Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, January 31, 2015

இது என்ன கருணையா, கிண்டலா?'

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.

ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.

ஓர் இரவு, பெரியவாள் தங்கியிருந்த அறையை
ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.
அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி-புடவைகள்,
சால்வைகள், வெள்ளிக்காசு - தங்கக் காசு போன்ற
சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள்,உட்காரக்கூட
நேரம் கிடைக்காமல் உள்ளேயும், வெளியேயும்
நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருந்தது,
மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம்

நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து
ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.கனமாக இருந்ததால்
சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா, திருடன்
வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால்.
உடனே "திருடன்,திருடன்" என்று கூப்பாடு போடவில்லை.
எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு
சிஷ்யர்களை எழுப்பினார்கள்.

"பக்கத்து ரூம்லே மரப்பொட்டியைத் தூக்க முடியாமே
ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான். நீங்க போய்
ஒத்தாசை பண்ணுங்கோ..."

பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு உடனே
விஷயம் விளங்கி விட்டது. அவரும் சத்தம் போடாமல்
மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார்.ஒரே வெளிச்சம்!

திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான்.

"அடாடா... சொல்லாமல்,கொள்ளாமல் ஓடிப் போயிட்டானே!..
பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச்
சொல்லியிருக்கலாமே?" என்றார்கள் பெரியவா.

'இது என்ன கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை.

Thursday, January 29, 2015

"மேக ராகக் குறிஞ்சி"

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.
நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட
வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய்
வழிந்தது கண்ணீர்.

சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம்
செய்யக் காஞ்சிபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில்
வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.

"என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்"
என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல்
சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம்
பண்ணணும்' என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

"அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று
ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம்.
தேவாரப் பதிகங்களில்,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில்
ஒரு பதிகம் இருக்கு.ஓதுவார்களுக்குத் தெரியும்
அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில்
சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும்.
ஜனங்கள் சௌக்கியமா இருப்பா...."

பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்
கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை
பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக்
கொண்டுவரலாமே?

பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.

மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.

திருப்பராய்த்துறை

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1448
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.

1.135.1
1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

1.135.2
1450
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

1.135.3
1451
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.

1.135.4
1452
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.

1.135.5
1453
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.

1.135.6
1454
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.

1.135.7
1455
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.

1.135.8
1456
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.

1.135.9
1457
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.

1.135.10
1458
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

1.135.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை

Tuesday, January 27, 2015

நெல்லிக்காய் வாங்கும்படி என்னைத் தூண்டியது யார்?.

சொன்னவர்; ஸ்ரீமதி சுந்தா சுந்தரம், சதாரா ரோடு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கார்த்திகை மாத துவாதசி திதி, முதல் நாள்
ஏகாதசியன்று, நிர்ஜலம்--தாகம் தீர்த்துக்கொள்ள
தீர்த்தம் கூடக் குடிப்பதில்லை.

துவாதசியன்று பாரணை. அன்றைக்கு என்று,
வித்தியாசமான பிக்ஷைத் திட்டம்.

பிக்ஷைப் பக்குவ பொறுப்பிலிருந்த தொண்டருக்கு,
'அன்றையதினம் துவாதசி' என்ற நினைவே,
கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தது.
(நல்லகாலம், திரயோதசி பிறக்கவில்லை!)

துவாதசி பாரணைக்கு 'அது' வேண்டுமே?

பாஷை தெரியாத ஊர். ஆங்கிலமும் தெரியாது;
ஹிந்தியும் தெரியாது; மராத்தி, இவரை
அருகில்விட மறுத்தது.

யாரைப் போய்க் கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
இதுவரை காட்டிய கைஜாடைகளைக் கண்ட
மராத்தியர்கள், அதைத்தவிர மற்ற எல்லாவற்றையும்
நறுவிசாகத் தெரிவித்து விட்டார்கள்.

நான் (ஸ்ரீமதி சுந்தா) போய்ச் சேர்ந்தேன். தொண்டரின்
கண்களில் பரவசம்!

"நல்லவேளை, வந்தேள்!...பெரியவாள் பிக்ஷைக்கு
நெல்லிக்காய் கட்டாயம் வேணும்..பாஷையே
புரியல்ல...தவிச்சிண்டிருக்கேன். நீங்க ஓடிப்போய்,
நாலு நெல்லிக்காய் வாங்கிண்டு வந்தா.."

நான் ஓடிப் போகவில்லை.

"ரொம்ப அவசரம், மாமி..."

என் பையிலிருந்து, ஒரு கொத்து நெல்லிக்காய்களை
எடுத்து அவர் முன் கொட்டினேன். அரைமணி முன்னர்
ஏதோ தூண்டுதலால், மார்க்கெட்டில் வாங்கியது;.....
நெல்லிக்காய் வாங்கும்படி என்னைத் தூண்டியது யார்?.

கனகதாரா ஸ்தோத்திரம் செய்து, தங்கம் தங்கமான
நெல்லிக்காய்களை மாரி மாரியாகப் பொழிந்தவர்,
வழித்தோன்றல்--இல்லையா?

மாட்டேன். மறக்க மாட்டேன்.

பச்சை நெல்லிக்காய்கள்....ஓ! ..பச்சை.

Sunday, January 25, 2015

தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.

சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக் கொண்டிருந்தது.

முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.

அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.

திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.

“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!

பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !

“பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.

“ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!”

“உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.

பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.

பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்… அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.

இப்போதும் நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Hara Hara Sankara !! Jaya jaya Sankara !!

Siva.S

Friday, January 23, 2015

சன்னிதானத்தில் ஒரு விலைமாது

துறவு என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊருக்கு வந்திருந்த அந்தப் புனிதர் இன்று ஒரு நாள் மட்டும் தான் அங்கிருப்பார் என்று கேள்விப்பட்ட பக்த கோடிகள் அவரது தரிசனத்திற்காக வெளியே காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவளும் அங்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல் வந்தவள் ஒதுக்குப்புறமாய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். அது வரை பேரமைதியோடு இருந்த கூட்டத்தில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன.
"இவள் எல்லாம் இங்கே வரலாமா?"
"என்ன தைரியம் பாரேன்"
"இந்த இடத்தையாவது சனியன் விட்டு வைக்கக் கூடாதா?"
"கலி முத்திடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம்"
கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த அவள் காதுகளில் இந்த விமரிசனங்கள் விழாமல் இல்லை. தான் இந்த ஏச்சுகளுக்குப் பொருத்தமானவள் என்பதிலும் அவளுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த மகானைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவரைத் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் வந்திருக்கிறாள். அதுவரை தன்னை யாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடக் கூடாதென சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள்.
மஹாஸ்வாமிகளின் நிழல் என்று எல்லோராலும் கருதப்படும் சந்தானம் கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்தார். இது வரை அமைதி காத்த பக்தர்கள் மத்தியில் திடீரென எழுந்த இந்த சலசலப்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதன் அறிகுறியென அவருக்குப் பட்டது. கூட்டத்தினரை அவர் கேள்விக்குறியோடு பார்க்க, ஒருவர் அவரருகே வந்து அவளைக் கை காட்டி விளக்கினார்.
"சிவ சிவா" சந்தானம் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். 'மஹாஸ்வாமிகளின் சன்னிதானத்தில் ஒரு விபசாரியா, இது என்ன சோதனை?' அவளை எரித்து விடுவது போல் பார்த்தார். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
சந்தானத்தைப் பொருத்த வரை தெய்வம் கூட மஹாஸ்வாமிகளுக்கு அடுத்தபடி தான். எத்தனையோ போலிகளுக்கு மத்தியில் எந்த மாசும் தன்னை நெருங்க முடியாத நெருப்பாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் முன் இது போன்ற அசுத்தங்கள் வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் யோசித்து முடிவுக்கு வரும் முன் மஹாஸ்வாமிகள் தியானம் முடிந்து வெளி ஹாலிற்கு வந்து விட்டார். பக்தர்கள் எழுந்து வரிசையானார்கள். அவளும் எழுந்து அந்த வரிசையின் கடைசியில் நின்றாள். சந்தானம் தீயில் நிற்பது போல் துடித்தார். எப்படியாவது அவளை உடனடியாக அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானித்து அவர் முதலடி எடுத்து வைத்த போது மஹாஸ்வாமிகள் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தினார். சந்தானம் வேறு வழியில்லாமல் தவித்தபடி நின்றார்.
பக்தர்கள் ஒவ்வொருவரும் அந்த மகானிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, வணங்கி, பிரசாதம் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்கள். ஆனாலும் வெளியேறாமல் சிலர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். எதையும் தன் ஞான திருஷ்டியால் அறியும் சக்தி படைத்த அந்த மகான் அவளிடம் என்ன சொல்லப் போகிறார் என்றறிய அவர்களுக்கு ஆவல்.
கடைசியில் அவளும் மஹாஸ்வாமிகள் முன்பு வந்து நின்றாள். வந்ததில் இருந்து தலையை நிமிர்த்தாதவள் முதல் முறையாக தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவளைப் பற்றி அறியாதது ஒன்றுமில்லை என்று அவரது கண்கள் சொல்லின. ஆனாலும் அந்தக் கண்களில் கருணை சிறிதும் குறைந்திருக்கவில்லை. மற்றவர்களைப் போல வாய்விட்டுப் பேச அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. கனத்த மனதுடன் அவர் முன் மண்டியிட்டு அழுதாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். அவர் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்.
வேடிக்கை பார்த்தவர்களுக்கு மிகவும் சப்பென்றாகி விட்டது. " அவர் ஞானி. அவருக்கு எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் இவள் இந்தப் பாவத்தையும் சேர்த்து எந்த கங்கையில் கழுவுவாளோ" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்தார்கள்.
எல்லோரும் போகும் வரை காத்திருந்த சந்தானம் பின்பு மிகவும் வருத்தத்துடன் ஆரம்பித்தார். "ஸ்வாமி அவள்..."
"தெரியும் சந்தானம்"
"நீங்க மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நான் அவளை அப்போதே அனுப்பியிருப்பேன்"
"அறியாமையால் தவறும் பாவமும் செய்வது, அதன் பலன்களை அனுபவிப்பது, தன் செயல்களுக்காக வருந்துவது, பின்பு திருந்துவது என்று இந்த நான்கு கட்டங்களும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் உண்டு சந்தானம். இதில் நீயும் நானும் கூட விதிவிலக்கல்ல. தவறுகளின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தவறோ பாவமோ செய்யாத அந்தத் தனிப்பெரும் குணம் பரம்பொருள் ஒருவனுக்கே உண்டு. அந்தப் பரம்பொருள் கூட மனித அவதாரம் எடுத்த போது ஒரு சில தவறுகள் செய்து விட்டதாய் இதிகாசங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம், சந்தானம்"
ஆனாலும் சந்தானத்திற்கு சமாதானம் ஆகவில்லை. "அவள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் ஸ்வாமி. அவள் இங்கே வந்து இந்த இடத்தின் புனிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்"
மஹாஸ்வாமிகள் புன்னகைத்தார். "உனக்கு இங்கு வந்த மற்றவர்களின் சரித்திரம் தெரியாததால் நீ அவளை மட்டும் ஒருமைப்படுத்துகிறாய். இவளை விட அதிகம் பாவம் செய்தவர்களும் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் எப்படியே இருந்தாலும் இங்கு அவர்களை இன்று வரவழைத்த ஆன்மீக சக்தி என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் உணர வைக்கும். திருத்தும். அதற்காக பிரார்த்திப்பதும், ஆசி வழங்குவதும் மட்டுமே நம் கடமை. விமரிசிப்பதும், தீர்ப்பு சொல்லவும் நாம் யார்?"
ஒப்புக்குத் தலையாட்டினாலும் சந்தானத்தின் மனதில் அவள் அங்கு வந்த விஷயம் நெருடலாகவே இருந்தது.
மறுநாள் காலை ஸ்வாமிகளை வழியனுப்ப நிறைய பக்தர்கள் வந்திருந்தனர். ல்லாக்கில் ஏறப் போன மஹாஸ்வாமிகளின் விழிகள் ஒரு கணம் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. சந்தானம் தன் பார்வையையும் அங்கு திருப்பினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு, உடலில் சிறு ஆபரணமும் இல்லாமல், தூய வெள்ளை சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு ஒருத்தி நின்றிருந்தாள். உற்றுப் பார்த்த பின்பு தான் தெரிந்தது-அவள் நேற்று வந்தவள். இன்று அவள் தலை நிமிர்ந்திருந்தது. முகத்தில் அமைதியும் உறுதியும் தெரிந்தது. கை கூப்பி வணங்கி நின்றாள்.
"நேற்று வந்தவர்களில் யாரும் இவ்வளவு சீக்கிரம் மாறவில்லை, சந்தானம்" என்று புன்னகையுடன் சொல்லிய மஹாஸ்வாமிகள் கையை உயர்த்தி எல்லோருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு ல்லாக்கில் ஏறினார். கண்கள் கலங்க தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவளிருந்த திக்கை நோக்கிக் கூப்பி விட்டு ல்லாக்கில் ஏறிய சந்தானம் "என்னை மன்னிச்சுடும்மா" என்று முணுமுணுத்தது மஹாஸ்வாமிகளுக்கு மட்டும் கேட்டது

Wednesday, January 21, 2015

"மதம் கடந்த கருணை"

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும்
பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும்
கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும்
இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஏராளம்.

1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர்,தன்னுடைய மகனை-
குலாம் தஸ்தகீர் - கையைப் பிடித்து
அழைத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு.
சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை
நமஸ்கரித்தார்கள்.

'என்னோட மகன்,வயலின் வாசிக்கிறான்.
ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான்.
பெரியவங்க ஆசி வேணும்...சாமிக்கு
முன்னாலே வயலின் வாசிக்கணும்....'

அனுமதி கிடைத்ததும், பார்வையில்லாத
குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான்.
பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து,
'பையனுக்கு யாரிடம் சிட்சை' என்றும்
கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சிபூர்வமான
தவிப்பு, நெஞ்சு,கெஞ்சியது.

'சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக்
கொடுக்கணும்..' என்று சொல்லியே விட்டார்!.

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
இது என்ன பிரார்த்தனை?
ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ?...

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது.

பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி,
அந்த வயலினை வாங்கிக்கொண்டு வரச் சொல்லி
தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய்
உருகிப் போனார்கள்.

இரண்டு வேஷ்டிகளும்,மாம்பழங்களும்
பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு.

Monday, January 19, 2015

"காஞ்சிக் கு(று)ரு முனிவர்." (ஆதித்ய ஹ்ருதய ஸ்லோக பலன்)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இலங்கையில் இராம-இராவண யுத்தம்
நடந்துகொண்டிருக்கிறது.இராவணன் பக்கத்தில்,
முக்கியமானவர்கள் எல்லோரும் வீழ்ந்துவிட்டார்கள்
என்றாலும்,அவன் பணிய மறுத்தான். மேலும்
ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

இராமனுக்கே மனம் சோர்ந்துவிட்டது. இவனை எப்படிப்
பணிய வைப்பது? வழி தெரியவில்லையே? என்று
கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது அகத்திய
முனிவர் வந்தார்.

'ஆதித்ய ஹ்ருதயம்-னு ஒரு ஸ்தோத்ரம்-சூரியனைப்
போற்றிப் பிரர்த்திக்கிற சுலோகங்கள்.அதை ராமனுக்கு
உபதேசம் பண்ணினார். ராமனும்,அதன்படியே சூரிய
பகவானை வழிபட்டு தைரியம் அடைந்தான்;ஜெயித்தான்-
என்கிறது வால்மீகி ராமாயணம்.

--இவ்வளவும்,டாக்டர் ஸி.பி.ராமஸ்வாமி அய்யர் அவர்களின்
புதல்வர் திரு ஸி.ஆர்.பட்டாபிராமனிடம் மகாப்பெரியவா
கூறிக்கொண்டிருந்த புராணச் சொற்பொழிவு.

யுத்த காண்டத்திலே அந்த ஸர்க்கம் வருகிறது.
முப்பத்தோரு சுலோகங்கள்.அதிலே நக்ஷத்ர க்ரஹ தாரணாம்-
என்று ஆரம்பித்து,ரவயே லோக ஸாக்ஷிணே-என்று முடியும்
சுலோகம் வரையிலான ஏழு சுலோகங்களுக்கு விசேஷமான
மந்த்ரசக்தி உண்டு.

பெரியவா,இந்த விஷயத்தை இத்துடன் நிறுத்திவிட்டு, வேறு
விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

ஆனால், பட்டாபிராமன் அங்கேயே நின்றுவிட்டார்.
பெரியவா சொன்னது காற்றோடு போகிற விஷயமில்லை.
திரேதாயுகத்தில்,தசரதராமனுக்கு அகஸ்திய முனிவர்
செய்த உபதேசத்தை, இந்தக் கலியுகத்தில், பட்டாபி ராமனுக்கு,
காஞ்சி முனிவர் உபதேசித்திருக்கிறார்.!..

இந்த ஏழு சுலோகங்களையும் நான் ஏழு ஜென்மத்துக்கும்
மறக்கக்கூடாது; என்று உறுதி எடுத்துக்கொண்டார்,
காஞ்சிபுரம் ராமஸ்வாமி அய்யர் பட்டாபிராமன்.

மகாப்பெரியவாள் சுட்டிக்காட்டிய மந்திரசக்தி,அந்த
நிமிஷத்தோடு போய்விடவில்லை; அந்த சீடருக்கு
மட்டுமே உரியது என்று கருதவேண்டியதில்லை.

மந்திர சக்தியைப் பெற்று, சூரியபகவான் அருளினால்
எல்லோருமே உடல் வலிமையுடன் இருக்கலாமே?

"யுத்தகாண்டம் 107வது ஸர்க்கம் ஆதித்ய ஹ்ருதயத்தில்
,,,,,,,,,,,,,,மகாப்ப்ரியவாள் குறிப்பிட்ட சுலோகங்கள் கீழே....

நக்ஷ்த்ரக்ரஹ-தாரணாம் அதிபோ விச்வபாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே ||

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர்-கணானாம் பதயே தினாதிபதயே நம: || 16||

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம: |
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம: || 17||

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18||

ப்ரஹ்மேசாநாச்யுதேசாய ஸுர்யாதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபுக்ஷாய ரௌத்ராய வுபுஷே நம: || 19||

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மநே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20||

தப்தசாமீ கராபாய வஹ்நயே விச்வகர்மணே |
நமஸ்தமோபி-நிக்நாய ரவயே லோகசாக்ஷிணே || 21|

Saturday, January 17, 2015

·"என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே… படிக்கிற வயசா எனக்கு?’ (நகைச்சுவையும் வேறு பல நிகழ்வுகளும்)

நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டவர்-
சங்கர பக்த ஜன சபா செயலர் வைத்தியநாதன்,

நன்றி-பால ஹனுமான்

‘பெரியவா இருந்த இடத்திலே இருந்து வெகு அருகில்தான் வரதராஜ பெருமாள் கோயில். அந்தக் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தபோது,பெரியவாளைத் தனியா வந்து அங்கே இருந்து யாரும் அழைச்சதா தெரியலே. அதையெல்லாம் பெரியவா எதிர்பார்க்கவும் மாட்டார். மாடவீதியிலேயே, உசரமான ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு, கோபுர தரிசனம் செய்தார். சந்நிதி தெரு சந்திக்கிற இடத்திலே ஜீயர் சுவாமிகள் இவரைப் பார்த்துவிட்டு, ”பெரியவாஅவசியம் வந்து சேவிக்கணும்!” என்று கேட்டுக்கொண்டார். ஜீயர் கேட்டுக்கொண்டதற்காக, மறுபடியும் ஒருதடவை வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் போனார் பெரியவா.

பெரியவா காலையில் எப்போது வெளியே கிளம்புவார் என்று யாருக்கும் தெரியாது; நினைத்தாற் போலிருந்து, திடீரென்று புறப்பட்டுவிடுவார். நாம்தான் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். ஒருநாள் விடியற்காலை 4 மணி இருக்கும். குள்ள சந்திரமௌலி படுத்துக்கொண்டிருந்தான். கதவு சாத்தியிருந்தது. பல் தேய்த்து சுத்தம் செய்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவு நன்றாகத் திறந்து கிடக்கிறது.பெரியவாளைக் காணோம்!

எல்லோருக்கும் ஒரே பயமாகப் போய்விட்டது. பாடசாலை வெங்கட்ராம சாஸ்திரி பேரன், ‘நான் போய்த் தேடிப் பார்த்துட்டு வரேன்’ என்று புறப்பட்டான். சாலையில் டிரெயினேஜ் குழாய்கள் போடுவதற்காகப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். அதிகாலை நேரம். கும்மிருட்டு. மேடும் பள்ளமுமாக வீதி ரொம்பவும் மோசமாக இருந்தது.

திரௌபதி அம்மன் கோயில் பக்கத்தில்பெரியவா நடந்து போய்க்கொண்டிருந்தார். வெள்ளையாக அகிம்ஸா பட்டு ஒன்றைப் போர்த்திக்கொண்டு, தண்டத்தை உள்ளே மறைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்.பெரியவாதான் அது என்று ஓர் ஊகத்தில் தெரிய வந்ததும், அவன் அவரைத் தொடர்ந்து ஓடினான். வடக்கு மாட வீதியில்தான் அவரைப் பிடிக்க முடிந்தது. நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே… அவர் நடை வேகத்துக்கு இணையாக நம்மால் எல்லாம் நடக்கவே முடியாது!

பெரியவாளுக்கு பள்ளம், மேடு எல்லாம் ஒன்றும் தெரியாது. கூடப்போகிறவர்தான் அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெரியவா, மேடாக இருந்த ஓர் இடத்தில் கால் தடுக்கிவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, அருகிலே ஓடிய சாஸ்திரி பேரன் அவரை நெருங்கி, ‘பெரியவா, படி, படி!’ என்று எச்சரிக்கை செய்தான். திடீரென்று அவனைப் பார்த்தபெரியவா, ‘என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே… படிக்கிற வயசா எனக்கு?’ என்று குறும்பாகக் கேட்டார். பெரியவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்!’ என்ற வைத்தியநாதன், பெரியவா பற்றிய அடுத்த தகவலுக்குள் தாவினார்.

‘1977-ல் மேற்கு கோதாவரி ஜில்லா வில் பெரிய மழை கொட்டு கொட்டு என்று கொட்டி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடலில் அலை எல்லாம் 30-40 மீட்டர் உயரத்துக்கு வீசியடிச்சுது. ஆயிரக்கணக்கில் ஜனங்கள் மாண்டு போனார்கள். பிணவாடையையும், அசௌகரியங்களையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் அதை எல்லாம் அப்புறப்படுத்தி, அபர காரியங்களை எல்லாம் செய்தார்கள்.

இந்த விஷயம் பெரியவா காதுக்கு எட்டியபோது, அவரால் துக்கம் தாங்க முடியலே. ஆனா, ‘அந்த மாதிரி துர்மரணம் அடைஞ்சவா ளோட ஆன்மா நற்கதி அடையணும்னா, மோட்ச தீபம் ஒரு லட்சம் ஏத்தணும்’ என்று பெரியவா சொன்னார். அதன்படி, இரண்டு மூன்று நாளைக்கு தினசரி ஒரு டின் எண்ணெய் வீதம் விளக்குகளுக்கு ஊற்ற வேண்டியிருந்தது. லட்ச தீப விளக்கு ஏற்றப்பட்ட பிறகுதான்,பெரியவா மனசு ஓரளவு சமாதானம் ஆச்சு!

இந்தச் சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக இன்னொரு செய்தியையும் சொல்லணும். விஜய ராகவாச்சார்யார் என்று ஒரு முதிய ஸ்ரீவைஷ்ணவர், தேனம்பாக்கத்தில்பெரியவாளைப் பார்த்து வேதாந்த சாஸ்திர விசாரம் பண்ண எப்போதும் வருவார். அதிலும் குறிப்பாக, பிரதோஷம் அன்று கோயிலுக்கு வராமல் இருக்கவே மாட்டார்.

அவர் ஒரு பிரதோஷ நாளன்று சிவஸ்தானத் துக்கு வந்து பெரியவாளோடு பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வந்து விட்டது. ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்தது. ஆனால், அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியலே. எழுதித் தர முடியுமா என்றுகூடபெரியவா முயற்சி பண்ணினார். முடியாது என்கிற மாதிரி அவர் தலையை அசைத்தார். அதற்குள் அவர் ஆவி பிரிந்துவிட்டது.

உயிர் பிரிந்த இடம்- சரியாக நந்தி அருகில்! அவருக்கும் ஒரு மோட்ச தீபம் வைக்க வேண்டுமென்று பெரியவா சொன்னார். அதன்படி, கோபுரத்தின்மேல் விளக்கு வைக்க ஏறினார் குமரேசன் என்பவர். விளக்கை வைத்துவிட்டுத் திரும்பியவர், நிலை தடுமாறி அப்படியே கீழே சரிந்து விழுந்துவிட்டார். ஆனால் ஆச்சரியம்… அத்தனை உயரத்திலிருந்து விழுந்தபோதும் அவருக்கு பலமான அடி கிடி எதுவும் படவில்லை; பயப்படும்படியாக எதுவும் ஆகவில்லை. (அவர் இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் பணி புரிந்துகொண்டிருக்கிறார்.) எல்லாம் பெரியவாளின் அனுக்கிரகம்தான்!’

சிறிது இடைவெளி விட்ட வைத்தியநாதன், மறுபடியும் பெரியவா தொடர்பான பேச்சைத் தொடர்ந்தார்…

‘ஒருமுறை சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர்பெரியவாளை தரிசிப்பதற்காகத் தேனம்பாக்கம் வந்திருந்தார். காலையில் வரதராஜ பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு, 8 மணி சுமாருக்குப் பெரியவாளைதரிசனம் பண்ண இரண்டு பெரிய கார்களில் குடும்ப சகிதமாக வந்தார் அவர். ‘பெரியவாஇப்போ வந்துடுவார். உட்காருங்கள்!’ என்று மடத்துச் சிப்பந்திகள் அவரை உபசரித்து உட்கார வைத்தார்கள்.

பெரியவா வந்ததும், அவரை தரிசனம் செய்து ஆசிகள் வாங்கிக் கொண்ட பிறகு, வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார் பண்டிட் ரவிசங்கர். பெரியவாமெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாசித்து முடித்ததும் ரவிசங்கருக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படித் தனிமையாக, பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்து சிதார் வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததை, தன் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று மகிழ்ந்து போனார்.

‘எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. பெரியவா ஆழ்ந்து ரசித்து என் சங்கீதத்தை அனுபவிச்சுக் கேட்டார்!’ என்று நெகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார், பண்டிட் ரவிசங்கர்.’

தமது நினைவில் பதிந்திருந்த, பெரியவா பற்றிய சிலிர்ப்பான தகவல்களைச் சொல்லி முடித்தார் வைத்தியநாதன்.

மகா பெரியவாளுடன் சாதாரண மக்களுக்கு இருந்த அனுபவங்கள் ஏராளம். அவர் மறைந்த பிறகும்கூட அவர் வாழ்ந்த ஸ்தலங்களுக்கு வந்து, அவர் சாந்நித்தியத்தை- அவர் ஏற்படுத்திய ‘வைப்ரேஷன்’களை இன்றும் அனுபவித்து மகிழ்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். பெரியவா இப்போதும் நம்முடனேயே இருந்து, நம்மை எல்லாம் வாழ்த்திக்கொண்டு இருப்பதாக நினைப்பதால் தான், அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் 100 அடி ஸ்தூபி மண்டபத்துக்கும், தேனம்பாக்கத்துக்கும், ஓரிக்கை மணிமண்டபத்துக்கும் மக்கள் இன்றைக்கும் திரளாக வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

ஆமாம்… பெரியவா, இன்றைக்கும் நமக்காக நம்முடனேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்!

·"என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே… படிக்கிற வயசா எனக்கு?’

(நகைச்சுவையும் வேறு பல நிகழ்வுகளும்)

.நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டவர்-

Thursday, January 15, 2015

சீதையை மீட்டாச்சு... மீண்டது சிறுவன் குரல்!

பல வருடங்களுக்கு முன்... ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக்கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்துவிட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டார். ஒவ்வொருவராக வந்து நஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக்கொண்டு நகர்ந்தனர். பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப்பேந்த விழித்தபடி எந்தச் சலனமுமின்றி நின்றிருந்தான்.
பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக்கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மகா ஸ்வாமிகள், "ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கரநாராயணன் தானே? ஏன் இப்படிக் கண் கலங்கிண்டு நிக்கிறே? என்ன சிரமம் ஒனக்கு?" என்று ஆதரவுடன் விசாரித்தார்.
பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்துவிட்டது அவருக்கு. கேவிக்கேவி அழுதுகொண்டே, "ஆமா பெரியவா, இப்ப எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்ருக்கு, என்ன பண்றதுன்னே தெரியலே. நீங்கதான் என் தெய்வம், எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே!" என்று மீண்டும் பெரியவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, "சங்கரா... ஒண்ணும் தாபப்படாதே! சித்த நீ அப்டி ஒக்காந்துக்கோ.. இவாள்ளாம் பேசிட்டுப் போனப்றம் ஒன்னக் கூப்டறேன்!" என்று எதிரில் கை காண்பித்தார்.
"உத்தரவு பெரியவா.. அப்டியே பண்றேன்!" என்று கூறிவிட்டுச் சற்றுத் தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரைமணி நேரம், கழித்து பக்தர்கள் ஆச்சார்யாளை தரிசித்துவிட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்கிற இரு இளைஞர்கள் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கரநாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து "சங்கரா...பிராக்டீஸெல்லாம் நடந்துண்டிருக்கோல்லியோ?"
நீதான் 'லீடிங்' ஆடிட்டராச்சே... பிராக்டீஸுக்குக் கேப்பானேன்? அது சரி, ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லதானே இருக்கார்? சௌக்யமா இருக்காரோல்லியோ?" என்று கேட்டார்.
உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "பிராக்டீஸெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா, அப்பாவும், அம்மாவும் பம்பாய்ல இருக்கிற என் தம்பிகிட்ட போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத்தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே..நீங்கதான் நிவர்த்தி பண்ணிக் குடுக்கணும்" என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டியணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.
சிறுவன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம் ஆடிட்டர் சங்கரநாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்துகொண்டது அந்த நடமாடும் தெய்வம்.
"அழப்படாது சங்கரா.. எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி... இந்தப் புள்ளையாண்டான் யாரு? ஒம் புத்ரனா?" எனக் கேட்டார் ஸ்வாமிகள். "ஆமாம் பெரியவா, இவன் என் பையன்தான். பேரு சந்திரமௌளி. இவனுக்குத்தான் பெரியவா திடீர்னு.." என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டை அடைக்க நின்றார் சங்கரநாராயணன்.
உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, "சங்கரா! இவனுக்கு திடீர்னு என்னாச்சு? சந்திரமௌலி ஸ்கூல்ல படிச்சுண்ருக்கானோல்லியோ... பதட்டப்படாம விவரமா சொல்லேன்!" என ஆறுதலாகச் சொன்னார்.
சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, "பெரியவா..பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்ல ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னண்டு வயசாறது. படிப்புல கெட்டிக்காரன்.
கிளாஸ்ல இவன்தான் ஃபர்ஸ்ட். இருவது நாளக்கி முன்னால் ஒரு நாள் கார்த்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, 'பேச முடியலே"னு ஜாடை காட்றான்... அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே. சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம்போல சாப்டறான்...நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா... ஆனா பேச்சுதான் வரல்லே... நா என்ன பண்ணுவேன்.. நீங்கதான் கிருபை பண்ணி,இவனைப் பேச வைக்கணும்!" என்று கண்ணில் நீர் வழியப் பிரார்த்தித்தார்.
ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், "பையனை அழச்சிண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா? சந்திரமௌலிக்கு ஸ்வாமிகிட்டே பக்தி உண்டோல்லியோ?"
"நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம். ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தால குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத்தான் ஸ்கூலுக்குக் கெளம்புவான். ஆத்ல [வீட்டில்] பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு.
எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற - சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுல ஒத்திணடே இருப்பான். "சீதையையும், ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்னு அடிக்கடி சொல்லிண்டிருப்பான். வாரத்ல ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்டி ஆயிடுத்தே பெரியவா..." சங்கரநாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை.
மீண்டும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.
அவரை சமாதானப்படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டார். "மயிலாப்பூரில் நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழச்சிண்டு போற வழக்கமுண்டோ?"
"உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சிண்டு போவேன். இவனுக்குப் பேச்சு நின்னு போனன்னிக்கு மொத நாள் சாயங்காலம்கூட நான்தான் இவனை ரசிகரஞ்சனி சபாவுல நடந்த ராமாயண உபன்யாசத்துக்கு அழச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையாகக் கேட்டான். மறுநாள் இப்டி ஆயிடுத்து!"
சிரித்துக்கொண்டே, "ராமாயணம் கேட்டதினாலேதான் இப்டி ஆயிடுத்துனு சொல்ல வர்றியா?" என்று கேட்டார் ஆச்சார்யாள்.
"ராம ராம! அப்டி இல்லே பெரியவா! அதுக்கு அடுத்த நாள்லேர்ந்துங்கிறதுக்காகச் சொல்ல வந்தேன்!" எனக் கன்னத்தில் போட்டு்க்கொண்டார் ஆடிட்டர். "அது சரி, உபன்யாசம் பண்ணினது யாரோ" என வினவினார் பெரியவா.
"ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா!"
""பேஷ் பேஷ், சோமதேவ சர்மாவோட புத்ரன்.நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா.. அது போகட்டும் சங்கரா, பையனை யாராவது டாக்டர்கிட்ட காமிச்சியோ?"
"காமிச்சேன் பெரியவா!"
"எந்த டாக்டர்?"
"டாக்டர் சஞ்சீவி!"
"அவர் என்ன சொல்றார்?" - பெரியவா
"டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்டு, 'குரல்வளைல ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்ருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்'னு சொன்னார் பெரியவா."
"நிச்சயமா சரியாயிடும்னு சொல்லலியா?"
"அப்டி உறுதியா சொல்லலே பெரியவா.. எப்படியாவது நீங்கதான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணணும். நீங்கதான் காப்பாத்தணும்.!"
சற்று நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார் ஆச்சார்யாள். "நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலிய அழச்சிண்டு இந்த ஊர்ல இருக்கிற கோயில்களுக்கு எல்லாம் போய் தரிசனம் பண்ணி பிரார்த்தனை பண்ணிண்டு வா, ராத்ரி மடத்திலேயே பலகாரம் பண்ணிப்டு தங்கிடு. கார்த்தால ஸ்னானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதயெல்லாம் முடிச்சிண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு!"
ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கரநாராயணனுக்கு! பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு இருவரும் ஆலய தரிசனத்து்க்குப் புறப்பட்டனர்.
அடுத்த நாள் காலை பத்து மணி, முன்னதாகேவே வந்து அமர்ந்திருந்தது அந்த நடமாடும் தெய்வம். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர். ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கரநாராயணன்.
சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார். "சங்கரா.. ஒரு கார்யம் பண்ணு, சந்திரமௌலியையும் அழச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்ல ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்றே.. அதே ஸ்ரீவத்ஸ ஜயராம சர்மா வேறு எங்கயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு.. அப்டி எங்கயாவது கோயில்லயோ,சபாவிலயோ சொல்றார்னா.. நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர கண்டத்லேர்ந்து ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலிய கூட அழச்சிண்டு போய் 'ஸ்ரவணம்'' [கேட்டல்] பண்ணவை! ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக பூர்த்தி அன்னிக்கு, நீ என்ன பண்றே... நல்ல மலை வாழைப்பழமா பாத்து வாங்கிண்டு போய் 'பௌராணிகர் [உபன்யாசகர்] கைல கொடுத்து ரெண்டு பேருமா அவர சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ. நீ மனசுக்குள்ள அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ....
அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே.. போயிட்டு வா!" என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்த பரப்பிரம்மம்.
'சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண பிரசவனம் நடைபெறுகிறதா' என்று தினமும் நாளிதழ்களின் "இன்றைய நிகழ்ச்சிகள்" பகுதியைப் பார்த்துவந்தார் ஆடிட்டர்.
அன்றைய பேப்பரில், "மயிலை ஸ்ரீஷீர்டி சாய்பாபா கோயிலில் ஸ்ரீஜயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் 'நவாஹ'மாக [9 நாட்கள்] நடைபெறும்' என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருந்தது.
அன்று சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஸ்ரீசாய்பாபா கோயிலுக்குப் போனார் சங்கரநாராயணன். மிக உருக்கமான உபன்யாசம். மெய்ம்மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்ணிலிருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் சங்கர நாராயணன்.
அன்று ஸ்ரீமத் ராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை சாய்பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா.
ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து நகர்ந்தனர். சங்கரநாராயணனும் சந்திரமௌலியும் அவரை நமஸ்கரித்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய மலை வாழைப்பழச் சீப்பை சந்திரமௌலியிடம் கொடுத்து, ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு சொன்னார். அவன் அப்படியே செய்தான். சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷீர்டி ஸ்ரீசாய்பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, "கொழந்தே.... நீ க்ஷேமமா இருப்பே. இந்த ரெண்டு பழத்தையும் நீயே சாப்டு!" என்று கூறி ஆசிர்வதித்தார்.
கோயிலை விட்டு வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.
அடுத்த நாள் காலையில் ஒற் அதிசயம் நிகழ்ந்தது. குளியலறையில் பல் துலக்கிவிட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, "அம்மா, காபி ரெடியா?" என்று உரக்கக் குரல் கொடுத்தான். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவன் அப்பாவும் சமையலறையில் இருந்த அம்மாவும் தூக்கிவாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர்.அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.
"காபி ரெடியானு நீயாட குரல் குடுத்தே சந்திரமௌலி!" என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அம்மா. சங்கரநாராயணன் அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார். சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.
அன்று மாலை 5-30 மணி, காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் மகா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கரநாராயணன். சந்திரமௌலியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி; "சந்திரமௌலீ..இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ? பேஷ்... பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை!"
உடனே சந்திரமௌலி, "ஹரஹர சங்கர... ஜெய ஜெய சங்கர.. காமகோடி சங்கர...." என்று உரக்க கோஷமிட்டான்.அனைவரும் மெய்ம்மறந்து நின்றிருந்தனர். சற்று நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேசியது;
"சங்கரா.. இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அத இவனால தாங்கிக்க முடியாது! மொதல்ல உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜயராம சர்மா, சீதாபிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போர 'கட்ட'த்த சொல்லியிருக்கணும். நா சொல்றது சர்தானா [சரிதானா] சங்கரா...?"
பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, "அதேதான் பெரியவா... அதேதான்! அன்னிக்கு அந்த கட்டத்தைத்தான் ரொம்ப உருக்கமா சொன்னார்!" என ஆமோதித்தார். ஸ்வாமிகள் தொடர்ந்தார்; "நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதைய ஒரு ராட்சசன் தூக்கிண்டு போறான்கறதக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூர பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லே.
இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன? அதே பௌராணிகர் வாக்காலயே "அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு"ங்கறத இவன் காதால கேட்டுட்டா மனசையும், வாக்கையும் அமுத்திண்டிருக்கிற அந்தப் பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து, அதனால்தான் அப்டி பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. சந்திரமௌலி... நீ பரம க்ஷேமமா இருப்பே!"
அந்த நடமாடும் தெய்வத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் மலைத்து நின்றனர்

Hara Hara Sankara !! Jaya Jaya Sankara !!

Siva.S

Tuesday, January 13, 2015

தபஸ்....யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல; தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு."

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

தவம் செய்வது என்றால் என்ன?

பத்மாஸனத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்களை
மூடிக்கொண்டிருப்பது மட்டும் தானா?

ஒரு வாரத்துக்கு மேல்,சேர்ந்தாற்போல்,பிட்சையே
செய்யவில்லை,பெரியவாள். அதனால் உடற்தளர்ச்சி
ஏற்பட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை. பூஜை செய்வது
தரிசனம் கொடுப்பது,ஸ்ரீ மடம் அதிகாரிகளுக்கு உத்திரவு-
எல்லாம் குறைவில்லாமல் நடந்து கொண்டிருந்தன.

ஆனால், ஸ்ரீமடம் பணியாளர்கள் மனம் தவித்துப்
போய்விட்டார்கள். பெரியவாள் ஒரு டம்ளர் பால் கூட
அருந்தாமல் இருக்கும் போது,இவர்களால் மட்டும்
மனமொப்பி உணவு ஏற்க முடியுமா?

ஒரு கோஷ்டியாகச் சென்று பெரியவாளிடம் மன்றாடி,
விண்ணப்பித்துக்கொண்டார்கள்.

'யார் என்ன தவறு செய்தார்?' என்பது தெரிந்தால்,அந்தத்
தவறு மீண்டும் நிகழாதபடி கவனமாக இருக்கலாமே?..

நாள்தோறும் ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வரருக்குப் பலவகையான
நைவேத்தியங்கள் செய்யப்படும் சித்ரான்னங்கள்,
பாயசம்,வடை--இப்படி எத்தனையோ!.

நைவேத்தியம் செய்யும் போது. அவைகளின் பெயர்களைக்
கூறவேண்டும்.---நாரிகேலோதனம்,திந்த்ரிண்யன்னம்-
தத்யன்னம்,குள பாயஸம்,மாஷாபூபம்...

'ஒரு நாளைக்கு, இவைகளைக் கண்ணால் பார்த்து,
மனத்தால் சொல்லிக்கொண்டிருக்கும் போது...:

...பெரியவாள் தொண்டையின் பந்து ஏறி இறங்கியது.

"....என் நாக்கு ஊறியது...தவிச்சுப் போயிட்டேன்,,,,
நாக்கை வளரவிட்டு விட்டோமே...ன்னு, நாக்கை
அடக்குவதற்காகத்தான், இந்த பிராயச்சித்தம்,
இப்போ, நாக்கு அடங்கிப் போச்சு !.."

சிப்பந்திகள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.

'நாளையிலேர்ந்து பிட்சை செய்யலாம்."

தபஸ்....யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;
தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு

Sunday, January 11, 2015

"நீ, எந்தக் கட்சி?..கூப்பிடுகிற கட்சியா? கூப்பிடாத கட்சியா?...

சொன்னவர்-எம்.ஆர்.ஸ்ரீநிவாஸன் (அபிராமபுரம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1934 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல்
பதினெட்டாம் தேதிவரை,(காசியாத்திரை சமயத்தில்)
நாகபுரியில் தங்கியிருந்தார்கள்,மகாப் பெரியவாள்.

என் தகப்பனாருக்கு, நாகபுரியில் போஸ்டல் ஆடிட்
ஆபீசில் வேலை. அந்தக் காலத்து மனிதரல்லவா?
தமிழ்நாட்டு அந்தண வகுப்புச் சம்பிரதாயப்படி
சிகை,பஜனை,நாமசங்கீர்த்தனம்,உஞ்சவிருத்தி,
ராதா கல்யாணம்- எல்லாம் முறைப்படி
நடத்திக் கொண்டிருந்தார்.

தரிசனத்துக்குச் சென்றார், அப்பா.

"திருச்சி - மண்ணச்சநல்லூர். பேர்,ராமனாதன்.."
என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பெரியவா மந்தகாசத்துடன் என் தகப்பனாரைப்
பார்த்தார்கள்.

"நீ, எந்தக் கட்சி?..கூப்பிடுகிற கட்சியா?
கூப்பிடாத கட்சியா?...

அப்பாவுக்கு அதிர்ச்சி. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு
கிராமத்தில் அந்தணர் தெருவில் நிலவிவரும் ஒரு
நுட்பமான மரபு,பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது.
தெரிந்து நினைவு வைத்துக்கொண்டு, சரியான
பேர்வழியிடத்தில் இக்கட்டான சூழ்நிலையில்
போட்டு உடைக்கிறார்களே!..

மண்ணச்சநல்லூரில் ஸ்ரீராம மடம் என்று
அனைவருக்கும் பொதுவான ஒரு மடம் உண்டு.
தினந்தோறும் பஜனை நாமசங்கீர்த்தனம் நடைபெறும்.
பஜனை என்றால்,பிரசாதம் முக்கியமாயிற்றே!
தினமும் ஒவ்வோரு வீட்டார் மண்டகப்படி.

சிலர், தங்கள் மண்டகப்படி நாள்களில் - அதாவது
தங்கள் வீட்டில் பிரசாதம் தயாரித்துக்கொண்டு வந்து
விநியோகம் செய்யும் நாள்களில் - தெருவில் ஒவ்வொரு
வீட்டுக்கும் சென்று, "இன்று எங்கள் மண்டகப்படி.
நீங்கள் குடும்பத்துடன் வந்து பிரசாதம் பெற்றுக்-
-கொள்ள வேண்டும்" என்று அழைப்பார்கள்.

இவர்கள், 'கூப்பிடுகிற கட்சி!'

மற்றொரு சாரார், "இது என்ன, எங்கள் வீட்டுக்
கல்யாணமா? தினம் தினம் பஜனை நடக்கிறது.
ராம மடம்,பொதுச்சொத்து தாங்களாகவே வந்து
பிரசாதம் பெற்றுக்கொள்ள வேண்டியது தானே?
இதற்கு என்ன தனி அழைப்பு?" என்று யாரையும்
கூப்பிடமாட்டார்களாம்!

இவர்கள்,'கூப்பிடாத கட்சி!'

நாங்கள் கூப்பிடுகிற கட்சி தான். வீடு வீடாகச்
சென்று, கூப்பிடுவோம்.

பெரியவாள் ஆசிர்வாதம் செய்து பிரசாதம்
கொடுத்தார்களாம்.

(பல ஆண்டுகளுக்குப் பின்னர், என் தந்தை
சொன்ன தகவல் இது.)

Friday, January 9, 2015

"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு- அக்ரஹாரம். வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர்கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.
கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி ஸ்லோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.
ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.
மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.
பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள்.அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!
தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.
பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”க்ஷேமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.
உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.
ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.
உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.
இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.
சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்!
இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது.
Namsekaram !!

Wednesday, January 7, 2015

"சல்லிவேர்கள்"

சொன்னவர்-எம்.ஆர்.ஸ்ரீநிவாஸன் (அபிராமபுரம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1965,ஜூன் மாதம்.

வேலூரிலிருந்து ராணிப்பேட்டை வழியாகக்
காஞ்சிபுரம் திரும்பிக் கொண்டிருந்தார்கள்,
மகா ஸ்வாமிகள்.மூடிய மேனாவில்,பெரியவாள்
பயணம்.

நானும் சில நண்பர்களும்,'ஜய ஜய சங்கர,ஹர ஹர
சங்கர' முழக்கத்துடன்,ஆர்க்காட்டிலிருந்து மேனாவை
ஒட்டினாற்போலவே நடந்து வந்து கொண்டிருந்தோம்.

ராணிப்பேட்டையில் மேனா நின்றது;
கதவு திறக்கப்பட்டது.

"அடியேன் ஸ்ரீநிவாஸன். பூர்வீகம் - மண்ணச்சநல்லூர்.."

"உன் அப்பா பெயர் என்ன? நீ என்ன வேலை செய்கிறாய்.."

ஊஹூம்; கேட்கவில்லை.

இவைகள் கேட்கத் தகுந்த கேள்விகள் அல்ல.
கேட்டாலும்,உடனே பதில் கிடைக்கும்.

ஆனால், நமது சமுதாயத்தின், அந்த மகா விருட்சத்தின்
சல்லி வேர்கள் எங்கே இருக்கின்றன?
ஏன் காணாமல் போய்க் கொண்டிருக்கின?..

'ஜாக்ரத உத்திஷ்ட்டத வரான் நிபோதத..."
உபநிடத வாக்கியம். 'உறங்கியது போதும்,
விழித்துக்கொள்வாய்; எழுந்திராய்;
உன்னதங்களையே கேட்பாய்..'

"நீ அஷ்ட சஹஸ்ரமா? ப்ருஹத்சரணமா?...

சல்லிவேர்கள்!..

மண்ணச்சநல்லூரில், இரண்டே பிரிவினர்தாம்.

உங்க கிராமத்திலே எண்ணாயிரமும்,பெரிய
திருவடியும் தானே,இருக்கா?..ஒரு சொடுக்கு.

'நான் அஷ்டசஹஸ்ரம்...' (எண்ணாயிரம்)

இந்தச் சிறு தகவல்கள்,பிரிவுகள் தாம் அந்தண
சமுதாயத்தைத் தாங்கிக் கொண்டிருக்கன என்பது
பெரியவாளின் அபிப்ராயம்.இன்றைய நிலையில்
இந்தச் சொற்கள் எத்தனை பேர்களுக்குத் தெரியும்.

நல்ல வேளை எனக்கு ஞாபகம் இருந்தது!.

Monday, January 5, 2015

”..... வைத்யநாதா, நான் கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா...”

ஆகா, எவ்வளவு பஞ்சகச்சம் ...! சென்னையில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி ஒன்றில்..!!

டிசம்பர் 27ந் தேதி, எனது உபாத்யாயத்தில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி வைபவம் சென்னை முருகன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. பல வைதீகாளுடன் நானும் கலந்துகொண்டேன். ’பட்ஸ்’ வைத்யநாதய்யர் என அழைக்கப்பட்ட ஆச்சார சீலரின் நான்காவது பையனுக்குத்தான் சஷ்டியப்தபூர்த்தி.

பொதுவாக இம்மாதிரி விசேஷங்களில் வைதீகாளை தவிற கர்த்தா மட்டும்தான் பஞ்சகச்சத்தில் இருப்பார். அல்லது ஓரிருவர் மற்றவர்கள் பஞ்சகச்சத்தில் கண்ணில் தென்படலாம். இதுதான் தற்காலத்தில் யதார்த்தம். உங்களுக்கே தெரிந்த விஷயம்தான் இது.

ஆனால் இந்த ’நாதன்ஸ்’ குடும்ப சஷ்டியப்தபூர்த்தியில், மண்டபத்தில், வந்திருந்த பந்துமித்ரர்களிடையே சர்வ சகஜமாக பஞ்சகச்சம் அணிந்தவர்களை நிறைய பார்க்க முடிந்தது. அதனுடன் மடிசார் அணிந்த பெண்மணிகளும் அதிகமிருந்தனர். ஆனந்தமாக இருந்தது.

ஒரு ’எக்ஸ்ட்ரா’ ஆனால் அருமையான நம்மை வியக்கவைக்கும் செய்தி:

ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவர்கள் சுமார் 50 வருஷத்திற்கு முன்பு சென்னை விஜயத்தின்போது பவழக்கார தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அருகில் இருப்பவரிடம் “ இந்த தெருவில்தானே பட்ஸ் வைத்யநாதன் வீடு இருக்கு...” என கேட்க இதோ இந்த வீடுதான் என யாரோ கையை காண்பிக்க நேராக அந்த வீட்டின் வாசல் அருகில் நின்று ‘ நான் உள்ளே வரலாமா.” என்று பெரியவா கேட்டவுடன் வைத்யநாத ஐயரின் குடும்பத்தினர் சிறிது நேரம் திக்ப்ரமை அடைந்து விட்டனர். இருக்காதா பின்னே.

சுதாரித்துகொண்டு பூர்ணகும்பத்துடன் பெரியவாளை உள்ளே வரவேற்க, பெரியவா நேராக கிடிகிடுவென மாடிப்படி ஏறி அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். நமஸ்கரித்துவிட்டு கை கட்டிகொண்டு நிற்கும் வைத்யநாத ஐயரை உற்று நோக்கி பெரியவா சிரித்த முகத்துடன் ” வைத்யநாதா, நான் கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா...” என்று தெய்வீக அமுத மொழியை உதிர்த்ததை இன்றும் வைத்யநாதரின் குழந்தைகள் நன்றாக தங்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.

பெரியவா தொடர்ந்து இவர்கள் இல்லத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஸ்ரீ சந்த்ரமெளளீஸ்வர பூஜையுடன் தங்கி அருள் புரிந்துள்ளார்கள். என்ன அதிர்ஷ்டம் இந்த குடும்பத்தினருக்கு.

இப்போது சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்டவர், அன்பு முரளி, அப்போது பள்ளியில் 6-ங் க்ளாஸில் படித்துகொண்டிருந்ததாக சொல்லுகிறார். இந்த முரளியை பற்றி ஒரு வார்த்தை. பஞ்சாயதன பூஜை, சந்த்யாவந்தானாதிகளை க்ரமமாக செய்து வருபவர். நல்ல பரோபகாரி.

இந்த குடும்பத்தினருடன் ஒரு விதத்தில் நானும் சம்பந்தபட்டிருப்பது என் அத்ருஷ்டம்.

Source: Shri Sarma Sastrigal

Saturday, January 3, 2015

"ஆதி சேஷனும் பெரியவாளும் மற்றும் இசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியும்"

சொன்னவர்-பி. ராமகிருஷ்ணன்

பகவானே தன் பக்தர்களோட நேர்லவந்து பேசின சம்பவம் எல்லாம் புராண காலத்துல நிறைய நடந்திருக்கு.

மகாபெரியவாளோட வாழ்க்கைலயும் அப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒரு ஆச்சர்யமான சம்பவத்தையும், ஸ்ரீரங்கம் கோயிலைப் பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் இப்போ சொல்றேன்.

1983ம் வருஷம் வாக்குல நடந்த சம்பவம் இது. அப்போ மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கற சதாராவுக்கு விஜயம் பண்ணியிருந்த மகாபெரியவா, அங்கே மஹாகாவ் என்கிற கிராமத்துல தங்கியிருந்தார்.

ரொம்ப எளிமையான இடத்துல ஒரு சின்ன அறை பெரியவா நித்யபடி பூஜை. அனுஷ்டானங்களை செய்யறதுக்கு ஒதுக்கப்பட்டிருந்துது. அதுக்கு கதவுகூடக் கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மாத்திரம் இருந்தது. மத்தபடி எல்லாருக்கும் தரிசனம் தரவும் மத்தவா தங்கிக்கவும் மாட்டுக் கொட்டகை ஒண்ணுதான் சுத்தப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.

அங்கே ஒருநாள் மகாபெரியவா தினசரி அனுஷ்டான பூஜையை ஆரம்பிச்ச சமயத்துல எங்கே இருந்தோ ஒரு பெரிய கருநாகம் வேகவேகமா வந்து, பெரியவா தங்கியிருந்த அறை வாசலை மறைச்சமாதிரி படத்தை விரிச்சுகிட்டு நின்னு ஆட ஆரம்பிச்சது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி! கூடவே பயம்!

உள்ளே பெரியவா மெய்மறந்து பூஜை பண்ணின்டு இருக்கார். கூப்பிட்டுச் சொல்லவும் முடியாது. பாம்பை விரட்டலாம்னா, அதோட உருவமே கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரமா இருந்துது. என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்சுண்டு இருந்த சமயத்துல அந்த பாம்பு மெல்ல நகர்ந்து ஜன்னல்ல ஏறி உள்ளே நுழைங்சு பூஜை பண்ணின்டு இருந்த பெரியவா பக்கத்துல போய் கொஞ்ச நேரம் அப்படியே ஆடாம அசையாம நின்னுது. "புஸ்.. புஸ்'னு அது எழுப்பின் சத்தம் எதிரொலி மாதிரி கேட்டுது. சுத்தி நின்னவாளோட இதயம் லப்டப்னு அதுக்கு ஈக்வலா அதிர்ந்துது. இத்தனை ஆரவாரத்துலயும் பெரியவா முகத்துல துளி சலனம் இல்லை. கருமமே கண்ணா, பூஜை பண்ணிண்டு இருந்தார் அவர்.

எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். வந்த வேலை முடிஞ்சுதுங்கற மாதிரி அந்தப் பாம்பு சரசரன்னு வெளியில வந்து சட்டுன்னு எங்கேயோ போய் மறைஞ்சுடுத்து.

அதுக்கு அப்புறம் ரொம்பநேரம் கழிச்சு, பூஜையை முடிச்சுட்டு எழுந்தார் ஆச்சார்யா. எல்லாரும் பதட்டமும் பரபரப்புமா பாம்பு வந்துட்டு போன விஷயத்தை அவர்கிட்ட சொன்னாங்க. ஆனா, கொஞ்சம்கூட ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லாம எல்லாம் தெரியும்கிற மாதிரி அமைதியா கேட்டுண்டு ஒரு புன்னகை மட்டும் செஞ்சார் பெரியவா.

அவரோட அந்த தெய்வீகச் சிரிப்புக்கு என்ன காரணம்னு அடுத்த நாள் தெரியவந்துது. அன்னிக்கு மத்தியானம் பெரியவாளை தரிசிக்க வந்தவாள்ல இருந்த ரெண்டுபேர் ரொம்பவே பரபரப்பா இருந்தாங்க. அந்த ரெண்டுபேர்ல ஒருத்தர், ரொம்ப பிரபலமான இசையமைப்பாளர், இன்னொருத்தர் தெய்வீக ஓவியர். இசையமைப்பாளர், ஓவியர்கிட்டே பேசறச்சே, பரமாசார்யார்கிட்டே இருந்து ஏதோ உத்தரவு கிடைச்சிருக்கிறதாகவும், அதை நிறைவேத்தறதா வாக்குறுதி தரவே வந்திருக்கிறதாகவும் சொல்லிண்டு இருந்தார். யார் அவங்க, என்ன வாக்குறுதின்னு சொல்றதுக்கு முன்னால ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிடறேன்.

ஸ்ரீரங்கத்துக்கு ராஜகோபுரத் திருப்பணி நடந்துண்டிருந்த காலகட்டம் அது. பதிமூணு நிலைகளோட கம்பீரமா அமைக்கத் திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, அதுக்கான செலவு ரொம்பவே அதிகமா இருந்துது. ஒவவொரு நிலையையும் கட்ட ஒவ்வொருத்தர் பொறுப்பு ஏற்றுக்கிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல ஒர நிலைக்கான செலவை ஏத்துண்டிருந்தவர்கஙளால தவிர்க்க முடியாத காரணத்தால அதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுது. அதனால, அந்தப் பொறுப்பை வேறயாருக்காவது தரவேண்டிய கட்டாயம் வந்துது. இதையெல்லாம் விளக்கி அப்போ இருந்த ஜீயர் சுவாமிகள் மகாபெரியவாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். லெட்டர் வந்ததுமே, அந்தப் பொறுப்பை யார்கிட்டே ஒப்படைக்கிறதுன்னு யோசிச்சார் மகாபெரியவா. மடத்துல இருந்தவங்க ஆளுக்கு ஒரு பெரிய மனுஷா பெயரைச் சொன்னாங்க.

ஆனா, பெரியவா சினிமாவுல இசைத்துறையில பிரபலமான ஒருத்தர் பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்.

சரி, ஆளை தேர்ந்தெடுத்தாச்சு, அவர்கிட்டே எப்படிச் சொல்றது? அவர் சம்மதிப்பாரா மாட்டாரா? இப்படி எதுவுமே தெரியாத நிலையில தான், எங்கேயோ ஒரு கிராமத்துல போக்குவரத்துக்கே கஷ்டமான பகுதியில தங்கியிருந்த பெரியவளை தரிசிக்க வந்திருந்தார் மகாபெரியவா தேர்ந்தெடுத்த அதே பிரபலமான இசையமைப்பாளர். வரிசையில் வந்த அவர், பெரியவாளை தரிசிச்சு, நமஸ்காரம் பண்ணினார். எதுவும் சொல்லாம அவரை ஆசிர்வதிச்ச ஆசார்யா, "ராத்திரி நேரமாகப் போறது, இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் புறப்படுங்கோ!' அப்படின்னு சொன்னார்.

அன்னிக்கு ராத்திரி வழக்கமான தரிசனமெல்லாம் முடிங்சப்புறம் பெரியவா அந்த ரெண்டு பேரோடயும் பேசிண்டு இருந்தார். அப்போ இசைத்துறை சம்பந்தமா, ஓவியம் சார்ந்ததா, வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை பத்தின்னு ஏராளமான விஷயங்களை அவாகூட பேசிண்டு இருந்தார் ஆசார்யா. ஆனா, கோபுரம் கட்டவேண்டிய விஷயத்தைப்பத்தி பெரியவா எதுவமே அப்போ சொல்லலை.

மறுநாள், நித்யகர்மா எல்லாம் முடிங்சுது. அந்த ரெண்டுபேரும் பெரியவாளை தரிசிக்க வந்தாங்க. "பெரியவா, என்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்போறதா ஒரு தகவல் கிடைச்சது. இது என்னோட பாரம் இல்லை. உங்க பாரம்! இதை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நீங்களாவே நடத்திப்பீங்கன்னு தெரியும். உங்க கட்டளையை நான் ஏத்துக்கறேன்' அப்படின்னார், இசையமைப்பாளர்.

"கிட்டத்தட்ட எட்டுலட்சம் ஆகும்கறா. தொகை ரொம்ப பெரிசு. நீ எப்படிப் பண்ணுவே?' கேட்டரா ஆசார்யா.

"இதுக்குன்னே தனியா ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன். வர்றதை அப்படியே குடுத்துடறேன். நிச்சயமா முடியும்?'

சொன்ன இசையமைப்பாளருக்கு ஆசிர்வாதம் பண்ணி ஒரு மாம்பழத்தைப் பிரசாதமா குடுத்துனுப்பினார் ஆசார்யா.
ரொம்ப சந்தோஷமா புறப்பட்டாங்க அவங்க ரெண்டு பேரும். சொன்னபடியே செஞ்சு முடிச்சார். அந்த இசையமைப்பாளர். ஸ்ரீரங்கம் கோபுரத்தோட ஆறாவது நிலை, அவரோட கைங்கரியமா கட்டப்பட்டுது.

எல்லாம் முடிஞ்சு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடந்த சமயத்துல மடத்துக்கு பிரசாதம் வந்துது. அன்னிக்கும் ஒரு பாம்போட நடமாட்டம் கண்ணுல பட்டதா எல்லாரும் சொல்லிண்டாங்க. அப்போதான் புரிஞ்சுது, மஹாகாவ்ல பெரியவா பூஜை பண்ணின சமயத்துல பெரிய பாம்பு வந்தது. ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவாகிட்டே பேசியிருக்கலாங்கறது.

எல்லாம் சரி, ஸ்ரீரங்கம் கோபுரத்துல ஒரு நிலையை மகாபெரியவா ஆணைப்படி கட்டித்தந்த அந்த இசையமைப்பாளர் யார்? அவர்கூட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்த ஓவியர் யாருன்னு சொல்லவே இல்லையேன்னுதானே கேட்கறீங்க?

இசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியும்தான் அவங்க

Source: Shri Varagooran Narayanan

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top