Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, July 31, 2013

Resource: Shri Krishnamurthy Krishnaiyer ஜகத்குரு

மஹா காவ் கேம்ப். தனுர் மாசம் ஆனதால், மஹா பெரியவா மூணு மணிக்கே எழுந்து, ஒரு மணி நேர ஜபம் பண்ணி, ஸ்நானம் செய்து, பூஜையை ஆரம்பித்து விடுவார்.

ஒரு நாள், ஸ்ரீ பெரியவா ஜபம் முடித்து தன்அறையை சுத்தம் செய்தபடி மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியே போட்டுக் கொண்டிருந்தார் (ஸ்ரீ வேதபுரியோ, நானோ அவருக்கு தண்ணீர் கொண்...டு வந்து கொடுப்போம்). ஸ்ரீ பாலு பெரியவா ஸ்நானத்திற்கு கிணற்றிலிருந்து ஜலம் இறைத்து வைத்து, ஸ்ரீ வேதபுரியிடம் சொல்லி விட்டு, பொங்கல் பிரசாதம் செய்வதற்கு போனார். நான், ஸ்ரீ ஸ்ரீகண்டன், ஸ்ரீ கண்ணன் எல்லோரும் படுத்துக் கொண்டிருந்தோம். அன்றைக்கு ஸ்ரீ பெரியவா சங்கல்பத்தின் போது பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்கவில்லை. தானே செய்து கொண்டு விட்டார். ஆனாலும், கரணத்தில் சந்தேகம் வந்து விட்டது போலும். ஸ்ரீ வேதபுரியிடம் ஜாடையாக கேட்டார் (மௌன வ்ரதம்). அவரும் 'தெரியும்' என்றார். ஸ்ரீ பெரியவா 'எங்கே சொல்' என்பது போல் சைகை செய்தார். உடனே, ஸ்ரீ வேதபுரி ஒரு 'குட்டிக்கரணம்' போட்டார். திடீரென்று ஸ்ரீ வேதபுரி ஜன்னல் பக்கத்தில் இருந்து காணாமல் போனதால் ஸ்ரீ மஹா பெரியவா அவரை தேடினார். ஸ்ரீ வேதபுரி கண்ணில் பட்டதும், மறுபடி அதே மாதிரி ஜாடை செய்து கேட்டார். அவரும், 'இதோ, இப்படித்தான் போட்டேன்' என்று மீண்டும் ஒரு 'குட்டிக்கரணம்' போட்டுக் காட்டினார். அந்த வேகத்தில், ஸ்ரீ பாலு கொண்டு வந்து வைத்திருந்த குடங்கள் மேல் விழுந்து, ஜலம் கீழே கொட்டி பிரளயம் ஆனது. ஸ்ரீ வேதபுரியின் வேஷ்டி ஈரமாகி விட்டது. சத்தம் கேட்டு உள்ளே வந்த ஸ்ரீ பாலு, நடந்த கூத்தை பார்த்து ஸ்ரீ வேதபுரியை சத்தம் போட்டு விட்டு, மறுபடி ஜலம் கொண்டு வந்து வைத்தார். இதற்குள், ஸ்ரீ பெரியவா கேட்டதை ஒரு வழியாக புரிந்து கொண்ட ஸ்ரீ வேதபுரி அன்றைய கரணத்தை சொன்னார். ஸ்ரீ பிரதோஷம் வெங்கட்ராம மாமா இந்த சம்பவத்தை மறுபடி மறுபடி சொல்லக் கேட்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
(என்னே, ஸ்ரீ வேதபுரியின் குரு பக்தி. எந்த கேள்வியும் கேட்காமல் குரு வாக்கை தட்டாமல் செய்வது எவ்வளவு உயர்ந்த குணம்.
எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் அந்த நாட்கள். எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் இவர்கள் எல்லோரும்).

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

Monday, July 29, 2013

Varagooran Narayanan "காஞ்சித் தாத்தா இல்லை,நேக்கு காட்ச் தாத்தா தான்" (ஒர் அனுபவக் கவிதை) எழுதியவர்;கவியோகி வேதம். தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சுவாமிநாதன் எனும் ஓர் தூயபக்தர்!அதிகாரி
அவாமிகுதியால்,ஆழ்ந்த தொண்டுள்ளத்தால்,
காஞ்சி மாமுனிவரை அடிக்கடி கண்டு வந்தார்
வாஞ்சைமிகு அவர் பேரன் 'ப்ரேம்சங்கர்' கூட வந்தான்.
இரண்டுவயது பாலகன்! இவனுக்கு மாமுனிவர்
கற்கண்டு கொடுத்தபின், "எனக்கென்ன தரப்போற?
என்றே கேட்டவுடன் இளம்குழந்தை துள்ளலுடன்
மின்னும் ஓர் துளசிமாலை எடுத்து இவர் கழுத்திலிட,
பெருமையுடன் வருகையில் "காட்ச்" என்றே பிடித்துவிட்டார்!
அருமைப் பெரியவாளை அன்று முதல் "காட்ச் தாத்தா"
என்றுதான் அவன் நாக்கு இனிமைபட அழைத்தது.;
(வன்மையாய்) அவன் பெற்றோர்,"காஞ்சித்தாத்தான்னு
சொல்லணும்டா,காட்ச் தாத்தான்னு சொன்னா அடி" என்றார்!
மெல்லிய தென்றலைக் கிளையை ஒடி என்றால் ஒடித்திடுமா?
நிலவைப்போய் மிரட்டினால் நிமிர்ந்து அது சுட்டுடுமா?
குலவும் குயிலைப்போய் "கர்ஜி" என்றால் கர்ஜிக்குமா?
அதுபோல் அவன் வாயில் காட்ச் தாத்தா தான்! அடடா!
அவன் போக்கில் அழைப்பதையே மாமுனியும் மிக ரசித்தார்.
"ரசனை"யின் மறுபேரே குழந்தையடா!- (இது) ரட்சகர்!
ரசனையிலா "ராட்சஸம்" நம்மிடமே",என்றாராம்.
பிரேம் சங்கர் கனவில் போய்ப் ப்ரம்மமாய் காட்சி தந்தார்!
பிரேமையுடன் நமஸ்கரித்தேன்! "பெரும் லீலை" யார் அறிவார்?

"காஞ்சித் தாத்தா இல்லை,நேக்கு காட்ச் தாத்தா தான்"
(ஒர் அனுபவக் கவிதை)

எழுதியவர்;கவியோகி வேதம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சுவாமிநா தன் எனும் ஓர் தூயபக்தர்!அதிகாரி
அவாமிகுதியால்,ஆழ்ந்த தொண்டுள்ளத்தால்,
காஞ்சி மாமுனிவரை அடிக்கடி கண்டு வந்தார்
வாஞ்சைமிகு அவர் பேரன் 'ப்ரேம்சங்கர்' கூட வந்தான்.

இரண்டுவயது பாலகன்! இவனுக்கு மாமுனிவர்
கற்கண்டு கொடுத்தபின், "எனக்கென்ன தரப்போற?
என்றே கேட்டவுடன் இளம்குழந்தை துள்ளலுடன்
மின்னும் ஓர் துளசிமாலை எடுத்து இவர் கழுத்திலிட,

பெருமையுடன் வருகையில் "காட்ச்" என்றே பிடித்துவிட்டார்!
அருமைப் பெரியவாளை அன்று முதல் "காட்ச் தாத்தா"
என்றுதான் அவன் நாக்கு இனிமைபட அழைத்தது.;
(வன்மையாய்) அவன் பெற்றோர்,"காஞ்சித்தாத்தான்னு

சொல்லணும்டா,காட்ச் தாத்தான்னு சொன்னா அடி" என்றார்!
மெல்லிய தென்றலைக் கிளையை ஒடி என்றால் ஒடித்திடுமா?
நிலவைப்போய் மிரட்டினால் நிமிர்ந்து அது சுட்டுடுமா?
குலவும் குயிலைப்போய் "கர்ஜி" என்றால் கர்ஜிக்குமா?

அதுபோல் அவன் வாயில் காட்ச் தாத்தா தான்! அடடா!
அவன் போக்கில் அழைப்பதையே மாமுனியும் மிக ரசித்தார்.
"ரசனை"யின் மறுபேரே குழந்தையடா!- (இது) ரட்சகர்!
ரசனையிலா "ராட்சஸம்" நம்மிடமே",என்றாராம்.

பிரேம் சங்கர் கனவில் போய்ப் ப்ரம்மமாய் காட்சி தந்தார்!
பிரேமையுடன் நமஸ்கரித்தேன்! "பெரும் லீலை" யார் அறிவார்?

Saturday, July 27, 2013

படியளந்த பரமன் (தினமலர்)

காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்தவர் சந்திரமவுலி கனபாடிகள். அவர் சொன்ன நிகழ்வைக்கேளுங்கள்.
1990, மாசி மகாசிவராத்திரி. இந்த நாளில் மகாபெரியவர் மானசீக பூஜை செய்வார். சிவராத்திரியன்று அவர் உறங்குவதில்லை. நான்கு கால பூஜை செய்வார். மூன்றாவது காலம் நள்ளிரவு 2 மணியிலிருந்து 3.30 வரை. இதை "லிங்கோத்பவ காலம்' என்பர். அந்த வேளையில், ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யச் செல்வார். அன்று சங்கரமடம் அருகிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்நிதித் தெருவில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். யாருக்காவது ஜுரம் வந்தால், அந்த சுவாமிக்கு மிளகுரசம் சாதம் நைவேத்யம் செய்து பிரார்த்தனை செய்வதுண்டு.
அப்போது, பெரியவருடன் சென்ற நான்,"" இன்று சிவராத்திரி என்பதால், ஜனங்களும் தங்களைத் தரிசிக்க அதிகமாக வருவார்கள். பகல் பூராவும் உபவாசம் வேறு (உண்ணாமல் இருப்பது) இருந்துள்ளீர்கள். அதனால், இந்த இரவில் வெளியே செல்ல உங்கள் உடல்நிலை இடம் கொடுக்காது. மேலும், தாங்களே பரமேஸ்வரனாக இருக்கும் போது, நீங்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்,'' என்றேன்.
பெரியவர் என்னிடம் பதிலேதும் சொல்லவில்லை. மவுனமாகக் கிளம்பி ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று விட்டார். அங்கு சிவாச்சாரியார் மட்டுமே இருந்தார். யாரோ இரண்டு சேவார்த்திகள் (பக்தர்கள்) சிவதரிசனம் செய்து விட்டு வெளியே
உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் உள்ளே சென்று பரமேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். பிறகு மடத்துக்கு கிளம்பினார்.
நான்காம் கால பூஜையை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஸ்நானம் செய்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அந்த சமயம், ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்திருந்தார். அவர் அதை என்னிடம் கொடுத்து பெரியவரிடம் சமர்ப்பிக்கச் சொன்னார். நான் அதை அவரிடம் கொண்டு சென்ற போது ""என்ன பிரசாதம்?'' என்று பெரியவர் கேட்டார்.
"ஜுரஹரேஸ்வரர் பிரசாதம்' என்றேன்.
பிரசாதம் கொண்டு வந்தஅர்ச்சகரை அழைத்து,""சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?'' என்று கேட்டார்.
"பெரியவாள் அனுகிரஹத்தால் 3800 ரூபாய் வந்தது,'' என்றார் அர்ச்சகர்.
"இதுவரை எவ்வளவுகிடைத்தது?''
""200 ரூபாயைத் தாண்டியதில்லை,'' என்றார் அர்ச்சகர்.
உடனே என்னிடம், "நீ எனக்கு வயசாயிடுச்சு. கோயிலுக்குப் போக வேண்டாம் என்றாய். நான் போகவில்லையென்றால், ஜுரஹரேஸ்வரர் கோயில் இருப்பதே இங்கு வந்த பலருக்கு தெரிந்திருக்காது. என்னையே சுத்திண்டு இருப்பா! நான் போனதால் மற்றவர்களும் போனார்கள். குருக்களுக்கும் இவ்வளவுவருமானம் வந்தது! அவருக்கும் ஜுரஹரேஸ்வரர் படியளந்தார்,'' என்றார்.
"நான் சொன்னது தவறு,'' என்று சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்

படியளந்த பரமன்

(இன்றைய தினமலர்)

காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்தவர் சந்திரமவுலி கனபாடிகள். அவர் சொன்ன நிகழ்வைக்கேளுங்கள். 1990, மாசி மகாசிவராத்திரி. இந்த நாளில் மகாபெரியவர் மானசீக பூஜை செய்வார். சிவராத்திரியன்று அவர் உறங்குவதில்லை. நான்கு கால பூஜை செய்வார். மூன்றாவது காலம் நள்ளிரவு 2 மணியிலிருந்து 3.30 வரை. இதை "லிங்கோத்பவ காலம்' என்பர். அந்த வேளையில், ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யச் செல்வார். அன்று சங்கரமடம் அருகிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்நிதித் தெருவில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். யாருக்காவது ஜுரம் வந்தால், அந்த சுவாமிக்கு மிளகுரசம் சாதம் நைவேத்யம் செய்து பிரார்த்தனை செய்வதுண்டு.
அப்போது, பெரியவருடன் சென்ற நான்,"" இன்று சிவராத்திரி என்பதால், ஜனங்களும் தங்களைத் தரிசிக்க அதிகமாக வருவார்கள். பகல் பூராவும் உபவாசம் வேறு (உண்ணாமல் இருப்பது) இருந்துள்ளீர்கள். அதனால், இந்த இரவில் வெளியே செல்ல உங்கள் உடல்நிலை இடம் கொடுக்காது. மேலும், தாங்களே பரமேஸ்வரனாக இருக்கும் போது, நீங்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்,'' என்றேன்.

பெரியவர் என்னிடம் பதிலேதும் சொல்லவில்லை. மவுனமாகக் கிளம்பி ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று விட்டார். அங்கு சிவாச்சாரியார் மட்டுமே இருந்தார். யாரோ இரண்டு சேவார்த்திகள் (பக்தர்கள்) சிவதரிசனம் செய்து விட்டு வெளியே
உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் உள்ளே சென்று பரமேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். பிறகு மடத்துக்கு கிளம்பினார்.

நான்காம் கால பூஜையை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஸ்நானம் செய்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அந்த சமயம், ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்திருந்தார். அவர் அதை என்னிடம் கொடுத்து பெரியவரிடம் சமர்ப்பிக்கச் சொன்னார். நான் அதை அவரிடம் கொண்டு சென்ற போது ""என்ன பிரசாதம்?'' என்று பெரியவர் கேட்டார்.

"ஜுரஹரேஸ்வரர் பிரசாதம்' என்றேன்.

பிரசாதம் கொண்டு வந்தஅர்ச்சகரை அழைத்து,""சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?'' என்று கேட்டார்.

""பெரியவாள் அனுகிரஹத்தால் 3800 ரூபாய் வந்தது,'' என்றார் அர்ச்சகர்.

""இதுவரை எவ்வளவுகிடைத்தது?''

""200 ரூபாயைத் தாண்டியதில்லை,'' என்றார் அர்ச்சகர்.

உடனே என்னிடம், ""நீ எனக்கு வயசாயிடுச்சு. கோயிலுக்குப் போக வேண்டாம் என்றாய். நான் போகவில்லையென்றால், ஜுரஹரேஸ்வரர் கோயில் இருப்பதே இங்கு வந்த பலருக்கு தெரிந்திருக்காது. என்னையே சுத்திண்டு இருப்பா! நான் போனதால் மற்றவர்களும் போனார்கள். குருக்களுக்கும் இவ்வளவுவருமானம் வந்தது! அவருக்கும் ஜுரஹரேஸ்வரர் படியளந்தார்,'' என்றார்.

""நான் சொன்னது தவறு,'' என்று சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்

Thursday, July 25, 2013

Mannargudi Sitaraman Srinivasan
ஸ்ரீ பெரியவாளிடம் நாற்பது வருடங்களுக்கு மேல் பூஜா கைங்கர்யம் செய்து வந்தார், குள்ளச்சீனு அய்யர் என்பவர். அவருடைய புத்திரர் ஸ்ரீ மடத்தில் இப்போது சாமவேத அத்யாபகராயிருக்கும் ஸ்ரீ சந்திர மௌளிச்ரௌதிகள் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன் (2000 ஆண்டு வாக்கில்) உடலில் திடீரென்று வாயுத்தொல்லை அதிகமாகி எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் வயதான தாயாரையும், குழந்தைகளையும் தன்னிடத்தில் படிக்கும் மாணவர்களையும் விட்டு விட்டு, எப்படி எங்கே போவது ? - என்று நிலைகொள்ளாமல் ஸ்ரீ பெரியவாளையே பிரார்த்தித்துக்கொண்டு இரவில் படுத்துக்கொண்டார். அப்பொழுது கனவில் கையில் தண்டமில்லாத சன்யாஸிபோல் தோற்றமளித்த ஒருவர் சந்திரமௌளியை, ‘என் பின்னாலே வா’ என்று அழைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குச் சென்று, ஓர் இடுக்கு வழியாக உள்ளே சென்றுவிட்டார். மௌளி மட்டும் வெளியே நின்றுகொண்டு அந்தப் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது ஸ்ரீ பெரியவாள், வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறு இரு சன்யாஸிகள். ஸ்ரீ பெரியவாள் சந்திரமௌளியைக் கூப்பிட்டு கையில் இருந்த எதோ ஒரு யந்திரம் எழுதியிருந்த தகட்டை நன்றாகத் துடைத்துவிட்டு ‘என்ன எழுதியிருக்கிறது?’ என்று படிக்கும்படி உத்திரவிட்டார்கள்.
மௌளி, “அது கன்னட எழுத்து மாதிரியிருக்கிறது; எனக்குக் கன்னடம் படிக்கத் தெரியாது; பேச மட்டும்தான் தெரியும்” என்றார். அதை அழித்துவிட்டு மறுபடியும் காண்பித்து, “படி” என்று உத்திரவிட்டார்கள். “இந்த லிபியும் எனக்கு தெரியாது; தெலுங்கு எழுத்துப்போல் இருக்கிறது” என்றார் சந்திரமௌளி. அதன்பிறகு பெரியவா மறுபடியும் யந்திரத்தைத் துடைத்துவிட்டு பிரகாசமான எழுத்தில் இருந்ததைப் படிக்கும்படி உத்திரவிட்டார்கள். அதில் “தும் துர்காயை நமஹ’ என்று சம்ஸ்கிருத்தில் பளிச்சென்று எழுதியிருந்தது. “இதுதான் நான் உனக்குச் செய்யும் உபதேசம் இதையே ஜபம் செய்” என்று அனுக்ரஹித்தார்கள்.
உடனே விழிப்பு வந்துவிட்டது, சந்திரமௌளிக்கு.
மறு நாள் முதல் மௌளி அந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார். படிப்படியாக உடல் உபத்திரவம் பரிபூரணமாகக் குணமடைந்தார்.
சில தினங்கள் ஆயின. மறுபடி ஒரு கனவு. கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு, லம்பாடி போல் தோற்றமளித்த ஒரு பெண்மணி, மௌளி சென்ற இடமெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தாள். எங்கு போனாலும், ஓடினாலும் மதில் மேல் ஏறிக் குதித்துச் சென்றாலும் கதவைச் சாத்திக்கொண்டு கோயிலுக்குச் சென்றாலும், அவரை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தாள்.
மௌளிக்குப் பயத்துடன் விழிப்பு வந்துவிட்டது.
தற்செயலாக கும்பகோணத்திலிருந்து வந்த ஸ்ரீ வித்யா உபாசகரான தினகர சாஸ்திரிகளிடம் இதைப்பற்றிக் கேட்டார். “நான் பல வருஷங்களாக ஜபம் செய்தும் எனக்கு துர்காம்பிகையின் தரிசனம் கிடைக்கவில்லை. உனக்கு ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹம்தான். கனவில் வந்தது, சாட்சாத் துர்காதேவியே !” என்று சொன்ன்னர்.
ஒரு நாள் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில், துவஜஸ்தம்பத்தின் அருகில், இந்த துர்கா மந்திரத்தை ஜபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது, கோயில் ஸ்தானிகர், ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள், “அம்பாள் சந்நிதியில் வந்து ஜபம் செய்” என்று அவரை அழைத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்தார். பின், யாரோ கழுத்தில் ஏதோ கட்டுவதுபோல் தெரிந்ததும் கண்ணைத் திறந்து பார்த்தால், காமகோடி சாஸ்திரிகள் தன் கையில் கட்டியிருந்த காப்புக்கயிற்றைக் கழற்றி, “இன்று காப்புக் கட்டு பூர்த்தி தினம்; அம்பால் பிரசாதம்; கழுத்தில் அணிந்துகொள்” என்று கூறிக்கொண்டே கட்டி விட்டார்.
மறு நாள் ஸ்ரீ மௌளி காமகோடி சாஸ்திரிகளைச் சந்தித்தபோது ஸ்ரீ பெரியவாள் கனவில் அநுக்ரஹித்ததையும், முதல் நாள் சாஸ்திரிகள் தம் கழுத்தில் கட்டிய காப்பையும் காட்டி சந்தோஷப்பட்டார்.
காமகோடி சாஸ்திரிகள், தனக்கு துவஜஸ்தம்பத்திலிருந்த மௌளியை சந்நிதிக்கு அழைத்து வந்ததோ, தன் கைக்காப்பைக் கழற்றி மௌளியின் கழுத்தில் கட்டியதோ எதுவும் தெரியவே தெரியாது !”
சந்திரமௌளியின் கையில் கட்டிய காப்பு இன்னும் இருக்கிறதே ? அது கனவுப் பொருள் இல்லையே ? அப்படியானால், ஸ்தானிகராக வந்தது யார் ? என்று திகைப்புடன் கூறினார்.
Source: Maha Periyavaal Darisana Anubhavangal
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். — with
Panneerselvam Govindaraj.

Tuesday, July 23, 2013

Chandra Subramaniam MAHA PERIYAVA THIRU ADIGAL SARANAM !!!! The Light that shines in Kanchi ........................................... ... Sastra Ratnakara S.R. Krishnamurthi Sastrigal

Kanchi Paramacharya is the very embodiment of all the traits of a liberated soul. The very sight of His Holiness has an enabling power. He showers His grace and compassion in all, they are high or low. It does not wait for any special reason or pretext. It is spontaneous like the season of spring which brings in its wake joy and solace to all. That His Grace is irresistible and winning is evidenced by my own experience which I relate below.
A few years ago, I was restless and disturbed. I was developing a distaste towards everything around with the result that I was unable to study the philosophical works. What was more alarming, I started losing retentive memory. I could not recall all that I had learned over the decades. Medical and other kinds of treatment proved ineffective. Everyone in the family grew sad and were much worried.
At this critical juncture I learnt that Sri Paramacharya had returned to Kanchi from Maharashtra, at the request by His Holiness Sri Jayendra Sarasvathi Swamigal to perform the Chaturmasya observance in Kanchi. Immediately I hurried to Kanchi with my family and prostrated before His Holiness in total surrender to him.
I placed before His Holiness all my agonies and anguishes. I particularly mentioned my tragedy of the loss of memory and the absolute happiness I had in the matter of teaching our sacred lore. For, I had been commissioned by His Holiness earlier to take classes in logic for His Holiness Sri Jayendra Sarasvathi Swamigal.
The Paramacharya then asked me to go over and stay in the Kanchi Sankara Math permanently. He ordered one of his attendants to fetch a Rudrashamala. When it was brought, he was touching the rosary with his palms, all the time enquiring about the welfare of my family. Then he commanded. "Wear this rosary". I received it and wore it at once.
That was all. In the following days my ailments and afflictions began unbelievably to disappear and, gradually, the memory of all that I had studied begun to return. Thus in a matter of days, I got back my powers of teaching.
The "Sri Rudram" tells us that the holy hands that worship Lord Rudra are lordlier than Lord Rudra Himself, (Bhagavattarah). This is proved in the instance of Sri Paramacharya.

MAHA PERIYAVA THIRU ADIGAL SARANAM !!!!

The Light that shines in Kanchi

Sastra Ratnakara S.R. Krishnamurthi Sastrigal

Sunday, July 21, 2013

Varagooran Narayanan மரபு மீறுபவன் மூடன் காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் (12-07-2013) தினமணியில் வந்த அருள் வாக்கு)

சம்ப்ரதாயத்துக்கு முரணாக வேறு கருத்தைச் சொல்கிறவனை ஆசார்யாள் (ஆதி சங்கர பகவத்பாதர்) மூர்க்கன் என்றே சொல்வார். அவர் கருணாலயமாக இருந்தவர். அவரே இப்படிக் கடுமையாகச் சொன்னார் என்றால், பரம சத்யம் என்று அவருக்குத் தெரிந்த ஒன்றை எப்படிச் சொல்லாமலிருக்க முடியும்?
... மக்களின் நல்லதற்காகவே, அவர்களை நல்ல வழியில் கொண்டு வர வேணும் என்ற கருணையினாலேயே, சம்ப்ரதாயத்தை ஒட்டியே போங்கள்; சொந்த முடிவு பண்ணி வீணாகப் போகாதீர்கள் என்பதை இப்படிக் கண்டிப்பான வார்த்தை போட்டு உபதேசித்தார்.
அழகான ஒரு பெரிய மரபு வழிவழியாக வந்திருக்கும்போது, அதை விட்டு விட்டு, பிடிவாதமாகத் தன்னையே வீண் பண்ணிக் கொள்கிறவன் மூர்க்கன் இல்லாமல் வேறே என்ன? அதைத்தான் சொன்னார்.
சம்ப்ரதாயத்தில் வராத புது அர்த்தத்தை சாஸ்திரங்களில் புகுத்திச் சொல்கிறவனை ஆசார்யாள் ஆத்மஹா, அதாவது தன்னையே கொலை பண்ணிக் கொண்டவன், மூடன், மூடனாயிருந்தும் வாயை மூடிக் கொண்டிருக்காமல் ஊருக்கு உபதேசம் பண்ணி மற்றவர்களையும் குழப்புகிறவன் என்றெல்லாம் பலமாகவே கண்டித்து கீதா பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
எனவே அவன் அத்தனை சாஸ்திரமும் படித்து அறிந்தவனாக இருந்தாலும் அவனை மூர்க்கன் என்றே தள்ள வேண்டும் என்கிறார்.

Friday, July 19, 2013

Source: Shri.Mannargudi Sitaraman Srinivasan பெரியவாள் ஒருவருடைய குலதெய்வத்தையோ, குடி வழக்கத்தையோ,அல்லது அவரது மனக்குறை, உடற் குறையையோ பொருத்து பிரஸாதம் வழங்கும் பொருத்தம் அதிசயமானது. இது அன்றன்றும் நடை பெறுவது. ஓரிரண்டு திருஷ்டாந்தம் மட்டும் சொல்லலாம்

காட்டுப்பள்ளியில் முகாமிட்டிருந்த சமயம்.

ஒரு பக்தர் மனதுக்குள் 'தேவி புஜங்க'த்தில் வருகிற
"கதா வா மனோ மே ஸமூலம் விநச்யேத்?" (எப்போது
என் மனம் வேரோடு வெட்டி மாய்க்கப்படும்?) என்ற
வரியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்
மனதுக்குள்தான்.

தூய பொற்சோதியாகப் பூஜைக்குப் பெரியவாள் வருகிறார்.
வெட்டிவேரை உருட்டி ருத்ராக்ஷங்கள் போலாக்கிச்
செய்த மாலை-இந்த மானுட மகாதேவனின் திரு மார்பில்
திகழ்கிறது. பூஜைக்கு அமர வேண்டிய பெரியவாள் இந்த
பக்தரிடம் வருகிறார்.

அந்த வெட்டிவேர் மாலையைத் தம் கழுத்திலிருந்து கழற்றி
பக்தரது கையில் அழுந்த வைக்காத குறையாக மெத்தெனப்
போட்டு அநுக்கிரஹிக்கிறார்.
மனத்தையே மாய்க்கும் வாசகத்தின் ஜபத்தில் இந்த அடியார்
இருந்தார்.எனினும், உண்மையில் மனம் முழுதுமே அற்றுத்
தீர்ந்துவிட வேண்டும் எனத் தவிக்கவில்லை.தாமே
அநாவசியமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரிய புது பந்தம்
மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும் என்றுதான் தவித்து
வந்தார்.

என்ன ஆச்சரியம்! அவர் சித்தத்தை ஸதாஸர்வ காலமும்
பிடித்திழுத்து வந்த அந்த பந்தம் அன்று அவர் காட்டுப்
பள்ளியிலிருந்து புறப்படும்போது,சுவடு கூட இல்லாமல்
வற்றி மறைந்தே விட்டது! இது நடக்கக்கூடிய காரியமா
என்று அவருக்கே அதிசயம்.
ஏன் நடக்கக்கூடாது? பெரியவாளின் கிருபா வேகத்தில்
எதுதான் நடக்க முடியாது?.
"பந்தத்தை வெட்டி வேரோடு வீழ்த்து"
(ஸமூலம் விநச்யேத) என்று பிரார்த்தித்தோம்.

வெட்டிவேர் மாலையையோ பிரஸாதமாகத் தந்தார்.
அதனாலேயே வலிய தொந்தத்தை எளிசாக
வெட்டி விட்டார்' என்று தெளிந்தார்.
பெரியவாள் ஒருவருடைய குலதெய்வத்தையோ, குடி வழக்கத்தையோ,அல்லது அவரது மனக்குறை, உடற் குறையையோ பொருத்து பிரஸாதம் வழங்கும் பொருத்தம் அதிசயமானது. இது அன்றன்றும் நடை பெறுவது. ஓரிரண்டு திருஷ்டாந்தம் மட்டும் சொல்லலாம். காட்டுப்பள்ளியில் முகாமிட்டிருந்த சமயம். ஒரு பக்தர் மனதுக்குள் 'தேவி புஜங்க'த்தில் வருகிற "கதா வா மனோ மே ஸமூலம் விநச்யேத்?" (எப்போது என் மனம் வேரோடு வெட்டி மாய்க்கப்படும்?) என்ற வரியையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் மனதுக்குள்தான். தூய பொற்சோதியாகப் பூஜைக்குப் பெரியவாள் வருகிறார். வெட்டிவேரை உருட்டி ருத்ராக்ஷங்கள் போலாக்கிச் செய்த மாலை-இந்த மானுட மகாதேவனின் திரு மார்பில் திகழ்கிறது. பூஜைக்கு அமர வேண்டிய பெரியவாள் இந்த பக்தரிடம் வருகிறார். அந்த வெட்டிவேர் மாலையைத் தம் கழுத்திலிருந்து கழற்றி பக்தரது கையில் அழுந்த வைக்காத குறையாக மெத்தெனப் போட்டு அநுக்கிரஹிக்கிறார். மனத்தையே மாய்க்கும் வாசகத்தின் ஜபத்தில் இந்த அடியார் இருந்தார்.எனினும், உண்மையில் மனம் முழுதுமே அற்றுத் தீர்ந்துவிட வேண்டும் எனத் தவிக்கவில்லை.தாமே அநாவசியமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரிய புது பந்தம் மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும் என்றுதான் தவித்து வந்தார். என்ன ஆச்சரியம்! அவர் சித்தத்தை ஸதாஸர்வ காலமும் பிடித்திழுத்து வந்த அந்த பந்தம் அன்று அவர் காட்டுப் பள்ளியிலிருந்து புறப்படும்போது,சுவடு கூட இல்லாமல் வற்றி மறைந்தே விட்டது! இது நடக்கக்கூடிய காரியமா என்று அவருக்கே அதிசயம். ஏன் நடக்கக்கூடாது? பெரியவாளின் கிருபா வேகத்தில் எதுதான் நடக்க முடியாது?. "பந்தத்தை வெட்டி வேரோடு வீழ்த்து" (ஸமூலம் விநச்யேத) என்று பிரார்த்தித்தோம். வெட்டிவேர் மாலையையோ பிரஸாதமாகத் தந்தார். அதனாலேயே வலிய தொந்தத்தை எளிசாக வெட்டி விட்டார்' என்று தெளிந்தார்.

Wednesday, July 17, 2013

Kanchi paramacharya and the cosmic secret

The only ancient temple where Lord Nataraja is the presiding deity is located in Chidambaram and the unique feature of that temple is the famous “Chidambara rahasyam” (Cosmic secret) that is written in the Bilwa leaves kept in the sanctum sanctorum. Nobody knows the details of the inscriptions. By the directive of Kanchi Mahaswami Sri Chandrasekarendra Saraswati Swamigal, a replica of this temple was built in Satara in Maharashtra called “Uttara Chidambaram”.
Great care was taken to ensure that every bit of it looks similar to the original and then came the most important step. How to replicate the Chidamabara rahasyam? After all, nobody knows the details! Except of course, the all-knowing Almighty!
Mahaswami came to the rescue. He dictated the entire rahasyam to a Panditji who wrote it on the Bilwa leaves and the moment the job was done, Mahaswami said “ May you forget the Rahasyam right now!” and lo! The Pandit forgot the whole thing. Clearly, it is God who gives us remembrance and removes it too.

Monday, July 15, 2013

Krishnamurthy Krishnaiyer ஜகத்குரு 15

ஜூன் 12, 2013. காஞ்சி ஆச்சார்யர்கள் கோவில், கோவிந்தபுரம், கும்பகோணம்.

கோவில் தரிசனம் முடிந்ததும் மேட்டூர் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் அனுஷ்டானத்திற்கு கிளம்பிவிட்டார், சாயங்காலம் தான் பார்க்கமுடியும் என்று சொன்னார்கள். எப்படியும் அப்போதே சந்தித்து விட வேண்டும் என்று நினை...த்துக்கொண்டு நின்றிருந்தோம். மஹா பெரியவா அனுக்ரஹம், திரு.வேங்கட சுப்பிரமணியன் மூலம் வந்தது. ( இவர்தான் தன் பெண் கல்யாணத்தை முன்னிட்டு சென்னையில் சஹஸ்ர போஜனம் நடத்தியவர். மஹா பெரியவா பக்தர். கதிராமங்கலத்தில் வேத பண்டிட்டுகள், அக்னி ஹோத்ரிகள், வேத பாடசாலை, கோ சாலை, குளம், அம்பாள், ஆச்சார்யாள் கோவில், காவிரி படித்துறை மற்றும் என் போன்றோரை உள்ளடக்கிய அக்ரஹாரம் ஒன்றை டெவெலப் செய்து வருகிறார். திரு வெண் காட்டில் வேத பாடசாலை குழந்தைகளைக் கொண்டு மஹா பெரியவா ஜெயந்திக்கு சிறப்பாக விழா எடுக்கிறார்). அவரை சார்ந்தவர்கள் கல்யாண பத்திரிகையுடன் மேட்டூர் சுவாமிகளின் ஆசியை முன்னிட்டு வந்திருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்!
நான் அவரை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். பேச்சே வரவில்லை. ஆனால், அவர் சகஜமாக பேசினார். தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, நேபாளம், சீனாவுடன் ஒப்பீடு என்று பல விஷயங்களை வெகு ஆழமாக அலசினார். அவர் இவ்வளவு எல்லாம் பேசுவார் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. பிறகு அவரை நமஸ்கரித்தோம். ஆசி வழங்கினார். பின்னர் சொன்னார் 'எல்லாரும் பெரியவா, பெரியவா னு சொல்றேள். அவர் சொன்னத எவ்வளவு பேர் பாலோ பண்றேள்?'

Saturday, July 13, 2013

Venkata Kailasam பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட ஒரு அனுஷ்டானபரருடைய அனுபவம்.....

"எனக்கு அப்போ ஆறு வயஸ் இருக்கும். குத்தாலத்துக்கு பக்கத்துல முருகமங்கலம்ங்கற க்ராமத்துக்கு பெரியவா விஜயம் பண்ணியிருந்தா. என்னோட அத்தை பொண்ணாத்துல அன்னிக்கி பெரியவாளுக்கு பிக்ஷாவந்தனம். சுத்துவட்டார க்ராமத்துக்கெல்லாம் அடிக்கடி விஜயம் பண்ணும்போதெல்லாம் போய் தர்சனம் பண்ணிடுவேன். யார் போனாலும் கூட ஓடிப்போயிடுவேன். அப்பிடி ஒரு ஆகர்ஷணம் பெரியவாட்ட இருந்துது! அப்டி முருகமங்கலத்துல ஒருநாள் காலமே ஏழு மணி இருக்கும். அன்னிக்கி பெரியவா மௌன வரதம். சைகை மூலம் அவர் பேசறதே ரொம்ப அழகா இருக்கும். என்னை கூப்ட்டார்.
"ஒன்னை நாலஞ்சு எடத்துல பாத்தேனே!... இங்க எப்டி வந்தே?" எல்லாமே சைகைதான். பக்கத்திலிருந்த பாரிஷதர் விளக்கினார்.
"இது என்னோட அத்தங்கா அஹம்தான்..."
"இப்போ என்ன பண்ணிண்டு இருக்கே?" சைகை பண்ணினார்.
"நேக்கு இன்னும் பூணூல் போடலே...விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லுவேன்"
"நா.....ஒண்ணு சொன்னாக் கேப்பியா?"
சந்தோஷமா தலையாட்டினேன். பக்கத்தில் என்னைவிட கொஞ்சம் வயஸ் கூட ஆன பையன் ஒருத்தன் நின்னுண்டு, விளக்கையெல்லாம் துடைச்சிண்டு இருந்தான். அவனுக்கு பூணூல் போட்டிருந்தது.
பெரியவா அவனைக் காட்டி "அவன்ட்ட போயி "வெவ்வவ்வெவ்வே " ன்னு அழகு காமி!" சைகையில் அவர் அழகு காமிச்சது இன்னும் என் கண் முன்னால நிக்கறது. எனக்கோ ஒரே குழப்பம். பெரியவா சொன்னா யாருக்கு வேணாலும் அழகு காட்டலாந்தான்! நாம ஏன் குழப்பிக்கணும்? பெரியவாகிட்டயே கேட்டுடுவோம்ன்னு தோணித்து.
"பெரியவா..நா எப்டி இந்த அண்ணாவைப் பாத்து வெவ்வவ்வெவ்வே..ன்னு அழகு காட்டுவேன்? அவன் பூணூல் போட்டுண்டு இருக்கானே!"
சரியாக அந்த சமயத்தில் என்னை விட சின்னக்கொழந்தை ஒண்ணு அங்க வந்ததும், பெரியவா சைகையில் 'அந்தக் கொழந்தைக்கு அழகு காட்டு'..ன்னார். மொதல்ல யூஸ் பண்ணின டெக்னிக்கை இப்பவும் யூஸ் பண்ணினேன். "இது சின்னக் குழந்தை....நா அழகு காட்டினா அழுவானே பெரியவா!.." ன்னு சொன்னேன். அவர் நெனைச்சா யார் வேணாலும் அங்க வரலாமே! கரெக்டா வாசல்ல காவலுக்கு நின்னுண்டு இருந்த ஜவான் [பாராக்காரன்] துப்பாக்கியும் கையுமா உள்ள வந்து பெரியவா முன்னால நின்னான். "இவனுக்கு அழகு காமி" ......பெரியவாளும் என்னை விடறதா இல்லே!
"துப்பாக்கி வெச்சிண்டிருக்கான் பெரியவா.....அழகு காமிச்சா சுட்டுடுவானே!"
கடைசியில் "எனக்கு வெவ்வவ்வெவ்வே ன்னு அழகு காட்டு!"...ன்னு அவருக்கே அழகு காட்டச் சொன்னார்!
"அபசாரம்! நீங்க லோக குரு! உங்களுக்கு அழகு கட்டலாமா?" ...என்னோட டெக்னிக் கைகுடுத்தது. பெரியவா எழுந்து போய் ஸ்நானம் பண்ணப் போனார். அப்புறம் வந்துட்டு "வேற என்ன பண்ணறே?" ன்னார்.
"ஸ்ரீராம ஜயம்" எழுதுவேன்"
"கொண்டா.....பாப்போம்" ன்னு சைகையில் கையை நீட்டினார். போயி எடுத்துண்டு வந்ததும் என்னோட அக்காவும் கூட இருந்தா... நோட்டைப் பார்த்துட்டு, தன்னோட தங்கக்கையால எனக்கு ரெண்டு வெள்ளிக்காசு குடுத்தார்.....அத்துனூண்டு பையனான என்னைக் கிட்டக்க கூப்ட்டு சைகைல.... "நியமத்தோட இரு! சோப்பு தேச்சுக்காதே!" ன்னு இன்னும் சிலதெல்லாம் சொல்லி அநுக்ரஹம் பண்ணினார். இன்னி வரைக்கும் பெரியவா சொன்னபடி ஆத்மார்த்தமா இருந்துண்டு இருக்கேன்....அதோட பலன்தான் எனக்கு பரம பாக்யமா நம்ம குருஜி [மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள்] எனக்கு கெடைச்சிருக்கார்..." என்று மனஸ் நெகிழ விவரித்தார்.
சத்யமான வார்த்தை! ஒரு அவதார புருஷரே குருவாக கிடைப்பதற்கும், ஸதா அவருடைய சரண சாயலில் இருப்பதற்கும் கோடி கோடி புண்ய பலனே காரணம். சரண சாயல் என்பது அவருடைய அருகிலேயே இருந்து தொண்டாற்றுவது மட்டுமே இல்லை, எத்தனை தொலைவில் இருந்தாலும், நல்லதோ கெட்டதோ நம் வாழ்வில் எது நடந்தாலும், "குருவின் சங்கல்பம் மட்டுமே நம் வாழ்வை நடத்திச் செல்கிறது" என்ற சத்யத்தை உணர்ந்திருத்தலே ஆகும்.

Read more: http://periva.proboards.com/thread/4723/small-boys-experience-maha-periva/#ixzz2YmrZKpzI

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top