Arul 21: Collecation for Chartiy - Experience of a Devotee..
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"
இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது,
"பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய
ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......
ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"
எத்தனை சத்யமான உபதேசம்! இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது!
தெய்வத்தின் குரல்..............
"பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும். "பொழுதுபோக்கு" ன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சிசாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும். "லைப்...ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா?..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே "த்யாகம் பண்ணி அனுபவி" ன்னு சொல்றது.
காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார்.
தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், "எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும்.
"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே! எத்தன உத்தமமான குணம்" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும்?
"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா? அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் ! "தானம்" ங்கற வார்த்தைகூட தப்புதான். "பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்" ன்னு பவ்யமா இருக்கணும்.
நன்றி...
ReplyDelete