேண்டிக்கோ, நானும் வேண்டிக்கிறேன்' (மீண்டும் அந்த பெரும் கொடை!)
'இந்த பையன் விநாயகுனி பாடினான். பிள்ளையாருக்கு பண்றா போலவே தனக்கும் அவ ரக்ஷணை ஐ தியகையர்வாள் கேட்டுக்கரார்ந்னு அந்த பேர் வெச்சுண்டு இருக்கற நீயே அர்த்தம் சொன்னே. ஒனக்கும் அப்படியே நடக்கட்டும்' என்றது ஆழ்ந்த அன்பின் ஆரழகோடு சிந்தித்து ஆழ்ந்த அன்பின் ஆரழகுடன் பேசவே அவள் எடுத்திருந்த அவதாரம்.
குறிப்பு: அண்ணா ரா.கணபதி அவர்கள் ஒரு தேர்ந்த தேவி உபாசகர். சரியாக ஐம்பத்தொரு வருடங்கள் (1961 இல் இருந்து 2012 வரை), அந்த நடமாடும் சக்தியிடமே உபதேசம் பெற்று அவள் பொற் பாதங்கள் அடையும் வரை...ஐம்பத்தொரு சக்தி பீடங்கள் ஒன்றுக்கு ஒரு வருடம் என்று இருக்குமோ. தெரியவில்லை.
ஆனால், அந்த தெய்வ வாக்குப்படி, அந்த தெய்வத்தின் வாக்குகளை, அவர் தொகுத்து கிட்டத்தட்ட எண்ணாயிரம் பக்கங்களில், ஏழு தொகுதிகளை, 1976 தொடங்கி எழுத வைத்தது இந்த தெய்வத்தின் குரல் தானோ.
தவிர, எண்ணற்ற புத்தகங்கள், அந்த தெய்வத்தின் பேரிலும், மற்ற பல ஆன்மிக பேராசான்கள் பற்றியும் அவர் எழுதி ஆன்மிக உலகுக்கு, சாதகர்களுக்கு செய்த தொண்டு, என்ன கைம்மாறு செய்ய முடியும் நம்மால்?

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top