மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.
பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.
ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை
.
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.
பெரியவா உத்தரவு குடுத்தா.......... ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!
டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"
"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"
அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே....... " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா..... ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"
"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."
பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே..... மயக்கமும் வரலியே?"
டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.
பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."
சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!
Source: Shri Varagooran Narayanan
No comments:
Post a Comment