காட்டுப்பள்ளியில் முகாமிட்டிருந்த சமயம்.
ஒரு பக்தர் மனதுக்குள் 'தேவி புஜங்க'த்தில் வருகிற
"கதா வா மனோ மே ஸமூலம் விநச்யேத்?" (எப்போது
என் மனம் வேரோடு வெட்டி மாய்க்கப்படும்?) என்ற
வரியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்
மனதுக்குள்தான்.
தூய பொற்சோதியாகப் பூஜைக்குப் பெரியவாள் வருகிறார்.
வெட்டிவேரை உருட்டி ருத்ராக்ஷங்கள் போலாக்கிச்
செய்த மாலை-இந்த மானுட மகாதேவனின் திரு மார்பில்
திகழ்கிறது. பூஜைக்கு அமர வேண்டிய பெரியவாள் இந்த
பக்தரிடம் வருகிறார்.
அந்த வெட்டிவேர் மாலையைத் தம் கழுத்திலிருந்து கழற்றி
பக்தரது கையில் அழுந்த வைக்காத குறையாக மெத்தெனப்
போட்டு அநுக்கிரஹிக்கிறார்.
மனத்தையே மாய்க்கும் வாசகத்தின் ஜபத்தில் இந்த அடியார்
இருந்தார்.எனினும், உண்மையில் மனம் முழுதுமே அற்றுத்
தீர்ந்துவிட வேண்டும் எனத் தவிக்கவில்லை.தாமே
அநாவசியமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரிய புது பந்தம்
மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும் என்றுதான் தவித்து
வந்தார்.
என்ன ஆச்சரியம்! அவர் சித்தத்தை ஸதாஸர்வ காலமும்
பிடித்திழுத்து வந்த அந்த பந்தம் அன்று அவர் காட்டுப்
பள்ளியிலிருந்து புறப்படும்போது,சுவடு கூட இல்லாமல்
வற்றி மறைந்தே விட்டது! இது நடக்கக்கூடிய காரியமா
என்று அவருக்கே அதிசயம்.
ஏன் நடக்கக்கூடாது? பெரியவாளின் கிருபா வேகத்தில்
எதுதான் நடக்க முடியாது?.
"பந்தத்தை வெட்டி வேரோடு வீழ்த்து"
(ஸமூலம் விநச்யேத) என்று பிரார்த்தித்தோம்.
வெட்டிவேர் மாலையையோ பிரஸாதமாகத் தந்தார்.
அதனாலேயே வலிய தொந்தத்தை எளிசாக
வெட்டி விட்டார்' என்று தெளிந்தார்.
பெரியவாள் ஒருவருடைய குலதெய்வத்தையோ, குடி வழக்கத்தையோ,அல்லது அவரது மனக்குறை, உடற் குறையையோ பொருத்து பிரஸாதம் வழங்கும் பொருத்தம் அதிசயமானது. இது அன்றன்றும் நடை பெறுவது. ஓரிரண்டு திருஷ்டாந்தம் மட்டும் சொல்லலாம். காட்டுப்பள்ளியில் முகாமிட்டிருந்த சமயம். ஒரு பக்தர் மனதுக்குள் 'தேவி புஜங்க'த்தில் வருகிற "கதா வா மனோ மே ஸமூலம் விநச்யேத்?" (எப்போது என் மனம் வேரோடு வெட்டி மாய்க்கப்படும்?) என்ற வரியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் மனதுக்குள்தான். தூய பொற்சோதியாகப் பூஜைக்குப் பெரியவாள் வருகிறார். வெட்டிவேரை உருட்டி ருத்ராக்ஷங்கள் போலாக்கிச் செய்த மாலை-இந்த மானுட மகாதேவனின் திரு மார்பில் திகழ்கிறது. பூஜைக்கு அமர வேண்டிய பெரியவாள் இந்த பக்தரிடம் வருகிறார். அந்த வெட்டிவேர் மாலையைத் தம் கழுத்திலிருந்து கழற்றி பக்தரது கையில் அழுந்த வைக்காத குறையாக மெத்தெனப் போட்டு அநுக்கிரஹிக்கிறார். மனத்தையே மாய்க்கும் வாசகத்தின் ஜபத்தில் இந்த அடியார் இருந்தார்.எனினும், உண்மையில் மனம் முழுதுமே அற்றுத் தீர்ந்துவிட வேண்டும் எனத் தவிக்கவில்லை.தாமே அநாவசியமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரிய புது பந்தம் மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும் என்றுதான் தவித்து வந்தார். என்ன ஆச்சரியம்! அவர் சித்தத்தை ஸதாஸர்வ காலமும் பிடித்திழுத்து வந்த அந்த பந்தம் அன்று அவர் காட்டுப் பள்ளியிலிருந்து புறப்படும்போது,சுவடு கூட இல்லாமல் வற்றி மறைந்தே விட்டது! இது நடக்கக்கூடிய காரியமா என்று அவருக்கே அதிசயம். ஏன் நடக்கக்கூடாது? பெரியவாளின் கிருபா வேகத்தில் எதுதான் நடக்க முடியாது?. "பந்தத்தை வெட்டி வேரோடு வீழ்த்து" (ஸமூலம் விநச்யேத) என்று பிரார்த்தித்தோம். வெட்டிவேர் மாலையையோ பிரஸாதமாகத் தந்தார். அதனாலேயே வலிய தொந்தத்தை எளிசாக வெட்டி விட்டார்' என்று தெளிந்தார்.
No comments:
Post a Comment