ஜூன் 12, 2013. காஞ்சி ஆச்சார்யர்கள் கோவில், கோவிந்தபுரம், கும்பகோணம்.
கோவில் தரிசனம் முடிந்ததும் மேட்டூர் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் அனுஷ்டானத்திற்கு கிளம்பிவிட்டார், சாயங்காலம் தான் பார்க்கமுடியும் என்று சொன்னார்கள். எப்படியும் அப்போதே சந்தித்து விட வேண்டும் என்று நினை...த்துக்கொண்டு நின்றிருந்தோம். மஹா பெரியவா அனுக்ரஹம், திரு.வேங்கட சுப்பிரமணியன் மூலம் வந்தது. ( இவர்தான் தன் பெண் கல்யாணத்தை முன்னிட்டு சென்னையில் சஹஸ்ர போஜனம் நடத்தியவர். மஹா பெரியவா பக்தர். கதிராமங்கலத்தில் வேத பண்டிட்டுகள், அக்னி ஹோத்ரிகள், வேத பாடசாலை, கோ சாலை, குளம், அம்பாள், ஆச்சார்யாள் கோவில், காவிரி படித்துறை மற்றும் என் போன்றோரை உள்ளடக்கிய அக்ரஹாரம் ஒன்றை டெவெலப் செய்து வருகிறார். திரு வெண் காட்டில் வேத பாடசாலை குழந்தைகளைக் கொண்டு மஹா பெரியவா ஜெயந்திக்கு சிறப்பாக விழா எடுக்கிறார்). அவரை சார்ந்தவர்கள் கல்யாண பத்திரிகையுடன் மேட்டூர் சுவாமிகளின் ஆசியை முன்னிட்டு வந்திருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்!
நான் அவரை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். பேச்சே வரவில்லை. ஆனால், அவர் சகஜமாக பேசினார். தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, நேபாளம், சீனாவுடன் ஒப்பீடு என்று பல விஷயங்களை வெகு ஆழமாக அலசினார். அவர் இவ்வளவு எல்லாம் பேசுவார் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. பிறகு அவரை நமஸ்கரித்தோம். ஆசி வழங்கினார். பின்னர் சொன்னார் 'எல்லாரும் பெரியவா, பெரியவா னு சொல்றேள். அவர் சொன்னத எவ்வளவு பேர் பாலோ பண்றேள்?'
No comments:
Post a Comment